Tuesday, August 31, 2021

DISEASE CURING AXLE WOOD TREE, ANOGEISSUS LATIFOLIA, COMBRETACEAE

 

வெள்நாகு

(VEL NAGU, AXLE WOOD TREE, ANOGEISSUS LATIFOLIA, COMBRETACEAE)

பொதுப்பெயர்: ஆங்கிலப் பெயர் : ஆக்சில் வுட் ட்ரீ (AXLE WOOD TREE)

தாவரவியல் பெயர்  :  அனோஜீஸஸ் லேட்டிஃபோலியா (ANOGEISSUS LATIFOLIA)

தாவரக்குடும்பம்  : காம்பிரிட்டேசி (COMBRETACEAE)

தாவரவியல் பெயர்  :  அனோஜீஸஸ் லேட்டிஃபோலியா (ANOGEISSUS LATIFOLIA)

தாவரக்குடும்பம்  : காம்பிரிட்டேசி (COMBRETACEAE)

மரத்தின் தாயகம் : இந்தியா 

COLEUS GARDENING TIPS, கற்பூரவள்ளி தோட்டக் குறிப்புகள்

தோட்டம் போடலாம் வாங்க - தொடர் 

GARDENING TIPS- SERIAL

 கற்பூரவள்ளி 

KARPURAVALLI, INDIAN BORAGE, COLEUS AMBOINICUS, LAMIACEAE

My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

கிராமம் நகரம் என்ற வித்தியாசமின்றி ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி. ஜலதோஷம் தும்மல் இருமல் மூக்கு ஒழுகுதல் மூக்கடைப்பு ஆஸ்துமா செரியாமை ஆகியவற்றை குணப்படுத்தும் கை வைத்தியத்திற்கு ஏற்ற செடி. 

வீட்டு தோட்டத்தில் மூலிகை தோட்டத்தில் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் மாடித் தோட்டங்களில் இதனை வளர்க்கலாம். 

பாரம்பரிய மூலிகைச் செடி. நறுமண தாவரம். அழகுச் செடி. 


பயன்கள் 

கிராமங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு கற்புறவள்ளி சாற்றினை கொடுப்பார்கள். ஐந்து இலைகளை பறித்து நெருப்பில் வாட்டி எடுத்து அதிலிருந்து வடியும் சாற்றினை பாலாடையில் எடுத்து கடை வாயில்வைத்து ஊற்றுவார்கள். 

சமீபத்தில் கொரோனா சீனாவில் இருந்த போதே எனக்கு தெரிந்த ஒருத்தர் தினமும் கற்பூரவல்லி இலைகளைப் பறித்து சாப்பிடுவார். எனக்கு அப்போது ஜலதோஷம் தொடர் கதையாக இருந்தது. 

அவர் நச்சரிப்புத் தாங்காமல் கற்பூரவள்ளியில் பஜ்ஜி தயாரித்து சாப்பிட்டேன். அடுத்த நாள் பெருமையாக எங்கள் டாக்டரிடம் சொன்னேன் அவர் சொன்னார் உங்களுக்கு வயசு 71. 

இந்த வயதில் எண்ணெய் பண்டங்கள் பஜ்ஜி போண்டா இவர்களையெல்லாம் சாப்பிடக் கூடாது என்றார் கற்பூரவள்ளி இலைகளை மட்டும் தனியாக வேண்டுமானால் சாப்பிடுங்கள் என்று சொன்னார்


 எங்கு வளர்க்கலாம் ? 
வீடுகளின் முன்புறம், பின்புறம், ஜன்னல் பக்கம், நடைபாதைகள், மாடி தோட்டங்கள், அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வளர்க்கலாம். 

நடுத்தரமான அளவு தொட்டிகளில் பெட்டிகளில் மற்றும் அழகிய சட்டிகளில் கூட நடலாம். செடிகள் எங்கு கிடைக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். அதிக விலையிருக்காது. 

அறிந்தவர்கள், தெரிந்தவர்களின் வீடுகளிலிருந்து கற்பூரவல்லியின் சிறிய தண்டுகளை தெரிந்தோ தெரியாமலோ பறித்துக் கொண்டு வந்து வெட்டி அவற்றை நடலாம். 

செடிகள் எப்படி இருக்கும் ?

இலைகள் இளம் பச்சை நிறமாக முட்டை வடிவில் இருக்கும். மடக்கினால் கூட மறுப்பேதும் சொல்லாமல் மடக்கென உடையும். 

இலைகள் சாறு நிறைந்ததாய் இருக்கும். இதன் தண்டுகள் மிருதுவாக உடைத்தால் பட்டென உடையும். இலைகளின் மேற்பரப்பை தொட்டுப் பார்த்தால் மெத்தென இருக்கும். 

தைலவாடை வீசும். பல்லாண்டு வளரும் செடி. சொந்த நாடு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பொதுப் பெயர்கள் இந்தியன் போரேஜ், மெக்சிகன் மின்ட், கியூபன் ஒரிகநோ, இந்தியன் மின்ட், 

இதில்  ஃபைட்டோ கெமிக்கல்ஸ் எனும் 18 வகையான தாவர இரசாயனங்கள்  இருக்கின்றன. இவை தவிர ஆன்டி ஆக்சிடென்ட்கள் நோய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் 'சி'  கணிசமாக உள்ளது. 

பயிர்பெருக்கம்: 
தண்டுகளின் துண்டுகள், விதைகள்.
 
பருவம்: 
வெப்ப மண்டலப் பகுதிகள், மித வெப்ப மண்டலப் பகுதிகள். குளிர்ச்சியான பகுதிகளில் நன்கு வளரும். ஓரளவு நிழல் பாங்கான இடங்களில் நன்றாக வளரும். 


பூக்கள்: 
குட்டையான காம்புகளில் பூக்கும். இளம் ஊதா நிறப் பூக்கள். 10 முதல் 20 பூக்கள் நெருக்கமான அடுக்குகளில் இருக்கும். 


விதைகள்: 
மிருதுவானவை, மங்கலான காவி நிறத்தில் தட்டையான வட்ட வடிவத்தில் இருக்கும். 

பரவி இருக்கும் இடங்கள்: 
தெற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, அங்கோலா, மொசாம்பிக், கென்யா, தான்சானியா, மற்றும் இந்தியா. 

பலவிதமான நோய்களை குணப்படுத்தும். 
தோல் சம்பந்தமானவை, எலும்பு தேய்மானம், புற்றுநோய் எதிர்ப்பு, கண்நோய்கள், மன இறுக்கம், படபடப்பு, சிறுநீரகம் மற்றும்  வயிற்று உபாதைகள். 

வளர்த்துப் பாருங்கள் கற்பூரவள்ளி ! நோய்கள் நம்மை விட்டுப் போகும் வெகுதூரம் தள்ளி ! 

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.

Monday, August 30, 2021

BEN TEAK, குமிழ் மரம் எனும் வெண்தேக்கு


குமிழ் மரம் 

(KUMIZH MARAM, BEN TEAK, MELINA  ARBOREA,SNAP DRAGON, WHITE TEAK, MALAY BUSH BEACH, KUMHAR - VERBANACEAE )

தாவரவியல் பெயர் :  மெலினா ஆர்பொரியா (MELINA  ARBOREA)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : பென் டீக், மெலினா, ஸ்னேப் டிராகன், ஒயிட் டீக், மலாய் புஷ் பீச், கும்ஹார் (BEN TEAK, MELINA, SNAP DRAGON, WHITE TEAK, MALAY BUSH BEACH, KUMHAR)

தாவரக்குடும்பம் :  வேர்பனேசி (VERBANACEAE)

மரத்தின் தாயகம் :  இந்தியா.


வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம். மரச் சாமான்களுக்கென்றால் பலமுறை மருத்தாம்பாக வளர்க்கலாம். பல நாடுகளில் பரவி இருக்கும் மரம்.

கொஞ்சம் கூடுதலாக ஈரப்பசை இருந்தால் கூட வேகமாக வளரும். முப்பது மீட்டருக்கும் மேல் மளமளவென வளரும்.

வெண்தேக்கு என்றும் குமிழ் தேக்கு என்றும்  சொல்லும் இந்த மரம் ஒரு இந்திய மரம்.

சீர் கேடடைந்த வனப்பகுதியை வளப்படுத்த சிறந்த மரம். மரங்களைத் துளைக்கும் வண்டுகள், மரங்களைத் தாக்கி பலவீனப்படுத்தும் பூசணங்கள், கரையான்கள் எதுவும் குமிழ் மரத்திடம் மூச்விடக்கூடாது.

 

குமிழ் மரத்தின் பலமொழிப் பெயர்கள்: 

தமிழ் : குமிழ் மரம், குமுளா மரம் (KUMIZH MARAM, KUMULA MARAM)

இந்தி: கும்கார் (KUMHAR)

மணிப்புரி: வாங் (WANG)

மராத்தி: சிவன் (SIVAN);

மலையாளம்: கும்பில் (KUMBIL)

தெலுங்கு: பெத்த குமுடு (BEDDA KUMUDU)

கன்னடம்: சிவானி (SIVANI)

சமஸ்கிருதம்: மதுமதி (MATHUMATHI) 


மரத்தின் பயன்கள் :

தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும். சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும். ஈரி பட்டுப்  புழுக்களுக்கு உணவாகும். மருந்துப் பொருளாகப் பயனாகிறது.

பூக்கள்: புத்தாண்டு தினத்தன்றுசில இடங்களில் பூக்களை அரிசியுடன் சேர்த்து ஒரு வகையாக கேக்குகளை தயாரித்து சுவைத்து கொண்டாடுகின்றனர்.

பட்டை: டேனின் நிறைந்தது. தோல்பதனிடலாம். மருந்துப் பொருளாகப் பயனாகிறது.

மரம் : தீப்பெட்டிகள் தீக்குச்சிகள் செய்ய, மேஜை நாற்காலி செய்ய, படகுகள், கட்டுமரங்கள் தயாரிக்க, ஒட்டுப்பலகை , பார்ட்டிகிள் போர்டு ஆகியவை செய்ய      மற்றும்       காகிதம் தயாரிக்க மரக்கூழும் தரும்.

சுரங்கங்களில் தூண்களாகவும், படகுகள், இசைக்கருவிகள், கடைசல் செய்து செய்யும் பொருட்கள் செய்யவும் அற்புதமாக ஒத்துழைக்கும் மரம்.

கோகோ பயிர் செய்யும் தோட்டங்களில் நழல்தரும் மரமாகவும், காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது. வேகமாக வளரும் இந்த மரங்கள் தோட்டங்களில் களைகளையும் வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது.

கனி : சிறுவர்களுக்கும் கால்நடைகளுக்கும் உண்ணக் கனி தரும்.   

இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க உதவும்.

மருத்துவப் பயன்: கேன்சர் கட்டிகள், ரத்தத்தில் ஏறபடும் கோளாறுகள், பாம்புக்கடி,                 எலிக்கடி, காலரா, வயிற்றுப் போக்கு, தலைவலி, காக்காய் வலிப்பு, ரத்தச்சோகை,                          தொழு நோய், மூலம், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்த             பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

    

ஏற்ற மண் :  பரவலான மண் வகைகளில் வளரும்.

மிகையான அமிலத் தன்மை உடைய மண், உவர் மண், மற்றும் உப்பு மண்ணிலும் வளரும்.

மணல்சாரி மண், சற்று லேசான இருமண்பாடு மண் மற்றும் கடினமான களிமண் கண்டம் உள்ளது போன்ற எல்லாவகை  மணணிலும் நன்கு வளரும்.

ஈரச்செழிபாபான இடங்களில் நன்கு வளர்ந்தாலும் வறட்சியான சூழல்களிலும் நன்கு வளரும் என்கிறார்கள். ஆனால் சிலர் காய்ச்சல் தாங்காது சார். ஒலந்து போயிடும் சார்என்கிறார்கள். 

 

கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும்.

இந்தியாவிற்கு சொந்தமான இந்த மரம் சைனா, பங்களாதேஷ், பூட்டான், இந்தோநேசியா, மலேசியா, மியான்மார், நேப்பால், பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

 

Monday, August 9, 2021

CEYLON SHATIN WOOD CHLOROXYLON SWIETENIA

 


கரும் பொரசு

CEYLON SHATIN WOOD, EAST INDIAN SHATIN WOOD

CHLOROXYLON SWIETENIA, RUTACEAE


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!


கரும்பொரசு மரம், மரச்சாமான்களை  அழகுபடுத்த மெல்லொட்டு  பலகையாக (VENEER) பயன்படுதல், வீட்டிற்கு ஏற்ற தட்டு முட்டு சாமான்கள் செய்ய, கட்டுமான வேலைகள் செய்ய, சிற்பம் செதுக்குதல் உட்பட கடைசல் வேலைகள் செய்ய உயர்தர மரக்கட்டைகள் தருதல், காகிதம் தயாரிக்க மரக்கூழ் கொடுத்தல், பொது நிலங்களிலும் தரிசு நிலங்களிலும் வளர்ந்து காடு வளர்ப்புக்கும், பருவநிலை மாற்றத்தினால்  ஏற்படும் விளைவுகளை சரிசெய்ய உதவும் மரம்தான் சிலான் ஷாட்டின் வுட் (CEYLON SHATIN WOOD)என ஆங்கிலத்திலும் குளோராக்ஸைலான் சுவீட்டீனியா (CHLOROXYLON SWEIETENIA)எனும் தாவரவியல் பெயரிலும், அழைக்கப்படும் அற்புதமான மரம்.

 

இந்த மரத்தின் தாயகம் இந்தியாஇது ஒரு வாணிக மரம் என்ற வகையைச் சேர்ந்தது. மரங்கள் 12 முதல் 18  மீட்டர்  உயரம் வரை வளரும்.

 

வீனீர் எனும்அழகு மரப்பட்டை

கரும்பொரசு மரத்தின் மேல்பட்டை முரட்டுத்தனமாக இருக்கும். ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடையதாக இருக்கும். பஞ்சுபோல இருக்கும். வீனீர் (VENEER) எனும் அழகு மரப்பட்டை

பட்டுப் புடவைக்கு ஜரிகை வைத்து தைப்பது மாதிரிதான் வீனீர்செய்வது. தரம் குறைவான ஒரு மரத்தில் செய்த ஒரு பொருளை அழகுபடுத்த வேறு மரப்பட்டையை ஒட்டுவதுதான் வீனீர் செய்வது.

வீனீர் என்பதனை அழகு மரப்பட்டை என சொல்ல்லாம்.

இன்னும் தெளிவாக சொல்லுகிறேன், மேலொட்டுப் பலகையாக இதனைப் பயன்படுத்தலாம். மரச் சாமான்களின் மேற்புறத்தை அழகுபடுத்த மெல்லிய மரப்பட்டையை ஒட்டுவார்கள். அதற்கு பயன்படும் மரம்தான் இந்த கரும்பொரசு

பனியன் கிழிந்திருந்தாலும் பரவாயில்லை என கிழியாத சட்டையை மேலே அணிவதுபோல. அதபோலத்தான் இதுவும். உட்புறம் எப்படி இருந்தாலும் மேற்புறத்தை  அழகுபடுத்த உதவும் மரம் இந்த கரும்பொரசு. நகாசு வேலை செய்ய ஏற்ற மரம்.

கரும்பொரசுவின் பல மொழிப்பெயர்கள்

தமிழ்: பொரசு (PORASU)

மலையாளம்: வரிமரம் (VARIMARAM)

இந்தி: பிர்ரா (BIRRA)

தெலுங்கு: பில்லு (BILLU)

கன்னடம்: பிட்டுலா (PITTULA)

பில்லோடாக்கா (PHYLLODAKKA)

தாவரக்குடும்பம் : ரூட்டேசி (RUTACEAE)

தாவரவியல் பெயர்: குளோரோராக்சைலான் ஸ்விட்டீனியா (CHLOROXYLON SWETENIA)

பொதுப்பெயர்ஃஆங்கிலப் பெயர்: ஈஸ்ட் இண்டியன் சாட்டின் வுட் (EAST INDIAN SHATIN WOOD  TREE)   


மரத்தின், தழைகள் விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.   டேனின் நிறைந்த  இதன் பட்டைகள்  தோல் பதனிட  பயனாகும். இதன் பிசின் மஞ்சள் சாயம் தயாரிக்க  உதவும். இதனை வாணிப மரம்  என்று வகைப்படுத்துகிறார்கள்.

 

கடைசல் செய்யலாம், சிற்பம் செதுக்க லாம்

இதன் மரம்  கடைசல் செய்ய, சிற்பம் செதுக்க, பலகைகள், கோலாட்டக் குச்சிகள்   வீடு கட்டுமானச் சாமான்கள், பெட்டிகள் செய்ய, காகிதம் மற்றும் தயாரிக்க மரக்கூழ் தயாரிக்க பயன்படும்

ஏற்ற மண்: செவ்வல்சரளை மண்  கரும்பொரசு மரங்கள் வளர ஏற்ற மண்..  விதை,   நாற்றுவேர்க்குச்சி,  ஆகியவற்றை நடவுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.

Friday, August 6, 2021

AFRICAN SAUSAGE TREE, KIGELIA PINNATA - சிவகுண்டலம் மரம்

 


சிவகுண்டலம்

 AFRICAN SAUSAGE TREE, KIGELIA PINNETA, BIGNONIACEAE

My Dear Vivasaya Panchangam Friends! Good Morning !

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்படியான பெயர் கொண்ட சிவகுண்டல மரம் ஒர் ஆப்ரிக்க மரம். சிவகுண்டலம் மரத்தின் பூக்கள் ரத்த சிவப்பு நிறத்தில் நடுநிசியில் பூக்கும். இதன் மகரந்தச் சேர்க்கைக்கு, கார்பெண்டர் தேனீக்கள் போன்ற பெரிய பூச்சி இனங்கள் மற்றும் சன்பேர்ட்ஸ் என்னும் பறவைகள் உதவுகின்றன.

 

காட்டு விலங்குகள் விரும்பும் பழங்கள்

பெரிய சைஸ் சாசேஜ் போல் இதன் பழங்கள்  நீளமான காம்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும். இந்த சிவகுண்டலப் பழங்கள் ஒவ்வொன்றும் ஐந்து  முதல் ஏழு கிலோவரை கூட இருக்கும். பழம் எழுபது முதல் நூறு செ.மீ. நீளம் கூட இருக்கும்.

பழங்களை நாம் சாப்பிட முடியாது. நீர் யானைகள், பன்றிகள், முள்ளம் பன்றிகள், குரங்குகள், மனிதக் குரங்குகள், ஒட்டச்சிவிங்கிகள் போன்றவை விரும்பிச் சாப்பிடும். விதைகள் இந்தப் பிராணிகளின் சாணத்தின் மூலம் பரவுகின்றன.

 

ஹோமர் எழுதிய  சாசேஜ் கவிதை 

ஆங்கிலத்தில் இதன் பெயர்சாசேஜ் ட்ரீ. சாசேஜ் என்பது ஒரு அசைவ உணவுப் பண்டம். பர்கர் என்று சொல்வது மாதிரி. ஆனால் சாசேஜ்க்கு ஒரு சரித்திரம் உண்டு. சாசேஜ் 2000 ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் உள்ளது.

கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் த சாசேஜ்என்ற தலைப்பில் ஒரு கிரேக்க நாடகம் மேடையேற்றப்பட்டது. உலகப் பிரபலமான கவிஞர் ஹோமர் தனது கவிதைகளில் கூட சாசேஜ் பற்றி எழுதியுள்ளார்.

இன்றும் கூட இந்தியா உடபட மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சாசேஜ் பிரபலமான உணவு வகை. ஒரு காலத்தில் அசைவ வகை உணவாக இருந்தது. இன்று வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சைவ சாசேஜ் மற்றும் இனிப்பு சாசேஜ் என மாற்றிவிட்டார்கள்.

 

அழகுசாதனப் பொருட்கள்

தோல் வியாதிகள், குடற்புழுக்கள், உட்பட பல நோய்களை குணப்படுத்த இதன் பழங்கள் மருந்தாகிறது. இவை தவிர ஷேம்பு, முகத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும் பேசியல் கிரீம்கள் போன்ற அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கிறார்கள். இதற்கு சாசேஜ் மரத்தின் பூக்கள் பயன்படுகின்றன.

 

மகோராஸ் என்னும் சிறு படகு

சென்னைக்கு மெரினா கடற்கரை மாதிரி போட்ஸ்வானாவுக்கு மகோராஸ் படகுசவாரி. மகோராஸ் என்பது ஒரு சிறு படகு. ஒரே மரத்தில் செதுக்கும் சிற்பம் போல ஒரே மரத்தில் செய்யும் படகுதான் மகோராஸ். 

ஒரு பெரிய ஒற்றை மரத்தைக் குடைந்து இந்தப் படகினை செய்கிறார்கள். குடைந்த பகுதிக்குள் குறைவாக பயணிகள் உட்கார்ந்து பயணம் செய்யலாம். குறைவான ஆழமுள்ள நீரில் நீளமான கம்புகளின் உதவியுடன் இந்த படகினை செலுத்துவார்கள்.

ஆப்ரிகன் எபனி, நாப்தான் அகேசியா, நம்ம சாசேஜ் ட்ரீ ஆகிய மூன்று மரங்களில்தான் இந்த மகோராஸ் படகுகளைச் செய்ய முடியுமாம்.

மரங்கள்,  இருபது மீட்டர் வரை உயரமாக வளரும். கொப்பும் குலையுமாய் வருஷம் 365 நாளும் இருக்கும் பசுமை மாறா மரம். கடுமையான வறட்சியில் மட்டும் இலைகளைக் கொட்டி தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும்.

காவிநிறக் கிளிகள் 

காவிநிறத் தலையுடைய ஒரு வகைக் கிளிகள்  இதன் பழங்களை ரசித்து ருசித்து சாப்பிடும். பொதுவாகக் கிளிகள் என்றால் அவை புழங்கும் இடங்ளில் கீசிகீச்சென்று கத்தி அந்தப்பகுதியையே கலவர பூமியாய் மாற்றிவிடும்.

ஆனால் இந்த காவித்தலைக் கிளிகள் பறவைகளிலேயே அமைதியானவை என்று பெயர் எடுத்தவை. அதனால் இவை வீடுகளில் வளர்க்க ஏற்றவை என்று அப்பார்ட்மென்ட் பெர்ட்ஸ்என்று பட்டம் தந்திருக்கிறார்கள். நம்ம ஊரில் அப்பார்ட்மென்ட் கிளிகள் வந்துவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் ஆப்ரிக்காவில் சாசேஜ் மரங்கள்தான் இந்த கிளிகளுக்கு அப்பார்ட்மெண்ட்.

கிரேட்டர்கூடு என்னும் ஒருவகை மான்களும் சாசேஜ் மரத்தின் ரசிகர்கள். இதன் பழங்களை விரும்பிச் சாப்பிடும். கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்க வகை மான். ஆன்டிலோப் என்னும் மான் வகைகளிலேயே பெரிய சைஸ் மான் இது. அடர்ந்த காடுகளில் மாடுகள்போல சுற்றித் திரியும்.

 

சாசேஜ் பழங்களை பறித்தவுடன் சாப்பிடக் கூடாது. அதில் ஒருவகை நச்சுப்பொருள் இருக்கும். ஆனால் பழத்தை உலரவைத்து சாப்பிடலாம். வறுத்து சாப்பிடலாம். நொதிக்கவைத்து புளிக்கவைத்தும் சாப்பிடலாம்.

இதிலிருந்து முராட்டினா (MURATINA) என்னும் ஒரு முரட்டு சாராயம் தயாரித்து குடிக்கலாம். முழுக்க முழுக்க ஆர்கானிக். பருப்பில்லாமல் கல்யாணமா என்பது தமிழ் பழமொழி. முராட்டினா இல்லாமல் விசேஷமா என்பது கென்யா நாட்டுப் பழமொழி. அங்கு முராட்டினா அவ்வளவு பாப்புலர்.

கிக்கியூ என்னும் பழங்குடிமக்கள் பலநூறு வருஷமாக பருகிவரும் பானம் இது. சாசேஜ் பழத்தையும் கரும்பு சாற்றையும் சேர்த்து புளிக்கவைத்து இந்த முராட்டினாவைத் தயாரிக்கிறார்கள். கலக்கலான கசப்பு சுவையுடன் ஆல்கஹால் நெடியுடன் அசத்தலாக இருக்கும் என்கிறார்கள் இதனை வாசம் பிடித்தவர்கள்.

 

பலமொழிப் பெயர்கள்   

தமிழில் சிவகுண்டலம், யானைப்பிடுக்கன் (SIVAKUNDALAM, YANAIPIDUKKAN)

மலையாளத்தில் சிவகுண்டலம் (SIVAKUNDALAM)

இந்தியில்  பலம் கீரா, ஹாத்தி பைலான் (PALAM KEERA, HATHTHI PYLA,)

இதன் தாவரவியல் பெயர்  கிகேலியா பின்னேட்டா (KIGELIA PINNETA)  

பொதுப்பெயர் மற்றும் ஆங்கிலப்பெயர்  ஆஃப்ரிகன் சாசேஜ் ட்ரீ (AFRICAN SAUSAGE TREE)

தாவரக்குடும்பம் பெயர் :  பிக்னோனியேசி (BIGNONIACEAE)

 

முராட்டினா தயாரிக்கும் பார்முலா என்னிடம் உள்ளது. தேவைப்படுவோர் தொடர்புகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது. முராட்டினாவை முயற்சித்துப் பார்க்கலாம்.

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.

MANGIUM TREE, ACACIA MANGIUM, மான்செவிக்கருவை ஆஸ்திரேலிய மரம்

 

மான்செவிக்கருவை

ACACIA MANGIUM, FABACE

MANGIUM TREE, BLACK WATTLE, HICKORY WATTLE, FOEST MANGROVE, SABA SALWOOD, BROWN SALWOOD

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...