Tuesday, July 7, 2020

சிக்கிம் மாநிலத்தின் 10 சுவைமிகு செய்திகள் TOP 10 HIGHLIGHTS OF SIKKIM







சிக்கிம் மாநிலத்தின்  10 சுவைமிகு செய்திகள்

TOP 10 HIGHLIGHTS OF SIKKIM

 
சிக்கிம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று, சுமார் ஆறு லட்சம்பேர் வசிக்கும், இதன் பரப்பளவு 7096 சதுர கிலோமீட்டர், இமையமலையின் ஒரு பகுதியாக உள்ள மாநிலம், மனதை கொள்ளை கொள்ளும் கஞ்சன்சுங்கா மலைச்சிகரத்தை உள்ளடக்கியது, இதுபற்றிய 10 சுவாரசியமான செய்திகளை இங்கு பார்க்கலாம்.
 

1.சிக்கிம் மாநிலத்தின் மொழிகள்

சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 11 மொழிகளில் அரசுமொழிகள் என்ற அந்தஸ்தில் உள்ளன, நேபாளி இங்கு அதிகம் பேசும் மொழி,  காரணம் இங்கு வசிக்கும் மக்களில் 80 சதவீதம் பேர் நேபாளிகள்.

அடுத்த முக்கியமான அரசு மொழியாக இருப்பது பூட்டியா என்னும் சிக்கிம் மொழி,   பூட்டியா மொழி பேசுபவர்கள் திபெத்தை சேர்ந்த பூட்டியா இனமக்கள்.

லெப்பச்சா என்பது மூன்றாவது  முக்கிய மொழி, இந்த மொழி பேசும் மக்கள் திபேத்திய பர்மிய இனத்து மக்கள், இவர்கள் பேசும் மொழி தான் லெப்பச்சா என்பது.

ஆக நேபாளி, பூட்டியா, லெப்பச்சா  மற்றும் ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் சிக்கிமின் அரசு மொழிகளாக உள்ளன.


2. 500 வகையான ஆர்கிட் பூக்கள் 

உலகத்தில் மொத்தம் 28 ஆயிரம் வரை ஆர்கிட் பூக்கள் இருக்கின்றன, இதில் இந்தியாவில் இருப்பவை மட்டும் 1229,  இதில் சிக்கிமில் இருப்பவை மட்டும் 523 வகைகள்.

ஆர்க்கிட் பூவகைகளை  அதிகம் கொண்ட இரண்டாவது இந்திய மாநிலம் சிக்கிம், 620 ஆர்க்கிட்  வகைகளை உள்ளடக்கிய  அருணாச்சல பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

சிக்கிம் ஆர்க்கிட் பூக்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஹாட்ஸ்பாட் என்பது குறிப்பிடத்தக்கது, ஆர்க்கிட் பூக்கள் பெரும்பாலானவை வண்ணமயமானவை,  வித்தியாசமான வடிவில் இருப்பவை, நறு மணம் மிக்கவை


3.  சிக்கிம் ரூபார்ப் பூக்கள்

இந்த சிக்கிம் பூவைத்தான் மகாமேரு மலர் என்றும், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்றும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் செய்திகள் உலா  வருகின்றன, ஆனால் இது ஆண்டு தோறும் பூக்கும் ரூபார்ப் பூ.

சிக்கிம் மாநிலத்தின் வித்தியாசமான பூச்செடி, இதன் பூக்கள் 2 மீட்டர் அல்லது 6 அடி உயரம் வளரும், பார்க்க பறக்க தயாராக நிறுத்தி வைக்கப்பட்ட ராக்கெட் மாதிரி இருக்கும்.

கூம்பு வடிவத்தில் இம் மஞ்சள் நிற இலைகளை நீளவாட்டில் வளர்ந்த முட்டைகோஸ் மாதிரி இருக்கும், ஒரு மைல் தொலைவில் இருந்து கூட பார்க்கலாம்.

சிக்கிமின் 11,000 அடி உயரமான மலைப்பகுதிகளில் யார் இந்த 6 அடி உயர ஐஸ் கிரீமை செய்து வைத்திருப்பார்கள் என்று தோன்றும். இதன் தாவரவியல் பெயர் ரியாம் நொபிலி’

 4. பட்டாம்பூச்சிகளின் மாநிலம்

இதனை பட்டாம்பூச்சிகள் மாநிலம் என்றுகூட  சொல்லலாம், காரணம் இங்கு 700 வகையான பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன.

பாரம்பரியமான விவசாய முறைகளை வெகு காலமாக பின்பற்றி வருகிறார்கள், யாரும் ரசாயன உரங்களை பூச்சிக்கொல்லி மருந்துகளை  பயன்படுத்துவதில்லை.

இங்குள்ள மக்கள் 100% இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாகவும் இருப்பதால்தான் இத்தனை வகையான பட்டாம்பூச்சிகள் இன்னும் இங்கு உலா வருகின்றன என்று சொல்லுகிறார்கள்.

ஏலக்காய் மற்றும் மேண்டரின் ஆரஞ்சு தோட்டங்களில் மட்டுமே 268 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளன.

 5. வெந்நீர் ஊற்றுகள்:  

மிகுந்த உயரமான இடங்களில் இருக்கும் ஏரிகள், ஐந்து பெரிய வெந்நீர் ஊற்றுகள், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆறுகளை உள்ளடக்கியது
சிக்கிம்.

ரேஷி ஹாட் ஸ்பிரிங், ரே லாங் ஹாட் ஸ்பிரிங்,  போராங் ஹாட் ஸ்பிரிங், யாம்தாங் ஹாட் ஸ்பிரிங், யும் சாம் டாங்  இப்படி ஐந்து பிரபலமான வெந்நீர் ஊற்றுக்கள் சிக்கிமில் இருக்கின்றன.

ஐந்தாறு கிலோமீட்டர் முதல் 25 கிலோ மீட்டர் வரை ஓடும் வெந்நீர் ஊற்றுக்கள் இங்கு உள்ளன, அவை  கொப்பளிக்கும் ஆவியுடன் வெந்நீர் ஓடைகளாக  ஓடுகின்றன.

இந்த வெந்நீர் ஓடைகளில்  அதிகபட்சமான சல்பர் இருக்கிறது, கந்தகம் கலந்திருக்கிறது, இந்த நீரில் குளிப்பதால் பலவிதமான தோல் நோய்கள் குணமாகிறது என்று சொல்லுகிறார்கள்.

6. சர்வதேச எல்லைகளைக் கொண்டது

இந்தியாவில் பல நாடுகளை எல்லைகளாகக் கொண்ட மாநிலம் இதுதான்,  கிழக்கில் பூட்டான், மேற்கில் நேபாளம், வடக்கில் சைனா, தெற்கில் இருப்பது மேற்கு வங்காளம், சிக்கிம் மாநிலம் ஒன்றுதான் பல சர்வதேச எல்லைகளைக் கொண்ட இந்திய மாநிலம்.


7. பர்சி ரோடோடென்றான்  சரணாலயம் (BARSEY RHODODENDRON )

ர்சி ரோடோடென்றான் சேன்க்சுவரி என்ற சரணாலயம் ஒன்றினை ரோடோடென்றான் மரங்களுக்காக அமைத்திருக்கிறார்கள்.

104 சதுர கிலோமீட்டர் பரப்பில் இது  அமைந்துள்ளது, இங்கு 26 வகையான ரோடோடென்றான் வகைகள் உள்ளன, இவை ஏப்ரல் மே மாதங்களில் பூக்கும்,

இது சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் மாநில மரம் கூட, அமெரிக்காவில் வாஷிங்டன் மற்றும் மேற்கு வர்ஜீனியா மாநிலங்களின் அரசு மரமும் இதுதான்.

ரோடொடென்றான்  அழகு மரங்கள் மட்டுமல்ல அரிய வகை மூலிகையும் கூட, உலகில் உள்ள மொத்த ரோடொடென்றான் வகைகளில் சுமார் 1000 வகைகள் இமயமலை பகுதிகளில் மட்டுமே உள்ளன.


 8. கஞ்சஞ்சங்கா மலை சிகரம் உலகின் மிகவும் உயரமான மூன்றாவது மலைச்சிகரம், கஞ்சன் ஜங்கா சிகரத்தின்  உயரம் 28 ஆயிரத்து 169 அடி அல்லது 8 ஆயிரத்து 586 மீட்டர். இமய மலையின் ஒரு பகுதியா இங்கு  னி சிறுத்தைகளும், கருங் கரடிகளும்,  அலைந்து திரியும் பனிப்பிரதேசம், ரோடொடென்றான் மற்றும் மூங்கில் காடுகளின் ஊடாக நீல வானத்திலிருந்து வெள்ளி அருமையாக இறங்கும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்த சிகரம் இந்த கஞ்சஞ்சங்கா.

9. சிக்கிமின் இயற்கை விவசாயம்

இந்தியாவில் 100% இயற்கை விவசாயம் செய்யும் மாநிலம் என்பது நிறைய பேருக்கு தெரியாத தகவல்,  இந்தியாவில் இங்குதான் 100 சதம் ரசாயன உரம் போடாமல் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்காமல் இயற்கை விவசாயம் செய்கிறார்கள்.

 2016 ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலம் முழுமையாக இயற்கை விவசாயம் செய்யும் மாநிலம் என்று அறிவிக்கப்பட்டது, 2003 ஆம் ஆண்டிலேயே சிக்கிம் மாநிலத்தவர் இயற்கை விவசாயம் செய்வது என்று முடிவெடுத்தார்கள்.

2014 ஆம் ஆண்டு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதும் விற்பனை செய்வதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டது, இந்த சட்டத்தை மீறி ரசாயன உரம் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதற்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என்று ஒரு சட்டத்தையும் அவர்கள் கொண்டுவந்தார்கள்.

10. சிக்கிம் ஆறுகள்

டீஸ்ட்டா, ரங்கீட் ஆகிய இரண்டு ஆறுகள் முக்கிய சிக்கிம் ஆறுகள், டீஸ்ட்டா 315 கி.மீ. ஓடும் இந்த ஆறு கிழக்கு இமயமலையில் உருவாகி சிக்கிம், மேற்கு வங்காளம் வழியாக ஓடி வங்காளதேசத்தில் நுழைந்து வங்கக்கடலில் சங்கமமாகிறது.

டீஸ்ட்டா ஆறுதான் இந்தியாவில் உள்ள ஆறு மிக வேகமாக ஓடும் ஆறு, அதுமட்டுமல்ல, இது பிரம்மபுத்ராவின் துணை ஆறும்கூட.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
 
எழுதியவர்: அக்ரி தே.ஞான சூரிய பகவான், (முன்னாள் பண்ணை வானொலி அலுவலர், அகில இந்திய வானொலி) தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.downtoearth.org.in / Sikkim is 100 % Organic
www.sotc.in / Seeking in Sikkim 5 Natural Hot Springs you can’t miss.
www.fromthehindu.com /Sikkim Sees Surge in Butterfly Biodiversity
www.en.m.wikipedia/Category: Rivers of Sikkim

0000000000000000000000000




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...