Wednesday, July 8, 2020

கொரோனாவுக்கு பன்னிரண்டு தடுப்பூசிகள் தயார் TWELVE CORONA VACCINES ARE READY




SMALL POX IN EGYPTIAN MUMMY
கொரோனாவுக்கு பன்னிரண்டு தடுப்பூசிகள் தயார்

TWELVE  CORONA VACCINES  ARE READY 

கொரோனா மாதிரி பல நோய்களுக்கு மருந்து கிடையாது, நோய் வந்த பிறகு அவற்றை குணப்படுத்த முடியாது,  அது போன்ற நோய்களை தடுப்பூசிகள் மூலமாகத்தான் தடுத்து நிறுத்த முடியும்.

 கொரோனா உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது, தினசரி எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது ? எத்தனை பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் இறந்துபோனார்கள் ?

இந்த புள்ளிவிவரங்களை எல்லாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம், உலகம் முழுவதும் இந்த நிலை நீடிக்கிறது, இதற்கான ஒரு தடுப்பூசியினை கண்டுபிடிப்பதற்காக முயற்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் தடுப்பூசி தொடர்பான தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரஸ்யமான ஒரு 10 செய்திகளை பார்க்கலாம்.


1. உயிர்களைக் காப்பற்றும்.
தடுப்பூசிகள்

உலகில்  ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசிகள் இரண்டு முதல் மூன்று மில்லியன் மக்களை  காப்பாற்றுகிறது, பல உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து நம்மை  நம்மை பாதுகாக்கின்றன.

முக்கியமாக டிப்தீரியா எனும் தொண்டை அடைப்பான் நோய், டெட்டனஸ் என்று சொல்லப்படும் ரணஜன்னி நோய், மூன்றாவது பெர்ட்டூசிஸ் அல்லது ஊப்பிங் காஃப் என்று சொல்லப்படும் கக்குவான் இருமல், மூன்றாவது மீசல்ஸ் என்று சொல்லப்படும் மணல்வாரி அம்மை நோய்.
 
இந்த தடுப்பூசி போடுவதை ன்னும் சீர் செய்தால், இன்னும்கூட 1.2 மில்லியன் அல்லது 12 லட்சம் உயிர்களை காப்பாற்றலாம் என்று சொல்லுகிறது வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (WORLD HEALTH ORGANIZATION) எனும் உலக சுகாதார கழகம்.



2. ஃபுளூ வைரஸும் குழந்தைகளும்

ஃபுளூ வைரஸுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி ஃபுளூ வைரஸ்நோய் தொடர்பாக ஏற்படும் 51 சதவிகித மரணங்களைத் தடுத்துவிடும், பொதுவாக வைரஸ் குழந்தைகளை மிகவும் கடுமையாகத் தாக்கும் என்பதை நாம் அறிவோம்.


3. ஹெர்ட் இம்முனிட்டி

ஒரு சமூகத்தில் ஒரு நோய்க்கு எதிராக பெரும்பான்மையான மக்கள் தடுப்பு ஊசி போடுகிறார்கள் என்றால், அவர்கள் அத்தனை பேருக்கும் கிடைக்கும் பாதுகாப்பிற்கு ஹெர்ட் இம்முனிட்டிஎன்று பெயர்.

ஹெர்ட் இம்முனிட்டி ஒரு நோய்க்கு எதிராக ஒரு சமூகத்தில் உள்ளது என்றால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களுக்கும்  பாதுகாப்பு கிடைக்கும்.

4. எட்வர்ட் ஜென்னரின் தடுப்பூசி

தடுப்பூசி என்பது முள்ளை முள்ளால் எடுக்கும் தொழில்நுட்பம், விஷத்தை விஷத்தால் குணப்படுத்தும் தொழில்நுட்பம், இதனை புத்த பிட்சுக்கள் கையாண்டிருக்கிறார்கள், பாம்பினால் கடிபட்டவர்களுக்கு அதே பாம்பின் விஷத்தின் அடர்த்தியை குறைத்து கொடுத்திருக்கிறார்கள். தடுப்பூசிகள் வராத காலம் அது, தடுப்பூசி தத்துவம் புரியாத காலம் அது. 

ஒரு காலத்தில் மாடுகளுக்கு வரும் அம்மை நோய் கிருமிகளை மனித உடலில் சிறு காயம் ஏற்படுத்தி அதனை தடவுவார்கள், அப்போது அந்த கிருமிகள் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

இதனை அம்மை நோய்க்கு எதிராகப்  பயன்படுத்தி இருக்கிறார்கள், இது பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் சீனாவில் புழக்கத்திலிருந்து, என்கிறார் எட்வர்ட் ஜென்னர்,  

எட்வர்ட் ஜென்னர்தான் முதன் முதலாக அம்மை நோய்க்கான  தடுப்பூசியைக்  கண்டுபிடித்தார், மாட்டம்மை நோய் கிருமிகளைத்தான் அவர் தடுப்புமருந்தாகப் பயன்படுத்தினார்.


5.  தடுப்பூசியாமாட்டம்மைக் கிருமி

1796 ஆம் ஆண்டு ஒரு 13 வயதுப் பையனின் உடலில் இந்த மாட்டம்மை கிருமியை உட்செலுத்தி, அம்மை நோய்க்கான தடுப்பூசியாக இதனை பயன்படுத்த முடியும்  என நிரூபித்தார்.

இதனை ஒரு செயல் விளக்கமாக அவர் செய்தும்  காட்டினார், 1798 ஆம் ஆண்டு இதனை தடுப்பூசியாக வேக்சின் என்ற நிலையில் உருவாக்கினார்.

இதுதான் அறிவியல் பூர்வமாக உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பூசி, தற்போது உலகில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து விதமான தடுப்பூசிகளுக்கும் 'தாத்தா' இந்த தடுப்பூசிதான்.

18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்த அம்மை நோய்க்கு எதிராக முழு உலகமும் போராடியது, அதன் விளைவாக 1979 ஆம் ஆண்டு முற்றிலுமாக அம்மை நோய் ஒழிக்கப்பட்டது,  அதற்குக் காரணம் எட்வர்ட் ஜென்னரின் தடுப்பூசிதான்.



6. காலரா, ஆந்த்ராக்ஸ் மற்றும் பிளேக்

எட்வர்டு ஜென்னரது தடுப்பூசி ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து லூயிஸ் பாஸ்ச்சர் என்பவர் தடுப்பூசிகள் ஆராய்ச்சியைத் தொடங்கினார், வர் 1897 காலரா தடுப்பு ஊசியையும் 1904 ஆம் ஆண்டு ஆந்த்ராக்ஸ் நோய்க்கான தடுப்பூசியையும் கண்டுபிடித்தார்.

தடுப்பூசி என்று சொன்னால் உலகம் முழுக்க நினைவுக்கு வரும் இரண்டு பெயர்களில் ஒன்று எட்வர்ட் ஜென்னர் இன்னொன்று லூயிஸ் பாஸ்ச்சர். பின்னர் பிளேக் நோய்க்கான தடுப்பூசி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
     

7.  ரணஜன்னி, கக்குவான் இருமல்,  எலும்புறுக்கி

மற்றும் தடுப்பூசிகள் அலெக்சாண்டர் கிலென்னி என்பவர் டெட்டனஸ் என்னும் ரணஜன்னி தடுப்பூசியைக் கண்டுபிடித்தார், 1923 ஆம் ஆண்டு பேர்ட்டூஸிஸ் என்னும் கக்குவான் இருமலுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்.

1790 முதல் 1950 வரையான கால கட்டத்தை  தடுப்பூசிகள் காலம் என்று சொல்லலாம், அப்போதுதான் எலும்புருக்கி என்னும் நோய்க்கு பிசிஜி (BACILLUS CALMETTI - GUERIN) என்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.


 8. போலியோ இல்லாத அமெரிக்கா

1794 இல் அமெரிக்கா அமெரிக்காவில் வெர்மாண்ட் என்ற இடத்தில் 132 பேர் போலியோவால் பாதிக்கப் பட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

போலியோ தடுப்பூசி 1956-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் பயன்பட்டு வருகிறது, 1979ஆம் ஆண்டு போலியோ இல்லாத அமெரிக்கா என்று அறிவிக்கப்பட்டது,

9. மம்மியில் உடம்பில் அம்மைத் தழும்புகள்

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாக முதன் முதலாக அம்மைநோய் மனித குலத்திற்கு அறிமுகமானது, அநேகமாக இது இந்தியா அல்லது எகிப்து நாட்டில் தோன்றியதாக சொல்லுகிறார்கள். அம்மை நோயின் அறிகுறியை ஒரு மம்மியின் உடலில் தேடினார்கள்,  அது ஒரு மயிர் கூச்செறியும் செய்தியாகவே இருக்கும்.

1157ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் நடந்த நிகழ்வு இது, எகிப்து நாட்டை ஆண்ட ஒரு மன்னர், அவர் பெயர் ஐந்தாவது ராம்சஸ் என்பவர், அவர் தனது 40 வது வயதில் அம்மை நோய்கண்டு 1157-ம் ஆண்டு இறந்து போனார் , எகிப்து நாட்டின் குலவழக்கப்படி அவருடைய உடலை பதனம் செய்து பிரமிடு ஒன்றில் மம்மியாக அடக்கம் செய்தார்கள்.

1898 இல் ஐந்தாம் ராம்செஸ்சின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது, அவர் அம்மை நோயால் இறந்தது குறித்து  அவர் முகத்திலும் உடலிலும்  இருந்த அம்மைத் தழும்புகளை மூலம் தெரியவந்தது, இந்த ஆய்வை செய்வதற்கு சென்ற ஒரு குழு அந்த மம்மியின் உடலில் இருந்து 5 மில்லிமீட்டர் தோலை வெட்டி எடுத்து ஆய்வு செய்தார்களாம். 

10. கொரோனா தடுப்பூசிகள் 

இந்தியாவில் கொரோனாவை  கட்டுக்குள் அடக்கிவைக்க  இரண்டு தடுப்பூசிகள் தயாராகிவிட்டன, ஒன்று ஹைதராபாத்திலிருந்து இன்னொன்று அகமதாபாத்திலிருந்து.

கோவாக்சின் என்றபெயரில் ஹைதராபாத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி அநேகமாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடப்படலாம் என தெரிகிறது.
 
சிலர் ஆகஸ்ட் 15ம் தேதி வராது என்கிறார்கள், வந்தாலும் தாமதமாகத்தான் வரும், தாமதமாக வந்தாலும் பக்கவிளைவு இருக்கும், இப்படியாக நனது நம்பிக்கை வேர்களில் சுலப தவணைகளில் சுடுநீரை ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். 

ஆனாலும் வந்துவிடும் என்று நிறையபேர் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள், அப்படியே நம்பிக்கையோடு காத்திருப்போம்.

இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவாக்சின்’ஐ கண்டுபிடித்திருப்பது பாரத் பயோடெக் என்னும் நிறுவனம்,  இதனைக் கண்டுபிடித்தவர் இதன் நிறுவனர் கிருஷ்ணா எல்லா என்பவர்,  இவர் அடிப்படையில் ஒரு ஒரு தமிழர், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே இருக்கும் நெமேலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்,  ஒரு விவசாயின் மகனும் கூட.

இதுவரை தடுப்பூசிகள் பற்றி கிடைத்திருக்கும் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் இரண்டு, பிரேசிலில் ஒன்று, ஆக்ஸ்போர்ட் நிறுவனம் மூலமாக ஒன்று, சீனாவில் ஆறு, மற்றும் பைசர் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனிகள் மூலமாக தலா ஒன்று, என்ற நிலையில் தற்போது 12 தடுப்பூசிகள் விரைவில் வர இருக்கின்றன, இந்த தடுப்பூசிகள் எல்லாம் ஒன்று இரண்டு என வர ஆரம்பித்து விட்டால் உலகம் முழுவதிலும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா கட்டுக்குள் அடங்கி விடும்.


எழுதியவர்: அக்ரி தே.ஞான சூரிய பகவான், (முன்னாள் பண்ணை வானொலி அலுவலர், அகில இந்திய வானொலி) தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.medicopy.net / 10 Interesting Facts about Vaccines
www.immune,org.nz / A Brief History of Vaccination
timesofindia.indiatimes.com /India’s first Coronavirus Vaccine Covaxin To Start Human Trials This Week.
www.who.int – Draft Landscape of COVID-19 Candidate Vaccines – World Health Organization

0000000000000000000000000


No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...