விராலி மரம் நோய்களை குணப்படுத்தும் கோயில்மரம்
VIRALIMARAM TEMPLE CUM HERBAL TREE
பொதுப்பெயர்
: ஹாப் புஷ், ஹாப் சீட் (HOP BUSH, HOP SEED)
தாவரவியல் பெயர்: டோடோனியா விஸ்கோசா (DODONAEA
VISCOSA)
தாவரக்குடும்பம் : ஹிப்போகேஸ்டோனேசியே (HIPPOCASTONACEAE)
பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
- மலையாளம் : விராலி (VIRALI)
- சமஸ்கிருதம்:ரஸ்னா (RASNA)
- கன்னடம்:பண்டாரு (PANDARU)
- தெலுங்கு: பண்டாரு (PANDARU)
- ஒரியா: மொஹ்ரா (MOHRA)
- மராத்தி: லட்சுமி (LUTCHIMI)
பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதி
- வெப்ப மண்டலப் பகுதிகள்
- மேற்கு ஆப்பிரிக்கா
- அமெரிக்கா
- ஆஸ்திரேலியா
- தென்ஆப்பிரிக்கா
- கிழக்கு ஆப்ரிக்கா
- கென்யா
- எத்தியோப்பியா
- சோமாலியா
- மடகாஸ்கர்
பயன்கள்: (USES)
- மரக்கட்டைகள் கடினமானவை.
- உறுதியானவை.
- நீண்ட நாட்கள் உழைக்க கூடியவை
- ஆயுதங்கள் செய்ய பயன்படும்.
- கருவிகளுக்கு கைப்பிடிகள் போடலாம்.
- மரங்கள் வீடு கட்ட பயன்படும்.
- விறகாக பயன்படுத்தலாம்.
- அழகு மரமாக வளர்க்கலாம்.
- காற்றுத் தடுப்பாக வளர்க்கலாம்.
- உயிர்வேலியாக வளர்க்கலாம்.
- இதிலிருந்து ஸ்டார்ச் தயாரிக்கலாம்.
- சாயம் உற்பத்தி செய்யலாம்.
- நோய்தீர்க்கும் மருந்துகள் செய்யலாம்.
- வீட்டுக்கு தேவையான தட்டுமுட்டு சாமான்கள் செய்யலாம்.
- சாலைகளில் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் நடலாம்.
- தழைகளை தீவனமாக பயன்படுத்லாம்.
- பட்டாம் பூச்சிகள் தேனீக்கள் மற்றும் சிறு பறவைகளுக்கு உணவாகிறது. இதன் பட்டைகளில் கயிறுகள் தயாரிக்கலாம்.
- பொது இடங்களில் நிறையநட்டு சுற்றுச்சூழல் காக்கலாம்.
- சூழலில் மாசு நீக்கலாம்.
- பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்யலாம்.
- மரக்கட்டை மற்றும் பழங்களில் சிவப்பு சாயம் எடுக்கிறார்கள். வறட்சியை தாங்கி வளரும்
மருத்துவ பயன்கள் (MEDICINAL
USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING
DISEASES)
- இலைகளை அரைத்துப் பூச காயங்கள் குணமாகும்.
- தாய்மார்களுக்கு கூடுதலான பால் சுரக்க உதவும்.
- சீதபேதியை குணப்படுத்தும்.
- தோல் சம்பந்தமான நோய்களை சரிசெய்யும்.
- முடக்குவாதம் மற்றும் மூட்டு வலியை குணப்படுத்தும்.
- விதைகளிலிருந்து தயாரிக்கும் மருந்து மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும்.
- கிளைகள் மற்றும் குச்சிகளைக்கொண்டு எழுப்பும் புகை மூட்டுவாதத்தை தண்டுகளிலிருந்து சரிசெய்யும்.
- இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்து தயாரிக்கும் குடிநீர் தொண்டைப்புண் அற்றும் காய்ச்சலை சரிசெய்யும்.
- இலைச்சாறு உடலில் ஏற்படும் அரிப்பு அத்துடன் சுளுக்கு ஆகியவற்றை சரிசெய்யும்.
- இது உடலில் ஏற்படும் வெட்டு காயம் நெருப்புக்காயம் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.
- இவைதவிர, சளி ஜுரம் சிறுநீர் அடைப்பு சிறுநீர்கல் பொதுவான உடல் பலவீனம் ஆகியவற்றுக்கும் குணம் தரும்.
மரங்களின் இயல்பு (DESCRIPTION)
- பெருஞ்செடி அல்லது குறுமரம்.
- 5 மீட்டர் உயரமாக வளரும்.
- பூக்கள் கிளை நுனியில் அல்லது இலைக்கணுக்களில் தோன்றும். பூங்கொத்துகள் இரண்டரை சென்டிமீட்டர் நீளம் இருக்கும்.
- கனிகள் சிறியவை.
- தட்டையாக இறக்கைகளுடன் இருக்கும்.
- ஒவ்வொரு கனியிலும் இரண்டு விதைகள் இருக்கும்.
- விதைகள் கருப்பு நிறமாக இருக்கும்.
- கடல் மட்டத்திலிருந்து 2400 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் வளரும். இலைகள் தோல் போல தடிமனாக இருக்கும்.
- பூக்கள் ஆரஞ்சு சிவப்பு நிறமாக இருக்கும்.
- சட்டெனப்பார்த்தால் செடிகளில் உட்கார்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள் போல இருக்கும்.
தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES
WITH THIS STHALAVRISHAM )
விரலிமலை சண்முகநாதன் கோவில் முருகன் கோவில் புதுக்கோட்டை
மாவட்டம்
வளர்ப்பு முறை: (PROPAGATION)
- வெப்ப மண்டல பகுதிகள்.
- மித வெப்ப மண்டலப் பகுதிகள்.
- குளிர்ச்சியான தட்ப வெப்ப பகுதிக கள்.
- விதைகளை விதைத்து கன்றுகளை உற்பத்தி செய்வது எளிது.
- விதைகள் கோடையில் தயாராகும்.
- அவை ஊதா நிறத்தில் இருக்கும்.
- விதைகளை கொதிநீரில் முக்கிவைத்து விதைப்பதால் சீக்கிரம் முளைக்கும்
- நேரிடையாக விதைக்கலாம்.
- நாற்று விட்டும் எடுத்து நடலாம்.
- கிளைகுச்சிகளை வெட்டி வைத்தும் நடவு செய்யலாம்.
- விதைப்பு நடவு இரண்டையும் மழைக்காலத்தில் செய்வது நல்லது.
- அலையாத்தி மரங்கள் மேற்புறங்களில் இவற்றை நடலாம்.
- கடற்கரையி மணல்மேடுகள் அல்லது பவழப்பறைகளின் ஊடாகவும் இவற்றை நடலாம்
- அதிக உப்புத்தன்மை, வேகமாக வீசும் காற்று மாசு நிறைந்த சுற்றுச்சூழல் அனைத்தையும் தாங்கி வளரும் மரம்.
எழுதியவர்: தே.ஞான சூரிய
பகவான், போன்: +91 8526195370
0000000000000000000000000000
No comments:
Post a Comment