தோட்டம் போடலாம் வாங்க - தொடர்
GARDENING TIPS- SERIAL
கற்பூரவள்ளி
KARPURAVALLI, INDIAN BORAGE, COLEUS AMBOINICUS, LAMIACEAE
My Dear Vivasaya
Panchangam Friends! Good Morning!
கிராமம் நகரம் என்ற
வித்தியாசமின்றி ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி. ஜலதோஷம்
தும்மல் இருமல் மூக்கு ஒழுகுதல் மூக்கடைப்பு ஆஸ்துமா செரியாமை ஆகியவற்றை
குணப்படுத்தும் கை வைத்தியத்திற்கு ஏற்ற செடி.
வீட்டு தோட்டத்தில் மூலிகை தோட்டத்தில்
அப்பார்ட்மெண்ட் வீடுகளில் மாடித் தோட்டங்களில் இதனை வளர்க்கலாம்.
பாரம்பரிய
மூலிகைச் செடி. நறுமண தாவரம். அழகுச் செடி.
பயன்கள்
கிராமங்களில் தாய்மார்கள்
குழந்தைகளுக்கு கற்புறவள்ளி சாற்றினை கொடுப்பார்கள். ஐந்து இலைகளை பறித்து
நெருப்பில் வாட்டி எடுத்து அதிலிருந்து வடியும் சாற்றினை பாலாடையில் எடுத்து கடை
வாயில்வைத்து ஊற்றுவார்கள்.
சமீபத்தில் கொரோனா சீனாவில் இருந்த போதே எனக்கு தெரிந்த
ஒருத்தர் தினமும் கற்பூரவல்லி இலைகளைப் பறித்து சாப்பிடுவார். எனக்கு அப்போது
ஜலதோஷம் தொடர் கதையாக இருந்தது.
அவர் நச்சரிப்புத் தாங்காமல் கற்பூரவள்ளியில் பஜ்ஜி தயாரித்து
சாப்பிட்டேன். அடுத்த நாள் பெருமையாக எங்கள் டாக்டரிடம் சொன்னேன் அவர் சொன்னார்
உங்களுக்கு வயசு 71.
இந்த வயதில் எண்ணெய் பண்டங்கள் பஜ்ஜி போண்டா இவர்களையெல்லாம்
சாப்பிடக் கூடாது என்றார் கற்பூரவள்ளி இலைகளை மட்டும் தனியாக வேண்டுமானால்
சாப்பிடுங்கள் என்று சொன்னார்
எங்கு வளர்க்கலாம் ?
வீடுகளின் முன்புறம், பின்புறம், ஜன்னல்
பக்கம், நடைபாதைகள், மாடி தோட்டங்கள், அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வளர்க்கலாம்.
நடுத்தரமான அளவு தொட்டிகளில் பெட்டிகளில் மற்றும் அழகிய சட்டிகளில் கூட நடலாம். செடிகள் எங்கு கிடைக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். அதிக விலையிருக்காது.
அறிந்தவர்கள், தெரிந்தவர்களின் வீடுகளிலிருந்து கற்பூரவல்லியின் சிறிய தண்டுகளை தெரிந்தோ தெரியாமலோ பறித்துக் கொண்டு வந்து வெட்டி அவற்றை நடலாம்.
செடிகள் எப்படி இருக்கும் ?
இலைகள்
இளம் பச்சை நிறமாக முட்டை வடிவில் இருக்கும். மடக்கினால் கூட மறுப்பேதும் சொல்லாமல் மடக்கென உடையும்.
இலைகள் சாறு நிறைந்ததாய் இருக்கும். இதன் தண்டுகள் மிருதுவாக உடைத்தால் பட்டென உடையும். இலைகளின் மேற்பரப்பை தொட்டுப் பார்த்தால் மெத்தென இருக்கும்.
தைலவாடை வீசும். பல்லாண்டு வளரும் செடி. சொந்த நாடு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பொதுப் பெயர்கள்
இந்தியன் போரேஜ், மெக்சிகன் மின்ட், கியூபன் ஒரிகநோ, இந்தியன் மின்ட்,
இதில் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் எனும் 18
வகையான தாவர இரசாயனங்கள் இருக்கின்றன. இவை தவிர ஆன்டி
ஆக்சிடென்ட்கள் நோய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் ஏ மற்றும்
வைட்டமின் 'சி' கணிசமாக உள்ளது.
பயிர்பெருக்கம்:
தண்டுகளின் துண்டுகள், விதைகள்.
பருவம்:
வெப்ப மண்டலப்
பகுதிகள், மித வெப்ப மண்டலப் பகுதிகள். குளிர்ச்சியான பகுதிகளில் நன்கு வளரும். ஓரளவு
நிழல் பாங்கான இடங்களில் நன்றாக வளரும்.
பூக்கள்:
குட்டையான காம்புகளில் பூக்கும். இளம்
ஊதா நிறப் பூக்கள். 10
முதல் 20
பூக்கள் நெருக்கமான அடுக்குகளில் இருக்கும்.
விதைகள்:
மிருதுவானவை, மங்கலான காவி நிறத்தில் தட்டையான வட்ட வடிவத்தில் இருக்கும்.
பரவி
இருக்கும் இடங்கள்:
தெற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, அங்கோலா, மொசாம்பிக், கென்யா, தான்சானியா, மற்றும் இந்தியா.
பலவிதமான நோய்களை குணப்படுத்தும்.
தோல்
சம்பந்தமானவை, எலும்பு தேய்மானம், புற்றுநோய் எதிர்ப்பு, கண்நோய்கள், மன
இறுக்கம், படபடப்பு, சிறுநீரகம் மற்றும் வயிற்று உபாதைகள்.
வளர்த்துப் பாருங்கள் கற்பூரவள்ளி ! நோய்கள் நம்மை விட்டுப்
போகும் வெகுதூரம் தள்ளி !
Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author,
Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com
Thanks and Courtesy to respective authors' books and online
e-resources.
No comments:
Post a Comment