Friday, June 19, 2020

மாயன் நாள்காட்டி சொல்வது பொய்யா ? MAYAN’S PREDICTION ON END OF THE WORLD





 

மாயன் நாள்காட்டி சொல்வது பொய்யா ?

MAYAN’S PREDICTION ON END OF THE WORLD


ஒரு பக்கம் சீனா இந்தியா எல்லையில் பதட்டம், போர் மூளக்கூடிய அபாயம், இன்னொரு பக்கம் 2 கிராம் சாப்பிட்டு விட்டு 200 கிலோமீட்டர் பரந்து விளைநிலங்களை எல்லாம் பாலைவனமாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள், இவற்றின் நடுவே ஒரு விஞ்ஞானி உலகம் அழியப்போவதுபற்றி கொடுத்த  டுவிட்டர் செய்தி, அதை ஊதி ஊதி பெரிதாக்கும் கன்ஸ்பிரசி தியரிக்காரர்கள், ஆமாம், உலகம் அழியுமா ? அழியாதா ?
 
முதல்கோணினால் முற்றும் கோணும் என்பார்கள், அதுபோல 2020 ல் முதல் கோணல் கொரோனா,  இரண்டாவது கோணல் பாலைவன வெட்டுக்கிளி, மூன்றாவது கோணல் இந்தியா சீனா எல்லைப்பிரச்சினை, நான்காவது கோணல் மாயன்காலண்டர் சொல்லும் உலக அழிவு செய்தி. அய்ந்தாவது கோணல் இந்த செய்தியை ஊதிஊதி பெருசாக்கிக் கொண்டிருக்கும் சதி ஆலோசனைக்காரர்கள்.

டிசம்பர் 21,ம்தேதி  2012 ஆம் ஆண்டு உலகம் அழியும் என்று மாயன் காலண்டர் சொல்லுகிறதுஇப்படி ஒரு செய்தியை வெளியிட்டார்ஒரு விஞ்ஞானி, அவருடைய பெயர்பவ்லோ டாகலோகின்’ (PAOLO TAGALOGUIN). 

பவ்லோ டாகலோகின்அமெரிக்காவின் டென்னிசி பல்கலைக்கழத்தில் தாவர வியல் விஞ்ஞானியாக வேலை செய்கிறார், அனேகமாய் அவரும் லாக் டவுன்ல் இருக்கிறாரா என்று தெரியவில்லை, எதற்காக இந்த செய்தியை டுவிட்டரில் தட்டிவிட்டார் என்று தெரியவில்லை.

ஒன்றுக்கும் உதவாத செய்திகளைக்கூட ஊதிஊதி  பெருசாக்க ஒருக்கூட்டம் உண்டு, அதற்கு பெயர்கான்ஸ்பைரசி தியரிஸ்ட், அவர்களை தமிழில்சதியாலோசனைக் குழுவினர்என்று சொல்லுகிறார்கள்.

டிசம்பர் 21ஆம் 2012 ம் ஆண்டுதானே என்ற சந்தேகம் வரும், அந்த சந்தேகம் எனக்கும் வந்தது, டிசம்பர் 21ஆம் 2012 ம் ஆண்டு என்பது எப்படி ஜூன் 21 2020 ம் ஆண்டாக மாறியது ?

இதை நாம் புரிந்துகொள்ள நாம் பயன்படுத்தி வரும் மற்றும் பயன்படுத்தி வந்த காலண்டர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாயன் நாள்காட்டி மாயன் மக்களால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்ட காலண்டர், அந்த காலண்டர்   டிசம்பர் 21ஆம் 2012 ம் ஆண்டு முடிவடைகிறது. அதனால் அத்தோடு உலகம் அழிந்துபோவதாக கருதுகிறார்கள்.

பூமி சூரியனை சுற்றும் அடிப்படையில் அறிமுகம் செய்த காலண்டர்தான் கிரிகோரியன் காலண்டர் என்பது, இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்துவது, கிரிகோரியன் காலண்டர்தான்.
 
அதற்கு முன்னால் பயன்படுத்தியது ஜூலியன் காலண்டர்தான்,  ஜூலியன் காலண்டர்படி நாம் இருப்பது 2012 ஆம் ஆண்டுதான் என்கிறார்கள், 2020 அல்ல என்றும் சொல்லுகிறார்கள்.
 
அதனால் உலகம் அழியும் நாள் என்பது 2020 ஆம் ஆண்டில் ஜூன் 21-ம் தேதிதான் என்று சொல்லுகிறார்கள், இந்த சதி ஆலோசனைக்குழுவினர்,
இந்த  செய்தியை பிடித்துக் கொண்டு இதனை உலகம் முழுவதும் அவர்கள் பரப்பி வருகிறார்கள். இதன் மூலமாக பெரும் பீதியை கிளப்பி வருகிறார்கள்.
 
கிரிகோரியன் காலண்டர்படி ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்களை நாம் இழந்துவிட்டோம், அந்தவகையில் கிரிகோரியன் காலண்டரை நாம் பயன்படுத்த தொடங்கிய பிறகே 268 ஆண்டுகளை இழந்துவிட்டோம்.
 
அப்படிப் பார்த்தால் 268 ஆண்டுகளில் 2948 நாட்களை நாம் குறைக்க வேண்டும், அப்படி என்றால் அது எட்டு ஆண்டுகளுக்கு சமம்.
 
இந்த கணக்கின்படி 2020 ல் எட்டு ஆண்டை கழித்தால் வருவது 2012 ஆம் ஆண்டு தான்.
 
ஆக  மாயன் காலண்டர் முடிவடைவது 2020 ல் ஜூன் 21ம் தேதி,  அன்று உலகம் அழியும் நாள் என்று சொல்லுகிறார்கள்.
ஆக  மாயன் காலண்டர் முடிவடைவது 2020 ல் ஜூன் 21ம் தேதி,  அன்று உலகம் அழியும் நாள் என்று சொல்லுகிறார்கள்.
ஆக  மாயன் காலண்டர் முடிவடைவது 2020 ல் ஜூன் 21ம் தேதி,  அன்று உலகம் அழியும் நாள் என்று சொல்லுகிறார்கள்.

இதற்கிடையில் பவ்லோ டாகலோகின்தான் டுவிட்டரில் போட்ட செய்தியை டெலிட் செய்துவிட்டார்.

அடுத்து நாம், மாயன் சமூகத்தினரை புரிந்துகொள்ள  பிரீ கொலம்பியன் மீசோஅமெரிக்கா என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். பிரீ கொலம்பியன்  என்றால் கொலம்பஸ் கடற்பயணம் மேற்கொண்டதற்கு முந்தைய காலகட்டம் என்று பொருள்.
 
பிரீ கொலம்பியன் காலகட்டத்தில் மீசோஅமெரிக்காவில் வாழ்ந்தவர்கள் தான் மாயன்கள் என்பவர்கள்,  இதனை ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டம் என்கிறார்கள்.

இட்ஜாம்னா என்ற பெயரில் அந்த காலத்தில் ஒரு குட்டி தெய்வம் இருந்தது, அதுதான் இந்த காலண்டரை அவர்களுக்கு திட்டமிட்டு கொடுத்ததாகச் சொல்கிறார்கள், மாயா கலாச்சாரத்துக்கான அடிப்படையான விஷயங்களை தொகுத்து கொடுத்ததும் இந்த குட்டி தெய்வம்தான்.
 
நேகமாக இந்த இட்ஜாம்னா என்பது மாயா கலாசாரத்துக்கு அடிப்படையான மூதாதையர் ஆக இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள், அதனை ஆங்கிலத்தில் டெயிட்டிஎன்கிறார்கள்.

அடுத்து கிரிகோரியன் காலண்டர், இந்த காலண்டரைத்தான் நாம் உலகம் முழுக்க பயன்படுத்தி வருகிறோம், இந்த காலண்டர் 1582 ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக அறிமுகமானது.
 
அதற்கு முன்னால் நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த  காலண்டரின் பெயர் ஜூலியன் கேலண்டர்.

என்பது மாயா மக்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த மாயா கலாசாரம் என்பது அல்லது இதற்கு மீசோஅமெரிக்கன் கலாச்சாரம் என்றும் சொல்லுகிறார்கள்.
 
கிறிஸ்டோபர் கொலம்பஸ்ன் கடற்பயணங்கள் நிகழ்ந்த ஆண்டு ஆயிரத்து 1492, அதற்கு முற்பட்ட காலத்தைத்தான் இவர்கள் பிரீ கொலம்பியன் என்று குறிப்பிடுகிறார்கள், அதாவது கொலம்பசுக்கு முற்பட்ட காலம்.
 
பாரம்பரியமான அமெரிக்க கலாச்சாரத்தின் பெயர் இண்டிஜீனஸ் அமெரிக்கன் கல்ச்சர் (INDIGENOUS AMERICAN CULTURE) என்பது, இந்த காலகட்டத்தை பிரீ ஹிஸ்டாரிக் (PRE HISTORIC) என்றும் பிரிஹிஸ்பானிக்  (PRE HISPANIC) என்றும் சொல்லுகிறார்கள்.

 மீசோ அமெரிக்கா என்து து ? மாயா சிவிலைசேஷன் தோன்றி வளர்ந்த இடம் தான் மீசோஅமெரிக்கா, வடக்கு மெக்சிகோ முதல் மத்திய அமெரிக்காவரை உள்ள தென் பகுதிதான் அது.

இந்த உலகின் முக்கியமான ஆறு நாகரீகங்களில்  ஒன்று தான் இந்த மாயா நாகரிகம்.

நன்கு வளர்ச்சியடைந்த ஒன்றாக இருந்தது மாயன் சமூகம், அந்த சமூகத்தில் விவசாயம் விரிவாக இருந்தது, சிற்பக்கலை சிறப்பாக இருந்தது, எழுதினார்கள் படித்தார்கள்

இது தவிர மாயன் நாள்காட்டி ஒன்றை திட்டமிட்டு அதனை கடைப்பிடித்து வந்தார்கள், அதுதான் மாயா காலண்டர் என்பது

இந்த காலகட்டத்தை இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என்று சொல்லுகிறார்கள், மீசோ அமெரிக்காவில் மக்காச்சோளம், அவரை, ஸ்குவாஷ் ஆகிய பயிர்களை சாகுபடி செய்தார்கள்

ஆனால் உவு செய்வதற்காக அவர்கள் எந்த கால்நடைகளையும் பயன்படுத்தவில்லை, நடந்து செல்வதைத் தவிர வேறு எவ்விதமான போக்குவரத்து வசதியும் அப்போது இருக்கவில்லை.
 
ஆனால் நீரில் பயணம்செய்யகேனோ என்னும்  படகினை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதாவது ஒற்றை மரத்திலே செய்யக்கூடிய ஒரு படகு என்று பொருள், அதைத்தான் கேனோ என்று சொல்லுகிறார்கள்.
இன்றும் கூட பல இடங்களில் பழங்குடி மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் இந்த கேனோ படகுகளை பயன்படுத்துகிறார்கள்.
 
உலகில் உள்ள முக்கியமான காலண்டர் வகைகள் என்று சொன்னால் எகிப்திய காலண்டர்கள், பாபிலோனியன் காலண்டர்கள், இந்தியன் கேலண்டர்கள், சைனீஸ் காலண்டர்கள்,  மீசோ அமெரிக்கன் காலண்டர்கள், ஜூலியன் கேலண்டர்கள், கிரிகோரியன் காலண்டர்கள், இவையெல்லாம்தான் உலக அளவில் குறிப்பிடும்படியான நாள்காட்டிகள் அல்லது காலண்டர்கள்.
 
உலகில் தோராயமாக 40 வகையான காலண்டர்கள் இருக்கின்றன, அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள், லூனி சோலார் காலண்டர், சோலார் காலண்டர் மற்றும் லுனார் கேலண்டர்.

சோலார் கேலண்டர் என்து சூரியனை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட்து, லூனார் கேலண்டர் என்து சந்திரனை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட்து, லூனிசோலார் கேலண்டர் என்து சூரியனையும் சந்திரனையும்  அடிப்படையாகக்கொண்டது

இந்த மூன்று அடிப்படையில் தான் உலகம் முழுவதும் இந்த காலண்டர்களை தயாரித்திருக்கிறார்கள், மாயன் காலண்டர் பிரகாரம் ஜூன் 21ஆம் தேதி உலகம் அழியுமா அழியாதா என்பது பற்றி இப்போது யாரும் கவலைப்படவில்லை.
 
ஆனால் இந்த மாயன் என்பவர்கள் யார் ? எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ? முன்னர் எங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள் ? இதில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான சமாச்சரங்கள் இருக்கின்றன.

மாயன் மக்கள் வசிக்கும் நாடுகளில், மாயா வம்சத்தைச் சேர்ந்த மக்கள் ன்னும் கூட இந்த உலகில் வசித்து வருகிறார்கள், கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் வசித்து வருவதாக சொல்கிறார்கள்.
 
வர்கள் மெக்சிகோவினுடைய தெற்குப் பகுதி, மத்திய அமெரிக்காவினுடைய வடக்குப் பகுதியில் கவுடிமாலா,  ஹோண்டுராஸ்,  எல்சால்வடார், ங்கெல்லாம் இன்னும் கூட வசித்து வருகிறார்கள்.
 
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மெக்சிகோவில் தென்பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்களில் இந்த மக்கள் வசிக்கிறார்கள், இன்னும் கூட அதிகமான மக்கள் பேசும் மொழியாக இங்கு இருப்பது இந்த மாயன் மொழிதான்.
 
தமிழர்களைப் போல அவர்களும் இயற்கையைக் கடவுளாக வழிபட்டு வந்திருக்கிறார்கள், கீனிச் அஜாவ் (KINICH AJAW)என்பது சூரிய கடவுள், சாக் (CHAAK) என்பது  மழை மற்றும் சூறாவளிக்கான  கடவுள், இடி மற்றும் மின்னலுக்கான  தனியாக ஒரு கடவுள் இருக்கிறார், அவருடைய பெயர் காவில் (KAWILL), 

இந்த மாயர்களின் நாகரீகத்தின் அடையாளமாக இருந்தவற்றை எல்லாம் அழித்துவிட்டார்கள், மிச்சசொச்சமாக இருப்பவை எல்லாம் சாமான்யமானவை அல்ல, மூவாயிரம் ஆண்டு சரித்திரத்தை முதுகில் சுமந்துகொண்டிருக்கும் முரட்டு பிரமிடுகள், வான் முட்டும் கோயில்கள், இடிபாடுகளுக்கு இடையே இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் மாயர்களின் மகோன்னதமான அரண்மனைகள், மணிமண்டபங்கள், ஊடாக ஓவியங்கள், சிற்பங்கள், மாயர்களின் வாழ்வியல் மரபுகளை சிக்கனமாக சித்தரிக்கும்  சித்திர எழுத்துக்கள்,  எல்லாமே மாயன்களின்  கலாச்சாரச் சின்னங்கள்.

இவை அனைத்தும் இன்னும்கூட மெக்சிகோ, கவுட்டிமாலா, ஹோண்டுராஸ், பெலிஸ்சி, எல்சால்வடார், ஆகிய இடங்களில் சிதிலமடைந்து சிதைந்து போனாலும் மாயன் என்னும் கலாச்சார வேர்களின்மீது நிமிர்ந்து உயர்ந்து நிற்கின்றன.

இந்த உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய நாகரீகங்களில் முன்னணியில் இருப்பவற்றில் ஒன்றுதான் இந்த மாயா நாகரீகம், சில ஆராய்ச்சியாளர்கள் மாயர்களுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாகரீகத்திற்கும் பல ஒற்றுமைகளை பார்க்க முடிகிறது என்கிறார்கள்.

பத்திரிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்கள் எல்லாம் உலகம் அழிகிறது என்ற செய்தியை அப்படியே ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, மாயன் நாகரீகம், கலாச்சாரம் என்பதை தூக்கிப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன.

இந்த கட்டுரை எப்படி இருந்தது ? உலகம் அழிவதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? எழுதுங்கள், பேசுங்கள் !

000000000000000000
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.en.m.wikipedia.org / Maya Calendar
www.timeanddate.com / The Mayan Calendar – Time and Date
www.dnaindia.com / World to end on June 21 ? Mayan Calendar once again makes doomstay
www.express.co.uk / Mayan Calendar Warning: Researcher claims serious.
0000000000000000000000000



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...