Monday, August 2, 2021

BULLOCK HEART, ராம்சீத்தா பழ மரம்

 


ராம்சீத்தா

ANNONA RETICULATA

 NETTED CUSTARD APPLE, BULLOCK HEART

ANNONACEAE


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் தினம்தினம் டாக்டரிடம் போக வேண்டாம் என்ற பழைய மொழியை ராம்சீத்தாவுக்கு சாதகமாக மாற்றி எழுதுங்க நாட்டாமைஇப்படி மக்கள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள் இப்போது. காரணம்  உணவே மருந்து என்ற தீர்ப்பை மக்கள் மருந்தே உணவு என்று மாற்றி எழுதி ரொம்ப நாள் ஆச்சி.

 

வளரும் சிறிய மரம். பெரிய சைஸ் இதயம் போல இருப்பதால் இது புல்லக் ஹார்ட் ஆனது. மஞ்சள் அல்லது காவி நிறத்தில் காய்த்து ஊதா மற்றும் சிவப்பு நிறத்தில் கனிந்து பழமாகும்.

 

மத்திய அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் மண்ணுக்கு சொந்தமான மரம். கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் வரை வளரும்.

 

ஒரு பழ மரமாக, மூலிகை மரமாக பல நாடுகளில் பரவியுள்ளது. அவை இந்தியா, டைவான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பகுதிகள்.

 

மத்திய மெக்சிகோவில் ஹோக்ருஸ், மத்திய அமெரிக்காவில் பெலிஸ், சியாபாஸ், கோஸ்ட்டாரிகா, கவுட்டிமாலா, ஹோண்டுராஸ், நிகராகுவா, மற்றும் பனாமா.

 

மேலும்  கரிபியனில் பஹாமாஸ், டொமினிகன் ரிபப்ளிக், காடிலோட், ஹெயிட்டி, மார்டினிக், போர்டோரிகோ, டிரினிடாட், ஜமெய்கா, மற்றும் கியூபா.

 

தென் அமெரிக்காவில் கயானா மற்றும் வெனிசுலா. பிரேசிலில் அமேசோனாஸ், பாஹியா, மேடோகுரோசா, மினாஸ் ஜெராயிஸ், பாரா, ரியோ டி ஜெனிரோ, மற்றும் சாவ் பவ்லோ. மேற்கு தென் அமெரிக்காவில் பொலிவியா, கொலம்பியா, ஈக்வேடர், எல்சால்வடார், மற்றும் பாராகுவே.

 

ஆனைக்கால் நோயா ? ஆண்மையின்மையா ?

இந்தியாவில் தமிழ்நாடு, அஸ்ஸாம், பீஹார், மணிப்பூர், மஹாராஸ்ட்ரா, ஒரிசா மற்றும் உத்தரப்பிரதேசம்.

 

ராம்சீத்தா பழமாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். அவை, மலேரியா, குடற்புண், கால்வீக்கம், வயிற்றுப்போக்கு, சீதபதி, தோல்நோய்கள் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த, விஷம் சாப்பிட்டவர்களை வாந்தி எடுக்க வைப்பதற்கு ராம்சீத்தா பழத் தோலை பயன்படுத்துகிறார்கள்.

 

ஆனைக்கால் நோய், ஆண்மையின்மை, சக்கரைநோய், ரத்த அழுத்தம், ரத்தக்கொதிப்பு, அஜீரணம், மலச்சிக்கல், மூட்டுவலி, கீல்வாதம், போன்றவற்றைச் சரிசெய்ய பாரம்பரிய வைத்தியர்கள் ராம்சீத்தா பழங்களை சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள்.

 

புற்றுநோய்கள், பால்வினைநோய்கள், போன்றவற்றை குணப்படுத்தவும் ராம்சீத்தா வேர்க் கஷாயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

 

இதன் தளிர் இலைகளை சமைக்கலாம். பூ மொட்டுக்களை உணவுப் பொருட்கள் சமைக்கும்போது மணமூட்டுவதற்காக பயன்படுத்தலாம். மரத்தில் கத்தி, சுத்தி, அரிவாள், அரம் போன்ற கருவிகளுக்கு கைப்பிடிகள் போடலாம்.

 

எங்கள் தோட்டத்தில் ராம்சீத்தா குடியேறி சிறுசாய் வளர்ந்து நிற்கிறது. ஆண்டுக்கு ஐந்து பத்துப் பழங்கள் என சிக்கனமாய் காய்க்கிறது. ஒவ்வொரு பழமும் 300 முதல் 500 கிராம் எடைக்குக் குறையாது.

 

இகாமர்ஸ்இல்லாமல் ஈ கூட ஓட்ட முடியாது

பரவலாக விதைகளைப்போட்டு புதிய கன்றுகளை உருவாக்கலாம். விண்பதியன்களும் ஒட்டுக் கன்றுகளும் தற்போது ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

 

இந்த இணையத்தளங்களில் ராம்சீத்தா விதைகள் வாங்கலாம். இனி நாம் ஆன்லைனில் விற்க வாங்க பழக வேண்டும். அடுத்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு இகாமர்ஸ்இல்லாமல் ஈ கூட ஓட்ட முடியாது.

 

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கம்ப்யூட்டர் தெரியாதவர்களை கம்ப்யூட்டர் கைநாட்டு என்றார்கள். நான் கூட இந்த நிமிஷம் வரை இகாமர்ஸ் கைநாட்டுதான்.

 

ராம்சீத்தாவின் பலமொழிப் பெயர்களைப் பார்க்கலாம்.

தமிழ்: ராம்சீத்தா (RAM SEETHA)

இந்தி: ராம்பால் (RAMPHAL) 

மலையாளம்: மணிலா நிலம் (MANILA NILAM)

கன்னடா: ராம்பால் (RAM PHAL)

பொதுப்பெயர்கள்: நெட்டட் கஸ்ட்டர்ட் ஆப்பிள், புல்லக் ஹார்ட் (NETTED CUSTARD APPLE, BULLOCK HEART)

தாவரவியல் பெயர்: அனோனா ரெட்டிகுலேட்டா (ANNONA RETICULATA)

தாவரக்குடும்பம்: அனோனேசியே (ANNONACEAE)

 

இந்தியாவின் பல பகுதிகளில் ராம்சீத்தா வளர்ந்துள்ளது. ஆயினும் கல்கத்தா பகுதியில் இதனை விரும்பி சாகுபடி செய்கிறார்கள். ஆனால் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் பதினேழாம் நூற்றாண்டு வாக்கிலேயே வீட்டுத் தோட்டங்களில் குடியேறிவிட்டது.


Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...