Thursday, July 2, 2020

தாய்லாந்து நாட்டில் கூரைநீர் சேமிப்பு - வீடியோ ROOF WATER HARVESTING IN THAILAND -





தாய்லாந்து நாட்டில் கூரைநீர் சேமிப்பு - வீடியோ

ROOF WATER HARVESTING IN THAILAND - VIDEO 

உலக சுகாதார நிறுவனம் சொல்லும் செய்தி இது: "உலகில் 785 மில்லியன் ஜனத்துக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கல, இந்த 785  ல,  144 மில்லியன் ஜன்ங்க குளம் குட்டைகள்தான் தாகசாந்தி செய்றாங்க."

"இதச் சொன்னா உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும், கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் மலத்தினால் மாசடைந்த தண்ணியத்தான் குடிக்கறாங்க, ஏன்னா வேற வழி இல்ல, யோசிச்சுப்பாருங்க !"
 
"காலரா, வயிற்றுக்கடுப்பு, டைபாயிட், இப்படி கண்டகண்ட நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கறதே மோசமான தண்ணீர்தான்."

"இந்த தண்ணிய குடிச்சு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அதனால் மட்டுமே செத்துப்போறவங்க ஒருத்தர் ரெண்டுபேர் இல்ல, 4 லட்சத்து 85 ஆயிரம் பேர்."
 
"இன்னும் அஞ்சு வருஷத்துல, அதாவது 2025 ஆம் வருஷம் ஆண்டு வாக்கில் உலகில் பாதிப்பேர் தண்ணீர் பிரச்சனையோடத்தான் இருப்பாங்க."

"சில நாடுகளில் 22 சதவீத ஜனங்களுக்கு தண்ணி வசதி சுத்தமாக இருக்காது. ஆனா கூரைநீரை சேமிச்சு குடிக்க கத்துக்கிட்ட தண்ணிப்பஞ்சம் சுத்தமா தலை காட்டாது, அதனாலதான் நாங்க நூத்துக்கு 40 பேரு கூரைநீரை சேமிச்சு குடிக்கறோம்."

கீழே இருக்கும் லிங்கில் கிளிக் செய்யுங்கள்.

தாய்லாந்து நாட்டில் கூரைநீர் சேமிப்பு - வீடியோ
  

தாய்லாந்து நாட்டில் எப்படி தண்ணீர் பிரச்னை சமாளிக்கிறார்கள் என்று பாருங்கள், இதனை ஒளிபரப்பு செய்த மக்கள் தொலைகாட்சிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன், நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்.

நிகழ்ச்சியை வழங்கியவர் : அக்ரி தே.ஞான சூரிய பகவான், (முன்னாள் பண்ணை வானொலி அலுவலர், அகில இந்திய வானொலி) தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

இந்த இணைப்பில் எனது படைப்புகளை (இன்றுடன் 830) பார்க்கலாம், படிக்கலாம் – www.vivasayapanchangam.blogspot.com

அன்புடன்
தே.ஞான சூரிய பகவான், போன்: +91 8526195370

888888888888888888888888888888888

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...