Friday, August 6, 2021

RAIN TREE OF SOUTH AMERICA , SAMANIA SAMAN, தூங்குமூஞ்சி சாலை மரம்

 


தூங்குமூஞ்சி மரம்

RAIN TREE, COW TAMARIND, COCO TAMARIND, FRENCH TAMARIND, GENESARO, MONKEY POD TREE, BORINE TREE, SAMAN TREE

SAMANIA SAMAN, MIMOCEAE


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!


பசுமையான ஒரு ராட்சச குடைபோன்ற தழை அமைப்புடைய, பரந்து விரிந்து 27 மீட்டர் வரை உயரமாக வளரும் மரம். மத்திய அமெரிக்காவிலிருந்து இந்த மரம் ஸ்ரீலங்கா சென்றது. அங்கிருந்து பல இடங்களுக்கும் பரவியதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் பல நகரங்களில் சாலை ஓரங்களில் அதிகம் நடப்பட்டு இருப்பது, ஒன்று புளிய மரம் இன்னொன்று தூங்கு மூஞ்சி மரம்.

மரத்தின் நெற்றுக்கள் சதைப்பற்று மிகுந்தது. அதிலிருந்து எழும் வாசம் இதை சாப்பிட்டால் என்னஎன்று தோன்றும். ஆடுமாடுகள், குதிரைகள், குரங்குகள், அணில் எல்லாம் இதனை விரும்பிச் சாப்பிடும்.


தூங்கும் இலைகளை உடைய மரம்

இந்த மரத்தின் பிரபலமான இரண்டு பெயர்கள், ஒன்று தூங்கு மூஞ்சிமரம், இரண்டு ரெயின் ட்ரீ. சாயங்காலம் ஆனதும் இதன் இலைகள் மடங்கிக் கொள்ளும். அதேபோல மழை பெய்யும்போதும் இலைகள் மடங்கிவிடும். அதனால்தான் இதனை தூங்குமூஞ்சிமரம் என்று அழைக்கிறார்கள்.

தோட்டாலே சுருங்கிக்கொள்ளும் தொட்டாற்சுருங்கிச் செடியின் இலைகளும் தூங்குமூஞ்சி ரத்தின் இலைகளும் ஒரே மாதிரிதான் சுருங்கும். அது தொட்டால் சுருங்கும். இது மாலை ஆனால் சுருங்கும். மழை பெய்தால் சுருங்கும். அது செடி, இது மரம்.

அதன் இலைகள் சிறியவை. இதன் இலைகள் பெரியவை. பூக்கள் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஒரே மாதிரி இருக்கும். காரணம் இரண்டும் ஒரே தாவரக் குடும்பத்தின் உறுப்பினர்கள்.

மலேசிய நாட்டில் இதனை பைவ் ஓ கிளாக் பிளாண்ட்என்று சொல்லுகிறார்கள். மாலை ஐந்தானதும் கண்விழித்திருக்கும் இலைகள் தூங்கப் போவதாலா ? என்று தெரியவில்லை.

 

இன்னொன்று இந்த மரத்தின் அடியில் எப்போதும் லேசாய் பன்னீர் தெளிப்பது போல இருக்கும். அதற்குக் காரணம் சிள்வண்டுகள். இவை எப்போதும் தூங்குமூஞ்சி மரத்தின் இலைகளில் மேய்ந்து கொண்டே இருக்கும். அப்போது அவை சிந்தும் தேன் போன்ற திரவம்தான் அது. மேற்கு வங்காளத்தில்தான் இதனைப் பார்த்து ரெயின் ட்ரீஎன்று பெயர் வைத்தார்கள்.

 

பலமொழிப் பெயர்கள்

தமிழில் தூங்கு மூஞ்சி மரம் (THOONGU MOONJI MARAM)

இந்தியில்  விளையாட்டி சிரிஸ் (VILAYATI SIRIS)

மலையாளத்தில் உறக்கம் தூங்கா மரம் (URAKKAM THOONGA  MARAM, )

தெலுங்கில் டோரிசேனா, நித்ர கண்ணீரு, (TORISENA, NITHRA KANNEERU)

தாவரவியல் பெயர்  : சாமானிய சாமான் (SAMANIA SAMAN)  

பொதுப்பெயர்கள் அல்லது ஆங்கிலப்பெயர்கள்  ரெயின் ட்ரீ, கவ் டேமரிண்ட், கோகோ டேமரிண்ட், பிரென்ச் டேமரிண்ட், ஜெனிசரோ, மங்கி பாட் ட்ரீ, பொரைன் ட்ரீ, சாமான் ட்ரீ, (RAIN TREE, COW TAMARIND, COCO TAMARIND, FRENCH TAMARIND, GENESARO, MONKEY POD TREE, BORINE TREE, SAMAN TREE)

தாவரக்குடும்பம் பெயர்,   மைமோசி (MIMOCEAE)

காற்று மழையில் கிளைகள் முறிந்து விழுவது என்பது வழக்கமான காரியம்தான். ஆனாலும் மழைக் காலத்தில் சாலைகளில் ஏற்படும் டிராபிக்ஜாமுக்கு  முக்கியக் காரணம் முறிந்துவிழும் தூங்கு மூஞ்சி . மரங்கள்தான் என்கிறார்நெடுஞ்சாலைத் துறை பணியாளர் ஒருவர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த மரத்தின் உட்பட்டை அல்லது இலைக் கஷாயம் கொடுத்து வயிற்றுப்போக்கு, சீதபேதி, ஜலதோஷம், தொண்டைப்புண், மற்றும் தலைவலி போன்றவற்றை கட்டுப்படுத்துகிறார்கள்.

இவை தவிர, தோல் நோய்கள், சொரிசிரங்கு, வயிற்றுவலி, குடல் சம்மந்தமான நோய்கள், வயிற்றுப் புற்றுநோய், எலும்புருக்கி நோய் போன்றவற்றையும் கட்டுப்படுத்த பாரம்பரிய வைத்திய முறைகளில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

மரத்தில் மேஜை, நாற்காலி, மரத்தொட்டிகள், மரப்பாத்திரங்கள், கடைசல்வேலை செய்யக் கூடிய பொருட்கள் ஆகியவை செய்கிறார்கள். இதன் காய்களை அரைத்து ஆடுமாடுகள், மற்றும் குதிரைகளுக்கு தீவனமாகக் கொடுக்கிறார்கள். நெற்றுக்களில் இனிப்பு அதிகம் இருப்பதால் அதனை புளிக்க வைத்து பீர் போன்ற மதுபானம் தயாரிக்கிறார்கள்.

 

கொதி நீரில் விதைநேர்த்தி

அதன் விதைகள் முரட்டுத் தோலை உடையதால் கொதிநீரில் முக்கிவைத்து நேர்த்தி செய்ய வேண்டும். விதையின் அளவைப்போல ஐந்து மடங்கு நீரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த கொதி நீரில் இரண்டு நிமிடம் விதைகளைப்போட்டு கலக்கி நீரை வடிக்க வேண்டும். பின்னர் அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி இருபத்தி நான்கு மணிநேரம் ஊரவைத்து எடுத்து விதைக்க வேண்டும்.

ஓண்ணரை மீட்டர் விட்டம் தலைப்பரப்பும் தழைப்பரப்பும்  உள்ள ஒரு தூங்குமூஞ்சிமரம் ஓர் ஆண்டில் 28.5 டன் கார்பன்டைஆக்சைடை உறிஞ்சி சேமித்துக் கொள்ளும்  என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...