Tuesday, August 31, 2021

DISEASE CURING AXLE WOOD TREE, ANOGEISSUS LATIFOLIA, COMBRETACEAE

 

வெள்நாகு

(VEL NAGU, AXLE WOOD TREE, ANOGEISSUS LATIFOLIA, COMBRETACEAE)

பொதுப்பெயர்: ஆங்கிலப் பெயர் : ஆக்சில் வுட் ட்ரீ (AXLE WOOD TREE)

தாவரவியல் பெயர்  :  அனோஜீஸஸ் லேட்டிஃபோலியா (ANOGEISSUS LATIFOLIA)

தாவரக்குடும்பம்  : காம்பிரிட்டேசி (COMBRETACEAE)

தாவரவியல் பெயர்  :  அனோஜீஸஸ் லேட்டிஃபோலியா (ANOGEISSUS LATIFOLIA)

தாவரக்குடும்பம்  : காம்பிரிட்டேசி (COMBRETACEAE)

மரத்தின் தாயகம் : இந்தியா 


 My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

இமயமலைப் பகுதிகள்  சாவி முதல் நேப்பாளம் வரை, பீஹார், சோட்டா நாக்பூர் மற்றும் தென்னிந்தியாவில் அதிகம் காணப்படுகின்றது.

வளரும் நாடுகளில் உள்ள மக்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் தாவரங்கள் மற்றும் மரங்களின் பல்வேறு பகுதிகளைத்தான் மருந்தாகப் பயன்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் சொல்லுகிறது.

வெள்நாகு மரங்கள் மாறாப் பசுமை உடையவை, அழகானவை, கனி தரும். மருந்து, எரிபொருள், டேனின், டசார் பட்டுப்புழுக்களுக்கு இலைத் தீவனம், மரச்சாமான்கள் செய்ய மரம் மற்றும் கால்நடைகளுக்குத் தீவனம் தரும். 35 மீட்டர் வரை உயரமாக வளரும் பல்பயன் தரும் மருத்துவ மரம்.

ரத்தச்சோகை, சிறுநீரகக் கோளாறுகள், மூலம், வயிற்றுப்போக்கு, இருமல், பாம்புக்கடி, தேள்கடி, தோல் வியாதிகள், ஈரலை பாதிக்கும் நேய்கள், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் மருத்துவப் பண்புகள் கொண்டது வெள்நாகு மரம்.

மலைவாழ் மற்றும் பழங்குடி மக்கள் வெள்நாகுவைப் பயன்படுத்திப பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

உதய்ப்பூர் மற்றும் ராஜஸ்தானில் இதன் பட்டையைப் பயன்படுத்தி காய்ச்சலைக் குணப்படுத்துகிறார்கள்.

இதன் பட்டையை அரைத்து அதனை கடிவாயில் பூசி தேள்கொட்டியதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

சிலர் வலிப்பு நோயாளிகளுக்கு இதன் பட்டைக் கஷாயத்தை மருந்தாகக் கொடுக்கிறார்கள்.

பிரசவம் ஆன் பெண்களுக்கு உடலை வலுப்படுத்த வெள்நாகு பிசினை டானிக்காகக் கொடுக்கிறார்கள்.

பாலூட்டம் தாய்மார்களுக்கு கணிசமாகப் பால்சுரக்க வேள்நாகுப் பிசினை தண்ணீர் அல்லது பாலுடன் கரைத்துக் கொடுக்கிறார்கள்.

 

வெள்நாகுவின் பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: வெள்நாகு (VEL NAGU)

இந்தி: தாவு, தாய், தவுரா (THAVU, THAY, THAVURA)

மலையாளம்: மாலாகாமினிராம், வெள்ள நாவா (MALAKAMINIRAM, VELLA NAVA)

தெலுங்கு: சிரீமானு, வெள்ளமா (SEERIMANU, VELLAMA)

கன்னடம்: பெஜ்ஜாலு (BEJJALU)

பெங்காலி: தவோயா (THAVOYA)

மரத்தின் வகை  :  நடுத்தரமான மரம்

 

மரத்தின் பயன்கள்  :

தழை : விளைநிலங்களுக்கு உரமாகும்.

பட்டை : தோல்பதனிட டேனின்  தரும்.

பிசின் : பெயிண்ட், வார்னிஷ, கோந்து  தயாரிக்கலாம்.  

மரம்; லாரிகளில் சரக்கு ஏற்றும் கூண்டு, வண்டிகள், மேஜை  நாற்காலி, தேயிலைப்      பெட்டிகள், மரப்பலகைகள், ஒட்டுப் பலகைகள்படகுகள்கோடாரி, மண்வெட்டி போன்றவற்றிற்கு கைப்பிடிகள், மற்றும் காகிதம்  தயாரிக்க   மரக்குழம்பு செய்ய மரம் தரும்.

இலை, கிளை, மரம் : 4,900  கலோரிகள் வெப்பத் திறன் கொண்ட விறகு தரும் மரம்.

சுற்றுச் சூழல் : காற்றின் கலந்துவரும், மாசு மற்றும் தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்  மரம். 

ஏற்ற மண் : எல்லா வகையான மண்ணிலும் வளரும், ஆழமான வண்டல் மண் கண்டம் ஏற்றது. இது நீர் தேங்குவதைத் தாங்காது. வடிகால் வசதி வேண்டும்.

 

விதை: இதன் விதைகள் மிகவும் சிறியவை. ஒரு கிலோ எடையில் 105000 முதல்  150000 விதைகள் இருக்கும்.

விதைகளை அப்படியே விதைத்தால் 100 க்கு 10 விதைதான் முளைக்கும். விதைகளின் உறை கடினமானவை. அதனால் குளிர்ந்த நீரில் 48 மணி நேரம் ஊரவைத்து விதைத்தால் விதைப்பு நன்றாக முளைக்கும்.

 

விதைகளை சுடு நீரில் நேர்த்தி செய்து விதைத்தாலும் நன்கு முளைக்கும்.

மார்ச், ஏபரல், மே ஆகிய மூன்று மாதங்களிலும் விதைகளை சேகரிக்கலாம். விதைகளின் முளைப்புத் தன்மை இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்.

இந்தியாவில் மட்டும் மருத்துவப் பயன் தரும் தாவரங்கள் 20000 என்று கணக்கெடுத்துள்ளார்கள். வெள்நாகு மரமும் இந்தப் பட்டியலில் அடங்கும்.

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...