மாயன் நாகரிகத்தின்
19
முக்கிய அம்சங்கள்
MAYAN CIVILIZATION
19 FACTS
000000000000000000
மாயன் நாள்காட்டி மிகவும் நுட்பமானது, ஆனால் அதில் உலக அழிவு பற்றி எதுவும் சொல்லப்படவில்லை, 5125 ஆண்டுகளுக்குத்தான் இந்த நாள்காட்டி திட்டமிடப்பட்டிருந்தது, அந்த நாட்காட்டியின்
கடைசிநாள் இன்றுதான், ஜூன் 21ம் தேதி
2020 ஆம் ஆண்டு. அதனால் இன்றுதான்
உலகின் அழிவு நாள் என்கிறார்கள். இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் வரை இந்த உலகம்
அழியாது என்று நான் நம்புகிறேன், தொடர்ந்து படியுங்கள், உலகம் அழியாது.
000000000000000000
மாயன்களின் மக்கள் தொகை அறுபது லட்சமாக இருந்தது எட்டு லட்சமாக குறைந்ததற்கு முக்கியமான
காரணம்
சின்னம்மை, அதுவும் கொரோனா மாதிரி ஒரு வைரஸ் நோய்தான், மாயன் இனத்தவர்
மட்டுமல்ல வட அமெரிக்காவின் பழங்குடி மக்கள் கூட இந்த சின்ன அம்மை நோய்க்குத்தான் மிக அதிகளவில்
பலியானார்கள் என்பது சரித்திரம்.
00000000000
மாயன் நாகரிகத்தின் அடையாளமாக இன்றும் அதன் நகரங்கள் பிரமிடுகள், கோயில்கள், அரண்மனைகள், மண்டபங்கள், இதர கட்டிடங்கள்
போன்றவை இன்றும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் மாயன் நாகரீகத்தின் 18 முக்கிய
அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. மெக்சிகோவில் புதிய பிரமிடு.
சமீபத்தில் மெக்சிகோவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மாயா பிரமிடுவின் உயரம்
240 அடி அதாவது 75 மீட்டர் உயரமானது,
ஏற்கனவே டியோதுகான் பிரமிடுதான் அதிக உயரமானது, அதன் உயரம் 153 அடி மட்டுமே.
2. இரண்டு புதிய
நகரங்கள்
அவை தவிர புதிய இடிபாடுகளுடங்கூடிய இரண்டு மாயன் நகரங்கள் புதிதாக அடர்த்தியான
காடுகளில் நடுவே இருந்தது, இதுவும்
தற்போது மெக்சிகோவின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3. கோகோவிலிருந்து
சாக்லட் செய்தார்கள்
உலகில் முதன் முதலாக கோகோவிலிருந்து சாக்லேட் தயாரித்தவர்கள் இவர்கள்தான், சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னால்
உலகின் முதல் சாக்லட்டை இவர்கள்தான் செய்தார்கள், இதுபற்றிய செய்திகளை மாயாவின் மண் பானை
ஓடுகளில் இன்றும் இருக்கின்றன.
கோகோவில் பானங்கள் தயாரித்தும் பருகினார்கள், விழாக்களில்
கொண்டாட்டங்களில் முக்கியமான பானமாக இருந்தது இந்த கோகோ பானம்.
4.மாயா மொழியில்
800 சித்திர எழுத்துக்கள்
ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களை கற்றுக்கொண்டால்
போதுமானது, தமிழ் படிக்க 252 எழுத்துகளைகற்றுக்கொள்ள
வேண்டும், மாயன் மொழியில் 800 எழுத்துக்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
5.காகிதங்கள்
செய்தார்கள்
அத்தி மரப் பட்டைகளில் காகிதங்களை இவர்கள்
தயாரித்தார்கள், அவை வெகு நாட்கள் நீடித்து நிற்குமாம். அதில்தான் அந்த புத்தகங்களை எல்லாம் அவர்கள் தயாரித்தார்கள்.
6. மாயன் புத்தகங்களை அழித்தார்கள்
மாயா மொழியில் எண்ணற்ற புத்தகங்களை மாயன்கள் எழுதி
இருந்தார்கள், அவற்றையெல்லாம் நெருப்பிலிட்டு
எரித்து அழித்துவிட்டார்கள், மாயன்களின்
புத்தகங்களையெல்லாம் அழித்தவர்கள் ஸ்பானியர் என்னும் ஐரோப்பியர்கள் அவர்கள்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
7. 1640 ஆம் ஆண்டில் டீகோ டெ லாண்டா என்ற ஸ்பெயின்
நாட்டுக் காரர் அவர்களுடைய புத்தகங்களைப் பற்றி சொல்லும்போது, ‘பொய்யும் புனை சுருட்டும் ஆக இருந்தது அதனால்தான் அவற்றை
எல்லாம் அழித்தோம், ஆனால் அதற்காக
அவர்கள் பெரிய அளவு வருத்தப்பட்டார்கள் என்றும் அவர் கூறினார், இது நடந்தது யூகாட்டக்
என்ற பகுதியில்.
8. மாயன் நாள்காட்டி
மாயன் நாள்காட்டி மிகவும் நுட்பமானது, ஆனால் அதில் உலக அழிவு பற்றி எதுவும் இதில் சொல்லப்படவில்லை, 5125 ஆண்டுகளுக்கு இந்த நாள்காட்டி திட்டமிடப்பட்டிருந்தது, நாட்காட்டியின்
கடைசி நாள்தான் இன்று, ஜூன் 21ம் தேதி 2020 ஆம் ஆண்டு. அதனால் இன்றுதான்
உலகின் அழிவு நாள் என்கிறார்கள். இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் வரை இந்த உலகம்
அழியாது என்று நான் நம்புகிறேன், தொடர்ந்து படியுங்கள், உலகம் அழியாது.
9. பற்களில்
நகை அணிவார்கள்
மாயன்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள விருப்பம்
கொண்டவர்கள், ஆண்களும் பெண்களும் தங்கள் தலைப்பகுதி உயரமாக
இருக்கும் படியாக அலங்கரித்து கொள்வார்கள், அவர்கள் தங்களுடைய முன் பற்களில் ஓட்டை போட்டுக்கொண்டு,
அந்த ஓட்டையில் நகைகளை அவர்கள் அணிந்து கொள்வார்களாம்.
10. வான்கோழி
வளர்க்க பிடிக்கும்
மாயன்களுக்கு வான்கோழிகள் வளர்ப்பு என்றால்
கொள்ளைப் பிரியம், அவற்றை இறைச்சிக்காக மட்டுமின்றி, அவற்றில் பலவிதமான பொருட்களை
அவர்கள் செய்து கொண்டார்கள்.
வான் கோழி இறகுகள் மற்றும் எலும்புகள் இவற்றில் பல விதமான பொருட்களை அவர்கள்
செய்தார்கள், அவற்றில் முக்கியமானவை விசிறிகள் மற்றும் இசைக்
கருவிகள் மற்றும் இதர கருவிகள்.
11. மக்கள்தொகை குறைந்தது ஏன்
மாயா மக்கள் மகத்துவம் மிக்க ஒரு நாகரீகத்திற்கு
சொந்தக்காரர்கள், இவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் வசித்தார்கள், அவர்களுடைய மக்கள்தொகை எப்படி இந்த அளவுக்கு குறைந்தது என்ற கேள்வி
நிறைய பேர் எழுப்புகிறார்கள்.
மாயன்கள் வாழ்ந்த காலகட்டம் என்பது 300 முதல் 600 வரையானது, அடுத்தடுது
ஏற்பட்ட கடுமையான வறட்சியும், தொடர்ச்சியாக அவர்கள் மீது தொடுக்கப்பட்ட போர்களும், கடற்கரையை நோக்கி புலம்பெயரும் தன்மையும்தான்
இந்த இனம்
அழிவதற்கு காரணமாக இருந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் அவர்கள் முற்றிலுமாக அழிந்து விடவில்லை, அவர்கள் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் வாழ்ந்து
வருகிறார்கள்.
12. உயிர்ப்பலி
கேட்கும் பீட்ஸ் பந்தாட்டம்
பீட்ஸ் என்னும் ஃபுட்பால்
விளையாட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது, இது வித்தியாசமான ஒரு கால் பந்தாட்டம், அது அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு, இந்தப் பந்து பார்க்க சாசர் பால் போல இருக்கும்,
ஆனால் இது மிகவும் எடையுள்ள ஒரு ரப்பர் பந்து.
கைகளை பயன்படுத்தாமல் இதில் விளையாட வேண்டும், பீட்ஸ் பந்தாட்டத்தின் போது விலா எலும்புகள் மற்றும் கை
கால்கள் முட்டிகள் சேதம் அடையாமல் இருக்க உடல் கவசங்கள் அணிந்து கொண்டு விளையாட வேண்டும்.
பந்தய விளையாட்டுகளில் தோற்றவர்களை உயிர்பலி கொடுப்பதும் வழக்கமாக
இருந்துள்ளது என்கிறார்கள்.
13. வியர்வை
குளியல் அறைகள்
மனித உடல் அன்றாடம் வேர்வை குளியலுக்கு உட்பட
வேண்டும், மனித உடல் ஆரோக்கியத்திற்கு இது அவசியம் என்றும்
நம்பினார்கள், இதற்கென பிரத்தியேகமான குளியலறைகளை அவர்கள்
வைத்திருந்தார்கள், இதனை ஆங்கிலத்தில்
‘சுவெட் ஹவுசஸ்’ என்கிறார்கள்.
14. ஆவிகளுடன் பேசுவார்கள்
ஆவிகளுடன் பேசும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது, அந்த சமயங்களில் அவர்கள் ஆழ்ந்த மயக்க உணர்வில்தான் செய்வார்கள்,
அப்படிப்பட்ட
ஆழ்ந்த மயக்க உணர்வு வருவதற்கு புளிக்கவைத்த தேனை பயன்படுத்தினார்கள்.
இதனை பால்ச்சி என்ற பெயரில் அழைத்தார்கள், இந்த பால்ச்சி எனும் மதுவை அவர்கள் எனிமா மூலமாக தங்கள்
உடலில் ஏற்றிக் கொள்ளுவார்கள்.
மிகவும் புளிப்படைந்து தேனை குடிப்பது கடினம், அதனால் இந்த எனிமா முறையைக் கையாண்டார்கள், ஆவிகளுடன் பேசுவதற்காக இந்த முறையை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
14. விவசாய காலண்டர்
எப்போது ஒரு பயிரை விதைக்க வேண்டும் எப்போது களையெடுக்க வேண்டும்
எப்போது அறுவடை செய்ய வேண்டும் ? இப்படி சாகுபடி
முறைகளை சொல்வதற்காக தனியாக ஒரு விவசாய காலண்டர்கள் வைத்திருந்தார்கள்.
மக்காச்சோளம், அவரை, மிளகாய், ஸ்குவாஷ் ஆகிய பயிர்களை எல்லாம்
தங்களுடைய வயல்களில் என்று பயிரிட்டார்கள், தேவை போக எஞ்சியதை
அவர்கள் உள்ளூர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தார்கள்.
சூரியன், சந்திரன், நட்சத்திரம், தட்பவெப்ப நிலைகள், இப்படி இயற்கையை அனுசரித்து தங்களுடைய பயிர்களின் சாகுபடி முறையை தீர்மானம்
செய்தார்கள்.
பயிர் சாகுபடி செய்யும் நிலப்பகுதிகள் அதிக
ஈரத்தன்மை உடையதாக இருந்த்தால் தங்களுடைய வயல்களில் வாய்க்கால்களை அமைத்து தண்ணீரை வடித்தார்கள்.
மேட்டுக்கால் நிலங்களில் தானியங்களை அறுவடை செய்தார்கள்,
பள்ளக்கால் வாய்க்கால்களில் மீன் அறுவடை
செய்தார்கள்.
உயரமான சரிவான நிலப்பகுதிகளில் படிப்பாத்திகளை
அமைத்து சாகுபடி செய்தார்கள், தாழ்வான
பகுதிகளில் சமவெளிப் பகுதிகளில் பெரும் பரப்பை வயல்களாக சீரமைத்து பயிர் சாகுபடி செய்தார்கள்.
மரம் செடி கொடிகள் புதர்கள் அனைத்தையும் வெட்டி
அப்புறப்படுத்துவார்கள் பின்னர் பயிர் சாகுபடி செய்வார்கள், சில ஆண்டுகளில் அந்த
நிலத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தீர்ந்துபோகும் பின்னர் புதிய இடம் ஒன்றினைத்
தேர்வு செய்து மறுபடியும் முதலிலிருந்து விவசாயத்தை தொடங்குவார்கள்.இந்த முறையை ஆங்கிலத்தில் ‘சிலாஷ் அண்ட் பர்ன்” என்று சொல்லுகிறார்கள்,
15. மாயனின்
பொழுதுபோக்கு அம்சங்கள்
வானவியல், கட்டிடக்கலை, நாள்காட்டிகள், பல்வேறு கலைகள், கணிதவியல் ஆகியவை அனைத்திலும் அவர்கள் முன்னணியில் இருந்தார்கள், நீண்ட நேர கடுமையான வேலைகளுக்கு ஊடாக தங்களை
உற்சாகப் படுத்திக் கொள்ளவும் செய்வார்கள், அவர்கள் இசைக்
கருவிகளில் இசை மீட்டுவார்கள், பாடல்கள் பாடுவார்கள், நடனம் ஆடுவார்கள், பந்து விளையாடுவார்கள்
- இவையெல்லாம்
அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்கள்.
16. மாயனின்
மொழி
மாயா மக்கள் பேசுவது ‘யூகாட்டெக் மாயா’ என்பது சுருக்கமாக இதனை மாயாமொழி என்று
சொல்லலாம், மெக்சிகோவில் இவர்கள் பொதுவாக பேசும் மொழி
இந்த யூகாட்டக்மாயா தான்.
யூகாட்டக் பெனின்சுலா பகுதியிலும் பேசும் மொழி இதுதான்,
1966 ஆம் ஆண்டு கணக்குப்படி இன்று சுமார் 8 லட்சம் பேர் இந்த
மொழியைப் பேசுகிறார்கள், ஒரு காலத்தில்
சுமார் 60 லட்சம் பேர் மாயா மொழியை பேசுபவர்களாக இருந்தார்கள்.
17. இயற்கையை
வணங்கினார்கள்
சூரியக்கடவுள் மழைக்கான கடவுள்
மக்காச்சோளத்துக்கு கடவுள் என இயற்கையை தெய்வமாக அவர்கள் வணங்கினார்கள்.
18. இறுதிச்சடங்கு
இறந்தோரை எப்படி அவர்கள் அடக்கம் செய்வார்கள்
என்று பார்க்கலாம், இறந்த பிறகு
அவருடைய வாயில் ஒரு மக்காச்சோளக் கதிரை வைப்பார்கள், அது அவருடைய
மறுபிறப்பின் அடையாளமாம், இறந்த பின்னால் அடுத்த உலகிற்கு
செல்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது,
அப்படி போகும்போது அந்த அந்த மக்காச்சோளம்
அவர்களுக்கு உணவாக உதவுமாம்.
அது மட்டுமல்லாமல் அவர்கள் வாயில் ஒரு விலையுயர்ந்த
மணியை வைப்பார்கள், அது மேல் உலகிற்கு செல்வதற்கான பயணச்செலவுக்கான பணம் என்று சொல்கிறார்கள்.
19. வைரஸ் நோய்க்கு
பலி
மாயன்களின் மக்கள் தொகை அறுபது லட்சமாக இருந்தது எட்டு லட்சமாக குறைந்ததற்கு முக்கியமான
காரணம்
சின்னம்மை, அதுவும் கொரோனா மாதிரி ஒரு வைரஸ் நோய்தான், மாயன் இனத்தவர்
மட்டுமல்ல வட அமெரிக்காவின் பழங்குடி மக்கள் கூட இந்த சின்ன அம்மை நோய்க்குத்தான் மிக அதிகளவில்
பலியானார்கள் என்பது சரித்திரம்.
000000000000000
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி
இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91
8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com
FOR FURTHER READING:
www.en.m.wikipedia.org / Maya Calendar
www.en.m.wikipedia.org / Maya Civilization
www.bbc.co.uk / Why was farming so important
to Mayas.
www.history.com / Mayans: Civilization, Culture & Empire - History
www.express.co.uk / Mayan Calendar Warning:
Researcher claims serious.
0000000000000000000000000
No comments:
Post a Comment