Sunday, July 12, 2020

இந்தியா சீனாவை முந்துமா ? - INDIA AND CHINA IN SILK PRODUCTION





இந்தியா சீனாவை 
முந்துமா ?

INDIA  AND CHINA
IN SILK PRODUCTION




My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!


இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் பொருளாதாரத்தையும் வேலை வாய்ப்பினையும் மேம்படுத்தும் புதிய நம்பிக்கை நட்சத்திரம் பட்டு வளர்ப்பு, மறந்துபோன மலைப்பகுதிகளாக விளங்கும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் மலைவாழ் மக்களுக்குக்கூட ன்ன்னம்பிக்கை முனயாக தொலைவில் தெரிவது பட்டுவளர்ப்பு, அது தொடர்பான இந்த இரண்டாவது கட்டுரையில் 10 அரிய செய்திகள் இடம்பெறுகின்றன.

11. ஒரு பவுண்டு கச்சா பட்டு

ஒரு பவுண்டு கச்சா பட்டினை உருவாக்க மொத்தம் 2500 பட்டுக்கூடுகள்  தேவைப்படும், ஒரு பவுண்டு என்பது 0.454 கிலோ, அப்படி என்றால் ஒரு பட்டுக்கூட்டின் எடை தோராயமாக  1.5 முதல் 2.2 கிராம் வரை இருக்கும், வீரிய ஒட்டு வகைகள் 1.8 முதல் 2.5 வரை இருக்கும்.

12. அகிம்சா பட்டு

கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப்புழுக்களை கொல்லாமல் சேகரிக்கும் பட்டுக்கு அகிம்சா பட்டு   என்று பெயர். இந்த மாதிரி பட்டுக் கூடுகளுக்கு அகிம்சா கூடுகள் என்று பெயர்,   ஆனால் அகிம்சா பட்டின் விலை இரண்டு மடங்கு அதிகம், சாதாபட்டு பத்து ரூபாய் என்றால் அகிம்சா பட்டு 20 ரூபாய்,  கூட்டிலிருந்து  வெளிவரும் தாய் அந்துப்பூச்சி அந்த கூட்டை கிழி,த்துக் கொண்டு வெளியே வந்துவிடும், அப்படி வரும்போது அதன் இழைகள் அறுந்து போகும், அதனால் அந்த கூடுகளில் சாதாரண சூழ்நிலையில் கிடைக்கும் பட்டினைவிட 6 மடங்கு குறைவாகவே கிடைக்கும்,  இந்த அகிம்சா பட்டினை  உருவாக்கியவர் மகாத்மா காந்தி அவர்களின் சீடர் என்று சொல்லலாம்,  அவருடைய பெயர் குசுமாராஜா என்பது.

13. பட்டுப்புடவை கரைபோட்ட வேட்டி

நமக்கு தெரிந்து பட்டு என்றால் பட்டுப்புடவை, பட்டு பாவாடை, கரை போட்ட வேட்டி அவ்வளவுதான், ஆனால் அதற்கும் மேலாக தொழிற்சாலைகளில் கூட இதனை பயன்படுத்தலாம், எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரிகளில் கூட இதனைப் பயன்படுத்துகிறார்கள், இன்சுலேஷன் காயில்கள், டெலிபோன்கள்,  மருத்துவத்துறையில் சர்ஜரி செய்யும் போது முடிச்சுகள் போட உதவும் நூல்கள், ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரியில் டயர்கள் உற்பத்தியில், மிலிட்டரியில் பாரசூட்டுகளில், ன்பவுடர் பைகள் செய்ய,  டிஸ்போசிபிள் கப்புகள் செய்ய, இப்படி ஏகப்பட்ட உபயோகங்களுக்கு இதனை பயன்படுத்துகிறார்கள். எது எப்படியோ அதன் விலையை நினைத்தால்தான் வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்கிறார்கள்.

14. சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளுமா ?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி பட்டு வளர்ச்சித் துறையின் உயர் மட்டக் கூட்டம் ஒன்று பெங்களூரில் நடந்தது, அதில் தலையை நீட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அதில் சொன்ன  ஒரு செய்தி பிரமிப்பாக இருந்தது,  இதுதான் அந்த செய்தி

வெண்பட்டு உற்பத்தி தொடங்கிய பிறகு ஒரு புதிய நம்பிக்கை ந்துள்ளது பட்டு உற்பத்தியில் உலகில் இரண்டாவதாக இருக்கும் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பு இருக்கு, அதற்கு நமக்கு உதவியாக இருப்பது ஜப்பான், ஜப்பான் நாட்டில் நிறைய பட்டு உற்பத்தியை பெருக்குவதற்கு தொழில்நுட்பங்கள் இருக்கின்றன, ஆனால் அந்த நாட்டில்  போதுமான இடவசதி இல்லை, அதனால் ஜப்பானில் பட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, அதனால் அது இந்தியாவிற்கு உதவ விரும்புகிறது, இந்த  வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்


15. மலைவாழ் மக்களுக்கு அற்புதமான வாழ்வாதாரம்

அப்போது நாங்கள் 110 மலைவாழ் குடும்பங்களுக்கு பட்டு வளர்ப்பதற்காக உதவி செய்து கொண்டிருந்தோம்,  எங்களுக்கு உதவியாக இருந்தது நபார்டு வங்கியும் பட்டு வளர்ச்சித் துறையும்.
 
கொஞ்ச நாட்களுக்கு முன்னால்வரை மாதம் ஆயிரம் ரெண்டாயிரம் என்று சம்பாதிக்க சிரமப்பட்ட அவர்கள் மாதம் பத்தாயிரத்துக்கு குறைவில்லாமல் அரை ஏக்கரில் பணம் பார்த்தார்கள்.

16. சக்கைப்போடு போடும் வெண்பட்டு

ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் பட்டு உற்பத்தியில் நாம் ஐந்தாவது இடத்தில் இருந்தோம், முதலிடத்தில் சீனா இருந்தது மூன்றாவது நான்காவது ஐந்தாவது இடங்களில் பிரான்சு ஜப்பான் போன்ற நாடுகள் இருந்தன, நமக்கு முன்னால் இருந்த நாடுகளை எல்லாம் பின்னால் தள்ளிவிட்டு நாம் இரண்டாவது நிலைக்குயர்ந்துள்ளோம், இதற்குக் காரணம் நம்மிடம் இருக்கும் வாகான நிலம்,  நமது தட்பவெப்பநிலை, சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள பைவோல்டின் எனும் வெண்பட்டு ஆகியவைதான் என்கிறார்கள்  பட்டு வளர்ச்சி நிபுணர்கள்


17. சீனா இந்தியா ஜாஸ்தி இடைவெளி

சீனா உலகின் மொத்த பட்டு உற்பத்தியில் 79 சத்தை அது உற்பத்தி செய்கிறது, 2014 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 46 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்த பட்டு உற்பத்தி 2018ல் ஒரு லட்சது 20 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது,  இந்தியாவின் உற்பத்தி 2014 ல் 28 ஆயிரத்து 780 மெட்ரிக் டன்னாக இருந்த பட்டு உற்பத்தி தற்போது 2018 ஆம் ஆண்டு 35 ஆயிரத்து 261 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, பட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடைவெளி அதிகம்

இந்தியா சீனாவை சேர்த்து உலகில் 20 நாடுகள் பட்டு உற்பத்தி செய்கின்றன ஆனால் அவற்றின் உற்பத்தி எல்லாம் மிகவும் குறைவு.
 

18. மஞ்சள் மகாராஜாவின் மகாராணி

வாங்க, கிறிஸ்து பிறப்பதற்கு 2640 ஆண்டுகளுக்கு முன்னால  போகலாம், மஞ்சள் மகாராஜா சீனாவை ஆண்டுகிட்டு இருந்தார், இங்கிலீஷ்ல அவர் பெயர் எல்லோ எம்பரர், அவரோட மகாராணியின் பெயர் சி லிங் சி (HSI-LING-CHI), அவருக்கு அப்போது 14 வயது, ஒருநாள் சி லிங் சி ஒரு மல்பெரி மரத்தடியில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார், அப்போது ஒரு பட்டுக்கூடு அவருடைய தேனீர் கோப்பையில் விழுந்தது, சில நொடிகளிலேயே அந்த பட்டு கூட்டிலிருந்து பட்டு இழைகள் விடுபட்டு தேநீரில் மிதந்த.
 
அந்த இழைகளை சேகரித்தார், மென்மையாக அழகாக இருந்த இழைகள் உறுதியாகவும் இருப்பதை பார்த்தார்.
 
அந்த இழைகளை ஒன்று சேர்த்து முறுக்கி மெல்லிய ஒரு பட்டுநூலைச் செய்தார்.
 
தன் தலைக்கு மேல் இருந்தது மல்பெரி மரம் என்பதை பார்த்தார்,  இன்னும் அதில் பட்டுக்கூடுகள் நிறைய இருப்பதையும் பார்த்தார்.
 
அந்த பட்டுக் கூடுகளை எல்லாம் சேகரித்தார், பனிப் பெண்களிடம் சொல்லி நிறைய தேநீர் தயாரித்து அதில் முக்கி எடுத்து பட்டு இழைகளை பிரித்து எடுத்தார்.
 
அவற்றை ஒன்றுசேர்த்து பட்டு நூல்களை உருவாக்கினார், அந்த நூல்களை பயன்படுத்தி நெசவு செய்து ஒரு சிறிய அழகான பட்டுத் துணியை நெய்தார், உலகின் முதல் பட்டுத்துணி அதுதான், அந்தப் பட்டுத் துணியை கண்டுபிடித்தவர் சி லிங் சி என்ற பெருமை 2020 ஆம் ஆண்டு கூகுள் வரை பரவிது.
 
அதன் பின்னர்தான் முழு சீனாவுக்கும் பட்டு உற்பத்தி கலையை அவர் சொல்லித் தந்தார், அதன் பிறகுதான் பட்டு சக சீனர்களுக்கும் தெரியவந்தது.
 

19. சொன்னால் மரண தண்டனை

பழைய சீனாவில் பார்த்து ஆசைப்பட்டோர்  ல்லாம் பட்டு உடுத்த முடியாது, பாராளும் மன்னர் குலத்தினர் மட்டுமே, அதனைத் தொட்டுப் பார்க்க முடியும், கட்டி பார்க்கவும் முடியும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் பட்டுத் துணியை பார்த்து பரவசப்பட மட்டும் சுதந்திரம் இருந்தது, வெளிநாடுகளில் இருக்கும் அரச குடும்பங்களுக்கு மட்டும் மெல்ல பட்டுத்துணிகளை  ஏற்றுமதி செய்ய தொடங்கினார்கள் சீனாக்காரர்கள், அப்போதும்கூட பட்டு பற்றிய எந்த  ரகசியத்தையும் சொல்லக்கூடாது, அப்படி சொன்னால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
 

20. பட்டு முட்டை கடத்தல்

சீனாவின் பட்டு வளர்ப்பும் பட்டு நெசவும் பட்டென்று அந்த நாட்டை விட்டு வெளி வரவில்லை, பல நாடுகள் அதற்காக பல காலம் காத்திருந்தன, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பட்டு வளர்ப்பை சீனாக்காரர்கள் ரகசியமாக பூட்டி வைத்திருந்தார்கள், அந்த சமயம் இரண்டு புத்த மத சாமியார்கள் தங்கள் வாக்கிங் ஸ்ட்டிக்கில் கொஞ்சம் பட்டுப்பூச்சியின் முட்டைகளை தங்கள் நாட்டிற்கு (துருக்கி பகுதிக்கு) கடத்தினார்கள், அதன் பிறகுதான் அது  பல நாடுகளுக்கும் பரவியது, அதேபோல சீனாவிலிருந்து திபெத் நாட்டிற்கு திருமணமாகிப் போன ஒரு பெண்மணி அம்பதறுபது பட்டு முட்டைகளை ரகஸ்யமாக தனது கொண்டையில் வைத்து கோண்டு போனாள் என்றுகூட ஒரு செய்தியை நான் படித்திருக்கிறேன்.

இன்னும்கூட இதில் சொல்ல நிறைய செய்திகள் இருக்கு, அவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


FOR FURTHER READING
www.agritech.tnau.ac.in / Sericulture – Silk Worm Types
www.yourarticlelibrary.com / Sericulture in India: History Types of Silks and Life History
www.vikaspedia.in / Sericulture In India

00000000000000000000









No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...