கூந்தல்பனை
KOONTHAL PANAI, FISH TAIL PALM, TODDY PALM, WINE PALM, JAGGERY PALM
CORYPHA UMBRACULIFERA, ARECACEAE
இதன் இலைகளைப்
பார்த்தால் அசப்பில் மீன்வால் மாதிரி இருக்கும். அதனால்தான் அதற்கு இன்னொரு பெயர்
மீன்வால்பனை. ஆங்கிலத்தில் பிஷ் டெயில் பாம். இதன் பூங்கொத்துக்கள் பெண்களின்
கூந்தல்போல தொங்கிக் கொண்டிருக்கும். அதனால் இது கூந்தல்பனை.
ஆண்பெண் பூக்கள்
தனித்தனியானவை. பழங்கள் ஒரு விதை உடையவை. சிவப்பு நிறமாக இருக்கும். ஒரு செ.மீ.
நீளம் இருக்கும். ஒருவிதை இலை உடையது. பூத்துக் காய்த்து பழுத்து கனியானதும் மரம்
உலர்ந்து மடிந்து போகும்.
இதன்
பூங்கொத்திலிருந்து பதனீர்போல சாறு இறக்கலாம். புளிக்கவைத்து கள்ளாக மாற்றலாம். காய்ச்சினால் வெல்லமாக ஊற்றலாம். மரத்தின் சோற்றினை அரைத்து
மாவாக ஆக்கலாம்.
மரச்சோறு என்பது,
பட்டையை செதுக்கிவிட்டால் மீதம் இருப்பதுதான்
மரச்சோறு. அரைத்த மரச்சோற்றின் மாவு இனிப்பாக இருக்கும். இந்த மாவு உடலுக்கு
குளிர்ச்சி தரும். ஊட்டச்சத்தும் ஊட்டமும்
தரும் என்கிறார்கள் கர்நாடக மாநிலத்தில் கடலோரத்தில் வசிக்கும் மக்கள்.
இந்த மரச்சோறு சொதசொதப்பாக இருக்கும். இது யானைகளுக்கு பிடித்தமான உணவு.
நம்ம ஊர்
தலப்பாகட்டி பிரியாணி
மாதிரி ஸ்ரீலங்காவில் ‘கித்துல்தலப்பா’ பிரபலம். கூந்தல்பனையின் மரச்சோற்று மாவுடன்
தேங்காய்ப்பால் சேர்த்து தயாரிக்கும் உணவு வகைதான் ‘கித்துல்தலப்பா’ .
வெப்ப மண்டலப் பகுதிகள், மற்றும் மித வெப்ப மண்டலப்பகுதிகளில் அழகு மரமாக வளர்க்கிறார்கள். சாலைகள், தோட்டங்கள், பூங்காக்கள், மற்றும் வீடுகளின் முகப்புகளிலும் வளர்க்கிறார்கள்.
மரத்தின் மேல்
பகுதியில் முதல் பூங்கொத்துக்கள் தோன்றும். அடுத்தடுத்து பூப்பவை அடுத்தடுத்து சடை
போலத் தொங்கும். தூரத்திலிருந்துப் பார்க்க பெண்களின் கூந்தல் மாதிரியே தோன்றும்.
இதன் இலைகளின்
இளம் தளிர், கொட்டைகள் மற்றும் வேரினைப்
பயன்படுத்தி கிராம அளவில் மருந்துகள் தயாரிக்கிறார்கள்.
வாயுத்
தொல்லைகள், மிகையான தாகம், கடுமையான ஒற்றைத் தலைவலி, அடிக்கடி
ஏற்படும் சோர்வு, பாம்புக்கடி, குடற்புண், குடல் மற்றும் இரைப்பை வீக்கம்,
முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு இது
அருமருந்தாகிறது.
இந்த பனைமரத்திலிருந்து
ஜவ்வரிசி தயாரிக்க முடியும். மனிதனின் பிரதான உணவு ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருள். இதில் கிடைக்கும் மாவில் ஜவ்வரிசி உற்பத்தி செய்ய முடியும்.
கீழ்கண்ட மூன்று
வகையான பனைமரங்களில் ஜவ்வரிசி தயார் செய்ய முடியும்.
1. கேரியோட்டா யூரென்ஸ் - (CARYOTA
URENS) கூந்தல் பனை
2. மெட்ராக்சைலான் சாகு – (METROXYLON SAGU) ஜவ்வரிசி பனை
3. கொரிபா அம்ராகுலிஃபெரா – (CORYPHA UMBRACULIFERA) குடைப்பனை
பலமொழி பெயர்கள்
தமிழில் கொண்டல் பனை (KOONTHAL
PANAI)
மலையாளத்தில் ஆனப்பனா (ANAPANA)
இந்தியில் மேரி (MARRY)
பொதுப் பெயர்கள்
பிஷ்டெயில் பாம், டாடி பாம், ஒயின் பாம், ஜாகிரி பாம் (FISH TAIL PALM, TODDY PALM, WINE PALM,
JAGGERY PALM)
தாவரவியல்பெயர்:
கேரியோட்டா யூரென்ஸ் (CARYOTA URENS)
தாவரக்குடும்பம்
பெயர், அரிகேசியே (ARECACEAE)
இவற்றில்
கூந்தல்பனை ஜவ்வரிசி, கள், வெல்லம், மற்றும் நார் சம்மந்தமான பல
தொழில்களைச் செய்யும் தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. இதன் ஜவ்வரிசிக்கு பிரகாசமான
எதிர்காலம் உள்ளது. உணவுப்பொருட்கள் நூடுல்ஸ், சாஸ், டிரைமிக்ஸ், பிளேக்ஸ், ஸ்நேக்ஸ், குழந்தை உணவுப்பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
ஆந்திராவின்
பழங்குடி மக்கள் ஆண்டு முழுவதும் இந்த சேகோவை சேமித்து வைத்திருப்பார்களாம். எந்த
உணவும் கிடைக்காத தட்டுப்பாடான காலங்களில் இந்த கூந்தலபனை மாவை சமைத்து
சாப்பிடுவார்களாம். தென்னிந்தியாவில் பல இ.டங்களில் இது பஞ்சகால உணவாக இது பயன்பட்டுள்ளது.
Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author,
Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com
Thanks and Courtesy to respective authors' books and online
e-resources.
No comments:
Post a Comment