கொரோனா மூன்றாவது அலை
THE THIRD WAVE OF CORONA
WRITTEN BY: D.GNANA SURIA BAHAVAN
கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை வரும் என்கிறார்கள். சிலர் வராது என்கிறார்கள். அது எப்போது வரும் எப்படி வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.
அதேபோல மூன்றாவது அறை வந்தால் அது குழந்தைகளைத்தான் தாக்கும் என்கிறார்கள். ஆனால் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் சொல்லுகிறார்கள். அது பற்றியும் இதில் பார்க்கலாம்.
கொரோனா பற்றி பேசும்போது கோவிட் ‘டெல்ட்டா வேரியண்ட்’ என்ற வைரஸ் பற்றி சொல்லுகிறார்கள். டெல்டா வேரியண்ட் வைரஸ் என்ன என்றும் பார்க்கலாம்.
மூன்றாவது அலை எப்போது வரும் ?
முதலில் மூன்றாவது அலை எப்போது வரும் ? அது பற்றி இப்போது பார்க்கலாம். குழுவின் மூன்றாவது அலை இன்னும் 6 முதல் 8 வாரத்தில் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.
இது பற்றி ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அசோசியேஷன் (AIIMS), அதாவது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ரண்ட்தீப் குலேரி அவர்கள் இன்னும் 6 முதல் 8 வாரத்தில் ஆரம்பிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
டாக்டர் ரண்ட்தீப் குலேரி அவர்கள் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக உள்ளார்.
இன்னும் 6 முதல் 8 வாரத்தில் இந்த மூன்றாவது அலை தொடங்கி வீசும் என்கிறார் இவர். அவருடைய கணக்கின்படி இந்த மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.
இந்தியாவில், இந்த ஆண்டின் சுதந்திர தினத்திற்கு பிறகு மூன்றாவது அலை தொடங்கும்.
குழந்தைகளை அதிகம் தாக்குமா ?
ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் கணிசமான அளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு விடுவார்கள்.
ஆனால் 18 வயது வரை உள்ள குழந்தைகள் என்ற பிரிவினர் தான் தடுப்பூசி போடாதவர்களாக இருப்பார்கள். அதனால் மூன்றாவது அலை வரும்போது தடுப்பூசி போடாத குழந்தைகளைத்தான் தாக்கும்.
இது ஒரு அனுமானம் தான். அதனை உறுதியாக சொல்ல முடியாது என்கிறார்கள்.
இந்த கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயராகிவிட்டது. இதற்காக அரசு எந்திரம் எல்ல தயாரிப்பு வேலைகளையும் செய்யத் தொடங்கிவிட்டது.
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையில் இட வசதி, அதற்கான சிகிச்சை வசதி, அதற்கான மருந்துகள் போன்றவற்றை பல மாநிலங்கள் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டன.
கொரோனா வின் மூன்றாவது அறை மூர்க்கமாக தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் இடைப்பட்ட காலத்தில் பெரியவர்கள் எல்லோரும் தேடி தேடி ஓடி ஓடி இரண்டு தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும்.
‘கொரோன டெல்ட்டா வேரியண்ட்’ வைரஸ்.
மூன்றாவதாக நான் சொல்ல வேண்டியது ‘டெல்ட்டா வேரியண்ட்’ ‘டெல்ட்டா வேரியண்ட்’ என்பது மியூட்டேஷன் என்னும் சடுதி மாற்றத்தால் உருவான கொரோனா வைரஸ்.
இரண்டாவது அலை முழுக்க நாம் எதிர்கொண்டது ‘டெல்ட்டா வேரியண்ட்’ வைரஸ்தான்.
தற்போது ‘டெல்ட்டா வேரியண்ட் பிளஸ்’ என்றும் ஒன்று உருவாகியுள்ளது என்கிறார்கள்.
சாதாரண கொரானோ வைரசைவிட சடுதி மாற்றத்தால் உருவான இந்த டெல்ட்டா வேரியண்ட் வைரஸ் மிக வீரியமானது.
இது தற்போது உலகிலுள்ள இருநூற்று சொச்சம் நாடுகளில் 74 நாடுகளில் காணப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லுகிறது.
மூன்றாம் அலையையும் கொரோனா வைரஸ் டெல்ட்டா வேரியண்ட் இரண்டையும் எதிர்கொள்ள எல்லோரும் விரைந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கொரு தடவை சுத்தம் செய்தல், கூடுமானவரை வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருத்தல் ஆகியவற்றை கைக்கொள்ள வேண்டும்.
Presented & Published
By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot.
Thanks and Courtesy to
respective author's books and online e-resources.
No comments:
Post a Comment