Saturday, June 13, 2020

வீழி எனும் விழுதி திருவீழிமிழலையின் மூலிகை VEEZHI NATIVE HERB OF THIRUVEEZHIMIZHALAI


வீழி எனும் விழுதி திருவீழிமிழலையின் மூலிகை

VEEZHI NATIVE HERB OF THIRUVEEZHIMIZHALAI


தமிழகத்தின் பிரபலமான மூலிகை, வெண்மேகம் எனும் பாலியல் நோயினை குணப்படுத்தும் மரம், இரண்டாயிரம் ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுவது, இந்தியாவில் அருகிவரும் மரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, பிறநாடுகளிலும்  பரவியிருக்கும் மரம், ஒவ்வொரு வீட்டுத்தோட்டத்திலும் வளர்க்க ஏற்ற மரம், சிவன் கோயிலின் தல விருட்சம், ‘வேப்பங்காய்க் குழம்பும் வீதி இலைத் துவையலும் அகமுடையாள் சமைத்தால் அமிர்தம் அமிர்தம் என்பானாம்’ – வீதிமரம்பற்ரிய தமிழ்ப்பழமொழி.


இந்த அற்புதமான மூலிகையின் பெயரால் அமைந்த ஊர், கும்பகோணத்தில் இருந்து 20 முதல் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவிழிமிழலை.
 
இங்கு வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பெயர்கூட ஒரு ஊர் வீழியார் தானாம், இவர்கள் இங்கு பரவலாக வசிக்கிறார்கள்.
 
இவர்கள் அனைவரும் விவசாயிகள், பாரம்பரியமாக விழுதி உட்பட பல மூலிகைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
 
விழுதி, வீழி என்று அழைக்கப்படும் இந்த மூலிகை மானாவாரி நிலங்களிலும் தரிசு நிலங்களிலும் இயற்கையாக பரவி உள்ளது.
 
திருவீழிமிழலை என்னும் அழகான தமிழ்ப்பெயரில் அமைந்த இந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

0000000000000000000000000000

பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, இந்தோசீனா, மியான்மர் ஆகிய இடங்களில் பரவி உள்ளது.
 
இந்தியாவில் அருகிவரும் அல்லது அழிந்து வரும் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்குத் தொடர்ச்சி மலையின் மரம் என்று அறியப்படுகிறது.

மகாராஷ்டிராவில் கோலாப்பூர், கர்நாடகாவில் கூர்க் மற்றும் மைசூர் வடக்கு கேரா, மற்றும் கேரளாவில் இடுக்கி .

0000000000000000000

பொதுப்பெயர்  (COMMON NAME): இண்டியன் கடபா
தாவரவியல் பெயர் (BOTANICAL NAME): கடபா ஃப்ரக்டிகோசா
தாவரக்குடும்பம்  (FAMILY):கப்பாரியேசியே



பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
மலையாளம் : கட்டாகிட்டி (KATTAKITTI)
கன்னடம்: மரகாடிகிட்டா (MARAGADE GIDA)
தெலுங்கு: ஆடமொரினிகா (AADAMORINIKA)
குஜராத்தி: கலோகட்டாக்கியோ (KALO KATTAKIO)
இந்தி: டாபி (DABI)

000000000000000000000
 

மரங்களின் இயல்பு (DESCRIPTION)

விழுதி  கொடிபோல புதர் செடியாக வளரும், அதிகபட்சமாக  5 மீட்டர் உயரம் வளரும்.

வெண்ணிறப் பூக்கள் கிளை நுனியில், நான்கு இதழ்களையுடைய பூக்களாக ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும்.
கனிகள் உருளையாக தோல்பை அல்லது சிறிய மிளகாய் பழம்போல மென்மையாக இருக்கும்.
 
விதைகள் அழகிய ஆரஞ்சு நிற பொட்டுபோல வட்ட வடிவமாக இருக்கும்.
ன்கள்: (USES)

இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் பாரம்பரிய மூலிகையாக பயன்பட்டு வருகிறது.
 

தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES WITH THIS STHALAVRISHAM )

விழியை தலமரமாக அல்லது தலவிருட்சமாகக் கொண்ட கோவில் திருவீழிமிழலை திருவாரூர் திருவீதி நாதேஸ்வரர் சிவன் கோவில் திருவாரூர் மாவட்டம் 

மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING DISEASES)

லேகியம் எண்ணை, களிம்பு, கசாயம், குடிநீர், சூரணம், செந்தூரம், தைலம் ஆகியவை விழியை பயன்படுத்தி செய்யப்படும் மருந்து வகைகள்.

வீழி கட்டுப்படுத்தும் நோய்கள், அஜீரணம், இடுப்பு வலி, இருமல், இரைப்பு இருமல், ஈழை இருமல், கட்டி உடைய, கபம், கருப்பை நோய்கள், காசநோய், கிரந்தி, குடற்புழு நீக்க, குடைச்சல், குத்தல், குன்மம், கை கால் எரிவு, கை கால் பிடிப்பு, சருமநோய்கள், சிறுநீர் பெருக்க, சுகபேதி, சொரி சிறங்கு, தலைவலி, தாதுபுஷ்டி, தொழுநோய், நீர்கடுப்பு, நீரிழிவு, புற்றுநோய், பெருவயிறு, மந்தம், முழங்கால், மூலம், மேகம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிறு வீக்கம், வாத நோய், மற்றும் வெண்படை.

சித்த மருத்துவத்தில் காய சித்தி மூலிகைகளில் ஒன்று, காயசித்தி மூலிகைகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகிறார்கள்.
 

விதைகள் செடிகள், நாங்க தர்றோம்

1. 1980 லிருந்து 7000 வகையான மூலிகைகள் மற்றும் அவை தொடர்பான பொருட்களை விற்பனை செய்கிறோம் என்கிறது இண்டியாமார்ட் (www.indiamart.com).

2. திருவீழி மிழலையில் யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள், அல்லது வனத்துறை அல்லது தமிழ்நாடு வேளாணமைப் பல்கலைக்கழகத்தின், வேளாண்மை அரிவியல் மையத்தை தொடர்புகொள்ளுங்கள்.

எங்கு கிடைக்கிறது என்று தெரியவந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com
000000000000000000000

FOR FURTHER READING:
1. www.en.m.wikipedia.org / Cadaba fructicosa – Indian Cadaba
2. www.flowersofindia.net/ Cadaba fructicosa – Indian Cadaba
3. www.indiabiodiversity.org/ Cadaba fructicosa – Indian Cadaba
4. www.pharmacologyonline.silac.it/ Etnomedico Botany of of Viluthi - Cadaba fructicosa
5. கோயில் தலங்களும் தலத் தவரங்களும் – ஆசிரியர் இரா.பஞ்சவர்ணம்

 88888888888888888888



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...