Wednesday, August 4, 2021

CLEARING NUT TREE- STYCHNOS POTATORUM OF LOGANIACEAE- தேற்றான்கொட்டை மரம்

 


தேற்றான்கொட்டை மரம்

CLEARING NUT TREE _ STYCHNOS POTATORUM

LOGANIACEAE

THETHANKOTTAI, CHILLAM, KADALI, ILLAM, AKKOLAM

My Dear Vivasaya Panchangam Friends! Good Morning !

கலங்கிய நீரை தெளியவைக்க, பல்வேறு மருத்துவ முறைகளில் மருந்துகள் செய்ய வைத்தியங்கள் செய்ய, என பலவகையில் பயன் ஆகும் மரம். இதன் பெயரில் ஒரு வனமே இருக்கிறது.

 

தேற்றாமரவனம் எங்கிருக்கிறது ? தெரியுமா உங்களுக்கு ?

பாரம்பரியமும் சிறப்பும் மிக்க மரங்களை கோவில்களின் ஸ்தல விருட்சமாக வைப்பது மரபு. அந்தவகையில் தேற்றான்கொட்டை மரமும் ஸ்தலவிருட்சம் என்ற சிறப்பிற்குரியது.

திருக்குவளையில் உள்ள திருக்கோயிலின் ஸ்தலவிருட்சம் தேற்றான்கொட்டை மரம்தான். திருக்குவளைக்கு தேற்றாமரவனம் என்ற ஒரு பெயரும் உண்டு. ஒரு காலத்தில் அங்கு இந்த தேற்றான்கொட்டை மரங்கள் அதிகம் இருந்திருக்க வேண்டும்.

தெற்கு இந்தியா, மத்திய இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா ஆகிய இடங்களில் தேற்றான்கொட்டை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

 ‘கலம் சிதை இல்லத்து

காழ் கொண்டு தேற்றக் கலங்கிய

நீர்போல நலம்பெற்றாள்

இது கலித்தொகை பாடல் வரிகள். தேற்றான்கொட்டையைத் தேய்க்க கலங்கிய நீர் தெளிவது போல தலைவனின் அரவணைப்பில் தலைவியின் மனம் தெளிவடையும் என்பது இதன் பொருள்.

முற்றிய தேற்றான்கொட்டை விதைகளை நீர் பிடிக்கும் பாத்திரங்களில் போடுவார்கள். ஊற்றிய நீர் சிறிது நேரத்தில் தெளிந்துவிடும். சில ஊரில் கிணற்றுத்  தண்ணீர் ப்பென்று இருக்கும். குடிக்கவே குமட்டும்.

அந்தக் கிணறுகளில் தேற்றான்கொட்டை தூளைத் தூவிப் பாருங்கள். தண்ணீர் சிறுவாணி தண்ணீர் மாதிரி ஆகிவிடுமாம். சிறுவாணி தண்ணீரை உலகின் சுவையான தண்ணீர் என்று சொல்லுகிறார்கள். அப்படியா ?

 

தேத்தான்கொட்டை மரத்தின் பல மொழிப் பெயர்

தமிழ்: தேத்தான்கொட்டை, சில்லம், கடலி, இல்லம், அக்கோலம் (THETHANKOTTAI, CHILLAM, KADALI, ILLAM, AKKOLAM)

தெலுங்கு: சில்லா கிங்காலு (CHILLA GINGALU)

கன்னடம்: சில்லா (CHILLA)

இந்தி: நிர்மலி, நெல்மால், நெய்மால் (NIRMALI, NELMAL, NEYMAL)

மலையாளம்:  கடகம், தேத்தா, (KADAGAM, THETTA)

தாவரவியல் பெயர்: ஸ்ட்ரிக்னாஸ் பொட்டட்டோரம் (STYCHNOS POTATORUM), பொதுப்பெயர் அல்லது  ஆங்கிலப்பெயர்: கிளியரிங்நட் ட்ரீ (CLEARING NUT TREE)

தாவரக்குடும்பம் பெயர்:  லோகனியேசியே (LOGANIACEAE)


பால்வினை நோய்களைத் தடுக்கும்

கோனேரியா என்னும் மேகவெட்டை பால்வினை நோய், லியூக்கோரியா என்று சொல்லப்படும் வெள்ளைப்படுதல், இரைப்பை நோய், மூச்சுக்குழாயில் ஏற்படும் வீக்கம், நாள்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, சிறுநீரகக்கல் மற்றும் பித்தப்பைக்கல், சக்கரை நோய்கண்வலி, குடற்புண், போன்றவற்றை குணப்படுத்தும் மூலிகை மரம் இது.

விவசாயத்திற்கு  தழை உரம் தரும். பூக்கள் தேனீக்களுக்கு தேன் தரும்கொட்டைகளை கலங்கிய நீரை தெளியவைக்க காலம் காலமாய் பயன்படுத்தும் உத்தி.

கட்டுமானப் பணிகளுக்கான மரச்சாமான்கள தயாரிக்கவேளாண்கருவிகள் செய்ய, காகிதம் தயாரிக்க மரக்குழம்பும் செய்ய மற்றும்  அடுப்பெரிக்க விறகும் தரும் மரம்.


தூசையும் மாசையும் தடுக்கும்

காற்று வேகமாய் வீசினால் வேகத்தைத் தடுக்கும், தூசுடன் வீசினால் தூசையும் தடுக்கும். அது மாசுடன் வீசினால் அந்த  மாசையும் துடைத்து தூய்மைப்படுத்தும்  மரம்.

1873 வாக்கில் பிரிட்டீஷ் ராணுவம் மழைக் காலத்தில் முகாமிடும் இடங்களில் எல்லாம் தேற்றான்கொட்டை இல்லாமல் போகாதாம். மறக்காமல் தேற்றான்கொட்டை போட்டு தண்ணீரை சுத்தப்படுத்தித்தான்  குடிப்பார்களாம்.

பழங்காலத்தில் தமிழகத்தில் கடல் வாணிபம் பிரசித்தமாக இருந்துள்ளதை

நமது இலக்கியப் பாடல்கள் படம்பிடிக்கின்றன. வெகுதூரம் கடலில்

பயணம் செய்யும் மாலுமிகள் தங்கள் மரக்கலங்களில்

தேற்றான்கொட்டையை தயாராக வைத்திருப்பார்களாம். போகும்

இடமெல்லாம் சிறுவாணி தண்ணீர் கிடைக்குமா என்ன ?


Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...