Friday, June 26, 2020

நிலக்கடலை மனிதர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் - PEANUTMAN GEORGE WASHINGTON CARVER








நிலக்கடலை மனிதர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

PEANUTMAN GEORGE WASHINGTON CARVER

00000000000000000000000

நிலக்கடையில் எண்ணை செய்யலாம், பிண்ணக்கு செய்யலாம், கடலை மிட்டாய் செய்யலாம்,  நிலக்கடலை பால், நிலக்கடலை வெண்ணை இதெல்லாம்கூட செய்யலாம் என்று நமக்கு தெரியும், ஆனால் 300 க்கும் மேற்பட்ட பொருட்கள் செய்யலாம் என்று கண்டுபிடித்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், படியுங்கள் அவரை தெரிந்துகொள்ளலாம்.


நிலக்கடலை மனிதர் என்று இன்றுவரை  பேசப்படுபவர், நிலக்கடலையில் 300க்கும் மேற்பட்ட வகைகளில் பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்தவர்,கறுப்பு இனத்தவர் என அறியப்பட்டவர், அறிவியலாளர், தாவரவியல் மற்றும் வேளாண்மை நிபுணர் என்று போற்றப்பட்டவர், கருப்பு லியர்னடோ என்று பாராட்டப்பட்டவர், அமெரிக்க அரசால் ஆபிரகாம்லிங்கனுக்கு அடுத்து நினைவகம் அமைக்கப்பட்டவர், ஸ்டாம்ப் வெளியிட்டு கவுரவம் செய்யப்பட்டவர், டாலர் நாணயங்களில் உருவம் பொரிக்கப்பட்டவர்,

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் அயோவா மாநில கல்லூரியில் விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  துஷ்கேஜி பல்கலைக்கழகத்தில் வேளாண்மை கல்லூரியின் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணி செய்தவர்.

1. நிலக்கடலையில் 300 க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை கண்டிபிடித்தார்.

2.. வள்ளிக்கிழங்கில் 100 க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை கண்டிபிடித்தார்.

3. சராசரியான மண்கண்டத்தைக் கூட ஊட்டம் மிக்க ஒன்றாக மாற்றுவதற்கான வழிகளைக் கண்டறிந்தார்.

4. குறைவான இடுபொருட்களை பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெறுவதற்கான வழிகளைக் கண்டறிந்தார்.

5. நிலக்கடலை மற்றும் காராமணி பயிர்கள் வேர் மூலம் தழைச்சத்தை நிலைப்படுத்தும் வழிமுறைகள்.

6. வள்ளிக்கிழங்கிலிருந்து 73 விதமான சாயங்கள், 14 விதமான இனிப்பு வகைகள், 5 வித காலை சிற்றுண்டிகள், 4 விதமான மாவு வகைகள், 3 வகை இனிப்புப்பாகுகள், உணவுக்குப்பின் சுவைக்கும் இனிப்புகள், டிரை காஃபி, இன்ஸ்டண்ட் காஃபி 

பயன்படுத்தப்படாத நிலத்தின் ஊட்டச்சத்துக்களினாலும், தொழில்நுட்ப திறன் இல்லாத வேலை ஆட்களாலும் எவ்வித பயனும் இல்லை என்று அடிக்கடி சொல்லுவார், கார்வர்.

கார்வரின் இளமைக்கால வாழ்க்கை துன்பமும் துயரமும் மிக்கது, அவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு விவசாய மக்களுக்காக நாளும் உழைத்தார், கார்வரின் கண்டுபிடிப்புகளை தூசு தட்டி உதறி எடுத்தால் எண்ணற்ற தொழில் வாய்ப்புகளை அவை அள்ளித்தரும், கார்வரின் வாழ்க்கயும் அவருடைய சாதனைகளும் இளம் விஞ்ஞானிகளுக்கும் வேதபாடமாக உதவும்.


பிறந்தநாள் தெரியாத குழந்தை

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், டைமன்ட் என்ற இடத்தில் மோசஸ் கார்வர் என்பவரின் பண்ணையில் பிறந்தார். பெரும்பாலான கருப்பரின குழந்தைகளைப் போல இவருக்கும் சரியான பிறந்தநாள் தெரியாது, பிறந்த ஆண்டு தெரியும், 1864ம்ஆண்டு அநேகமாய் ஜனவரி அல்லது ஜூன் மாதம்.

அந்த சமயம் அவருடைய தாயார் மோசஸ்கார்வர் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். மோசஸ் கார்வர்தான் அந்த பண்ணையின் முதலாளி, கார்வருடைய தந்தைபற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார்

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ஒரு வார குழந்தையாய் இருந்தபோது அவருடன் அவருடைய தமக்கை மற்றும் தாயரும் சேர்த்து கடத்தப்பட்டனர், கடத்தப்பட்ட அவர்கள் கென்டக்கி மாநிலத்தில் அடிமைகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்த காலம் அது, தங்கள் பண்ணைகளுக்கு தேவைப்படும் கருப்பரின அடிமைகளை டாலர் கொடுத்து வாங்குவார்கள், இப்படி திருட்டுத்தனமாக அவர்களை கடத்திகொண்டுபோய் விற்பனை செய்வது வாடிக்கைதான், இதனைத் தடுக்க எவ்விதமான சட்டமும் அப்போது இல்லை.

படிப்பு தந்த முதலாளி மோசஸ்

முதலாளி மோசஸ் கார்வர் அவர்களை மீட்டு கொண்டு வர முயற்சி செய்தார்,  குழந்தை ஜார்ஜ் மட்டும்தான் மீண்டும் கிடைத்தான்,  அவர் தாயார் தமக்கைபற்றி எந்த தகவலும் இல்லை, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் கடைசிவரை தன் தாயார் மற்றும் தமக்கையை சந்திக்கவேயில்லை.

முதளாளி மோசஸ் கார்வர், ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரின் வளர்ப்புத்தந்தை ஆனார், அவருக்கு ஜார்ஜ் என்று ஒரு மகன் இருந்தான், அவன் வாஷிங்டன் கார்வரைவிட பெரியவன், அனால் கார்வரையும் மோசஸ் தனது சொந்த மகனாகவே வளர்த்தார், அதற்கு உறுதுணையாக இருந்தார் அவருடைய மனைவி சூசன்.  அந்த வகையில் அவரை முதுகலை வரை படிக்க வைத்தனர்,

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் தனது பதினோராவது வயதில் நியோஷோ’ என்ற நகரில் இருந்த பள்ளியில் சேர்த்தார், அங்கு கருப்பரின குழந்தைகளுக்கு பாகுபாடு காண்பிக்கப்பட்ட்தால் அங்கிருந்து விலகினார்.

பள்ளியிலும் கல்லூரியிலும் முதல் மாணவன்

அடுத்து கன்சாஸ் என்ற இடத்தில் ஒரு பள்ளியில் சேர்ந்தார், பின்னர் மினியாப்பொலிஸ் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து தனது பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் தனது கல்லூரிப் படிப்பையும் தொடங்கினார். பள்ளியிலும் சரி கல்லூரியிலும் கார்வர் முதல்தர மணவராக விளங்கினார்.

தனது இளம் வயதிலிருந்தே கார்வர் செடிகள், கொடிகள், மரங்கள் என இயற்கையின்மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார், இதனை கூர்மையாக கவனித்த ஒரு ஆசிரியர் பெருமகனார் இவரை விவசாயம் படிக்க அறிவுறுத்தினார்,

வேளாண்மைப் பள்ளியின் பொறுப்பாளர்

கார்வர் அயோவா ஸ்டேட் அக்ரிகல்ச்சுரல் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு அவர் பேச்சிலர் டிகிரியும், மாஸ்டர் டிகிரியும் வாங்கினார், இந்த சமயம் துஷ்கேஜி பல்கலைக்கழகம் ஒரு வேளாண்மைப் பள்ளியைத் தொடங்கி அதற்கு பொறுப்பாளராக ஜார்ஜ் வாஷிங்க்டன் கார்வரை நியமித்த்து.

சாதனையான கண்டுபிடிப்புகள்
அவர் செய்த மிகப்பெரிய சாதனை என்பது, நிலக்கடலை மனிதன் என்று இந்த உலகால் அழைக்கப்பட்டதுதான், காரணம் நிலக்கடலையிலிருந்து 300 க்கும் மேற்பட்ட உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களை கண்டுபிடித்தார்.

நிலக்கடலைப்பால், பிளாஸ்டிக், சோப்பு, ஷேவிங்க் கிரீம், ஸ்கின் லோஷன், பேப்பர், இன்சுலேஷன், ஆண்டிசெப்டிவ்ஸ், லாஃக்ஸாடிவ்ஸ், அழகு சாதனப் பொருட்கள் மருந்து எண்ணெய்கள் ஆகியவை வள்ளி கிழங்கில் இருந்து 118 வகையான பொருட்களை அவர் கண்டுபிடித்தார் அவை மொலாசஸ் போஸ்டட் ஒக்ரோபர் ஆகியவை அவர்களை பற்றி அவர் பேசிய பேச்சு அவரை என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

அது உலகில் வேறு யாரும் இதுவரை செய்யாத சாதனையாக இருந்தது.

மகாத்மாகாந்தியின் ஆலோசகர்

ஜார்ஜ் வாஷிங்க்டன் கார்வர் ஒருமுறை அவர் இந்தியா வந்தார், அவர் இங்கு வந்தபோது மகாத்மா காந்தி அவர்களை சந்தித்தார், அந்த சமயம் வளரும் நாடுகளில் ஊட்டச்சத்து பற்றாக் குறையை சரி செய்வது எப்படி என்று அவரோடு ஆலோசனை செய்தார், கார்வர் தொடர்ந்து அவருக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஆலோசகராக இருந்தார் என்பது ஆச்சரியமான செய்தி.

விவசாயிகள், ஆசிரியர்கள், பெண்கள்

1898 முதல் 1943 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து விவசாயிகளுக்கான செய்திகளை அனுப்பினார், அதில் நிறைய ஆராய்ச்சிச் செய்திகளை அனுப்பி வைத்தார், விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு அந்த செய்திகளை அனுப்பி வைத்தார், இப்படித்தான் கிராமப்புற மக்களை சென்றடையமுடியும், என்று நம்பினார் கார்வர்.

போலியோ வைரசுக்கு கடலைஎண்ணை மசாஜ்
1930 இல் போலியோ வைரஸ் அமெரிக்காவை பயமுறுத்தியது, அப்போது அதற்கும் பதில் நிலக்கடலைதான் என்றார், கடலை எண்ணெய் மசாஜ் சிகிச்சை முறையை அறிமுகம் செய்தார்.

சிறிய விபத்தில் இயற்கை எய்தினார்
1943 ஆம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் இயற்கை எய்தினார், தனது வீட்டில் படிக்கட்டில் இறங்கும் போது தவறி விழுந்தார், இப்படி தனது 79 ஆவது வயதில் தனது பூவுலகப்பணியை பூர்த்தி செய்தார்.

அமெரிக்காவில் நினைவகங்கள் இரண்டுதான்
அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட் நிலக்கடலை மனிதருக்கு நினைவகம் அமைக்க உத்தரவிட்டார்.

இதுவரை இருவருக்கு மட்டுமே அமெரிக்காவில் நினைவகங்கள் இருக்கின்றன, அவர்களில் ஒருவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், இன்னொருத்தர் ஆபிரகாம் லிங்கன்.

நிலக்கடலை மனிதர் என்று இன்றுவரை  பேசப்படுபவர், நிலக்கடலையில் 300க்கும் மேற்பட்ட வகைகளில் பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்தவர்,கறுப்பு இனத்தவர் என அறியப்பட்டவர், அறிவியலாளர், தாவரவியல் மற்றும் வேளாண்மை நிபுணர் என்று போற்றப்பட்டவர், கருப்பு லியர்னடோ என்று பாராட்டப்பட்டவர், அமெரிக்க அரசால் ஆபிரகாம்லிங்கனுக்கு அடுத்து நினைவகம் அமைக்கப்பட்டவர், ஸ்டாம்ப் வெளியிட்டு கவுரவம் செய்யப்பட்டவர், டாலர் நாணயங்களில் உருவம் பொரிக்கப்பட்டவர்,

விரைவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அந்த சமயம் ஆலோசனையை பெறுவது வழக்கமாக இருந்தது விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய பல தகவல்களை மகாத்மா காந்தியின் கழித்து அவருக்கு ஆலோசனை அளித்து உள்ளார் முதன்முதலாக தேசிய நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர் தான்

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் கல்சுரல் சென்டர் என்ற இடத்தில் உள்ளது 1948 மற்றும் நாற்பதாம் ஆண்டுகளில் அமெரிக்க அரசு அவருக்கு போஸ்டரை வெளியிட்ட தே 1951 மற்றும் 54 இடங்களில் அவருடைய உருவம் பொறிக்கப்பட்டது எண்ணற்ற பள்ளிகள் அவருடைய பெயரில் தற்போது இயங்குகின்றன 2 ராணுவ கப்பல்கள்.

எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.fromlivescience.com / George Washington Carver: Biography, Invention & Quotes
www.en.m.wikipedia / George Washington Carver
www.biography.com / George Washington  Carver – Biography
www.history.com / George Washington  Carver – Biography, Inventions, Facts - History

0000000000000000000000000



No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...