Tuesday, August 10, 2021

PRIDE OF INDIA, பூமருது ஓர் அழகு பூமரம்


பூமருது 

(PRIDE OF INDIA  LAGERSTROEMIA LANCEOLATA, LITHERACEAE)


  My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

ஏதிர்பாராமல் திடீரென ஒரு நாள் அதிர்ஷ்டவசமாகப் பார்த்தேன் இந்த மரத்தை. இப்படி ஒரு அழகான பூக்களைக் கொண்ட இந்த மரத்தை எப்படி பார்க்காமல் இருந்தேன் என குற்ற உணர்வாக இருந்தது. இந்தப் பூக்களுக்கு அப்படி ஒரு அழகு. ஒரு நர்சரியில் பார்த்தேன் ஒரு குறு மரமாக நீளநீளமான கிளைகளுடன்.

ஏன்ன மரம் என்று கேட்டதற்கு வெண்தேக்கு என்றார்கள். எனக்கு அந்த பதிலில் நம்பிக்கை ஏறபடவில்லை. காரணம் குமிழ் மரத்தைத்தான் வெண்தேக்கு என்று சொல்லுவார்கள் என எனக்குத் தெரியும்.

ஆனால் அதற்குப் பிறகுதான் தெரிந்தது இது அழகான பூமரம் மட்டுமல்ல தேக்குக்கு அடுத்தபடியான டிம்பர் தரும் மரமும் கூட என்பது ஆச்சிரியமாக இருந்தது. குயின்ஸ் ஃப்வர்’ (QUEEN’S FLOWER) என்ற பெயரும்  பிரைட் ஆப் இண்டியா’ (PRIDE OF INDIA) இதற்குப் பொருத்தமான பெயர்தான் எனத் தெரிந்து கொண்டேன்.

இவ்வளவு அழகான ஒரு இந்திய மரத்திற்கு மயில் கொன்றைக்குக் கிடைத்த அங்கீகாரம் இதற்குக் கிடைக்கவில்லையே என வருத்தமாக இருந்தது.

அழகான பூ கடினமான மரம். அதனால்தான் இதற்கும் வெண் தேக்கு என்ற பெயர் நிலவுகிறது.

கொஞ்சம் கூடுதலான ஈரப்பசையும் வளமான வண்டல் மண்ணும்  இதற்கு பொருத்தமானவை. விதைகளிலிருந்து சுலபமாய் வளரும்.

 

பலமொழிப் பெயர்கள்

தமிழ்: பூமருது, கதலி, வெண்தேக்கு, சென்னாங்கி, வேவலா (POOMARUTHU, KATHALI, VENTHEKKU, SENNANGI

தெலுங்கு: வரகோகு (VARAGOGU)

கன்னடம்: போலிதசவாலா, சல்லா, போலி தாச்செல்லா (BOLITHA SAVALA, SALLA, BOLI THAACHELLA)

மலையாளம்: அடம்பு, செம்மருதா, கடல்பூ, மணிமருது (ADAMBU, SEMMARUDHA, KADALPOO, MANIMARUTHU)

அசாமிஸ்: அஜ்ஹார், அஜார், திங்டோ திலாடோ(AJHAR, AJAR, THINGDO DHILADO)

பெங்காலி: அஜார், ஜாருல், ஜரூல்,(AZAR, JAARUL, JARUL)

ஒரியா: பட்டோலி, ஆர்ரி (BATTOLI, ARRI)

பஞ்சாபி: ஜாருல் (JARUL)

இந்தி: அர்ஜூனா, ஜாருல் (ARJUNA, JARUL)

மராத்தி: டாமன், மோட்டா பொண்டாரா, பொண்டாரா லெண்டி (DAMAN, MOTTA BONDARA, BONDARA LENTI)

 

தாவரவியல் பெயர் : லெகர்ஸ்ட்ரோமியா லேன்சியோலேட்டா (LAGERSTROEMIA LANCEOLATA)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : பென் டீக் (BEN TEAK)

தாவரக்குடும்பம்  :  லித்ரேசி (LITHERACEAE)

மரத்தின் வகை  :  வறட்சிப் பகுதிக்கான மரம் 

 

மரத்தின்  பயன்கள் :--

தழை : தழை உரம் தரும், டசார் பட்டுப்புழுக்களுக்கு தீவனமாகும்.

பட்டை : தோல்பதனிட டேனின் தரும்

விதை : சோப்பு தயாரிக்க எண்ணெய் தரும்.

பிசின் : பெயிண்ட், வார்னிஷ்  தயாரிக்க உதவும் குங்கிலியம் என்னும் பிசின் தரும்.

மரம் :

கட்டுமானத்திற்கான மரச் சாமான்கள், பாலங்கள், ரயில் பாதைக் கட்டைகள், மேஜை நாற்காலி, தேயிலைப் பெட்டிகள்,        மரப்பலகைகள், படகுகள், பூப்பந்து மட்டை, டென்னிஸ் மட்டை, ஒட்டுப் பலகைகள்,     காகிதம்  தயாரிக்க மரக்குழம்பு அனைத்தும் தரும்.

இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.

பூக்கள் : கிளை நுனியில் ஊதா நிறப் பூக்கள் ஒன்று முதல் 2 அடி உயரமான கொத்துக்களாகத் தோற்றம் தரும்; ஏப்ரல் மே மற்றும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நிறைய பூக்கும்.

மரத்தின் தாயகம் : இந்தியா

நடவுப் பொருள் : விதைநாற்றுவேர்க்குச்சி.

மரத்தின் உயரம் :  20  மீட்டர்

சண்டிகர் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில்

 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.

 

 

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...