Sunday, June 14, 2020

வீரை சர்வதேச மருத்துவ மரம் VEERAI – WORLD RECOGNIZED MEDICINAL TREE



வீரை சர்வதேச மருத்துவ மரம்

VEERAI – WORLD RECOGNIZED MEDICINAL TREE

000000000 

சாக்கோட்டை வீரகேசுவரர் ஆலயத்தின் தலவிருட்சம் வீரைமரம், புராணகாலத்தில் இந்த ஊரின்பெயர் சக்கோட்டை அல்ல, வீரைவனம், அந்த ஊர் அந்த சமயம் வீரை மரங்களால் சூழ்ந்திருந்தது, சாக்கோட்டை  சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது,  வீரை  மரத்திற்கு, சுடர்வீரை,  நல்வீரை என்ற வேறு தமிழ் பெயர்களும் உண்டு, வீரை பலநூறு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மூலிகை மரம்,

00000000000
பொதுப்பெயர் :வீரை  (VEERAI)
தாவரவியல் பெயர்: டிரைபீட்டஸ் செபியேரியா (DRYPETES SEPIARIA)
தாவரக்குடும்பம் : ஈப்போர்பியேசியே (EUPHORBIACEAE)


பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
மலையாளம் :வெள்ளக்கசவு, வீரமரம் (VELLAKKASAVU, VEERAMARAM)
தமிழ்: வெள்ளிலம்பு, வீரை, ஆடுமுழுக்கன், காயாலாக்கமரம் (VELLILAMBU, VEERAI, ADUMUZHUKKAN, KAYALAAKKA MARAM)
இருளா:தனுவம் (THANUVAM)
கன்னடம்: ஹீரா (HEERA)
சிங்களம்: வீரா (VEERA)

 000000000000000
ன்கள்: (USES)

பயன்கள் இதன் பழங்களை சாப்பிடலாம் மரங்களை உயிர் வேலியாக வளர்க்கலாம் உலர்ந்த மரங்களை விறகாகப் பயன்படும் கருவிகள் செய்யலாம் அறிமுகம் பசுமை மாறாது ஸ்ரீலங்கா மற்றும் ஆபிரிக்க பழங்குடிகள் அங்கீகரிக்கப்பட்ட மூலிகை மரம் வைக்க இயலும் வறண்ட இலையுதிர் காடுகளிலும் கோவில் காடுகளிலும் காணப்படும்.

மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING DISEASES)

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களால் பல நூறு ஆண்டுகளாக பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.

குணப்படுத்தும் நோய்கள்: ஜலதோஷம், கைகால் வீக்கம், கட்டிகள், மேக நோய், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள், செரியாமை, காய்ச்சல், சிறுநீரகப்பிரச்சினைகள், கீல்வாதம், மூட்டுவலி.


தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES WITH THIS STHALAVRISHAM )

வேலுடையான்பட்டு, அய்யனார் கோவில், கடலூர் மாவட்டம்.
சாக்கோட்டை, வீரசேகர சிவன் கோவில், சிவகங்கை மாவட்டம்

பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

இந்தியா, ஸ்ரீலங்கா, கேரளாவில் திருவனந்தபுரம் ஆலப்புழா, கொல்லம் இடுக்கி, கர்நாடகாவில் வடக்குக்கேனரா மற்றும் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும், கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் இம்மரங்கள் பரவியுள்ளது.

மரங்களின் இயல்பு (DESCRIPTION)

இது ஈப்போர்பியேசியே குடும்பத்தைச் சேர்ந்தது, இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவின் சாதாரணமாக வளர்ந்திருக்கும், பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கும், பழங்கள் முட்டை மாதிரி ரத்த சிவப்பாக நீளமாகவும் பளபளப்பாகவும் இருக்கும், இளம் இலைகள் பசுமையாகவும் முதிர்ந்த இலைகள் கரும்பச்சை நிறமாகவும் இருக்கும், அடிமரம் அதிகம் கிளைத்தும் வளைந்தும் கூர்மையாகவும் இருக்கும்.

வளர்ப்பு முறை: (PROPAGATION)

நல்ல சூரிய வெளிச்சம் தேவை, ஓரளவு நிழலைக்கூட தாக்குப்பிடிக்கும்,  சுமாரான மண்ணில் கூட நன்கு வளரும், வறட்சியைத் தாக்குப் பிடிக்கும், தாமதமாக நிதானமாக வளரும், விதைகளை சாணக் கரைசலில் 2 மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதைக்க வேண்டும், இப்படி ஊறவைத்த விதைகள் நன்கு வளரும்.

எழுதியவர் தே. ஞானசூரிய பகவான், தலைவர், பூமி இயற்கை வள பாதுகாப்பு தகவல் மையம்,  தெக்குப்பட்டு & அஞ்சல், திருப்பத்தூர் மாவட்டம், பின்கோடு 635801,  போன் நம்பர்: +91 8526195370.



FOR FURTHER READING:
1. www.en.m.wikipedia.org / Drypetes sepiaria
2. www.flowersofindia.net/ Drypetes sepiaria
3. www.indiabiodiversity.org/ Drypetes sepiaria
4. www.shodhganga.inflibnct.ac.in/ Drypetes sepiaria
5. கோயில் தலங்களும் தலத் தவரங்களும்ஆசிரியர் இரா.பஞ்சவர்ணம்
6. www.researchgate.net/ Drypetes sepiaria
7. www.plantkey.com / Drypetes sepiaria – plant profile

000000000000000000000000000000000

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...