Sunday, June 14, 2020

புன்னாகம் மரமே மருந்தாகும் மரம் PUNNAGAM A HOLISTIC TREE HERB




புன்னாகம் மரமே மருந்தாகும் மரம்

PUNNAGAM A HOLISTIC TREE HERB


சிலநோய்களுக்கு இதன் வேர், சிலவற்றிற்கு இதன் இலை, சிலவற்றிற்கு இதன் பட்டை, சிலவற்றிற்கு இதன் பூ, சிலவற்றிற்கு இதன் காய், சிலவற்றிற்கு இதன் பழம், சிலவற்றிற்கு இதன் விதை, இப்படி இந்தமரமே மருந்தாகிறது என்றால் பாருங்கள்.

00000000000000

பொதுப்பெயர்  (COMMON NAME):  சன்டடா
 தாவரவியல் பெயர்: மகரங்கா இண்டிகா (MACARANGA INDICA)
தாவரக்குடும்பம் :ஈப்போர்பியேசியே  (EUPHRBIACEAE)

பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
மலையாளம் :மாலவெட்டா, புத்தத்தாமரா, வட்டக்கண்ணி (MALAVETTA, PUTHATHAMARA, VATTAKKANNI)
தமிழ்: வட்டத்தாமரை (VATTATHTHAAMARAI)
கன்னடம்:பெட்டத்தாவாரி  (BETADAVARE)
தெலுங்கு: தொடுகண்ணி (THODUKANE)
இந்தி: சண்டுகால் (CHANDKAL)

00000000000

கரங்கானும் ரத்த சிவப்பு நிறமுடைய  மதிப்புமிகு பிசின் தரும், பசுமை மாறாத மருத்துவப் பயன் தரக்கூடிய இந்திய மரம், ஸ்ரீ லங்காவிலும், தென்கிழக்கு  ஆசியா, வெப்பமண்டல ஆப்ரிக்காவிலும் பரவலாகக் காணப்படும் மரம் வட்டத்தாமரை எனும் புன்னாகம்.

 00000000000
 
பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் இலையுதிர் காடுகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள், காரைக்கால்,  கேரள மாநிலத்தில் இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா பகுதிகள்,  கர்நாடகாவில் சிக்மகளூர் வடக்கு கானரா, மேற்கு வங்கம், பீஹார், வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் ஸ்ரீலங்காவிலும் இந்த மரங்கள் பரவி உள்ள.
 
அத்துடன், வெப்பமண்டல ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா நியூகினியா மடகாஸ்கர், ஆசியா, பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா, தான்சானியா, கென்யா, உகாண்டா ஆகிய கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகின்றன,, ஆனால் தென்னாப்பிரிக்காவில் ஒரே ஒரு வகை புன்னாகம் மரங்கள் மட்டும் பரவியுள்ளது

ன்கள்: (USES)

ஆப்பிரிக்காவில் பல நாடுகளிலும் வசிக்கும் பழங்குடி மக்கள், இதன் வேர் பிசின் பட்டை ஆகியவற்றை பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள்.
 
இதன் மரக்கட்டைகள் மிருதுவானவை, கட்டைகளில் வேலை பார்க்கும் எந்த கருவியையும் முனைமழுங்கச் செய்யாது.  

வெட்டி ஒட்டி, நறுக்கி செதுக்கி, இழைத்து இணைத்து, மரத்தில் செய்யக்கூடிய அனைத்து தட்டுமுட்டுச் சாமான்களையும் செய்யலாம்.
மரச்சட்டங்கள் கதவுகள், ஜன்னல்கள், என கட்டுமானத் தொழிலுக்கு தேவைப்படும் அத்தனை பொருட்களையும் செய்துகொள்ளலாம்.

இந்த மரத்தில் வடியும்  பிசினுக்கு ‘மகரங்கா’ என்று பெயர், இந்த மரத்தின் தாவரவியல் பெயர் ‘மகரங்கா இண்டிகா’, அதனால் இந்த இனத்தைச் சேர்ந்த மரங்கள் மகரங்கா மரங்கள், அதிலிருந்து எடுக்கும் பிசின் மகரங்கா பிசின். 

இப்படி மரங்களில் எடுக்கும் பிசின்களை மிட்டாய் கம்பெனிகள் மற்றும் மருந்து செய்யும் கம்பெனிகள், ஒட்டுப்பசை தயாரிக்கும் கம்பெனிகள், வார்னீஷ் மற்றும் பெயிண்ட்டு கம்பெனிகள், ஆயுர்வேத, மற்றும் சித்தமருத்துவ மருந்துகள் தயாரிக்கும் கம்பெனிகளும் இந்த பிசினை அள்ளிக்கொண்டு போகின்றன, குறிப்பிட்ட சில பிசின் வகைகளுக்கு சர்வதேச அளவில் பெரிய மார்கெட் உள்ளது.

மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING DISEASES)

இந்த மரத்தின் இலைகள், வேர்கள், பட்டைகள் ஆகியவற்றை பலவிதமான நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
 
இந்த மரத்தின் இலைகளை இலைக் காம்புகள் பூக்கள் என எதை காயப்படுத்தினாலும் மகரங்கா என்று சொல்லக்கூடிய பால் வடியும்.
இந்த பாலை பாலியல் நோயினால் ஏற்படும் புண்களில் தடவ அவை குணமாகும்.
 
 புன்னாகம் மரத்தின் வேர் பட்டை இலை அத்தனையும் தெற்கு ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் உபயோகமாகிறது.
 
சிலநோய்களுக்கு இதன் வேர், சிலவற்றிற்கு இதன் இலை, சிலவற்றிற்கு இதன் பட்டை, சிலவற்றிற்கு இதன் பூ, சிலவற்றிற்கு இதன் காய், சிலவற்றிற்கு இதன் பழம், சிலவற்றிற்கு இதன் விதை, இப்படி இந்தமரமே மருந்தாகிறது என்றால் பாருங்கள்.

வயிற்று வலி வயிற்றுக் கடுப்பு இருமல் காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்த இதன் இலைச்சாறுதான் ஒரே மருந்து.

குடல் புண், காயங்கள், புண்கள், மற்றும் கட்டிகள் இப்படி எதுவாக இருந்தாலும் இலைச்சாறுதான் இணக்கமான மருந்தாம்

புருனே’ நாட்டில் பிரசவித்த பெண்களை இதன் உடனே இலைக்குளியல் சிகிச்சை தருகிறார்களாம், இலைகள் ஊற வைத்த நீரில் குளிக்க வைக்கிறார்களாம், பிரசவித்த  பெண்கள் இந்தவகை இலைக்குளியலால் அடுத்த நொடியே   புத்துணர்ச்சி பெறுகிறார்களாம்.

மரங்களின் இயல்பு (DESCRIPTION)
மரங்களின் இயல்பு

  • இந்த மகரங்கா’ வகையில் மொத்தம் 250 வகை தாவரங்கள் உள்ளன, அவற்றில் 30 வகைகள் வெப்பமண்டல ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் தீவுகளில் உள்ளன, மீதமுள்ள வகைகள் பெரும்பாலும் வெப்பமண்டல ஆசியாவில் குறிப்பாக இந்தியா, ஸ்ரீலங்காவில் மற்றும் இதர நாடுகளில் உள்ளன.
  • 50 அடிக்கு குறையாமல் உயரமாக வளரும், அந்த மரம் மகரங்காஎனும் பிசின் தரும்.  மரத்தின் பட்டை சீராக சாம்பல் வண்ணத்தில் இருக்கும்,
  • மலேசியாவில் சாபா பகுதியில் வேலைக்குப்பொகும் புருஷன்மார்களுக்கு புன்னாகம் இலைகளில்தான் மத்தியான சாப்பாடு கட்டிகொடுக்கிறார்களாம், அப்படி மணக்குமாம் புன்னாகம் இலையில் கட்டிக்கொடுத்த சாப்பாடு.
  • இலைகள் பார்க்க பச்சைநிறத்தில் மூக்குவைத்த இதயம் மாதிரி, வித்தியாசமான வடிவத்தில் இருக்கும், நீள்வட்ட வடிவத்தில் அகலமாக இருக்கும், தாமரை அல்லது அல்லி இலைகள் போலவும் தெரியும்.
  • அக்டோபர் நவம்பர் மாதங்களில் பூத்துக் காய்க்கும், ஆண் பெண் என தனித்தனி பூக்களுடன் இருக்கும்.
  • இதில் உள்ள ஸ்டீல் பென்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ், கவுமரின், தேர்ஃபைட்ஸ், எனும் தாவர ரசாயனங்கள், இதற்கு மருத்துவ குணங்களைத் தருகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள்.
தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES WITH THIS STHALAVRISHAM )
  • ஆதி திருவரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோவில் விழுப்புரம் மாவட்டம்

வளர்ப்பு முறை: (PROPAGATION)

  • இதன் விதைகள் தட்டையானவை விதை இலைகள் பெரியவை,  விதைமூலம் நேரடியாக விதைக்கலாம், விதைத்து கன்றுகள் தயார் செய்து நடலாம்.
  • உங்கள் பகுதியில் ஒன்றிரண்டு மரங்கள் இருந்தால் அவற்றில் விதைகளை சேகரித்து நீங்களும் விதைக்கலாம்.
  • இது போன்ற அரிய மரங்களின் விற்பனைக்கு கிடைப்பது அரிது, வனத்துறை அலுவலர்களிடம் கேட்டு விவரம் பெறலாம்.

அடர்வனம் அமைக்கும் நண்பர்கள் இதுபோன்ற மரங்களை தேடிப்பிடித்து தங்கள் வனத்தில் நடலாம், அடர்வனம், மியோவாக்கி சிறுகாடுகள் அமைக்கும் நபர்கள் அதுகுறித்த இலவச ஆலோசனைக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.

மாதிரி அடர்வனம் நேரடியாக பார்க்க விரும்புவோர் எங்கள் தெக்குப்பட்டு ஒருமரக்காட்டினை பார்க்கலாம், அங்கு 220 சதுரமீட்டர் பரப்பில் நூறு வகையான 1100 மரங்களை பார்க்கலாம்.

தே. ஞான சூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு தகவல் மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635810, போன்: +91 8526195370.  

FOR FURTHER READING:
1. www.en.m.wikipedia.org / Macaranga indica
2. www.keralaplants.in/ Macaranga indica
3. www.indianzone.com/ Macaranga indica
4. www.pharmacologyonline.silac.it/ Macaranga indica
5. கோயில் தலங்களும் தலத் தவரங்களும்ஆசிரியர் இரா.பஞ்சவர்ணம்
6. Phytochemistry and Pharmacology of the genus Macaranga – A review Journal of Madicinal plant Research – Joseph & Magadula.



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...