Wednesday, June 17, 2020

செம்பலா – உலகின் முதல்தர டிம்பர் தரும் பழமரம் SEMPALA FIRST RATED TIMBER TREE






செம்பலாஉலகின் முதல்தர டிம்பர் தரும் பழமரம்

 

SEMPALA FIRST RATED TIMBER  TREE


00000000000000000

பசுஃபிக் பகுதியை  சொந்த ஊராகக்கொண்டது,   பலாப்பழ குடும்பத்தைச் சேர்ந்தது,  தன் பழத்தின் சுளைப்பகுதி சிவப்புகலந்த ஊதாநிறமாய் இருப்பதால் இதனை செம்பலா அல்லது சிகப்புப்பலா என அழைக்கலாம், ஆங்கிலத்தில் இது ஒயில்டு ஜேக் அல்லது ஜங்கிள் ஜேக், உள்ளூர் பழம், பாரம்பரிய மருத்துவம், மற்றும் கெலிடாங் டிம்பர்’ எனும் உலகத்தரம், இவை எல்லாம் சேர்ந்ததுதான் செம்பலா மரம்.

000000000000000000

பொதுப்பெயர் : ஒயில்டு ஜேக், ஜங்கிள் ஜேக் (WILD JACK)
தாவரவியல் பெயர்: அர்டோகார்ப்பஸ் டாடா  (ARTOCARPUS DADAH)
தாவரக்குடும்பம் : மோரேசியே (MORACEAE)


பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
இந்தோனேசியா:  டாடா(DADAH)
சுமத்ரா:டாடாக்  (DADAK)
மலேசியா: தம்ப்பாங்க் (TAMPANG)
பர்மா: டா-மல் (TA-MAL)
தாய்லாந்து: தங்கான் (THANKHAN)

 000000000000000000000000000000

பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

100 முதல் 1300 மீட்டர் உயரம் கொண்ட இடங்களில் வளரும், தோராயமாக மூவாயிரம் அடி உயரம்வரை உள்ள மலைகளில் வளரும், சுண்ணாம்பு பாறைகள் நிறைந்த பகுதியில்கூட விரும்பி வளரும்.

பிரம்மபுத்திரா நதியின் சமவெளிப் பகுதிகள் மற்றும் அசாம் போன்ற இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.

இந்த செம்பலாவைப் பொறுத்தவரை பழங்களை விட இந்த மரங்களுக்குத்தான் அதிகமாக முக்கியத்துவம் தருகிறார்கள்.

ஆசியாவில் மலேசியா,  மற்றும் சுமத்திராவில் ஆழமான வடிகால் வசதியுள்ள இடங்களில் வை அதிகம் இருக்கின்றன.

மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சுமத்ரா, போர்னியோ, இந்தோனேசியா, லாவோஸ், நேபாளம், சிக்கிம் மற்றும் வியட்நாம், மலேசியா, தாய்லாந்து நாடுகளின் பூர்வீக மரம்.

ன்கள்: (USES)

மலேசியாவில் விலை உயர்ந்த சவப்பெட்டிகள் வேண்டுமென்றால்கொண்டுவா செம்பலா மரங்களைஎன்கிறார்கள், காரணம் கரையானும் பூச்சிளும்  அடுத்த ஜென்மம்வரைகூட இந்தமரத்தின் கிட்டக்கூட வராது என்கிறார்கள்.

உள்ளூர் மார்கெட்டுகளிலும் பள்ளிக்கூடங்களின் எதிர்ப்புற கடைகளிலும் செம்பலா பழங்கள் விற்பனை ஆகும்<  குழந்தைகள் இந்த பழங்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதன் மரக்கட்டைகள் மஞ்சள் நிறமாக இருக்கும், அதிக நாட்கள் உழைக்கும், உறுதியானவை, பூச்சிகளால் தாக்கப்படாதது, பாலங்கள் கட்டுதல் போன்ற முரட்டு வேலைகளுக்கு தோதானது.

இந்த செம்பலா மரங்கள் கெலிடாங் டிம்பர் (KELEDON TIMBER) என்னும் உயர்தரமான மரவகையைச் சேர்ந்தது, ‘கெலிடாங் டிம்பர் என்றால் உயர்தரமானவை என்று அர்த்தம்.

கெலிடாங்டிம்பர் என்றால் மரங்களின் வயிரப்பகுதி மஞ்சள் சிவப்பு கலந்த நிறம், ஆரஞ்சு சிகப்பு கலந்த நிறம், தங்க நிறம், இப்படி கவர்ச்சிகரமான வண்ணங்களில் தென்படும்.

இவற்றின் லேசான மற்றும் அடர்த்தியான நிறங்கள் நமது கண்ணைக்கவரும், இந்த மரத்தினை மெல்லிய காகிதங்கள் போல நீளமான நாடாக்களைப்போல சீவி அல்லது உறித்து எடுத்து பயன்படுத்த முடியும்.

‘கெலிடாங்டிம்பர்’ மரத்தில் வேலைசெய்ய பயன்படுத்தும் கத்திகள், உளிகள், ரம்பங்கள் ஆகியவை சுலபமாக முனை மழுங்கிப்போகும் அல்லது உடைந்து போகும், அந்த அளவுக்கு அவை உறுதியானவை, செம்பலா மரங்களும் அப்படித்தான் இருக்கும்.

இதன் மரக்கட்டைகளில் மேஜை நாற்காலிகள், அது சார்புடைய பொருட்கள் செய்ய, வீடுகள் கட்டுமானப்பணிகள், கடைசல் வேலைகள், மிருதுவான இதர தச்சு வேலைகள், பேனல் பலகைகள் மற்றும் இணைப்புகள், பெட்டிகள் எல்லாம் செய்யலாம். 

அச்சி நறுவிலி மரத்தை ஒரு காலத்தில் பிரமிடுகளில் மனித உடல்களை வைக்கும் மம்மி பெட்டிகள் செய்ய பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்போது நாம் அந்த அச்சி நறுவிலி மரங்களை அழகுக்காக வீட்டின் முகப்புகளில் நடுகின்றோம், அந்த மரத்தை நாம்கார்டியாஎன்று ஆங்கிலத்தில் சொல்லுகின்றோம்.


மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING DISEASES)

இந்த செம்பலா மரத்திற்கு என தனியான மருத்துவப் பண்புகளை இப்போது கூற முடியாது, பொதுவாக ஆட்டோகார்ப்பஸ் மரங்களின் மருத்துவப் பண்புகளைப் பற்றி பார்க்கலாம்.

இதில் பினாலிக் கூட்டுப்பொருட்கள் (PHENOLIC COMPOUNDS), பிளேவனாய்ட்ஸ் (FLAVONOIDS), ஸ்டீல்பினாய்ட்ஸ் (STIBENOIDS), அரில்பென்சோபியூரான்ஸ் (ARYLBENSOFURONS), ஜெக்காலின் (JACALIN) , லெக்டின் (LECTIN) போன்ற தாவர ரசாயனப் பொருட்களும் இதில் உள்ளது, இதன் காரணமாகத்தான் இந்த மரங்களுக்கு மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

இதை வைத்துத்தான் மருந்தாகவும் மருத்துவ சிகிச்சைக்கும் அதைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த மரங்களின் வேர் இலை பூ காய் மற்றும் பட்டை ஆகியவற்றை பயன்படுத்தி பாரம்பரிய முறையிலேயே பல நோய்களை கட்டுப்படுத்துகிறார்கள்.

அப்படி கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் என்று பார்த்தால், அவை முகப்பருக்கள், தோலில் ஏற்படும் வெடிப்புகள், எரிச்சல், தோல் சம்பந்தமான நோய்கள், மிகுதியான ரத்தப்போக்கு மற்றும் விஷங்களால் ஏற்படும் பாதிப்புகள்.

மரங்களின் இயல்பு (DESCRIPTION)

சராசரியாக இந்த மரங்கள் 35 மீட்டர் உயரமும், 100 சென்டி மீட்டர் குறுக்களவும் கொண்ட மரங்களாக வளரும், வறண்ட மற்றும் ஈரமான பருவ நிலைகள்கூட இந்த மரங்களை ஒன்றும் செய்யாது.   



பூக்கள்

பிப்ரவரி ஏப்ரல் மே ஆகிய மூன்று மாதங்களில் பூ எடுக்கும், கோடை காலத்தில் இதன் பழங்கள் முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகும், பூக்கள் ஐந்து முதல் ஒன்பது சென்டி மீட்டர் நீளம் இருக்கும்.

பழங்கள்

அரைத்த மஞ்சள் நிற பழங்கள் உருண்டை வடிவமாக, வெளிர்பச்சை முதல் மஞ்சள் வண்ண மஞ்சள் வண்ணத்துடன் இருக்கும், பழங்களைத் தொட்டால்மெத்மெத்தென இருக்கும்.

இதன் பழங்கள் ஒரு கோழிமுட்டைபோல, தோல் முள் இல்லாமல் மொழுமொழுவென ஐந்து செண்டிமீட்டர் குறுக்களவும் இனிப்பும் புளிப்பும்டையதாக இருக்கும்.

பழத்தின் உட்புறம் உடைத்துப் போட்ட  கல்யாணப்பூசணி போல சிவந்த ஊதா நிறத்தில் இருக்கும்.

இதன் பூக்கள் கனகாம்பரம் பூக்களைப்போல வெண்மை கலந்த அழகான இளம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

வளர்ப்பு முறை: (PROPAGATION)

முற்றிய அல்லது முதிர்ந்த பழங்களிலிருந்து விதைகளை எடுக்கலாம், அப்படி எடுத்த புத்தம்புதிய விதைகள் அற்புதமாய் முளைக்கும், விதை உறக்கம் இல்லாதவை, உலர்ந்தால் இதன்  விதைகள் முளைக்காது.

ஒரு நிமிஷம் ! கட்டுரை பிடிச்சிருக்கா ? தகவல்கள் பிடிச்சிருக்கா ? புதுசா ஏதாச்சும் சேதி இருந்தா எனக்கு சொல்லுங்க ! கூடுதலா ஏதாச்சும் தகவல் தேவையா சொல்லுங்க ! வாட்ஸ்அப் பண்ணுங்க, போன் பண்ணுங்க ! இமெயில் பண்ணுங்க !
000000000000000000

எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.mybis.gov.my / Artocarpus dadah – Biodiversity Information
www.toptropicals.com / Artocarpus dadah
www.es.plantnet-project.org / Artocarpus dadah
www.globinmed.com / Artocarpus dadah
0000000000000000000000000












No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...