Saturday, July 10, 2021

புற்று நோய்க்கு ஒரு புதிய மருந்து பப்பாளி PAPAYA CURES CANCER

 

  புற்று நோய்க்கு ஒரு புதிய மருந்து

பப்பாளி

PAPAYA  CURES  CANCER



My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

 

போர்ச்சுக்கீசியர்கள், 1611 ம் ஆண்டு வாக்கில் பப்பாளிப் பழத்தை, அதன் செடியை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள்.  தற்போது உலகம் முழுவதும், சாகுபடி செய்யும் பிரபலமான பழப் பயிர்,

வெப்ப மண்டலப் பகுதிகளின் வீட்டுத் தோட்டத்திற்கு ரி பழமரமாக மாறிவிட்டது.  பிரபலமான பழமரமாக மாறி இருக்கும் பப்பாளி, ஒரு மருத்துவ மரமாக, புதிய அவதாரம் எடுத்துள்ளது என்பது பற்றிதான் நாம் இதில் பார்க்கப் போகிறோம்.

1.      பப்பாளிப் பழம் ஊட்டச் சத்துக்களை உபரியாகக் கொண்ட மரம்.  கரோட்டின்கள், பிளேவனாய்டுகள், வைட்டமின் , வைட்டமின் பி, ஆண்டி ஆக்சிடெண்டுகள், மக்னிசியம் போன்ற  தாது உப்புக்கள், மற்றும் நார்சத்தினை உள்ளடக்கியது.

 

2.      பப்பாளியின் பொதுப் பெயா் அல்லது ஆங்கிலப் பெயா்      இதனை தெலுங்கில்  பொப்பாயி பண்டு என்றும், கன்னடத்தில் பப்பாளி ஹன்னு (PAPPALI HANNU)என்றும் மலையாளத்தில் பப்பரக்கா (PAPPARAKKA)என்றும் இந்தியில்  பப்பிதா (PAPITHA) என்றும் அழைக்கிறார்கள்.  இதன் தாவரவியல் பெயா்கேரிகா பப்பாயாஎன்பது.

 

3.  தினமும் காலை பதினோரு மணிவாக்கில், அல்லது பிற்பகலில் ஒரு சிறிய கிண்ம் நிறைய பப்பாளிப் பழம் சாப்பிடுவதை பழக்கமாகக் கொண்டால் உடல் எடை தானாகக் குறையும். தேவையற்ற இடங்களில் தேவையற்றுக் குவியும் தசை அனைத்தும் கரைத்து போகும்.  பீரோ சைஸ் உடம்பு ஐீரோ சைஸ் ஆகிவிடும் என்கிறார்கள்.

 

4.      கொலம்பஸ்என்ற பெயரைக் கேட்டால் புதிய நாடுகளைக் கண்டுபிடித்தவா் என்று நாம் சொல்லி விடலாம்.  புதிய பழங்களையும் கொலம்பஸ் கண்டுபிடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? ”தேவதைகளின் பழம்என்று பப்பாளிப் த்திற்கு முதன்முதலாக பட்டப் பெயா் தந்தவா் கொலம்பஸ்.  இப்படி பப்பாளி பழத்திற்கு கொலம்பஸ்  என்ற பட்டப் பெயரைத்  தந்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ளுவோம்.

5.      பப்பாளி மரத்தின் இலைச்சாறு புற்று நோய்களை குணப்படுத்தும் என்றும் இது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் சொல்லுகிறார்கள்.

மனிதா்களுக்கு வரும் அபாயகரமான நோய்களில் முக்கியமானது புற்றுநோய்.  புற்று நோய்களில் நூற்றுக்கணக்கான நோய்கள் உள்ளன.  இதில் தோல் புற்றுநோய், நுரையீரல்  புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் மண்ணீரல் புற்றுநோய் ஆகியவற்றை முக்கியமான புற்று நோய்கள் என்று சொல்லுகிறார்கள்.

ஆனால் பப்பாளி இலைச்சாறு மார்பகப்புற்று நோய், கல்லீரல் புற்றுநோய், மற்றும் இதரவகைப் புற்று நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது என்று சொல்லுகிறது, ஆறய்ச்சி முடிவுகள்.

இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக பப்பாளி மரங்களை பல்வேறு விதமாக புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துகளை தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

இன்று  புதியதாக வரும் பெரும்பலான அழகு சாதனங்களில் பப்பாளி இடம் பெறுவதை நாம் அறிவோம். முக்கியமாக நமது சருமத்தினை அதாவது தோலினை பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இதற்கு நாம் பப்பாளிப் பழத்தின் தோலினை முகத்தில்மசாஐ்செய்தால் போதுமானது.

இது தோலின் மேற்பகுதியை சுத்தம் செய்யும், இறந்துபோன திசுக்களை ற்றும்.  தோலின் முதுமைத் தன்மையைப் போக்க, இளமையின் பொலிவினையும், பளபளப்பையும் கூட்டும். தோலினை தாக்கும் எக்சிமா, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களையும் தடுக்கும் சக்தி பப்பாளியில் உள்ளது.

வயது முதிர்ந்த ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும், எலும்பு மற்றும் தோல் சம்மந்தமான நோய், மூட்டுப்பிடிப்பு, மூட்டு வீக்கம், மூட்டு வலி ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி பப்பாளியில் உள்ளது என்று சொல்லுகிறது ஆராய்ச்சி முடிவுகள்.

பப்பாளி விதைகளில் இருக்கும் ஆண்டிஆக்சிடெண்டுகள், வைிட்டமின் , வைிட்டமின் சி மற்றும் வைிட்டமின் , ஆகியவை இதய நோய்கள் மற்றும் சா்க்கரை நோய்களை கட்டுப் படுத்தும்.

பப்பாளிப் பழங்களை, அல்லது பப்பாளி பழச் சாற்றினை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் வராது. பப்பாளி இலைகள், பூக்கள், வேர்கள் ஆகியவற்றில் நோய்களை தடுத்து  நிறுத்தும்.  சக்திகள் உள்ளன.

மஞ்சள் காமாலை, சுவாச மண்டல நோய்கள், மற்றும் சிறுநீரக பாதிப்புகளைக் கூட குணப்படுத்த பப்பாளியைப் பயன்படுத்துகிறார்கள்.

தமிழ்நாட்டில், சமீபத்தில் டெங்குச்காய்ச்சல் பரவியபோது, தடுப்பு நடவடிக்கையாக பப்பாளி மற்றும் நிலவேம்பு கஷாயம் பாரிந்துரைக்கப்பட்டதை அறிவோம்.

பப்பாளிப் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்றும் விழிப்புணர்வு நம்மிடையே அதிகாரித்துள்ளது.  பப்பாளி  பழங்களில் வைட்டமின் ”A ” அதிகம் உள்ளது.  பப்பாளிப் பழங்களை இளைஞா்கள் தொடா்ந்து சாப்பிட்டு வந்தால், அவா்கள் எதிர்காலத்தில் கண்ணடி போட வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள் மருத்துவ நிபுணா்கள்.

பப்பாளியின் மருத்துவப் பயன்களை எல்லாம் பார்க்கும்போது ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய மரம் பப்பாளி என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அன்பின் இனிய நண்பா்களே!

இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  ஒத்த கருத்துடைய  நண்பா்களுக்கு இந்த கட்டுரையை படிக்க பரிந்துரை செய்யுங்கள். மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்! நன்றி வணக்கம்!

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.

 


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...