Friday, June 18, 2021

இந்தியாவின் நான்குவகை நச்சுப்பாம்புகள் - THE FOUR POISONOUS SNAKES OF INDIA

 

இந்தியாவின் நான்குவகை

நச்சுப்பாம்புகள்


THE FOUR POISONOUS SNAKES OF INDIA


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!


இரண்டொரு நாட்களுக்கு முன்னால் என்னுடைய தோட்டத்தில் இரண்டு சாரைப்பாம்புகள் கூடி குலாவி கும்மியடித்துக் கொண்டிருந்தன.

எனது வீடு, ஆபீஸ், எல்லாமும் இதுதான். ஆனால் இது உண்மையாகப் பார்த்தால் பாம்புகள் பூமி..

நான் தேடித்தேடி பாம்பு விரட்டி என்று கொண்டு வந்து வைத்த செடிகளின் நிழலில் விரியன் பாம்பு குட்டிகள் தன் உடலை சுருட்டியபடி உறங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆரம்ப நாட்களில் இந்த இடத்தில் தினமும் ஒரு பாம்பு அல்லது பாம்பு குட்டி என்னைத் தேடி வரும். அவை பெரும்பாலும் விரியன் பாம்புகளாகத்தான் இருக்கும்.

ஆக பாம்புகள்பற்றிய செய்திகளை இங்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் இருக்கும் பாம்பு வகைகள் எத்தனை என்று தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

சுமார் 350 வகையான பாம்புகள் இந்தியாவில் இருக்கின்றன. இந்த 350 பாம்புகளில் நான்கே நான்கு வகைதான் விஷப்பாம்புகள்.

அவை கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் மற்றும் நல்லபாம்பு ஆகியவை. இந்த நான்கு வகை பாம்புகள்தான் நச்சுப்பாம்புகள் அல்லது விஷ்ப்பாம்புகள்.

1. கட்டுவிரியன் (COMMON KRAIT)

இதன் பொதுப்பெயர் அல்லது ஆங்கிலப்பெயர் காமன் கிரெயிட். இதன் அறிவியல் பெயர் பங்காரஸ் செறுலியஸ் (BUNGARUS CAERULEUS). அதிக விஷம் உள்ள பாம்பு இது.

இந்தியாவை தாயகமாக் கொண்ட பாம்பு இது. இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் மனிதர்களை அதிகமாகக் கடிக்கும் பாம்பு இதுதான்.

இது 3 முதல் 5 அடி நீளமாக இருக்கும். பெண் பாம்புகளைவிட ஆண் பாம்புகள் நீளமாக இருக்கும்.

பாம்புகள் கருப்பு மற்றும் கருநீல நிறமாக இருக்கும். . உடலில் வெள்ளை நிறத்தில் கட்டுகட்டாக இருக்கும். ஒரு பாம்பில் அதிகபட்சமாக 40 கட்டுக்கள் வரை இருக்கும்.

கட்டு விரியனால் கடிபட்டவர்கள் 4 முதல் 8 மணி நேரத்தில் இறந்து போவார்கள். அவர்கள் பெரும்பாலும் மூச்சுத் திணறுதல் மற்றும் மூச்சு விட முடியாமல் இறந்து போவார்கள்.

இந்த பாம்புகள் இரவு நேரங்களில்தான் இறை தேடும். ஆகையால் அவை கடிப்பதாக இருந்தால் கூட இரவில்தான் கடிக்கும்.

2. கண்ணாடி விரியன் (RUSSELS VIPER)

கண்ணாடி விரியன் பாம்புகள் தென் கிழக்கு ஆசியாவில் இருக்கின்றன. அதேபோல இந்தியா முழுக்க பரவலாக உள்ளன.

கண்ணாடி விரியன் பாம்பு வகையின் ஆங்கில அல்லது பொதுப்பெயர் ரஸ்ஸல்ஸ் வைப்பர் என்பது. அதன் அறிவியல் பெயர் டபோயா ரஸ்ஸெலி (DABOIA RUSSELII).

இந்த பாம்புகள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் உடலில் மூன்று வரிசைகளில் கருப்பு அல்லது பழுப்பு நிற பெரிய வட்டவடிவமான அல்லது நீள்வட்ட புள்ளிகள் இருக்கும்.

இந்த பாம்புகள் கொடிய விஷம் உடையவை. இதனால் கடிபட்டவர்கள் 6 மணி நேரத்தில் இறக்க நேரிடும். 

3. சுருட்டை விரியன் (INDIAN SAW SCALLED VIPER)

சுருட்டை விரியனின் பொதுப்பெயர் மற்றும் ஆங்கிலப்பெயர் இண்டியன் சா ஸ்கேல்டு வைப்பர். இதன் அறிவியல் பெயர் எக்கிஸ் காரினேட்ஸ் (ECHIS CARINATS).

இதன் உடலில் ரம்பத்தின் பற்களைப்போல செதிள்கள் இருப்பதால் இந்தப் பெயர் சா ஸ்கேல்டு வைப்பர். ரம்பச் செதில் விரியன் அல்லது வாள் செதில் விரியன் என்றும்; தமிழில் சொல்லுகிறார்கள்.

இது தன் உடலை 8 போல இரண்டு வளையங்களாக சுருட்டிக்கொண்டு இருக்கும். அந்த சுருள்களை ஒன்றோலொன்று உராயும்படி தொடர்ந்து உரசும்போது உப்புக் காகிதத்தை . உரசுவதுபோல சப்தம் கேட்கும்.

இதனை ஊது சுருட்டை பாம்பு, குறட்டை பாம்பு எனவும் அழைக்கிறார்கள்.

இதன் உடலில் கம்பளம் மற்றும் ஜமுக்காளம் போன்ற கோடுகளுடன் இருப்பதால் இதனை கம்பளவிரியன் என்றும் ஜமுக்காள விரியன் என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த பாம்புகள் 45 முதல் 60 சென்டிமீட்டர் நீளம்தான் இருக்கும். பாம்புகள் பார்க்க மிகவும் குட்டையாக இருக்கும்.

ஆனால் கூடுதலான விஷம் உடையவை. இந்த பாம்பின் விஷம் ஹீமோ டாக்சின் (HEMO TOXIN) ரத்தத்தின் சிவப்பணுக்களை தாக்கி அழிக்கக் கூடியது. அதிகமான நபர்கள் இந்த பாம்பின் கடியினால்தான் இறப்பதாக சொல்லுகிறார்கள்.

4. நல்லபாம்பு (INDIAN COBRA)

நல்ல பாம்பினை நாகப்பாம்பு என்றும் சொல்லுவார்கள். இதன்  பொதுப்பெயர் அல்லது ஆங்கிலப்பெயர் இண்டியன் கோப்ரா இதன் அறிவியல் பெயர் நஜா நஜா (NAJA NAJA)என்பது.

இந்த பாம்புகள் மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு மற்றும் வெளிர் சாம்பல் நிறங்களில் இருக்கும். நல்ல பாம்ப்களின் தலையில் இருக்கும் விரியக்கூடிய தசை.

இவை தாக்கும்போதோ அல்லது பாதுகாப்புக்கோ தற்காப்புக்கோ அந்த விரியக்கூடிய தசையை விரிக்கும். அதனை படம் எடுப்பது என்பார்கள்.

இந்திய புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் கலாச்சாரத்தில் அதிகம் பேசப்படுபவை இந்த நாகப்பாம்புகள்.

நல்லப் பாம்பில் மட்டும் உலக அளவில் 270 பாம்பு வகைகள் உள்ளன. அவற்றில் இந்தியாவில் இருப்பவை மட்டும் ஐந்து வகைகள்.

விரியன் பாம்புகளில் உலக அளவில் 347 வகைகள் உள்ளன, அவற்றில் இந்தியாவில் இருப்பவை மட்டும் 32 வகைகள்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். இது பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். வேறு என்ன தலைப்பில் உங்களுக்கு கட்டுரைகள் வேண்டும் என்று சொல்லுங்கள்.

நமது ‘விவசாய பஞ்சாங்கம்’ வலைப்பூவிற்கு கூகிள் நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கூகிள் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.


 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot.

Thanks and Courtesy to respective author's books and online e-resources.




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...