தண்ணீர் குடிக்காத கங்காரு எலிகள்
KANGARU
RATS NEVER DRINK WATER
பூமி ஞான சூரியன்
வணக்கம்
!
இயற்கை சூழலுக்கு
ஏற்றபடி அதனை சமாளிக்க பிராணிகளுக்கு பலவிதமான பிரத்தியேகமான சிறப்பான பல சக்திகளை
தந்துள்ளது இந்தப் பிரபஞ்சம். அதுபோல இங்கு இந்த
கங்காரு எலிகள் தன் வாழ்னாள் முழுக்க தண்ணீரே
குடிக்காது என்கிறார்கள்.
ஒட்டச்சிவிங்கிகளின் நீளமான கழுத்து, வாத்துகளின் விரல்களுக்கு இடையே இருக்கும் தோல் இணைப்பு, பறவைகளின் இறக்கைகள், அலகுகள், பூனை புலி போன்றவற்றில்
இருக்கும் நகங்கள், கூர்மையான பற்கள், எல்லாமே இந்தப்
பிரபஞ்சம் இந்த உயிரினங்களுக்குத் தந்திருக்கும் பிரத்தியேகமான பரிசுகள்.
தனது வாழ்நாள்
முழுக்க தண்ணீர் குடிக்காமல் எப்படி கங்காரு எலிகள் வாழ்கின்றன? அந்த கங்காரு எலிகளுக்கு இயற்கை
தத்துள்ள சிறப்பு சலுகைள் என்னென்ன ? அவை எங்கு
இருக்கின்றன? அவை எந்த வகையைச் சேர்ந்தவை ? அதற்கு ஏன் கங்காரு எலிகள்
என்று பெயர் வந்தது ? இதையெல்லாம் இங்கு பார்க்கலாம்.
எலிகளில் இரண்டு
அல்லது மூன்று வகைகள் நமக்குத் தெரியும்.
வீட்டெலி, வயல்எலி, பெருச்சாளி, மூஞ்சுர் எலி - இவை
எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கும் எலிகள். நமக்குத் தெரிந்த எலிகள். நாம் அறிந்த எலிகள்.
இதில் வீட்டெலி, சுண்டெலி இரண்டையும் பாதிபாதி சேர்த்த மாதிரி இருக்கும். அதுதான் இந்த கங்காரு எலிகள். சரி, இதற்கு ஏன் கங்காரு எலிகள் என்று பெயர் வந்தது ?
இப்போது கங்காரு
என்னும் விலங்கினை நினைத்துப் பாருங்கள்.
கங்காருவில் மிகவும் உறுதியான உறுப்பு என்பது அதன் பின்னங்கால்கள். கங்காருவின் முன்னிரண்டு கால்களும் சூம்பிப் போன மாதிரி
சிறுசாக இருக்கும்.
குதித்துக் குதித்து ஒடுவதற்கு வசதியாகத்தான், அதன் பின்னங்கால்களைத் தந்துள்ளது இயற்கை.
இந்த வகை எலிகளின் பின்னங்
கால்களும் மிகவும்
உறுதியானவை, வலிமையானவை. குதித்து குதித்து தாண்டித் தாண்டி ஒடுவதற்கு
வாகாக வசதியாக இருக்கும். பார்க்க கங்காரு
எலிகளின் கால்கள் சிறுசாக இருக்குமே தவிர ஆனால் கங்காருவின் கால்கள்
போலவே இருக்கும். அதனால்தான் இதற்கு
கங்காரு எலிகள் என்று பெயர் தந்து இருக்கிறார்கள். ஒரு முறை எம்பித் குதித்தால் 9 அடி தூரம் கடந்துவிடும். எதிரிகளிடமிருந்து
தப்பிக்க இயற்கை ஏற்படுத்தித் தந்திருக்கும் ஈடு இணையற்ற
சக்தி.
இந்த கங்காரு எலிகள்
எப்படி தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் வாழக்கையைத் தள்ளுகிறது ? இதனைப் பார்ப்பதற்கு முன்னால்
அதன் வயது என்ன ? எத்தனை ஆண்டுகள் அவை வசிக்கின்றன? எந்த மாதிரி சூழலில் இந்த கங்காரு
எலிகள் வசிக்கின்றன என்றும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த கங்காரு எலிகளின் வயது 2 முதல் 5 ஆண்டுகள். இந்த 5 ஆண்டுகள் வரைகூட
அது ஒரு சொட்டு தண்ணீரையும் குடிப்பதில்லை
என்கிறார்கள்.
பொதுவாக இந்த கங்காரு
எலிகள் பாலைவனப்; பகுதிகளில் வசிக்கும்
ஒர் சிறிய பிராணி. இதன் உருவம்தான்
சிறியது. ஆனால் இதன் கீர்த்தி
பெரியது. உலகில் - உள்ள உயிரினங்களில் தண்ணீர் குடிக்காத பிரணி, அல்லது வியங்கு
அல்லது உயிரினம், அல்லது ஐPவராசி இதுதான்.
வட அமெரிக்காவின்
மேற்குப் பகுதிகள், கலிபோர்னியா, நெவாடா, ஊட்டா, அரிசோனா, கனடா, மெக்சிகோவின் தெற்குப்
பகுதியில் உள்ள பாலைவனங்கள் இந்த கங்காரு எலிகளின் சொந்த வசிப்பிடங்கள்.
இந்த கங்காரு எலிகள்
தன் வாழ்நாள் முழுக்க தண்ணீர் குடிக்காமல்
சமாளிக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்களே புரியாத புதிராக இருக்கிறது என்கிறார்கள்.
இந்த கங்காரு எலிகள்
சிறிய தாவரங்கள் மற்றும் புற்களின் விதைகளையே சாப்பிடும்> கிடைத்தால் சிறுசிறு பூச்சிகளைக்
கூட சாப்பிடும். அதன் வாயில் கன்னத்தின் உட்பகுதியில்
ஒரு சிறிய பை இருக்கும். கூடுதலாக விதைகள் அல்லது இரை கிடைக்கும் போது
இந்த கன்ன பைக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இந்த விதைகளில் முக்கியமானவை மெஸ்கைட் வீதைகள். நம்ம ஊரில் சீமைக்ககுவை என்றும் ‘புரசாபீஸ் ஜூலிபுளோரா’ என்று சொல்லுவதுதான்
மெஸ்கைட் என்பது.
கங்காரு எலிகள் எப்படி தங்கள் தண்ணீர்த்
தேவையை சமாளிக்கிறது தெரியுமா?
இந்த கங்காரு எலிகள்
தண்ணீரை தனியாக குடிக்காது. ஆனால்
பயன்படுத்தாது என்று சொல்ல முடியாது. நாம்
கூட தண்ணீரை பல காரியங்களுக்கு பயன்படுத்துகிறோம். தனியாக குடிக்கவும் செய்கிறோம். இங்கு கங்காரு எலிகள் தண்ணீரை
பயன்படுத்தும். ஆனால் இவை
தண்ணீரை
குடிப்பதில்லை. தண்ணீரில் குளிப்பதும் இல்லை.
அது ஒரு கிராம்
தானியம் சாப்பிடுகிறது என்றால் அதிலிருந்து அரைகிராம்
தண்ணீரை அது
எடுத்துக் கொள்ளுகிறது.
தனது உடலில்
இருக்கும் ஈரத்தை> தண்ணீரை இழக்கக் கூடாது என்பதற்காக
கங்காரு எலிகள் சரிவர சிறுநீர் கூட
கழிப்பதில்லை. பொதுவாக பிராணிகள் பறவைகள் பிற
உயிரினங்கள் எல்லாம் கூட தண்ணீரில் குளித்து தன் உடல் சூட்டை
தனித்துக் கொள்ளும்.
ஆனால் பாலைவனத்தில்
வசிக்கும் இந்த கங்காரு எலிகள் மனல் குளியல் செய்யுமாம். மணலில் அப்படியும் இப்படியுமாக புரளுவதுதான் மணல்
குளியல். குளிப்பது என்பது காலைக் கடனில்
மிக முக்கியமன காரியம். இதில் இரண்டு வகை
உண்டு. இதில் இந்த கங்காரு எலிகள். எப்படி என்று பார்ப்போம்!
சிலர் குளிக்க போகிறேன்
என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் பேவார்கள். போன மாதிரி அடுத்த நிமிஷம் தலையை துவட்டிக்
கொண்டு
வெளிய வருவார்கள் அதன் பெயர் காக்கா குளியல்!
சிலர் குளியலறைக்குள் போனால் அங்கேயே மணிக்கணக்கில் ஐலசமாதி
ஆகிவிடுவார்கள். இப்படி கணக்கு வழக்கு இல்லாமல் குளித்தால் அது நீர்யானைக்
குளியல்.
ஆனால்
இந்த கங்காரு எலிகள் இருப்பது
பாலைவனப் பகுதி. அங்கு மணல்தான் அதிகம்
இருக்கும். அதனால் அவை மனலில் இடது பக்கம்
இரண்டுமுறை வலதுபக்கம் இரண்டுமுறை புரண்டால்> அதன் குளியல் முடிந்துவிடும் இதுதான் மணல்
குளியல்.
கடைசியாக கங்காரு
எலீகளின் அடையாளம் சொல்ல வேண்டும்? கங்காரு எலீகளின் சாமுத்ரிகா லட்சணம்? இவற்றின்
கண் காது மூக்கு எப்படி இருக்கும்?
நீளமான வால், வலிமையான பின்னங்கால்கள், பெரியதலை, நான்கு விரல்கள்> நுட்பமான, ஆனால் சிறிய காதுகள், செம்பழுப்பு நிற உடல், வென்மை நிற வயிறு, இதுதான் கங்காரு எலிகளின் அடையாளம்.
உலகிலேயே மிகவும்
வித்தியாசமானதாகவும், வியப்புக்குரியதாகவும், விளங்கும் கங்காரு
எலிகள் பற்றிய செய்திகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.
ஒத்த கருத்துடைய நண்பர்களுக்கு நமது விவசாய
பஞ்சாங்கம் வலைப்பூவினை அறிமுகம் செய்யுங்கள். மீண்டும் அடுத்த கட்டுரையில்
சந்திக்காலம் நன்றி
வணக்கம் !
No comments:
Post a Comment