Friday, June 5, 2020

தமிழ்நாட்டிற்கு வந்தது லோகஸ்ட்டா லோக்கல் வெட்டுக்கிளியா ? - DESERT LOCUST IN TAMILNADU






தமிழ்நாட்டிற்கு வந்தது
லோகஸ்ட்டா லோக்கல் வெட்டுக்கிளியா ?

DESERT LOCUST IN TAMILNADU 

ஏற்கனவே  கொரோனா லாக்டவுன்ல தூக்கம் வரமாட்டேங்குது, அப்பிடியே கொஞ்சம் அசந்து தூங்கினாலும் பாலைவன  வெட்டுக்கிளிகள் கூட்டம்கூட்டமா வந்து போகுது, ‘கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளி, நீலகிரியில் வெட்டுக்கிளி, கன்னியாகுமரியில்  வெட்டுக்கிளி’ன்னு பத்ரிக்கையில் செய்திகள் வயித்தை கலக்குது, இந்த வெட்டுக்கிளிங்க லோகஸ்டா ? லோகலா ? கட்டுரையை படிங்க !

கொரோனா நமது குரல்வளையை நசுக்கும் வேளையில்  வெட்டுக்கிளிகளின் நாசம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என்கிறார்கள், சாமானிய மக்கள்.
 
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வெட்டுக்கிளி செய்திகள் பீதியைக் கிளப்பியுள்ளன, வாழை, ரப்பர் ஆகிய தோட்டங்களில் ஆயிரம் இரண்டாயிரம் என வெட்டுக்கிளிகள் தாக்க ஆரம்பித்துள்ளது, நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சிலபயிர்களை தாக்கி உள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் அவை பாலைவன வெட்டுக்கிளிகள் என உறுதிப்படுத்தாத செய்தி, , அவை லோகஸ்ட் அல்ல லோக்கல் வெட்டுக்கிளிகள் என்று சொல்லிவிட்டது, தமிழ்நாடு அரசு. இதை அறிவித்தது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒரு நிபுணர் குழு.

பாலைவன வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட அந்த பகுதிகளில் பயணம்செய்து பார்வையிட்டு அந்த குழு சொன்ன அதிகாரப்பூர்வமான  செய்தி இது.

('வெட்டுகிளி ரொம்ப கெட்டகிளி' என்ற எனது முதல் கட்டுரையில் சாதா வெட்டுக்கிளிகளின் மூளையில் சுரக்கும் 'செரட்டோனின்' என்னும் ஹார்மோன்தான் அவற்றை லோகஸ்ட்' ஆக மாற்றுகிறது என்று எழுதியிருந்தேன், அதனை மீண்டும் ஒருமுறை படியுங்கள்)  

ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை வெட்டுக்கிளிகளுக்கு எதிராக பயன்படுத்துவதும்  இயற்கை வளங்களை அழிப்பதும் ஏறத்தாழ ஒன்றுதான் என்கிறார்கள், இயற்கை விவசாயிகள்.
 
இந்த சமயத்தில் அந்த நிபுணர் குழு இன்னொரு முக்கியமான செய்தி ஒன்றை சொல்லிவிட்டு போய் இருக்கிறது, வெட்டிக்கிளிகளை வேப்பெண்ணை தெளித்து கட்டுப்படுத்தலாம் என்பதுதான் அது, இந்திய விவசாயிகளுக்கு இது ஒரு இனிப்பான செய்தி.

அதுமட்டுமல்ல வெட்டிக்கிளிகளை வேம்பு பொருட்களின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதை ‘எஃப் ஏ ஓ’ வின் ‘டெசர்ட் லோகஸ்ட் இன்ஃபர்மேஷன் செண்டர்’ரும்  உறுதிப்படுத்துகிறது.


இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களில்  2020தான் முக்கியமான ஆண்டு.

 ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை வெட்டுக்கிளிகளால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள்.

பீகார், சத்தீஷ்கர், ஜார்கண்ட் ஆகியவற்றில்கூட வெட்டுக்கிளிகள் தாக்குதல் வரக்கூடும் என்று எச்சரிக்கிறது மத்திய அரசு.
 
மேற்கு மகராஷ்ட்ரா வழியாக இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் கர்நாடகா ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தாக்கக் கூடும்.
 
ராஜஸ்தானில் கிளம்பும் வெட்டுக்கிளிககளின் படை பீகார் மற்றும் ஒரிசா வினைத் தாக்கி பருவமழையின்போது அவை மீண்டும் ராஜஸ்தானுக்கு திரும்புமாம்.
 
வெட்டுக்கிளிகள் காற்று வீசும் திசையை அனுசரித்துதான் தனது அடுத்த பறக்கும் திசையை தீர்மானிக்கின்றன, இந்த அனுமானத்தை வைத்து அவற்றின் அடுத்த இலக்கை நாம் கண்டு பிடிக்கலாம்.
 
இந்த செய்திகளை எல்லாம் அளிப்பது ரோம் நாட்டில் செயல்படும் எஃப் ஏ வின் டெசெர்ட் லோகஸ்ட் இன்பர்மேஷன் சென்டர் என்னும் நிறுவனம்.

இதுவரை லோகஸ்ட் பாதிப்புக்கு உள்ளான சில இந்திய மாநிலங்கள் எப்படி எதிர்கொள்ளுகின்றன என பார்ப்போம்.

உத்தரப் பிரதேசம் 

ஜான்சி பகுதியில் மும்முறை தாக்கிய வெட்டுக் கிளிகளை பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்கிறது உத்தரப்பிரதேசம்.

ஆந்திராவில் னந்தபுரத்தில் அட்டகாசத்தை தொடங்கியிருகும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி பகுதிகளுக்கு செல்லலாம்.

செல்லும் வழியில் கரீம்நகர், ஜாகிதியால், நல்கொண்டா ஆகிய தெலிங்கானா மாநிலப்பகுதிகளையும் தாக்கலாம், அனந்தப்பூர் கடப்பா சித்தூர் பகுதிகளுக்கும் மேலும் பரவலாம்.
 
சித்தூர்வரை வர வாய்ப்பிருக்கும் இந்த வெட்டுக்கிளிகள் வேலூர், தாண்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தாண்டி தெக்குப்பட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும் ? யோசித்தால் வயிற்றில் புளியை கரைக்கிறது.

இப்போது வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்.
 
ரோபோக்கள் தெளிக்கும் மருந்துகள்

ஆர்கானோபாஸ்பரஸ் எனும் பூச்சிக்கொல்லி மருந்தைத்தான் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத் அதிகம் தெளிக்கிறார்கள்.
 
ராஜஸ்தானில் டுரோன்கள் ன்னும் ரோபோக்கள்தான் வானவெளியில் பறந்து இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கின்றன. இவை 15 நிமிடத்தில் இரண்டரை ஏக்கரில் தெளிக்கின்றன.
 
சப்தம் எழுப்பி பயமுறுத்துகிறார்கள்

தகரடின்கள், தகரடிரம்கள் ஆகியவற்றை அடித்து அதிகப்படியான சப்தத்தை எழுப்பி வெட்டுக்கிளியை பயமுறுத்தி விரட்டலாம். இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதைச் செய்கிறார்கள்.
 
கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து விரட்ட இது சிறந்த முறை என்கிறார்கள்.
 
பட்டாசு வெடிக்கிறார்கள்.

உத்திரப் பிரதேச விவசாயிகள் பலஇடங்களில் பட்டாசுகளை வெடித்து வெட்டுக்கிளிகளை விரட்டுகிறார்கள்.
 
தங்கள் மாநிலத்தில் தாக்குதல் நடத்திய 50 சத வெட்டுக்கிளிகளை அழித்துவிட்டதாக சொல்லுகிறது தெலுங்கானா அரசு.
தயார் நிலையில் மாநிலங்கள்

பதினைந்தாயிரம் லிட்டர் மாலத்தியான், குளோரோபைரிபாஸ், சைக்ளோத்ரின் ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்கிறது தெலுங்கானா மாநில அரசு.
 
‘90 ஆயிரம் எக்டர் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட நிலங்களில் 67 ஆயிரம் எக்டர் நிலப்பரப்பில் கட்டுப்படுத்தியுள்ளோம்’ இது ராஜஸ்தான் அரசு

குளோர்பைரிபாஸ் மற்றும் மாலத்தியான் மருந்துகளை வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு எதிராக பயன்படுத்த தயாராக உள்ளது’  என்கிறது டெல்லி அரசு.
 
நாங்கள் தயாராக இருக்கிறோம், போதுமான பூச்சிக்கொல்லி மருந்துகளும் தயாராக இருக்கின்றன, வெட்டுக்கிளிகள் வந்தால் நிச்சயமாக அவற்றை வெற்றிகரமாக அவற்றை கட்டுப்படுத்துவோம். இது ஹரியானா.
 
இமாச்சலப் பிரதேசத்திலுள்ள பயோ கண்ட்ரோல் லேப் மெட்டாரைசியம், பீவேரியா’ (METARHIZIUM, BEAUVERIYA) என்னும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
 
ங்கள் பகுதியில் இன்று பாலைவன வெட்டுக்கிளிகள் தங்கள் கைவரிசையைக் தொடங்க உள்ளது என்கிறார்கள் ஆந்திராவின் ஆனந்தபுரம் பகுதி விவசாயிகள்.


வெட்டுக்கிளிகளுக்கு  இரட்டைவாசல்
உலகில் 30 நாடுகளில் வெட்டுக்கிளிகள் தாக்கும் அபாயம் உள்ளது என்கிறது எஃப் ஓ ஏ’. 

குஜராத் கடற்கரையும் பாகிஸ்தான் பார்டரில் உள்ள ராஜஸ்தான் பகுதியும்தான்  இந்தியாவிற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள்  நுழைவதற்கான இரட்டை வாசல். 

எதிர்பாராத தாக்குதல்

1993-ம் ஆண்டில்வந்த வெட்டுக்கிளிகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டு தனது மோசமான தாக்குதலை தொடங்கிது, அதுதான் 2020 பிப்ரவரி வரை தொடர்ந்து, அவை போட்ட முட்டைகளும் குட்டிகளும்தான் இதைத் தொடர்கிறது, வழக்கமாக ஜூன் ஜூலை மாதங்களில் வரும் வெட்டுக்கிளிகள் தற்போது ஏப்ரல்மே மாதங்களிலேயே தனது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளது.

வேண்டுகோள்:
இந்த செய்தியை விவசாயிகளிடையே பரப்புங்கள், சந்தேகம் ஏதும் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள்.

தே.ஞானசூரிய பகவான், போன்: +91 8526195370

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...