Tuesday, June 9, 2020

பாக்குபட்டை பலநாட்டு மருத்துவ மரம் PAKKUPATTAI MULTINATIONAL MEDICINAL TREE




பாக்குபட்டை பலநாட்டு மருத்துவ மரம்

PAKKUPATTAI MULTINATIONAL MEDICINAL TREE


பாருங்கள், நமக்கு தெரியாத மரங்கள் எல்லாம் சித்த மருத்துவத்துக்கு தெரிந்த மரங்கள், ஆயுர்வேதமும், யுனானியும், மருந்து தயாரிக்கும் கம்பெனிகளும் அவற்றின் மகத்துவத்தை புரிந்து வைத்திருக்கின்றன, நாம் இப்போதுதான் ஆனா ஆவன்னா என ஆரம்பித்துள்ளோம்.

அனுபவம் மிக்க நிபுணர்கள் பாக்குபட்டை பற்றி கேட்டால் ‘மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு’ என்கிறார்கள், மருத்துவ பயன் தரும் சிறுமரம், பல நாடுகளிலும் பிரபலமான மரம். 


பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION):
 
இமயமலை அடிவாரம், கங்கைச் சமவெளி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா. அஸ்ஸாம், பீகார்.
 
மகாராஷ்டிராவில் அகமத்நகர், நாசிக், புனே, ராய்காட், சிந்து தூர்கம்.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான்.
 
பயன்கள் (USES):
 
இதன் அனைத்து தாவர பகுதிகளும் மருந்தாகப் பயனாகின்றது, இலைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகிறது. 

இந்தியா சீனா ஜப்பான் ஆகிய நாடுகளில் பாரம்பரியமாக பல மருத்துவ முறைகளில் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.


மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)

சித்த மருத்துவம் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகியவை அனைத்திலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்,
 
இலைக் குடிநீர் தசை வலியை போக்குவதற்கும், தளிர் இலைகளை அரைத்து கூழாக்கி தடவினால் சொரி சிறங்கும் சரியாகும்.
 
இதன் பட்டையில் குடிநீர் தயாரித்து அதனை கொப்பளிக்க தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்,  அதுமட்டுமல்ல தொண்டை அடைப்பான் நோயையும் குணப்படுத்தும்.

பட்டையை வாயில் போட்டு நன்கு மெல்ல வாய் மற்றும் உதடுகளில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.

இதன் வேர்களில் தயாரிக்கும் குடிநீரைப் பயன்படுத்தி  வேர்புல் பாலுறவில் ஏற்படும் நோய்களையும், மூட்டு வலியையும் குணப்படுத்தும்.
உலர்ந்த பூக்களை சேகரித்து பொடியாக்கி அதனை தொடர்ந்து சாப்பிட  படிப்படியாய் ஆண்மையைப் பெருக்கும்.
 
உலகம் முழுக்க தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் மருந்துகள் பல நூறு ஆண்டுகளாக பயன்பட்டு வருகிறது.

நோய்களை கட்டுப்படுத்தும் பைட்டோ கெமிக்கல்ஸ் விவரங்களை கண்டறிய  ஜிசி எம்எஸ் அனாலிசிஸ் (GCMS ANALYSIS) என்னும் ஆய்வினை செய்கிறார்கள்.

மூலம் தாவரங்களில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் என்னென்ன இருக்கின்றன என்று கண்டுபிடிக்கிறார்கள்.
 
அதன் மூலமாகத்தான் அவை எந்தெந்த நோய்களை கட்டுப்படுத்தும் என்றும் கண்டுபிடிக்கிறார்கள்.
 
ஜிசிஎமெஸ் ஆய்வுகள் மூலம் என்னென்ன பார்க்கிறார்கள் தெரியுமா ? போலார் காம்பனெண்ட்ஸ்,  செமி போலார் காம்பனெண்ட்ஸ், நான் போலார் காம்பனெண்ட்ஸ், வாலட்டைல்ஆயில், ஃபேட்டிஆசிட்ஸ், லைபிட்ஸ், ஆல்கலிட்ஸ், ஃபிளேவனாய்ட்ஸ், டேனின்ஸ், புரோடீன்ஸ், டெரிபீநாய்ட்ஸ், மற்றும் ஸ்டீராய்ட்ஸ், இவை எல்லாம்தான் பைட்டொகெமிகல்ஸ் என்பவை.

மரங்களின் இயல்பு (PROPERTIES):  

மரங்கள் சிறுசாதான் இருக்கும், ஆனா வேகமா வளரும், டெல்லியில திரும்பின பக்கமெல்லாம் பாக்கலாம். 
  
இலைகள் கவர்ச்சிகரமான பச்சை நிறத்தில் இருக்கும், பச்சயா இருந்தலும் பளபளப்பா இருக்கும்.

பூக்களும் வெள்ளைவேளேர்னு கொத்துகொத்தா இருக்கும், பார்க்க பூக்கள் நட்சத்திரம் மாதிரி இருக்கும், பூக்கள் ரொம்பநேரம் மரத்தில் இருக்காது, சீஈக்கிரமா கொட்டிடும், கொட்டின பூக்களை மரத்தடியில் பார்த்தால் பாய்விரிச்சது மாதிரி கொட்டி கிடக்கும். 

காய்கள் பச்சையா இருக்கும், முற்றிய பழங்கள் ஆரஞ்சு சிவப்பு நிறமா மாறிடும். 

பூக்கள் ஜனவரி முதல் ஏப்ரல் மே மாதங்களில் பூத்துக் காய்த்து பழங்கள் பழுக்கும், பழங்களை பறவைகள் விரும்பி சாப்பிடும்.
 
சிலர் இதன் பட்டையை பாக்குமாதிரி பயன்படுத்துவார்கள், இதனால் அவர்களுடைய பற்களும் வாயும் சிவந்து போகும்,  இதனால்தான் இந்த மரத்தை பாக்குப்பட்டை மரம் என்று அழைக்கிறார்கள்.

வளர்ப்புமுறை (PROPAGATION)

இதன் பழங்கள் இரண்டு அறைகளாக பிரிந்திருக்கும், ஒவ்வொறு அறையிலும் மூன்று முதல் நான்கு விதைகள் இருக்கும்.
 
ஒருகிலோ எடையில் 70 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் விதைகள் இருக்கும்.

பறவைகள் இதன் பழங்களை சாப்பிட்டுவிட்டு விதைகளை பறந்து செல்லும் இடங்களில் எல்லாம் பரவலாக விதைக்கும்.

மரத்தினடியில் வளரும் வேர்ச்செடிகளை எடுத்து நடலாம், விதைகளை நேரடியாக விதைக்கலாம், நாற்று தயாரித்தும் டலாம்.

எழுதியவர், தே. ஞான சூரிய பகவான், தலைவர் பூமி அறக்கட்டளை இயற்கை வள பாதுகாப்பு இயக்கம், போன்: +91 8626195370

FOR FURTHER READING
1. www.flowersofindia.net / Ehretia laevis
2. www.efloraofgandhinagar.in / Ehretia laevis
3. www.indiabiodiversity.org / Ehretia laevis
4. www.envis.friht.org / Plant details for Ehretia laevis
5. www.pichandikulam-herbaruium.org / Ehretia laevis
6. www.researchgate.net / GC-MS study of nutritious leaves of Ehretia laevis
7. www.kalkalconserve.info / Ehretia laevis
8888888888888888

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...