Monday, June 8, 2020

செடி முன்னை உடல் எடைகுறைக்கும் மூலிகைமரம் SEDIMUNNAI OBESITY CURING HERB






செடி முன்னை உடல் எடைகுறைக்கும் மூலிகைமரம்

SEDIMUNNAI OBESITY CURING HERB

முன்னை (முஞ்ஞை)  மரத்துக் கீரையாக சமைத்து சாப்பிட்டால் போதும், உடல் எடையும் ஏறாது, ரத்தத்தில் சக்கரையும் ஏறாது, ரத்தஅழுத்தம் எகிறாது, பிரசவித்த பெண்கள் அடுத்த நாளே எழுந்து நடப்பார்கள், அதனால் அந்த மரத்தை வீட்டு வாசலிலே நட்டு வைத்தார்களாம், புறநானூறு பாடுகிறது.

முன்றில் முஞ்ஞையொரு முசுண்டை பம்பி
பந்தர் வேண்டாம் பலர் தூங்கு நிழல்

வீட்டின் முற்றத்தில் முஞ்ஞை (முன்னை) மரத்தின்மீது முசுண்டைக்கொடி படர்ந்திருக்கும், இரண்டின் இலைகளும் அடர்ந்து  பந்தல்போல பலரும் படுத்துத்தூங்க நிழல் கொடுக்கும்

00000000000000000000
பொதுப்பெயர்: டஸ்கி ஃபயர் பிராண்ட் டீக் (DUSKY FIRE BRAND TEAK)
வேறு தமிழ் பெயர்கள்: எருமை முன்னை (ERUMAI MUNNAI)
தாவரவியல் பெயர்: ப்ரேம்னா மொல்லிசீமா (PREMNA MOLLISIMA)
00000000000000000000000000000

பிறமொழி பெயர்கள்: (NAMES IN OTHER LANGUAGES)

  • ·         மலையாளம்: முஞ்சா (MUNJA)
  • ·         கன்னடம் : அக்கினிமந்தா (AGNIMANTHA)
  • ·         தெலுங்கு: கொண்டமங்கா (KONDAMANGA)
  • ·         இந்தி : ஜட்டேலா (JHATTELA)
  • ·         அஸ்சாமிஸ்: குனாரா (GUNARA)

பரவி இருக்கும் இடங்கள்: (DISTRIBUTION)

  • ·         இந்தியா
  • ·         இந்தோனேசியா
  • ·         கம்போடியா
  • ·         லாவோஸ்
  • ·         மியான்மர்
  • ·         பிலிப்பைன்ஸ்
  • ·         வியட்நாம்
  • ·         ஸ்ரீலங்கா
  • ·         தாய்லாந்து
  • ·         மலேசியா
  • ·         நேபாளம்
  • ·         இந்தியாவில்
  • ·         ஆந்திரா
  • ·         அஸ்ஸாம்
  • ·         மத்தியப்பிரதேசம்
  • ·         கேரளாவில்
  • ·         பாலக்காடு
  • ·         கொல்லம்
  • ·         இடுக்கி
  • ·         கண்ணுர்
  • ·         அஸ்சாம் முழுவதும் பரவலாக உள்ளது.
  • பயன்கள் ;
  • ·         இலைகளைக் கீரையாகச் சாப்பிடலாம்.
  • ·         மரக் கட்டைகளில் மரச்சாமான்கள் செய்யலாம்
  • ·         இதன் கட்டைகள் நடுத்தரமான உறுதி உடையவை
  • ·         கல்யாணம் தன்மை உடையவை
  • ·   இதன் இலைகள் பூக்கள் விதைகள் கனிகள் ஆகியவற்றை பாரம்பரிய மருந்துகள் செய்ய பயன்படுத்தி வருகிறார்கள்.
  • ·         இது அதிகமாக ஒரு மூலிகை மரமாகவே அறியப்படுகிறது.
மருத்துவ பயன்கள்
குணப்படுத்தப்படும் நோய்கள்:

  1.    மலேரியா
  2.   தலைவலி
  3.   இருமல்
  4.   ஈரல் சம்பந்தமான பிரச்சனைகள்
  5.   வயிற்றுப்போக்கு
  6.   சிறுநீர் சம்பந்தமான உபாதைகள்
  7.   வெள்ளைப்படுதல்
  8.   புற்றுநோய்
  9.   காய்ச்சல்
  10.   உடல் பருமனாதல்
  11.   முடக்குவாதம்
  12.   பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு தரும்  
  13.   சளி ஜலதோஷம்  
  14.   சர்க்கரை நோய்  
  15.   ரத்த அழுத்தம்
  16. சருமநோய்கள்
  17. குன்மம்
  18. வயிற்று உபாதைகள்
  19. காயங்களை குணப்படுத்துதல்
  20. இதன் மருத்துவ தன்மை குறித்த ஆய்வுகள் செய்தால் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நல்ல மருந்துகள் கிடைக்கும்.
  21. நமக்கு நல்ல மருந்துகள் கிடைக்கும்.  
  22. நோய்கள் பலவற்றை குணப்படுத்தலாம்.  


மரங்களின் இயல்பு

  • பெருஞ்செடி அல்லது குரு மரம்
  • கடல்மட்டத்திற்குமேல் 500 முதல் 800 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் வளரும்.
  • இலைகள் பளபளப்பானவை.
  • இலைனுனி கூர்மையானவை.
  • நுண் மயிர்களால் போர்த்தியிருக்கும்.
  • பட்டைகள் வெண்மையாகவும் சாம்பல் நிறத்திலும் இருக்கும்.
  • பூக்கள்
  • ஏப்ரல் முதல் ஜூன் வரை பூக்கும்.
  • வெண்மை மற்றும் பசுமை நிறம் கலந்து இருக்கும்.
  • பூவிதழ்கள் நம் உதடுகளைப்போல இருக்கும்.
  • மேலுதடாக இரண்டும் கீழுதடாக மூன்றும் இருக்கும்.
 வளர்ப்புமுறை (PROPAGATION)

  1. கனிகள்,
  2. விதைகள் நீளமானவை.
  3. தட்டையானவை.
  4. மெல்லிய உறைகளால் மூடியிருக்கும்.
  5. விதைக்கலாம்
  6. கன்றுகள் தயார் செய்து நடலாம்.
தல மரமாக உள்ள கோயில்கள்
  • மணப்பாறை, நல்லாண்டவர் விஷ்ணு கோயில், திருச்சி மாவட்டம்.

எழுதியவர்: தே ஞான சூரிய பகவான் போன் 85 26 19 53 70, கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் எனக்கு தொலைபேசியில் தெரிவியுங்கள்.
 000000000000000000
FOR FURTHER READING

1. கோவில்தலங்களும் தலத்தாவரங்களும்இரா. பஞ்சவர்ணம்
2. www.en.m.wikipedia.org / Premna Mollissima
3. www.indiabiodiversity.org / Premna Mollissima
4. www,tropical.theferns.info / Premna Mollissima
5. www.flowersofindia.net / Premna Mollissima

0000000000000000000000

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...