Monday, July 6, 2020

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் பயன் என்ன ? - வீடியோ - BENEFITSS OF WATERSHED DEVELOPMENT PROJECT





நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் பயன் என்ன ? - வீடியோ

BENEFITSS OF WATERSHED DEVELOPMENT PROJECT
(எம்.வெங்கடேசன், திட்ட மேலாளர், பூமி இயற்கை வள பாதுகாப்பு இயக்கம், தெக்குபட்டு, திருப்பத்தூர் மாவட்டம்)

000000000000000000000000

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 329 மில்லியன் எக்டர், இதில் தரிசு இருப்பவை மட்டும் 90 மில்லியன் எக்டர், இந்தியாவின் 40 சதவிகித மக்களின் வாழ்வாதாரம் இதனை நம்பி உள்ளது.

இந்த மக்கள் அனைவரும் அடித்தட்டில் வசிக்கும் சாதாரண மக்கள், இந்த மக்களின் வாழ்வாதாரம் உயர இந்த நிலங்களின் மண்வளம் மற்றும் நீர்வளம் மேம்பட வேண்டும்.

இயற்கை வளங்களை பாதுகாத்து அதன் மூலம் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுதான் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கியின் இது திட்டம் இது, எங்கள் பூமி நிறுவனம் இதனை இரண்டு கிராமங்களில் செயல்படுத்தி வருகிறது.

சுருக்கமாக சொல்வதென்றால் நிலமேம்பாடு, நீர்மேம்பாடு, விவசாயம் மற்றும் சார்புடைய தொழில்கள் மேம்பாடு, அத்துடன் மனிதவளமேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய நபார்டு வங்கியின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தைப்பற்றிதான் இன்றைய காணொலியில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இணைப்பு: https://youtu.be/B_VF3sTClKw

இனி விவசாயத்தை எல்லோரும் தெரிந்துகொண்டு உற்பத்தியில், ஈடுபட வேண்டும், நாம் எல்லோருமே  விவசாய விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் தொழிலில் ஈடுபடவேண்டும். அதனை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய வேண்டும், வேறு வழி இல்லை, இது கொரோனா இழப்புகளையும் சேர்த்து ஈடுகட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.



அன்புடன்

தே.ஞான சூரிய பகவான், போன்: +91 8526195370

888888888888888888888888888888888

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...