Saturday, July 10, 2021

கரு நொச்சி ஆண்கள் கருத்தடை மருந்து TRADITIONAL MEDICINES OF CHASTE TREE

 கரு நொச்சி

ஆண்கள் கருத்தடை மருந்து

TRADITIONAL  MEDICINES OF CHASTE TREE



வணக்கம் பூமி ஞானசூரியன்

இன்று நாம் கருநொச்சியின் மருத்துவ குணங்கள், அது என்னென்ன நோய்களை குணப்படுத்தும்,  என்பதுபற்றி சுருக்கமாய்ப் பார்க்கலாம்.

நொச்சி மரத்தின் இலைகள் பார்க்க மயிலின் பாதம் போல இருக்கும் அதனால்தான் இதனைமயிலடிச் செடிகள்என்று சொல்லுகிறது சங்க இலக்கியம்.  மயில் அடி  இலைய மாத்திரல் நொச்சி என்கிறது குறுந்தொகை என்னும் சங்க இலக்கிய நூல்.

கரு நொச்சியின், பொதுப் பெயா்சேஸ்ட் ட்ரீ  இதன் தாவரவியல் பெயா் வைட்டக்ஸ் நெகுண்டோ,  (VITEX NESUNDO )

கரு நொச்சியை தெலுங்கில் அட்டசரமு, மலையாளத்தில் கரு நொச்சி, கன்னடத்தில் ஆடு தொட்டகிட்டா, இந்தியில்  நீலி நா்கண்டி என்றும் அழைக்கிறார்கள்.

ஒரு ஆச்சரியமான செய்தி ரியுமா உங்களுக்கு?

எச் வி எய்ட்ஸ் வைரஸ்ன் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தி  கருநொச்சிக்கு  உண்டு என்று சமீபத்திய ஆராய்சிகள் சொல்லுகின்றன.

இதை விட ஆச்சரியமான செய்தியை சொல்லுகிறேன் பாருங்கள். 

கரு நொச்சியிலிருந்து ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடித்திருக்கிறார்கள்.  இந்தோனேசியா இந்த ஆராய்ச்சியில் மும்முரமாக உள்ளது.

இத்தோடு சம்மந்தப்பட்ட சுவாரஸ்யமான ஒரு செய்தியை சொல்லுகிறேன் கேளுங்கள்.  இந்தோனேசியாவில்பப்புவா னியூகினியாஎன்று ஒரு மாநிலம் உள்ளது.

கரு நொச்சி, வெண் நொச்சி, நீல நொச்சி, நீா் நொச்சி, மயலடி நொச்சி என னொச்சியில் ஐந்து  வகைகள் உள்ளன.

இந்த பப்புவா மாநிலத்தில் பழங்குடியைச் சோ்ந்த ஆண்கள் பலரும் கருத்தரிப்பை தள்ளிப்போட இந்த கரு நொச்சியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

வெகுகாலமாக ரகசியமாக இருந்த செய்தியை ஆராய்ச்சியாளா்கள் மோப்பம் பிடித்து தெரிந்து கொண்டார்ள்.  அதன் விளைவு என்னதெரியுமா?

உலகநாடுகள் அத்தனையும் மிரண்டு போய் இருக்கின்றன.  காரணம் இப்போது இந்தோனேசியா தன் கையில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை  தயார் என்கிறது.

இந்த ஆண்கள் கருத்தடை மாத்திரையின் ரிமையை வாங்கநீ நான்என்று சீனாவும் மெரிக்காவும் போட்டி போடு தாகச் சொல்லுகிறார்கள்.  அமரிக்காவா ? சீனாவா பொருத்திருந்து பார்ப்போம்.

இந்த மாத்திரையை சோதனை செய்து பார்த்ததில் இது, 99.969 %    பவா் ஃபுல் என்று சொல்லுகிறார்கள்.

இதற்கு பின்னால் இன்னொரு சுவாரஸ்யமான செய்தியும் உள்ளது.  இது கொஞ்சம் அதிர்ச்சிகரமான செய்தியும் கூட.

ப்புவா மாநிலத்து பழங்குடி மக்கள் உடலுறவுக்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக இந்தக் கரு நொச்சி கஷாயத்தைக் குடிக்கிறார்கள்.  அப்படி குடிப்பதால் கருத்தரிப்பு ஏற்படுவதில்லை  என்கிறார்கள்.

இங்கு பழங்குடி பெண்கள் திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு   டவுரி ப்பணம் தர வேண்டும்.  இதனை திருமணம் ஆன பின்னலும் தவனை முறையில் கூட மாதாமாதம் தரலாம்.

இந்த வரதட்சனைப் பணம் முழுசாய் வசூல் ஆகும் வரை, இந்த பழங்குடி ஆண்மக்கள் அவா்களை கருத்தரிக்க விடமாட்டார்களாம்,  பாவி மக்கள். அதுவரை இந்த கரு நொச்சி கஷாயம் குடிப்பார்களாம்.

கரு நொச்சி பலநோய்களை குணப்படுத்தும்.   முகப்பாரிச நோய் (Facial paralysis) என்று சொல்லப்படும் கை வாதம், இடுப்பு வலி, மாதவிடாய் பிரச்சினை கரப்பான் புண், ஒற்றைத் தலைவலி, மேக வெட்டை நோய், காது வலி, கை கால் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும்.

அருமை ண்பர்களே, இதுபற்றி கூடுதலான தகவல் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். இதுபற்றி கூடுதலான தகவல் தேவைப்பட்டாலும் எனக்கு சொல்லுங்கள். மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.



 

 


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...