Saturday, July 11, 2020

இந்தியா – சீனா - பட்டு - INDIA CHINA & SILK





இந்தியா சீனா - பட்டு

INDIA CHINA & SILK

My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!


உலகில் பட்டு உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவை ஒன்று சீனா இன்னொன்று இந்தியா, இந்த இரண்டு நாடுகளில் பட்டு உற்பத்தி வந்த கதையும் வளர்ந்த கதையும் சொல்லும் கட்டுரை இது, படியுங்கள், இதில் பல செய்திகள் உங்களுக்குபுதுசாஇருக்கும், படிச்சுப்பாருங்க

1. இந்தியாவில் நான்கு வகை பட்டுவகைகள்

இந்தியாவில் மொத்தம் நான்குவகை பட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன, அவை மல்பெரிபட்டு (BOMBYX  MORI), டசார்பட்டு (ANTHRAEA PAPHIA), முகாபட்டு (ANTHERAEA ASSAMENSIS) மற்றும் ஈரிபட்டு (PHILOSAMIA SYNTHIA), இவற்றில் மல்பெரிபட்டு மட்டும்தான் விவசாயம் மாதிரி தோட்டம்போட்டு வளர்க்கலாம், மற்றவை எல்லாம் காடுகளில் உள்ள மரங்களில் இயற்கையாக உருவாகும் பட்டு வகைகள், ஈரி பட்டுப்புழுக்களையும் மல்பெரி மாதிரி ஆமணக்கு தழை போட்டு வளர்க்க முடியும், ஆனால் இந்தியாவின் 80 % பட்டு உற்பத்தி  மல்பெரிபட்டு மூலமாகவே கிடைக்கிறது.

2. இந்தியாவுக்கு இரண்டாம் இடம்

உலகத்தின் மொத்த பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது. மல்பெரி பட்டின் மூலம் நாம் உற்பத்தி செய்வது 71.8 சதம் (20434 மெட்ரிக் டன்), டஸ்சார் பட்டின் மூலம் கிடைக்கும் உற்பத்தி 9.9 % (2818 மெட்ரிக் டன்), ஈரி பட்டின் மூலம் கிடைக்கும் உற்பத்தி 17.8 % (5054 மெட்ரிக் டன்), முகா பட்டின் மூலம் கிடைக்கும் உற்பத்தி 0.6 % (166 மெட்ரிக் டன்), ஆக இந்தியாவின் மொத்த ஆண்டு உற்பத்தி  28472 மெட்ரிக் டன்.   

3. மாதச்சம்பளம் மாதிரி 

இரண்டு அரை ஏக்கரில் வெண்பட்டு மல்பெரி சாகுபடி செய்திருந்தால் அதன் மூலம் பட்டுப்புழு வளர்ப்பு செய்து 21 நாட்களில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை மாதச்சம்பளம் மாதிரி வருமானம் எடுக்கலாம், இந்த வருமானம் அப்போது நிலவும் பட்டுக் கூடுகளின் விலை நிலவரத்தை பொருத்தது.
மஞ்சள் பட்டுக்கு சுமாரான விலையும் வெண்பட்டுக்கு நல்ல விலையும் பட்டு சந்தைகளில் கிடைக்கிறது, விவசாய பயிர்களை ஒப்பிடும்போது பட்டு வளர்ப்பைப்போல மாதாந்திர வருமானம் தருவது வேறு எதுவும் இல்லை.

4. வேலை வாய்ப்பு தரும்

2015 – 16 ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் பட்டு விவசாயம் தோராயமாக 83 லட்சம் பேருக்கு வேலைவைப்பு அளிக்கிறது, ஒரு ஏக்கர் அல்லது அரை ஏக்கர் இருந்து அதில் தண்ணீரும் இருந்து சொட்டு நீரும் போட்டு விட்டால் ஒரு குடும்பத்தில் அத்தனை பேருக்கும்  பட்டு வளர்ப்பு வேலை தரும், முன்னைப்போல் அதிக வேலை கூட இல்லை, ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று மணி நேரம் வேலைபார்த்தால் அதுவே மிச்சம், ஒரு காலத்தில் பட்டு விவசாயத்தில் பொழுதண்ணைக்கும் வேலை இருக்கும், இப்போது வேலையே கிடையாது என்கிறார்கள் ஜம்னமரத்த்தூர் மலைவாழ் பட்டு விவசாயிகள்.

5. புதிய கற்காலம்

நியோலித்திக் என்ற காலத்திலிருந்து பட்டு உற்பத்தி சீனர்களுக்கு அறிமுகமாகி இருந்தது, இது சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம், இதனை ஆங்கிலத்தில் நியூஸ்டோன் ஏஜ்என்று சொல்கிறார்கள், இதுதான் புதிய கற்காலம்,  சீனாவை பொறுத்தவரை கிறிஸ்து பிறப்பதற்கு 1200 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம், இதனை 1800 பிசி என்று குறிப்பிடுகிறார்கள்.

6. பட்டு உற்பத்தி செய்யும் நாடுகள்

சீனா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் பட்டு வளர்ப்பில் தற்போது ஈடுபட்டு உள்ளன, ஆனால் பட்டு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இரண்டு நாடுகள் சீனா மற்றும் இந்தியா, இவை இரண்டும் சேர்ந்து உலக உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் பட்டு உற்பத்தி செய்கின்றன.
 
இந்தியாவில் கர்னாடகா, ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், வெஸ்ட்பெங்கால், ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு அகியவை அதிகம் பட்டு உற்பத்தி செய்யும் மாநிலங்கள்.

7. புரதத்தால் கட்டும் கூடுகள் 

பட்டுப்புழுக்கள் நான்காவது முறையாக தோலுரித்த பின்னர் பட்டுக் கூடுகளை கட்டுகின்றன, நமக்கு சிமெண்ட் மாதிரி பட்டுப்புழுக்களுக்கு ஃபைப்ராய்ன் (FIBROIN), இந்த ஃபைப்ராய்னில் செய்யப்பட்ட இழைகளால்தான்  கூடுகள் கட்டுகின்றன.
 
ஒவ்வொரு பட்டுபுழுவின் தலைப்பகுதியிலும் இரண்டு ஃபைப்ராய்ன் சுரப்பிகள் இருக்கும், இந்த சுரப்பிகள்தான் பைப்ராய்ன் திரவத்தை சுரக்கின்றன, இது ஒருவகை புரோட்டீன் திரவம்,  இந்த புரோட்டீன் திரவத்தினால்தான் பட்டு இழைகளை உருவாக்குகின்ற, இதிலிருந்துதான் நாம் பட்டு இழைகளைப் பிரித்து எடுக்கிறோம்.



8. பட்டுக்கூடு எனும் கக்கூன்

அது ஒரு கூட்டைக்கட்ட அது பயன்படுத்துவது ஒரே ஒரு இழைதான், அந்த ஒரு இழையைக் கொண்டுதான்  அந்த தன்னைச்சுற்றி பட்டுக்கூட்டை உருவாக்கி, அதன் மீது ஒரு பசையைத் தடவி, அதனை ஒரு கடினமான மேல் பகுதி கொண்ட பட்டுக்கூடாக மாற்றுகிறது, இந்த பசையின் பெயர் செர்சின் (SERCIN), பட்டுக்கூட்டைத்தான் ஆங்கிலத்தில் நாம் கக்கூன் என அழைக்கிறோம், அதாவது பட்டுப்புழு தனது கூட்டுப்புழுப் பருவத்தை கழிக்க அது கட்டும் வசந்த மாளிகை.

9. பட்டு இழைகளைப் பிரிக்கும் முறை

இந்த பட்டுக் கூடுகளை சுடுநீரில் இடுவதன் மூலம் இரண்டு காரியங்கள் நடக்கின்றன, ஒன்று பட்டு கூட்டின் மீது இருக்கும் செர்சின்  கரைகிறது,  அதனால் வெளிப்படும் பட்டு ழையை பிரித்து எடுக்கலாம்,  இரண்டாவது அந்தக் கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப் புழுக்கள் கொல்லப்படுகின்றன.

10. பட்டு இழைகளின் நீளம்

ஒரு பட்டுப்புழு ஒரு  பட்டுக் கூடு கட்டுவதற்கு எவ்வளவு நீளமான பட்டு இழையை  உற்பத்தி செய்கிறது என்று தெரியுமா ? சுமார் ஒரு மைல் அல்லது 1.6 கிலோ மீட்டர் நீளமுள்ள பட்டு இழையை உற்பத்தி செய்கிறது. ந்த அளவு நூலை இரண்டு அல்லது மூன்று நாளில் உற்பத்தி செய்கிறது.

கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள், எழுதுங்கள்.

நாளை இன்னும் பல சுவரஸ்யமான செய்திகளை பார்க்கலாம்.





Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370, Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


00000000000000000000000000












No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...