Wednesday, June 24, 2020

இந்தியா – சீனா - கொரோனா INDIA – CHINA – CORONA




 

இந்தியா – சீனா - கொரோனா

INDIA – CHINA – CORONA


சீனா, இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று சொல்லியிருக்கிறார் பாரதப் பிரதமர் மோடி அவர்கள், அப்படியென்றால் இந்திய ராணுவத்தினர் எப்படி 20 பேர் இறந்து போனார்கள் என்று கேள்வியை எழுப்புகிறார்கள்.
 
சீன ஊடகங்கள் பிரதமர் மோடியின் பேச்சை பாராட்டி இருக்கின்றனர், தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இது உதவும் என்றும் எழுதி இருக்கிறார்கள், பதற்றத்தை தணிக்க உதவும் ஆனால் அது உண்மையல்ல என்ற அர்த்தமும் அதில் தொக்கி நிற்கிறது.
 
அதேசமயம் இந்திய ராணுவத்திற்கு முழுச்சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது, எல்லைக்கோட்டில் அந்தந்த பகுதியில் நடக்கும் அத்துமீறலை தட்டிக்கேட்க அல்லது ஒருதட்டு தட்டிக்கேட்க அரசின் ஆணை வேண்டாம், என்று சொல்லியிருக்கிறது இந்திய பாதுகாப்பு அமைச்சகம்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் மூளும் என்ற சூழல் உருவாகி இருப்பது உண்மை தான், அப்படி ஒரு போர் வெடித்தால் அது சீனா இந்தியா என்று மட்டும் நின்று போகுமா ? நிச்சயமாக அந்தப் போர் சீன இந்திய எல்லைக்குள் அடங்கி நிற்காது, கண்டிப்பாக அது மூன்றாவது உலகப்போராக மூளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
எந்த நாடு வெற்றிபெறுகிறது எந்த நாடு தோல்வி அடைகிறது என்ற வித்தியாசம் இருக்காது, இரண்டிலும் பேரழிவுகள் ஏற்படும், அந்த நாடுகளின் வளர்ச்சியை பத்திருபது ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளிவிட்டு விடும், அதிலிருந்து மீண்டு எழ அடுத்த இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆகும், அதற்கு மேலும் ஆகலாம்.
 
இந்த சமயத்தில் இந்தியாவினால் போரில் வெற்றிபெற முடியும் என்றால்கூட போரில் இறங்கக்கூடாது, காரணம், அமெரிக்கா உட்பட அனைத்து உலக நாடுகளும் இன்று சீனாவை ஒதுக்கி வைத்துள்ளன, இந்த சூழலில் சீனாவின் இடத்தை நிரப்ப இந்தியாவினால் மட்டுமே முடியும் உலகமே உணர்ந்துள்ளது, இந்த நிலையில் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா மிகப்பெரிய ஒரு சக்தியாக உருவெடுக்க எல்ல வாய்ப்பும் உள்ளது

அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் தேவைகளையும் நிறைவு வேண்டிய பொறுப்பு இந்தியாவின்மீது திணிக்கப்படும், இதனை சரிவர செய்யவேண்டிய திராணியும் திறனும் உள்ள ஒரேநாடு இப்போதைக்கு இந்தியா மட்டுமே. 

இந்த நிலையில் இந்தியாவிற்கு  நிறைய கடைமைகள் உள்ளன, அதற்கு விரைந்து செயல்பட வேண்டும், அதற்கான ஆயத்த காரியங்களைச் செய்ய வேண்டும், சீனாவிற்கு ஒரு மாற்றாக உலகின் உற்பத்திகேந்திரமாக உருவெடுத்து உயரும்  நேரம் வந்துவிட்டது. 

ந்த ஆயத்த காரியங்களை இந்தியா செய்யக்கூடாது, அதை செய்யவிடாமல் செய்துவிட்டால் சீனாவின் இடத்தை இந்தியாவால் பிடிக்க முடியாது, அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு சீனாவிற்கு ஒரு மாற்றினை கண்டுபிடிக்கமுடியாது,  வேறு வழியில்லை என்று சீனாவை சகித்துக்கொள்ளத் தொடங்கிவிடும்.

ஆக இந்தியாவுடன் போர் என்பதுஒரே கல்லில் இரண்டு மாங்காய்தத்துவம், அதனால் இந்தியாவினை சீண்டி நோண்ட வேண்டியது சீனாவிற்கு அவசியமாக உள்ளது.  

இந்த நிலையில்கிழக்கு லடாக்கிலிருந்து வெளியேற இந்திய சீன ராணுவம் ஒப்புதல்என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை எப்படியாவது போரைத்தவிர்க்க வேண்டும், சீனாவின் உசுப்பேற்றும் சீண்டல்களை பொறுத்துக்கொண்டுபோரே நீ போஎன்று சொல்லவேண்டும்

கொதிக்கும் ரத்த்த்தை குளிர்வித்து பொறுமை காக்கவேண்டியது இந்தச்சூழலில் அவசியமாகிறது.

கொரோனா அப்டேட்ஸ்

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2,700 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்ற நிலை உருவாகிவிட்டது, கொரோனாவினால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டிவிட்டது,  ஆனால் இதுவரை  34 ஆயிரத்து 112 பேர் குணமடைந்திருக்கிறார்கள், என்பது ஒரு நல்ல சேதி.

தமிழ்நாட்டில் தற்போது 87 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன, இதில் 46 பரிசோதனை மையங்கள் அரசுக்குச் சொந்தமானவை, மீதம் உள்ளவை தனியாருக்கு சொந்தமானவை, இதுவரை மொத்தன் 9.1 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, அதிகபட்சமாக நாள் ஒன்றில் இதுவரை 33275 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.   

மகாராஷ்ட்ரா மாநிலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது, அங்கு கொரோனா பாதிப்பு  1.3 லட்சத்தையும், இறப்பு எண்ணிக்கை 6,000 த்தையும் தாண்டிவிட்டது

ஒட்டுமொத்த இந்தியாவில் ஒரே நாளில் 15968 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 465 பேரை உயிர்ப்பலி கொண்டுள்ளது.

சீனாவில் எண்பதாயிரம் அணைக்கட்டுகளா ?

சீனாவில் 87 ஆயிரம் அணைக்கட்டுகள் இருக்கின்றன என்று ஒரு செய்தியை தமிழ் பொக்கிஷம் என்ற யூடியூப்’ல் பார்த்தேன், எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இந்தியாவில் எத்தனை அணைக்கட்டுகள் இருக்கின்றன என்று கூட அவர் கணக்கு சொன்னார்,  இது பற்றிய ஒரு ஆய்வை தொடங்கினால் உங்களுக்கு சில புதிய தகவல்களை சொல்லாம் என்று யோசித்தேன், விளைவுதான் இந்தப் பதிவு !
 
சீனாவில் இருக்கும் 46 சதவீத ஆறுகள் கடுமையாக மாசு படுத்தப்பட்டவை, நான்கில் மூன்று பங்கு ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் மனிதர்கள் பயன்படுத்த முடியாதவை,   மீன்கள் கூட அதில் மூச்சுவிட முடியாது.

ஹைட்ரோ பவர் என்று சொல்லக்கூடிய நீர் சக்தியை மேம்படுத்த மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளது சீனா, இதனால் மட்டும் 23 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளையும் விவசாய நிலங்களையும் ந்துள்ளார்கள், னால் சீனாவும் அந்த மக்களும் அதற்காக கவலைப்பட வில்லை, ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப்பெற முடியும் என்று அதற்கு விளக்கம் சொல்லுகிறார்கள்.
 
அதுசரி ! எண்பத்தியேழாயிரம் அணைக்கட்டுகள் இருக்கிறதா ? இல்லையா ? இருக்கிறது ! 

உலகிலேயே அதிக அணைக்கட்டுகளை உடைய நாடு சீனாதான் ! ஆயிரத்து ஐநூறு ஆறுகளில் ஒன்று இரண்டல்ல ! எண்பத்தியேழாயிரம் அணைக்கட்டுகள், இந்தியாவில் 5202 அணைக்கட்டுகளும், தமிழ்நாட்டில் 80 அணைக்கட்டுகளும் இருக்கின்றன, சீனாவிற்கு அடுத்ததாக இரண்டாவதாக அமெரிக்காவும், மூண்றாவதாக இந்தியாவும் நாங்காவதாக ஜப்பானும், அஇந்தாவதாக பிரேசிலும் இருக்கின்றன. 

87000 அணைகளைக் கட்டிய சீனா இன்னும் சில ஆறுகளை தனது பட்டியலில் வைத்துள்ளது, அந்த பட்டியலில் நமது பிரம்மபுத்திரா ஆறும் உள்ளது. மீகாங், சால்வின், யாங்க்ட்சீ என்ற ஆறுகளும் உள்ளன. 

ஆறுகளில் வரும் தண்ணீரை தேக்கி வைத்துப் பயன்படுத்த அணைகளைக் கட்டுகிறோம், அவற்றை சிறியது நடுத்தரம் பெரியது என்று சொல்லுகிறோம், உலகம் முழுவதும் இருக்கும் நாடுகள் எல்லாவற்றிலும் 57 ஆயிரம் பெரிய அணைகள் இருக்கின்றன. 

பெரிய அணைகள் என்றால் அது 15 மீட்டருக்கு மேல் உயரமாக இருக்கவேண்டும், தோராயமாக சொல்வது என்றால் ஒரு நான்கு மாடி கட்டிடத்தை விட உயரமாக இருக்க வேண்டும், இந்த கணக்குபடி உலகம் முழுவதும் பார்த்தால் 57 ஆயிரம் பெரிய அணைகள் இருக்கின்றன,

இவற்றில் சீனாவில் இருப்பவை மட்டும் அதாவது பெரிய அணைக்கட்டுகள் 23 ஆயிரம், அமெரிக்காவில் இருப்பவை 9700, மூன்றாவது இடத்தில் இருப்பது இந்தியா நான்காவது இடத்தில் இருப்பது ஜப்பான், ஐந்தாவது இடத்தில் இருப்பது பிரேசில்.

பெரிய அணைகள் கட்டியதால் உலக அளவில் புலம் பெயர்ந்த மக்கள் என்பது தோராயமாக 40 முதல் 80 மில்லியன் இருக்கும் என்றும் இதில் அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது சீனா அதற்கு அடுத்தபடியாக இருப்பது இந்திய நாடு.
 
இதுபோல பெரும் அணைகள் கட்டும் போது ந்த இடங்களை காலி செய்து தர மறுத்தால் என்ன நடக்கும் ? சீனாவில் அவர்கள் துப்பாக்கி முனையில் காலி செய்யப்பட்டார்கள், இதுமாதிரி 1982 ஆம் ஆண்டு கவுட்டிமாலாவில் ஒரு அணை கட்டும்போது, மாயன் என்னும் பழங்குடி மக்கள் 369 பேர் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட கொன்று குவிக்கப்பட்டார்கள்.
 
சீனாவில் ஓடும் ஆறுகள் மொத்தம் 1500 அவற்றில் முக்கியமானவை என்றால் ஐந்து ஆறுகள் சொல்லலாம் ஆறுகள் ஓடும் மொத்த தொலைவு 2 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர், சீனாவில் ஓடும் ஆறுகளில் முக்கியமானவை யாங்க்ட்சி, எல்லோரிவர், ஹைலாங்ஜியாங், யார்லுங் ஜாங் போ,  ஹுவாய்ஹோ ஆகிய ஐந்து ஆறுகள் தான்.
 
யாங்ட்சி ஆறு 

சீனாவின் மிக நீளமான ஆறு, இது ஓடும் ஓட்டுமொத்த தூரம் 6380 கிலோமீட்டர், திபெத் நாட்டில் டுவோடுவோ என்னும் ஆற்றிலிருந்து 26 இல் இருந்து பிறக்கும் என்பதை 9 மாநிலங்கள் வழியாக ஓடி ஈஸ்ட் சைனா சீ என்னும் கடலில் கலக்கிறது.
 
எல்லோ ரிவர் 

எல்லோ ரிவர் திபெத்தில் கரிக்யூன்னும் ஒடையின் மூலம் உற்பத்தி ஆகிறது,  இந்த ஆறு சுமார் 5464 கிலோ மீட்டர் ஓடி பொஹாய் என்னும் கடலில் கலக்கிறது,  சீனக் கலாச்சாரத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆறு, மஞ்சள் நதி நாகரீகம் என்று நாம் பள்ளிக்கூட பாடத்தில் படித்ததுகூட ந்த ஆறு தான்.
 
ஹொய்லாங்க் ஜியாங் ஆறு

ஹொய்லாங்க் ஜியாங் ஆறு, சீனா மங்கோலியா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளைக் கடந்து ஓடும் ஆறு,  அதனால் தான் இதனை சர்வதேச ஆறு என்று சொல்லுகிறார்கள், மேற்கு மன்ச்சூரியா மலைத்தொடரில் உருவாகும் ஆறு இது,  ஹொய்லாங்க் ஜியாங் ஆறு 3474 கிலோமீட்டர் ஓடிய பின்னால் வோக்கோஸ்க்  என்னும் கடலில் சங்கமமாகிறது.
 
பேர்ள் ஆறு

பேர்ள் ஆறு தென்சீனாவின் பெரிய ஆறு, 2320 கிலோ மீட்டர் ஓடும் ஆறு, இதன் நீர்வடிப்பகுதியில் அதிக மழை பெறும் இடமாக உள்ளது, இங்கு ஆண்டுக்கு சராசரி மழையாக யாக 1,000 மில்லி மீட்டர் வரை கிடைக்கிறது.
 
பிரம்மபுத்ரா ஆறு

இமய மலையில் உற்பத்தியாகிறது, சீனாவில் 2208 கிலோமீட்டர் ஓடி அதனைத் தாண்டி அருணாசல பிரதேசத்தில் நுழைந்து இந்தியாவில் 2840 கிலோ மீட்டர் ஓடுகிறது, இது சீனாவில் ஓடும் தொலைவைவிட இந்தியாவில் ஓடும் நீளம் அதிகம்.

ஆயிரத்து ஐநூறு ஆறுகள் மற்றும் 87000 அணைகளுடன் அசுர வளர்ச்சியுடன் இருக்கும் சீனாவை அடுத்த பத்து ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தியில் இந்தியா பின்னுக்குத்தள்ளும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள், அதற்கான வாய்ப்புகள் என்ன இருக்கிறது ? அதனை இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம். இதுபற்றிய தகவல்கள் உங்களிடம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.
 
தே.ஞானசூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு இயக்கம், தெக்குபட்டு, திருப்பத்தூர மாவட்டம், பின்: 635 801, போன்: +91 8526195370. இமெயில்: bhumii.trust@gmail.com

0000000000000000000000000000000000000000000000000

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...