வேம்பு இருக்க
வெட்டுக்கிளி பயம் வேண்டாம்’
NEEM
PRODUCTS CONTROL LOCUSTS
‘வேம்பு இருக்க வெட்டுக்கிளி பயம் வேண்டாம்’ என்று சொல்லுகிறது, தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ஃபுட் அண்ட் அக்ரிகல்ச்சுரல் ஆர்கனைசேஷன் (FOOD
AND AGRICULTURAL ORGANIZATION). எப்படி என்று தெரிந்துகொள்ள கட்டுரையை படியுங்கள்.
வெட்டுக்கிளிகள் தனது உடல் எடைக்கு சமமான அளவில், அதாவது இரண்டு
கிராம் மட்டும்
சாப்பிட்டுவிட்டு
100 கிலோமீட்டர் பறக்கின்றன, நாம் ஃபிஃப்டி கேஜி தாஜ்மகாலாக இருந்தால்கூட ஒருநாளைக்கு
இரண்டுகிலோ சாப்பிட்டுவிட்டு எத்தனை கிலோமீட்டர் பறக்கமுடியும் யோசித்துப்பாருங்கள்.
எட்டாயிரம் வகையான வெட்டுக்கிளிகள்
உலகில் இருக்கின்றன, அவற்றில் பன்னிரண்டு மட்டும்தான்
லோகஸ்ட்’டாக மாறுகின்றன. 1920 ம் ஆண்டுதான் லோகஸ்ட்டும் வெட்டுக்கிளியும்
ஒன்று என்று தெரிந்தது.
நமக்கு அறிமுகமான பாலைவன வெட்டுக்கிளியின்
அறிவியல் பெயர் சிஷ்டோசெர்கா கிரிகேரி என்பது.
புத்திசாலி வெட்டுக்கிளிகள் பறக்கும்போது அந்த
சமயம் வீசும் காற்றின் திசையில் பறக்கத் தொடங்கும், கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில்கூட
சிரமம் இல்லாமல் பறக்கும்.
வெட்டுக்கிளியின் மொத்தம் வயது ஆறு மாதம், ஒரு அவை ஒரு தலைமுறையிலிருந்து இரண்டாவது தலைமுறை தொடங்கும்போது
பதினாறு
மடங்காகப் பெருகும்.
பாலைவன வெட்டுக்கிளிகள் எப்போதும்
கூட்டம் கூட்டமாக இருக்கும், இதனை ஆங்கிலத்தில் ‘சுவார்ம்’ என்று சொல்லுவார்கள்,
சராசரியாக ஒரு சுவார்ம் எனும்
வெட்டுக்கிளி
கூட்டத்தில் 150 மில்லியன் வெட்டுக்கிளிகள்
இருக்கும். இவை ஒரு நாளில் 35 ஆயிரம் பேருடைய சாப்பாட்டை காலிசெய்துவிடும்.
தாய் வெட்டுக்கிளிகள் ஈரமான
பாலைவன மணலில் முட்டையிட்டு, தொண்ணூற்றுஐந்து நாட்களில் குஞ்சு
பொறித்து, இறக்கையில்லாத இளங்குஞ்சு ஈன்று, இருபத்தெட்டு நாட்களில் ஐந்துமுறை தோல் உறித்து, இறக்கை
முளைக்க முழு வெட்டுக்கிளியாக மாறும்,
முழு வளர்ச்சி அடைந்த வெட்டுக்கிளிகள்
மஞ்சள் நிறமாக இருக்கும், அதன் மீது கவர்ச்சிகரமான கருப்பு நிற கோடுகள் தென்படும், இதன் மொத்த வயது ஆறு
மாதங்கள் மட்டுமே.
வெட்டுக்கிளிகள் இந்தியாவில் மோசமாக தாக்கிய ஆண்டுகள் - 1926 – 1934, 1940 – 1948, 1949 -1963, 1967- 1969, 1987 – 1989, 2003 – 2005, மற்றும்
2019 - 2020.
இலைகள், தண்டுகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள், பட்டைகள், சிம்புகள் எல்லாவற்றையும்
வெட்டுக்கிளிகள் சாப்பிடும்.
இதுபோன்ற வெட்டுக்கிளிகள்பற்றிய
தகவல்களை தருவது, டி எல் ஐ எஸ் (DESERT
LOCUST INFORMATION SERVICE)என்னும்
ஆராய்ச்சி நிறுவனம், இது சர்வதேச அளவில்
பாலைவன வெட்டுக்கிளிகள்பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்கிறது, ‘எஃப்
ஏ ஓ’ (FOOD AND AGRICULTURAL ORGANIZATION) எனும் உணவு மற்றும்
வேளாண்மை கழகத்தைச்சேர்ந்தது.
இப்போதைக்கு தயாராக கைவசம் இருக்கும்
வெட்டுக்கிளி கட்டுப்பாடு என்பது பூச்சிமருந்துகளை தெளிப்பது, வானவெளியிலிருந்து தெளிப்பான் மூலம் தெளிக்கிறார்கள், இதனைச் செய்வது அரசு மற்றும் பொது நிறுவனங்கள்.
டயர்களைப்போட்டு நெருப்புவைத்து
கொளுத்துவது, அதன் மூலம் புகை போடுவது, நெருப்பு மற்றும் புகைமூலம் வெட்டுக்கிளிகளை விரட்டுவது.
வயல்களில் வாய்க்கால்களை வெட்டிவைத்து
வெட்டுக்கிளிகள் ஊர்ந்து செல்லும்போது அவற்றை விழவைத்து மண்ணால் மூடுவது.
தகர டின்கள் மற்றும் டிரம்களை
அடித்து
பெரும் ஓசை எழுப்பி அவற்றை மிரண்டு ஓடச்செய்வது.
நொவாக்ரிட் (NOVAKRID)என்னும் பூசணம் ஒன்றும்
தற்போது களத்திற்கு வந்துள்ளது, அது பயோபெஸ்டிசைட் (BIO
PESTICIDE)என்னும் உயிரியல் பூச்சிக்கொல்லி
வகையை சேர்ந்தது.
நொவாக்ரிட் வெட்டுக்கிளிகளைக்கொல்ல
இரண்டுவாரம் ஆகிறது, ஆனால் இது 90 சதவிகித வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துகிறது, ஆப்ரிக்க நாடுகள் இதனைப் பயன்படுத்துகின்றன.
நொவாக்ரிட் மருந்தை பயன்படுத்துவது மனிதர்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு இயற்கை வளங்களுக்கு, எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மிளகாய் மிலாறுகளை வரப்புகளில்
அடுக்கி
வைத்தல், எரித்தல், புகை போடுதல், ஆகியவற்றின்
மூலமும்
வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தலாம்.
வேம்பு எண்ணெய்
கரைசலை தெளிக்கலாம், வேம்பு பிண்ணாக்குக் கரைசல் தெளிக்கலாம், வேம்பு விதை கொட்டைகளை அரைத்து கூழாக்கி அந்த
கரைசலையும் தெளிக்கலாம், அல்லது வேப்பிலையை அரைத்து கூழாக்கி அந்த
கரைசலையும் தெளிக்கலாம், வேப்பங்காய்களை அரைத்து அதன்
கரைசலையும் தெளிக்கலாம்.
1980 களில்
பருத்தியில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தபோது, ரசாயன மருந்துகள் எல்லாம் கைவிட்டபோது கைகொடுத்தது வேம்பு எண்ணைய்தான்.
‘வேம்பு இருக்க வெட்டுக்கிளி பயம் வேண்டாம்’
என்று சொல்லுகிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ஃபுட் அண்ட் அக்ரிகல்ச்சுரல்
ஆர்கனைசேஷன் (FOOD AND AGRICULTURAL ORGANIZATION).
தே. ஞானசூரிய பகவான், போன்: +91 8526195370
தே. ஞானசூரிய பகவான், போன்: +91 8526195370
00000000000000000000
No comments:
Post a Comment