Thursday, July 8, 2021

CORONA 3RD WAVE ON CHILDREN - கொரோனாவும் குழந்தைகளும்

            

      

                    கொரோனாவும்  குழந்தைகளும்

          CORONA 3RD WAVE ON CHILDREN 


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning !

ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் கணிசமான அளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு விடுவார்கள்.

ஆனால் 18 வயது வரை உள்ள குழந்தைகள் என்ற பிரிவினர் தான் தடுப்பூசி போடாதவர்களாக இருப்பார்கள். அதனால் மூன்றாவது அலை வரும்போது தடுப்பூசி போடாத குழந்தைகளைத்தான் தாக்கும்.

இது ஒரு அனுமானம் தான். அதனை உறுதியாக சொல்ல முடியாது என்கிறார்கள்.

இந்த கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயராகிவிட்டது. இதற்காக அரசு எந்திரம் எல்லா தயாரிப்பு வேலைகளையும் செய்யத் தொடங்கிவிட்டது.

குழந்தைகளுக்கு  சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையில் இட வசதி, அதற்கான சிகிச்சை வசதி, அதற்கான  மருந்துகள் போன்றவற்றை பல மாநிலங்கள் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டன.

கொரோனா வின் மூன்றாவது அலை மூர்க்கமாக தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் இடைப்பட்ட காலத்தில் பெரியவர்கள் எல்லோரும் தேடித் தேடி ஓடி ஓடி இரண்டு தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும்.

கொரோனா டெல்ட்டா வேரியண்ட்வைரஸ் 

மூன்றாவதாக நான் சொல்ல வேண்டியது டெல்ட்டா வேரியண்ட்’ ‘டெல்ட்டா வேரியண்ட்என்பது மியூட்டேஷன் என்னும் சடுதி மாற்றத்தால் உருவான கொரோனா வைரஸ். 

இரண்டாவது அலை முழுக்க நாம் எதிர்கொண்டது  டெல்ட்டா வேரியண்ட்வைரஸ்தான். தற்போது டெல்ட்டா வேரியண்ட் பிளஸ்என்றும் ஒன்று உருவாகியுள்ளது என்கிறார்கள்.

சாதாரண கொரானோ வைரசைவிட சடுதி மாற்றத்தால் உருவான இந்த டெல்ட்டா வேரியண்ட் வைரஸ் மிக வீரியமானது

இது தற்போது உலகிலுள்ள இருநூற்று சொச்சம் நாடுகளில் 74 நாடுகளில் காணப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லுகிறது.

மூன்றாம் அலையையும் கொரோனா வைரஸ் டெல்ட்டா வேரியண்ட் இரண்டையும் எதிர்கொள்ள எல்லோரும் விரைந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கொரு தடவை சுத்தம் செய்தல், கூடுமானவரை வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருத்தல் ஆகியவற்றை கைக்கொள்ள வேண்டும்.  

 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.



 

 


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...