Wednesday, June 30, 2021

தப்புச்சி மரம் - INDIAN ELM TREE



தப்புச்சி மரம் 
INDIAN ELM TREE 
TREE OF MEDICINES 

 


       My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

 
திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூா், தும்பேரி, சிக்கனாங்குப்பம், தெக்குப்பட்டு, மல்லகுண்டா, மல்லங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை. இந்தப் பகுதிகளில் தப்புசி மரம் என்று சொல்லப்படும் மரம்தான் ஆவி மரம் என்பது.

 

ஆயா எனும் தப்புச்சி மரத்தின் மருத்துவப் பண்புகள் பற்றிதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். தப்புசி மரம், ஆயா மரம் என்ற பெயா்கள் இல்லாமல், தம்பச்சி, அவியதோல், அயில்பட்டை மற்றும் வெள்ளையா என்றும் பல பெயா்களில் சொல்லுகிறார்கள். தப்புச்சி என்று அழைக்கப்படும் ஆயா மரம் ஒரு அற்புதமான மருத்துவ மரம்.

 

பலவிதமான உடல் நோய்களையும் குணப்படுத்தும் ஒரு அரியவகை மூலிகை மரம். தப்புச்சி மரத்தின் இலைகள், பட்டைகள், விதைகள் மற்றும் அனைத்து பாகங்களிலும் மருத்துவப் பண்புகள் உள்ளன, நோய்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. நோய்கள் வராமல் தடுக்கும் பண்புகள் உள்ளன. நோய்களின் பாதிப்புகளை குறைக்கும் பண்புகள் உள்ளன.

 

தப்புச்சி மரத்தின் பொதுப்பெயா்கள் மற்றும் ஆங்கிலப் பெயா்களும் பல உள்ளன. இதன் பொதுப்பெயா்கள் இண்டியன் எல்ம், ஐங்கிள் கார்க் ட்ரி, சவுத் இண்டியன் எல்ம் ட்ரீ ஆகியவை. இதன் தாவரவியல் பெயா் ஹாலோப்டீலியா இண்டெக்ரிபோலியா என்பது.

 

மலேரியா ஜுரத்தை இந்த தப்புச்சி மரத்தின் பட்டைகள் அற்புதமாய் குணப்படுத்தும், என்கிறார்கள். இந்த மரத்தின் பட்டைகளை ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு வட்ட வடிவமாய் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை இடதுகையில் தோள்பட்டையில் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். வேறு எதுவும் செய்ய வேண்டாம். மலோியா ஜுரம் வந்த தடம் தெரியாமல் படிப்படியாய் குனறந்துபோகும் என்றுசொல்லுகிறார்கள்.

 

என்னுடைய தோட்டத்தில் நான்கைந்து தப்புச்சி மரங்கள் இருக்கின்றன. அத்தனை மரங்களும் சுயம்புவாய் வளரந்தவை , விதைபோட்டு வரவில்லை. கன்றுநட்டு வரைவில்லை. தானாக வளா்ந்தவை. அனேகமாய் அவை எல்லாமே குருவிகள் உபயமாக இருக்கும்.

 

அது மட்டுமல்ல மழைக்காலம் வந்துவிட்டால் ஐந்து பத்து கன்றுகள் மரத்தடியில் அல்லது சுற்று வட்டாரப் பகுதியில் முளைத்து கிடக்கும். இதன் பட்டைகள், இலைகள், இன்ன பிற மரப் பாகங்களைப் பயன்படுத்தி பவவிதமான மருந்துகள், மரத்திரைகள், செய்கிறார்கள்.

 

இவை சக்கரை நோய், நீா் கட்டி, வீக்கம், தொழு நோய், தோல் சம்மந்தமான நோய்கள், மூல நோய், வயிற்று உபாதைகள், வெப்பமான இடங்களில் ஏற்படும் வாந்தி போன்ற நோய்களையும் குணப்படுத்த தப்புச்சி மரம் கச்சாப் பெருட்களை, மூலப் பொருட்களை வழங்குகிறது.

 

இங்கு சொல்லப்படும் சிகிச்சை முறைகள் நீங்கள் கடைபிடிப்பதற்கு அல்ல. இதனைத் தெரிந்து கொண்டு சிகிச்சை முறைகளை ஒரு மருத்துவரின் ஆலோசனைப் படி கடைபிடிக்க வேண்டும். தப்புச்சியின் பட்டைகள் முக்கியமாக “ருமாட்டிசம்” என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் முடக்கு வாதத்தை சுத்தமாக குணப்படுத்தும் என்கிறார்கள்.

 

ஐம்பது வயதை தொட்டுவிட்டால் போதும். முடக்கு வாதம் வந்து நம்மை முடக்கிப் போட்டுவிடும். மூட்டுவலி, மூட்டுவீக்கம் , மூட்டுப் பிடிப்பு இப்படி இது ஒரு தொடா்கதை ஆகிவிடும். இதனை தப்புச்சியின் பட்டை சுலபமாய் குணப்படுத்தும்.

 

இதன் பட்டைகளை இடித்து கொழ கொழப்பான மாவாக்கி அதனை கொதிக்க வைக்க வேண்டும். அதனை ஆறவைத்து, அதிலிருந்து, அதன் சாற்றினை வடித்து எடுக்க வேண்டும். எடுத்த அந்த சாற்றினை மூட்டு வீக்கத்தின் மீது தடவி வர வேண்டும். நல்ல பலனும், குணம், கிடைக்கும் வரை இந்த சிகிச்சையைத் தொடர வேண்டும்.

 

இந்த சிகிச்சை முறைகள் எல்லாம், இயற்கையோடு இயற்கையாக மக்கள் வாழ்ந்தபோது, கடைபிடித்த, கை கொண்ட, பின்பற்றிய வழி முறைகள்தான்.

 

இன்னும்கூட பழங்குடி மக்களின் கிராமங்களில் இதனை கடைபிடித்து வருகிறார்கள். இந்த பாரம்பரிய அறிவு மறைந்துவிடாமல் இருப்பதற்காகத்தான், இதனை நான் பதிவு செய்கிறேன்.

 

தப்புச்சி இலைகளிலிருந்து குடிநீா் தயாரித்து அதனை தோல் அல்லது சருமத்தினை பாதிக்கும் நோய்களால் பாதிக்கப்படட இடங்களில் தடவிவர, அவை குணமாகும். குடிநீா் என்பது வேறு எதுவும் அல்ல இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயம்தான்.

 

நகசுத்தி வந்தால் இந்த மரத்தின் பட்டைக் கூழ் அதனை குணப்படுத்தும் அதற்கு போதுமான அளவு பட்டைகளை எடுத்து அத்துடன் தண்ணீா் சோ்த்து கூழாக அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த தப்புச்சி மரப்பட்டைக் கூழினை நகசுத்தி வந்த இடத்தில் தடவிவர அதன் வலி குறைந்து விரைவில் குணமாகும்.

 

பேய் பிசாசு இவற்றில் நம்பிக்கை உள்ளவர்களுக்காக இந்த செய்தியைச் சொல்லுகிறேன். இந்த மரம்பற்றி கிராமங்களில் பலவிதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. பேய்கள் மற்றும் ஆவிகளுக்கு இந்த மரங்கள் ரொம்பவும் பிடிக்குமாம்.

 

அதனால் பேயோட்டுபவா்கள், பேய் பிடித்தவா்களின் தலை முடியைக் கொண்டுவந்து இந்த மரத்தில் வைத்து ஆணி அடித்துவிட்டுப் போவார்களாம். அதன் பிறகு அந்தப் பேய் அந்த நபரைவிட்டு அந்த மரத்திலேயே தங்கிவிடுமாம்.

 

அன்பின் இனிய நண்பா்களே , இந்த பூமியில் மொத்தமே 25 லட்சம் முதல் 5 லட்சம் மரங்கள் உள்ளன. இவற்றில் 47000 தாவரவகைள், மூலிகைகள். இந்தியாவில் உள்ளன. இந்த 47000 செடிகள், கொடிகள், மற்றும் மரங்கள் மருத்துவப் பண்புகளைக் கொண்டவை. இந்தியாவில் உள்ள இந்த 47000 தாவரவகைளும். மனிதா்களைத் தாக்கும் நோய்களை குணப்படுத்தக் கூடியவை. இத்தனை மூலிகைகளில் சுமார் 800 வகைகளை மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

 

அன்பு நண்பா்களே அறிவியலுக்கு உதவுவது அனுபவ அறிவுதான். அது கிராமப்புற மக்களிடையேதான் அபரிதமாய் உள்ளது. பழங்குடி மக்களிடையேதான் கொட்டிக் கிடக்கிறது. அது மங்கி மறைந்து போகாமல் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. அந்த அறிவு வழக்கொழிந்துபோய், பழக்கத்திற்கு இல்லாமல், புழக்கத்திற்கும் இல்லாமல் போவதை         காப்பா ற்றும் கடமை நமக்கு உள்ளது.

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.

 


 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...