Tuesday, June 16, 2020

அயினிப்பலா தரமான மரம் தரும் பழமரம் AYINIPALA FRUIT CUM TMBER TREE





அயினிப்பலா தரமான மரம் தரும் பழமரம்

AYINIPALA FRUIT CUM TMBER TREE

லூஸ்ஜாக்கெட்ஆரஞ்சு என்று ஒரு பெயர் கமலா ஆரஞ்சுக்கு உண்டு, கையை வைத்தால் போதும் தோல் கையோடு வந்துவிடும், அதுபோலத்தான் அயினிப்பலாவும். இதனையும் லூஸ்ஜாக்கெட் பலா என்று சொல்லலாம், இந்த சுளைகள் நல்ல அடர்த்தியான ஆரஞ்சு நிறமாக இருக்கும். ‘ஒரு பலாப்பழம் ஆப்பில் சைசில் இருந்தா எப்படி இருக்கும் ? அது தான் அயினிப்பலா.
00000000000000

இந்தியாவிற்கு சொந்தமானது அயினிப்பலா, இன்னும் சொல்லப்போனால் இந்த மரங்கள் மலையாள வாடை வீசியபடி கேரள மாநிலத்தில் அதிகம் தென்படும் மரம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ராவிலும் காணப்படும், இதன் பொதுப்பெயர் அல்லது ஆங்கிலப்பெயர் ஒயில்டு ஜேக் (WILD JACK) மற்றும் ஜங்கில் ஜேக் (JUNGLE JACK), என்றும் சொல்லுகிறார்கள்.

00000000000

பொதுப்பெயர் : ஒயில்டு ஜேக் (WILD JACK)
தாவரவியல் பெயர்: அர்டோகார்ப்பஸ் ஹிர்சுட்டஸ்  (ARTOCARPUS HIRSUTUS)
4. தாவரக்குடும்பம் :மோரேசியே  (MORACEAE)

00000000000000000000000

 பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)

ந்தி - கதல் (KATHAL)
கன்னடா – ஹெப்பலசு (HEBBALASU)
மலையாளம்:  அயனி, அஞ்சிலி,  அயினிபலவு (AYINI, ANJILI, AYINI PALAVU )
தமிழ் :  காட்டுப்பலா, அயினிப்பலா, பேய்ப்லா (KATTUPALA, AYINIPALA, PEYPALA)
தெலுங்கு : அடவிப்பனசா (ADAVIPANASA)
சமஸ்கிருதம்: லகூச்சா (LAKUCHA)
ஆங்கிலம் : ஒயில்ட் ஜேக், ஜங்கில் ஜேக் (WILD JACK, JUNGLE JACK)

000000000000000000000000000


பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

கேரள மாநிலத்தில் பெருமளவும் அடுத்தபடியாக கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாட்டிலும் பரவி உள்ளது, தென்னிந்திய மரம் என்று சொல்லலாம், அடிப்படையில் இது ஒரு இந்திய மரம்

ன்கள்: (USES)

இதன் பழங்களை சிறிய பலா என்று சொல்லலாம், தோலில் முட்கள் இருக்கும், ஆனால் இதன் தோலை கைகளால் சுலபமாக உறிக்க முடியும், சிரமம் இருக்காது.
 
மேல் தோலை நீக்கினால் அதன் சுளைகள் அத்தனையும் நடுத்தண்டில் ட்டிக் கொண்டிருக்கும், சிறுசிறு சுளையாக, இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையாக இருக்கும்.
 
இதன் பலாமரங்கள் உள்ள இடங்களில் பள்ளிகளின் எதிரிலும் பெட்டிக்கடைகளிலும் அயனி பலாப்பழங்கள் கூடைகளில் நிரம்பி வழியும்.

குழந்தைகளுக்கு பிடித்தமான பழம், மலிவான விலைக்குக்கிடைக்கும், ஒரு பத்து ரூபாய் தந்தால் ஐந்தாறு பழங்களை அள்ளித்தருவார்கள். 

கருப்பு நிறமாக இருக்கும் இதன் கொட்டைகள் நல்ல சுவையாக இருக்கும், வறுத்தும், சமைத்தும் சாப்பிடலாம்.
 
கேரளாவை ஒட்டி இருக்கும் கர்நாடகா கிராமங்களில்,  தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சோலைகளில் இந்த மரங்களையும் சாலைகளில் அயினி பழங்களையும் பார்க்கலாம் என்கிறார்கள்.

இந்த பகுதிகளில், வீட்டுக்கதவுகள், வாசக்கால், ஜன்னல்கள், தூண்கள், மோட்டுவளைகள், இதர தட்டுமுட்டு ஜாமான்கள்  எல்லாம்  அயினிப்பலாவில்தான் செய்தவைதானாம்.
 
இந்த பத்தைப் பற்றி ஒருத்தர் அழகாகச் சொன்னார், ஒரு பலாப்பழம் ஆப்பில் சைசில் இருந்தா எப்படி இருக்கும் ? அது தான் அயினிப்பலா என்றார்.
 
லூஸ்ஜாக்கெட்ஆரஞ்சு என்று ஒரு பெயர் கமலா ஆரஞ்சுக்கு உண்டு, கையை வைத்தால் போதும் தோல் கையோடு வந்துவிடும்,

அதுபோலத்தான் அயினிப்பலாவும். இதனையும் லூஸ்ஜாக்கெட் பலா என்று சொல்லலாம், இந்த சுளைகள் நல்ல அடர்த்தியான ஆரஞ்சு நிறமாக இருக்கும்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம், பேச்சிப்பாறை, பணசமூடு, மார்த்தாண்டம், மாத்தூர், தொட்டிப் பாலம், திறப்பு ஆகிய இடங்களில் தெருமுனை சிறுகடைகளில் கூட இந்த பழங்கள் விற்பனை செய்வதை பார்க்கலாம்.

அடுத்த தடவை நான் அந்தபக்கம் போனால் கண்டிப்பாய் அயினிப்பலாப் பழத்தை வாங்கி சாப்பிடாமல் வரமாட்டேன், நீங்கள் ?
 
அயனிப்பலா, தேக்குமரத்திற்கு இணையான தரமுள்ளவை, கேரள மாநிலத்தின் பரம்பரிய சிறப்புமிக்கஸ்னேக் போட்’ (SNAKE BOAT) என்னும் படகுகள் செய்உரிய மரம் இது.

ஸ்நேக்போட்கேரளவின் பாரம்பரியமிக்க படகுகள், அதனைச் செய்ய இந்த அயினிப்பலா மரத்தைதான் பயன்படுத்துவார்கள்.

வள்ளம்களி (VALLAM KALI) என்பது கேரள மாநிலத்தின் பரம்பரியமிக்க படகுத் திருவிழா, அதன் முக்கிய அம்சம் படகுப்போட்டி, அதில் கலந்துகொள்ளும் படகுகள் அயினிப்பலா மரத்தில்தான் செய்திருக்கும்

இந்த படகுகள் சாதாரணப்படகுகள் போல இருக்காது, ஒருபக்கம் உயர்ந்தும் அகன்றும் மீதமுள்ள பகுதி குறுகலாகவும் நீளமாகவும் இருக்கும்.

இந்த குறுகலான நீளமான பகுதியில்தான் படகு சவாரிக்காரர்கள் வரிசையாக உட்கார்ந்தபடி துடுப்பு தள்ளுவார்கள், கேரளாவில் மலயாள மண்ணில் அதன் பெயர் சுண்டிவள்ளம், அந்த படகுபோட்டியின் பெயர் வள்ளம்களி, அழகான இந்த படகுப்போட்டியை காண கண்கோடி வேண்டும்.

னிபலாவின் சிறப்பை தெரிந்து கொண்ட ஒருத்தர் இந்த மரங்களில் ஒரு கப்பலையே செய்தார், அதற்காக அவர் இங்கு  145 டன் அயினிப்பலா மரங்களை வாங்கினார்.
 
அந்த அயனிப்பலா மரங்களில் ஒரு கப்பல் செய்தார், அதில் தனது கடற்பயணங்களை மேற்கொண்டார், அந்த மக்கள் இன்னும் இதனை வாய்க்குவாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
 
1981 ஆம் ஆண்டு அவர் மஸ்கட் நாட்டில் இருந்து கேன்டன் என்ற நகருக்கு பயணம் செய்தார், கேன்டன்  நகர் தெற்கு சீனாவில் உள்ள ஒரு துறைமுக நகரம்.
 
அயனி பலா மரத்தில் கப்பல் செய்து தனது பயணத்தை மேற்கொண்ட அவர் அடிப்படையில் ஒரு இங்கிலீஷ்காரர், ஒரு இயற்கை நிகழ்வுகள் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர், அவருடைய பெயர் ‘டிம் செவெரின்’ (TIM SEVERIN).


மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING DISEASES)

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளில் பலவிதமான  உடல் உபாதைகளுக்கும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
 
தோலில் தோன்றும் கட்டிகள், புண்கள், வயிற்றுப்போக்கு, தோல் சம்பந்தமான நோய்கள், மிகுதியான ரத்தப்போக்கு விஷமுறிவு 

இலைகள் பட்டைகள் மற்றும் பழங்கள் பாரம்பரிய வைத்திய முறைகளில் எல்லாவற்றையும் மருந்தாக அல்லது மருந்துகள் தயாரிக்க பயனாகிறது.

மரங்களின் இயல்பு (DESCRIPTION)

ஈரப்பசை கூடுதலாக உள்ள இடங்களிலும் பசுமைமாறா காடுகளிலும் அயனிப்பலா விருப்பமாக வளரும், கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 1500 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் பிரச்சினையின்றி வளரும்.

கடல் மட்டத்திலிருந்து கொஞ்சம் உயரமான இடங்களில் விருப்பமாக வளரும், அதிகபட்சமாக ஆயிரம் மீட்டர் உயரம் வரை அதாவது 3280 அடி உயரம் வரை, நன்கு வளரும்.
 
மழை கொஞ்சம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வளரும், ஆண்டு சராசரிமழை  1500 மில்லி மீட்டர் மழை பெய்யக் கூடிய இடங்களில் கூட இது நன்றாக வளரும்.
 
மரங்கள் கிட்டத்தட்ட நூறு அடி உயரத்திற்கு அசராமல் வளம், அடி மரமும் நன்கு பருத்து வளரும், பதிநான்கு அடி சுற்றளவு கொண்ட அடிமரமாக வளரக் கூடியது.
 
ஆண் பெண் பூக்கள் தனித்தனியாக பூக்கும், ஆனால் பூங்கொத்துக்களாக பூக்கும்,  ஆங்கிலத்தில் இதனை இன்ஃபிளாரன்ஸ் என்பார்கள்.
 
பழங்கள் நல்ல இனிப்பு சுவை யாக இருக்கும், நன்கு கனிந்த பழங்கள் அடர்த்தியான ஆரஞ்சு நிறத்தில் அசத்தும், நம்ம ஊர் பலாவைப்போலவே இதன் கொட்டைகளையும் சமைத்து சாப்பிடலாம்.
 
இலைகள் கரும்பச்சை நிறமாக, பெரிய இலைகளாக, நீள்வட்ட வடிவமாக இருக்கும், இலைகளை ஒடித்தால் பால் பொங்கி வழியும்.
 
மேற்குத் தொடர்ச்சி மலையில் பசுமைமாறா காடுகளில் இந்த மரங்கள் பசுமை கூட்டுகின்றன, ஆனால் இவர் அருகிவரும் மரங்கள், அழிந்துவரும் மரங்கள் என்று அரசு அறிவித்துள்ளது

வளர்ப்பு முறை: (PROPAGATION)

விதைகளை விதைக்கலாம் கிளை தண்டுகளை வெட்டி நடலாம் பின் பதியங்கள் மூலம் கன்றுகளை உற்பத்தி செய்து நடலாம்.

இந்த எழுத்துரு உங்களுக்கு பிடித்திருந்த்தா ? நீங்கள் அயினிப்பலா சாப்பிட்டிருக்கிறீர்களா ? அயினிப்பலாபற்றி உங்கள் அனுபவம் என்ன ? உங்கள் தோட்டத்தில் அயினிப்பல இருக்கிறதா ? எழுதுங்கள், பேசுங்கள்.

எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், போன்: +91 8526195370, இமெயில்: gsbahavan@gmail.com
FOR FURTHER READING:

8888888888888888888888888888888


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...