வந்ததா தென்மேற்கு பருவமழை ?
SOUTH WEST MONSOON RESUMES
எப்போதும் இல்லாத மாதிரி இப்போது தென்மேற்கு
பருவமழை சரியான சமயத்தில் தொடங்கிவிட்டது, உங்களுக்கு
தெரியும் தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் மாதத்தில் தொடங்கி ஜூலை ஆகஸ்ட்
செப்டம்பர் வரை தொடரும், அதைத்தான் நாம் தென்மேற்கு பருவமழை என்று சொல்லுகிறோம்.
இந்த தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டது
தற்போது இந்த பருவ மழைபற்றிய சில செய்திகளை இந்தப் பதிவில் நாம்
தெரிந்து கொள்ளலாம்.
தென்மேற்கு பருவமழை என்பது கடுமையான
வெப்பத்திலிருந்து வறட்சியில் இருந்து நம்மை விடுதலை செய்யும் பருவம், இது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.
கோடைகாலத்தில் நிலப்பகுதி சூடாகி அங்கிருந்து
வெப்பமான காற்று வீசத் தொடங்கும், அதேசமயம் கடலிலிருந்து ஈரக் காற்றும் எழும்பி வீசத் தொடங்கும்.
நமது சுற்றுச்சூழலில்வீசும் வெப்பமான
நிலக்காற்றும் ஈரமான கடற்காற்றும்தான் இந்த
தென்மேற்கு பருவக்காற்றுக்கு பருவமழைக்கு காரணமாக இருக்கிறது, இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பருவ மழையில் இயல்பாக பெறவேண்டிய மழையை விட 10 சதவீதம் குறைவாக பெய்தால் அதனால் வறட்சி ஏற்படும், இயல்பான மழையைவிட 10 சதவீதம் கூடுதலாக பெய்தால் அந்த இடத்தில்
வெள்ளம் ஏற்படும்.
இந்த தென்மேற்கு பருவமழை மூலமாக எவ்வளவு மழை
கிடைக்கிறது என்று பார்க்கலாம், இப்போது நான்
உங்களுக்கு சொல்லப்போவது கிட்ட்த்தட்ட 110 ஆண்டுகளின் சராசரி மழை, 1901 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை
கிடைத்த சராசரி மழையளவு 899 மில்லிமீட்டர், மழையின் அளவை
குறிப்பிடும்போது மில்லி மீட்டரில்தான் குறிப்பிடுவார்கள்.
பருவக்காற்று என்றால் என்றால் ஒரு குறித்த
பருவத்தில் வீசும் காற்று என்பதை நாம் அறிவோம், பருவகாற்று என்பதை
மான்சூன் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள், இது அரபு மொழியில் ‘மாசிம்’ (MAUSIM)என்ற சொல்லில்
இருந்து எடுக்கப்பட்டது, ‘மாசிம்’என்ற அரேபிய
வார்த்தைக்கு ‘சீசனல் ரிவெர்சல் ஆஃப் விண்ட்ஸ்’ (SEASONAL
REVERSAL OF WINDS) என்கிறார்கள், அதைத் தமிழில் ,திசைமாறி வீசும் காற்று, என்று சொல்லலாம்.
அதாவது அரபிக் கடலின் மீது வீசும் இந்த காற்று
ஆறுமாதம் தென்மேற்கு திசையிலும் அடுத்த ஆறு மாதம் வட கிழக்கு திசையிலும் மாறி
வீசும், இதைத்தான் மாசின் என்றும் மான்சூன் என்றும்
ரெவர்சல் ஆஃ வின்ட்ஸ் என்றும் பருவக் காற்றுகள் என்றும் நாம் பெயர்
வைத்திருக்கிறோம். இதை நாம் புரிந்து
கொள்ளவேண்டும்.
நமக்கு முக்கியமாக இரண்டு
பருவமழைகள் உண்டு, ஒன்று தென்மேற்கு பருவ மழை இன்னொன்று வடகிழக்கு பருவமழை, இவை இல்லாமல் இன்னும் இரண்டு பருவமழைகளும்உண்டு. அவை குளிர்ப்பருவ மழை மற்றும்
கோடை மழை.
ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் என்ற நான்கு மாதங்களில்
பெய்யும் மழை தென்மேற்கு பருவமழை.
அடுத்த நான்கு அடுத்த மூன்று மாதங்களில் அதாவது
அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழை வடகிழக்குப் பருவமழை.
அடுத்து ஜனவரி பிப்ரவரி மாதங்களில் வீசும்
பருவக்காற்று குளிர்ப்பருவக்காற்று, அந்த மாதங்களில் பெய்யும் மழை குளிர்ப்பருவ மழை.
அடுத்து மார்ச் ஏப்ரல் மே ஆகிய மூன்று மாதங்களில்
வீசும் காற்று கோடைப்பருவக்காற்று அந்த காலகட்டத்தில் அல்லது அந்த
மூன்று மாதங்களில் பெய்யும் மழையை கோடை மழை என்று நாம்
சொல்கிறோம்.
தென்மேற்கு பருவக்காற்று ஆண்டுதோறும் மே
மாதத்தில் வங்கக் கடலில் உருவாகிறது, அதாவது ஒரு
மாதத்திற்கு முன்னதாகவே வங்கக் கடலிலே உருவாகிறது, அந்த பருவகாலத்தில்
மழை பெய்து விட்டு தெற்கு சீன கடலில் நோக்கி நகர்கிறது, அத்தோடு தென்மேற்கு பருவமழை நிறைவு பெறுகிறது. அதுதான் வடகிழக்கு பருவ மழையாக தெற்கு சீன கடலிலிருந்து வீசத் தொடங்குகிறது, என்பதைத் தெரிந்துகொள்ளுவோம்.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஆண்டு சராசரி
மழையளவு கிடைக்கிறது என்று பார்க்கலாம், இந்தியாவில் கிடைக்கும்
ஆண்டு சராசரி
மழையளவு 1250 மில்லி மீட்டர் மழை, இதில் 75 சதவீதம் வடகிழக்கு பருவ மழை மூலமும் மீதம் உள்ள இதர பருவங்கள் மூலம் கிடைக்கிறது,
தமிழ்னாட்டில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 955 மில்லிமீட்டர்.
இந்த கட்டுரையை பல மாவட்டங்களில் இருந்து படிக்கும் நீங்கள் உங்கள் மாவட்டத்தில் எவ்வளவு மழை
கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள், அதனை தனியாக ஒரு கட்டுரையில் சொல்லுகிறேன்.
உழவு ஓட்டி முடிச்சிட்டிங்களா ? மானாவாரி கடலக்கா போட்டு முடிச்சிட்டிங்களா ? எங்கபக்கம்
முக்காவாசி முடிச்சிட்டாங்க, ஊடால எட்ட்டிக்கு ஒரு பட்டம் போட்டு
துவரைகூட போட்டுட்டாங்க, சிலபேரு காராமணி விதச்சி இருக்காங்க
!
‘இந்த கட்டுரை அஞ்சாப்பு அறிவியல் பாடம் மாதிரி இருக்கும், ஆனாலும் விஷயம் தெரியணுமில்ல.. அதான் .. அன்பு கூர்ந்து படிங்க, உங்கள் கருத்துக்களை
சொல்லுங்க…’
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி
இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91
8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com
FOR FURTHER READING:
www.en.m.wikipedia.org / Climate of India
www.fmfias.com / Indian Climate : South West
Monsoon Season
www.tripsavy.com / The Epic Monsoon Season in
India
0000000000000000000000000
No comments:
Post a Comment