Monday, August 9, 2021

CEYLON SHATIN WOOD CHLOROXYLON SWIETENIA

 


கரும் பொரசு

CEYLON SHATIN WOOD, EAST INDIAN SHATIN WOOD

CHLOROXYLON SWIETENIA, RUTACEAE


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!


கரும்பொரசு மரம், மரச்சாமான்களை  அழகுபடுத்த மெல்லொட்டு  பலகையாக (VENEER) பயன்படுதல், வீட்டிற்கு ஏற்ற தட்டு முட்டு சாமான்கள் செய்ய, கட்டுமான வேலைகள் செய்ய, சிற்பம் செதுக்குதல் உட்பட கடைசல் வேலைகள் செய்ய உயர்தர மரக்கட்டைகள் தருதல், காகிதம் தயாரிக்க மரக்கூழ் கொடுத்தல், பொது நிலங்களிலும் தரிசு நிலங்களிலும் வளர்ந்து காடு வளர்ப்புக்கும், பருவநிலை மாற்றத்தினால்  ஏற்படும் விளைவுகளை சரிசெய்ய உதவும் மரம்தான் சிலான் ஷாட்டின் வுட் (CEYLON SHATIN WOOD)என ஆங்கிலத்திலும் குளோராக்ஸைலான் சுவீட்டீனியா (CHLOROXYLON SWEIETENIA)எனும் தாவரவியல் பெயரிலும், அழைக்கப்படும் அற்புதமான மரம்.

 

இந்த மரத்தின் தாயகம் இந்தியாஇது ஒரு வாணிக மரம் என்ற வகையைச் சேர்ந்தது. மரங்கள் 12 முதல் 18  மீட்டர்  உயரம் வரை வளரும்.

 

வீனீர் எனும்அழகு மரப்பட்டை

கரும்பொரசு மரத்தின் மேல்பட்டை முரட்டுத்தனமாக இருக்கும். ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடையதாக இருக்கும். பஞ்சுபோல இருக்கும். வீனீர் (VENEER) எனும் அழகு மரப்பட்டை

பட்டுப் புடவைக்கு ஜரிகை வைத்து தைப்பது மாதிரிதான் வீனீர்செய்வது. தரம் குறைவான ஒரு மரத்தில் செய்த ஒரு பொருளை அழகுபடுத்த வேறு மரப்பட்டையை ஒட்டுவதுதான் வீனீர் செய்வது.

வீனீர் என்பதனை அழகு மரப்பட்டை என சொல்ல்லாம்.

இன்னும் தெளிவாக சொல்லுகிறேன், மேலொட்டுப் பலகையாக இதனைப் பயன்படுத்தலாம். மரச் சாமான்களின் மேற்புறத்தை அழகுபடுத்த மெல்லிய மரப்பட்டையை ஒட்டுவார்கள். அதற்கு பயன்படும் மரம்தான் இந்த கரும்பொரசு

பனியன் கிழிந்திருந்தாலும் பரவாயில்லை என கிழியாத சட்டையை மேலே அணிவதுபோல. அதபோலத்தான் இதுவும். உட்புறம் எப்படி இருந்தாலும் மேற்புறத்தை  அழகுபடுத்த உதவும் மரம் இந்த கரும்பொரசு. நகாசு வேலை செய்ய ஏற்ற மரம்.

கரும்பொரசுவின் பல மொழிப்பெயர்கள்

தமிழ்: பொரசு (PORASU)

மலையாளம்: வரிமரம் (VARIMARAM)

இந்தி: பிர்ரா (BIRRA)

தெலுங்கு: பில்லு (BILLU)

கன்னடம்: பிட்டுலா (PITTULA)

பில்லோடாக்கா (PHYLLODAKKA)

தாவரக்குடும்பம் : ரூட்டேசி (RUTACEAE)

தாவரவியல் பெயர்: குளோரோராக்சைலான் ஸ்விட்டீனியா (CHLOROXYLON SWETENIA)

பொதுப்பெயர்ஃஆங்கிலப் பெயர்: ஈஸ்ட் இண்டியன் சாட்டின் வுட் (EAST INDIAN SHATIN WOOD  TREE)   


மரத்தின், தழைகள் விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.   டேனின் நிறைந்த  இதன் பட்டைகள்  தோல் பதனிட  பயனாகும். இதன் பிசின் மஞ்சள் சாயம் தயாரிக்க  உதவும். இதனை வாணிப மரம்  என்று வகைப்படுத்துகிறார்கள்.

 

கடைசல் செய்யலாம், சிற்பம் செதுக்க லாம்

இதன் மரம்  கடைசல் செய்ய, சிற்பம் செதுக்க, பலகைகள், கோலாட்டக் குச்சிகள்   வீடு கட்டுமானச் சாமான்கள், பெட்டிகள் செய்ய, காகிதம் மற்றும் தயாரிக்க மரக்கூழ் தயாரிக்க பயன்படும்

ஏற்ற மண்: செவ்வல்சரளை மண்  கரும்பொரசு மரங்கள் வளர ஏற்ற மண்..  விதை,   நாற்றுவேர்க்குச்சி,  ஆகியவற்றை நடவுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...