Monday, June 28, 2021

மருத்துவ மரம் அசோகமரம் ASHOKA TREE OF MEDICINES

 

மருத்துவ மரம் அசோகமரம்

ASHOKA TREE OF MEDICINES



 My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

இன்று கவலை இல்லாத மரம்.  ல்லது கவலை போக்கும் மரம் பற்றி பர்க்கலாம்.  அசோக மரம் என்பதற்கு தமிழ் அர்த்தம் சொல்லும் என்றால் அப்படித்தான் சொல்ல வேண்டும்.  சோகம் என்றால் துன்பம் துயரம், கவலை என்று சொல்லலாம்.  அசோகம் என்றால் சோகமில்லாதது என்று அர்த்தம்.  சத்தியம் அசத்தியம் என்று சொல்வதுபோல, சாதாரணம் அசாதாரணம் என்பது போல.

மரங்களில், அதிகமான அளவில் பெண்களுக்குரி நோய்களை குணப்படுத்தும் மருத்துவ சக்தி உடைய மரம் எது ? இந்த கேள்வியைக் கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லாம், அசோக மரம் என்று

 பெண்களின் இன்பபெருக்க மண்டம் கா்பப்பபை.  இந்த கா்ப்ப பையை தாக்குகின்ற மற்றும் மாதவிடாய் தொடா்பான அத்தனை நோய்களையும் குணப்படுத்தும் ஒரே  மூலிகை அசோக மரம் என்று சொல்லலாம்.

நிறையபோ் பைன் மரத்தின் தோற்றத்தைப் போல இருக்கும் நெட்டிலிங்கம் மரத்தைத்தான் அசோக மரம் என்று.  இன்னும் கூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், என்று எனக்குத் தெரியும்.

அது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று போகலாம்.  காரணம், நானே வெகுகாலம் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  அதற்குப் பிறகுத்தான் விஷயம் தெரிந்த ஒருத்தா் சொன்னார்.  ம்பி எல்லோரும் அசோக மரம் என்று சொல்லுவது அசோக மரம் இல்லை.  அது நெட்டிலிங்கம் மரம்.  இதன் தாவரவியல் பெயா் பாலியால்தியா லாங்கிஃபோலியாஆனால் அசோக மரத்தின் தாவரவியல் பெயா்சராகா அசோகா என்பது.

 நெட்டிலிங்கம் மரத்தடியில் பொட்டு நிழ்ல் கூட இருக்காதே ! அதன் அடியில் சீதாபிராட்டியார் எப்படி அத்தனை காலம் ங்கி இருந்திதிருப்பார் யோசித்துப் பார்த்தாயா நீ? என்று அவர் என்னிடம் கேட்டார்  அதுபற்றி நான் யோசிக்கவில்லை அண்ணாச்சி என்று சொல்லி தப்பித்துக் கொண்டேன்.

டுத்து  விஷயத்துக்கு வருவோம்.  மெனோரேஜியா என்றால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மிகையான ரத்தப்போக்கு என்று அா்த்தம்.   மெட்டாரேஜியா  என்றால் மாதவிடாய் இல்லாத சமயங்களில் ஏற்படும் மிகுதியான ரத்தப்போக்கு என்று அா்த்தம்.  உடலில் ஏற்படும் இரும்புச்சத்து பற்றாக்குறையினாலும் அதிக  உதிரப்போக்கு ஏற்பாடும்.

இப்படி உதிரப்போக்கு ஏற்படும் சமயங்களில் தசைப்பிடிப்பும் ஏற்படும்.  15 வயது முதல் 44 வயதுவரை உள்ள பெண்களுக்கு ஏற்படும்லிகோரியாஎன்று சொல்லப்படும் வெள்ளைப்படுதல் நோயும் பரவலாக ஏற்படும்.

இப்போது நாம் கொரோனா வந்த பிறகு.  பூசண நோய்கள் பற்றி பேசி வருகிறோம்.  இதில்மைகார் மைகொசிஸ்” என்று சொல்லப் படும் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூசணங்கள்தான் மிகவும் ஆபத்தான, மோசமான, கடுமையான பகுப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.

இதுவரை சொன்ன இந்தனை நோய்களையும் குணப்படுத்தும் அற்றல் கொண்டது இந்த அசோக மரம்.

 அதனால்  பூசணம், காளான் என்றால் நாம் கால காலம் ஒட வேண்டிய அவசியம் இல்லை.  அத்தணக்துக்கு இந்தலிகோாியாஎன்று சொல்லப்படும்.  வெள்ளைப் படுதலும் ஒருவகையான பூசன நோய்தான்.  இதை அசோக மரப்பாகலிகளிலிருந்து தயாாிக்கப்படும் மருத்துகள் எளிமையாக குணப்படுத்தும்.

பெரும்பாலும் அசோக மரத்தின் பட்டைகள், பூக்கள், மற்றும் விதைகளை நோய்களுக்கான மருத்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

அசோகா அரிஸ்டம், அசோகா கிறிப்பிடா, சந்தநாடி தையம், நயோகுரோதாதி கஷாயம் ஆகியவை அத்தனையும் ஆயுா்வேத மருத்துகள்தான். இவை அனைத்தும் அசோக மரத்தின் பட்டைகள், பூக்கள், மற்றும் விதைகளிலிருந்து தயாரிக்கப்பட்டவை.

 இந்த ஆயுா்வேத மருந்துகளை தகுதியான.  ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொண்டால்  நீரிழிவு நோய் வராது , மலச்சிக்கல் வராது , வயிற்றுக் கடுப்பு வராது, சிறுநீர்பயைில் கற்கள் வராது, கால்களில் மூட்டு வீக்கம் வராது , மூட்டு வலி வராது, மூட்டுப் பிடிப்பு வராது, மூல நோய் வராது.

ஆனால் இந்த அசோக மரத்தில் செய்த மருத்துகளை எல்லாம் தகுதியான சித்த மருத்துவா் அல்லது ஆயுா்வேத மருத்துவரின் அறிவுரைப்படி சப்பிடுவதுதான் நல்லது.

நண்பா்களே யூடியூபில் சொல்லிவிட்டார்கள், வாட்ஸ் அப்பில் சொல்லிவிட்டார்கள்.  ஃபேஸ்புக்கில் சொல்லிவிட்டார்கள், என்று நினைத்து மருந்துகளை நீங்களே வாங்கி சாப்பிடாதீர்கள்.  ஒரு மருத்துவரின் வழிகாட்டுதல் அதிகம் வேண்டும்.

 அசோக மரம் எந்த அளவிற்கு சிந்த மருத்துவத்தில், ஆயுா்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா ? 2005 – 06 ம் ஆண்டில் மட்டும் சுமார் 2550 டன் அசோக மரப்பட்டைகள், இந்தியாவில் பயன்படுத்தப்படுள்ளது, என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் அசோக மரம் சம்மந்ததப்பட்ட சுவாரஸ்மான ஒரு செய்தியை சொல்லுகிறேன்.

அன்பு  மற்றும் காதலுக்கான இத்துக் கடவுள் மன்மகன். கடவுள்கள் எல்லோரும் ஒன்று அல்லது பல ஆயுதங்களை ஏந்தி இருப்பார்கள்.  அப்படிப் பார்த்தால் மன்தன் என்னும் காமதேவன் கைகளில் மலரால் மலா்க்கணை வைத்திருப்பார்.  அந்த மலா்க்கணை என்னும் மலரம்பு ஐந்து மலர்களால் ஆனது. 

காமதேவனின் வில் கரும்பால் ஆனது. அதன் நாண் தேனீக்களால் ஆனது, அம்புகள்.  ஐந்தும் ஐந்து பூக்களால் ஆனவை. அவை வெண்தாமரை, நீலத்தாமரை, மல்லிகை, மாம்பூ மற்றும் அசோகம் இவை ஐந்தும் தான் மலா்க்கணைகள்.

நண்பா்களே, உங்கள் ஊாரில் மரம் டும்ம்போது, அசோக மரக்கன்றுகளயும் வாங்கி நடவு செய்யுங்கள்.  காமதேவன் என்னும் மன்மதன் உங்களை சிர்வதிப்பார்.

இந்த நிகழ்ச்சி உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.  மீண்டும் நாளை சந்திக்கலாம். நன்றி வணக்கம் !

 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot.

Thanks and Courtesy to respective authors books and online e-resources.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...