தோட்டம் போடலாம் வாங்க - தொடர்
GARDENING TIPS- SERIAL
விரிய ஒட்டு தென்னங் கன்றுகளை
நடவுசெய்யும் வழிகள்
HOW TO PLANT COCONUT SEEDLINGS
My Dear Vivasaya
Panchangam Friends! Good Morning!
சமீபத்தில் ஆம்பூருக்கு பக்கத்தில் ரெட்டிமான் கிராமத்தில் இருக்கும்
“டீஜே வீரிய ஒட்டு தென்னை நாற்றங்கால்’ லுக்குப் போக பச்சை குப்பம் ரயில்வே கேட்டிற்கு
எதிரே பாலாற்றை தரைப்பாலம் தாண்டி ஒல்லியான ஒரு தார் சலையில் சென்று ஒரு கன்றுக்கு
600 ரூபாய் தந்து 20 கன்றுகள் வாங்கி வந்தோம்.
பூமுருகன் என்ற ஒரு அக்ரி டிப்ளமா படித்த தம்பி “டீஜே சம்பூர்ணா”
ரகத்தின் சிறப்புகள்பற்றி விளக்கமாக பொருமையாக எடுத்து சொன்னார். சுற்றிலும் இருக்கும்
மஞ்சள் மஞ்சளாக கொத்து கொத்தாக காய்த்திருக்கும் குட்டை ரக மரங்கள் பார்க்க அவ்வளவு
அழகாக இருந்தது.
தென்னங்கன்றுகளை வாங்கிக்கொண்டு வரும்போது பூமுருகன் தம்பி ஒரு
கையேடு தந்தார். அதில் தென்னங்கன்றை எப்படி நட்டு வளர்ப்பது என்ற ஒரு கையேடு ஒன்றினை
தந்தார்.
அதில் இருந்த விவரங்களின் அடிப்படையில் இரண்டு தென்னங்கன்றுகளை
எனது தோட்டத்தில் நட்டேன். அதற்கான வழிமுறைகளை உங்களுக்கு பயன்படும் வகையில் இங்கு
தந்துள்ளேன்.
தென்னங்
கன்றுகள் நடவு
தென்னங்
கன்றுகளை நடவு
செய்ய 3 x 3 x 3 அடி அளவுள்ள குழிகளை எடுக்கவேண்டும்.
பாறைகள் மற்றும் கற்கள் நிறைந்த நில பகுதிகள் 4 x 4 x 4 அடி அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும் .
இலை தழை மணல் தொழு உரம்
குழிகளை நிரப்பும் போது அவற்றில் இலை தழை , குழியில் இருந்து எடுத்த மேல் மண், அத்துடன் மணல்
, தொழு உரம் கலந்து மண்ணால் நிரப்ப வேண்டும் .
ஒவ்வொரு குழியிலும் 10 முதல் 15 கிலோ பசும்தழைகளைப் போடவேண்டும்.
பசும் தழைகளுக்கு பதிலாக உலர்ந்த
இலச்சருகுகளையும் போடலாம்.
அதன் மீது குழியில்
இருந்து எடுத்த மேல் மண்ணை ஒரு அடி நிரப்ப வேண்டும் .
வேப்பம்
பிண்ணாக்கு
மீதமாக உள்ள மேல்
மண்ணுடன் சமமான அளவு நன்கு மக்கிய தொழு உரம் 10கிலோ மற்றும்
5 முதல் 10 கிலோ மணல் மற்றும் அரை கிலோ வேப்பம் பிண்ணாக்கை கலந்து
குழியை நிரப்ப வேண்டும் .
குழிகளில் வெப்பம் பிண்ணாக்கை இடுவதனால் கரையான்கள் மற்றும் வேர் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
வேஸ்ட் டிகம்போசர் மற்றும் இ.எம் கரைசல்
குழிகளை நிரப்பும் மன்ணுடன் வேஸ்ட் டீ காம்போஸ்டர் மற்றும் இ.எம். கரைசலை தெளித்து கலந்து நிரப்பினால் அவை பூச்சிப் பூசண தக்குதலில் இருந்து பதுகாக்கும்.
மண்ணின் கடினத்தன்மையை குறைத்து பொலபொலவென ஆக்கும்.
மண்கன்டத்தில் நுண்ணியிர்களை பெருக செய்யும்.
பயிர் ஊட்டசத்துகளை பயிர்களுக்கு கிடைக்கச் செய்யும் .
கன்றுகள் நடவு
நிலமட்டத்தில்
இருந்து 6 முதல் 10 அங்குலம் கீழ் இருக்குமாறு மண்கலவையை நிரப்பிய பின்னர் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் .
நீர் தேங்கும்
நிலப்பகுதிகளில் குழிக்கு மேல் ஒரு அடி உயரம் இருக்கும் மாறு மண்ணை குவித்து அதன் மீது கன்றுகளை நடலாம் .
மண்புழுஉரம் குளத்து வண்டல்மண்
கன்றுகளை
நடவுசெய்த பின்னால் ஒரு குழிக்கு 2 கிலோ மண்புழு உரம் இருவதால் கன்றுகள் நன்றாக வளரும் .
உங்கள் பகுதியில்
குளத்து வண்டல் மண் கிடைத்தால் குழிகளை நிரப்பும் மண்ணுடன் இரண்டு கூடை
குளத்து வண்டல் மண் சேர்த்துக் கொள்ளாம் .
குழிகளை நிரப்பி முடித்த பின்னால் அதன் மத்தியில் ஒரு அடி நீளம்
அகலம் ஆழத்திற்கு பள்ளம் எடுத்து நடவேண்டும்.
கன்றுகளை
நட்டுமுடித்த பின்னால் போதிய அளவு தண்ணீர் ஊற்றவும். இது மண் கலவைகள் நன்கு படியவும் வேர் பிடிக்கவும் உதவும்.
அதன் பின்னர்
மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அதிக தண்ணீர் தராமல் அளவாக தர வேண்டும்.
இன்னும்
சிறப்பாக தென்னங்கன்றுகளை நடவு செய்யும் அனுபவம் உள்ளவர்கள் அவற்றை என்னோடு பகிர்ந்துகொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author,
Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com
Thanks and Courtesy to respective authors' books and online
e-resources.