Sunday, June 21, 2020

நிலக்கடலையும் 13 ஆரோக்கிய குறிப்புகளும் - GROUNDNUT 13 HEALTH TIPS






 
நிலக்கடலையும் 13 ஆரோக்கிய குறிப்புகளும்

GROUNDNUT 13 HEALTH TIPS




நிலக்கடலைக்கு,  வேர்க்கடலை, மணிலா, மணிலாகொட்டை, மல்லாட்டை பீநட், இப்படி பலபெயர்கள் உண்டு. 

நிலத்தில் விளைவதால் அது நிலக்கடலை, பட்டாணி போல இருப்பதால் அது பீநட், கிரவுண்டில் விளைவதால் அது கிரவுண்ட் நட், வேர்களில் காய்ப்பதால் அது வேர்க்கடலை, அதன் சொந்த ஊர் பெரு நாட்டில் வைத்த பெயர் மணி, அத்துடன் ‘லா’ சேர்க்க நம்நாட்டில் அது மணிலா ஆனது, காலப்போக்கில் அது மணிலாகொட்டை னது, அது மருவி கொஞ்ச நாளில் மல்லாக்கொட்டை ஆனது, மல்லாகொட்டை போட்டு சம்பாதித்து வாங்கிய கடனை திருப்பி அடைத்து கடன் சீட்டை கிழித்துப்போட்டதால் அது சீட்டுகிழிச்சான் கொட்டை ஆனது.  
ஆக நமக்கு நிலக்கடலை, வடக்கில்  ந்தியில் அது மூங்பள்ளி,  அதன் தாவரவியல் பெயர்ராச்சிஸ் ஹைப்போஜியா.


1. இளமையைப் பாதுகாக்கும்

வைட்டமின் சி போதுமான அளவு நிலக்கடலையில் உள்ளது, வைட்டமின் சி நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது, தொடர்ந்து நிலக்கடலை சாப்பிடும்போது கொல்லாஜன் எனும் ரசாயனம் சுரக்கிறது, அத்தோடு நமது தலையில் பாலிக்கிள் என்று சொல்லும் மயிர்கால்களை அது உறுதிப்படுத்துகிறது, அதனால் தலையில் மயிர் கொட்டுதல் நின்று போகிறது வழுக்கை விழுவதும் தடைபடுகிறது, அதனால் ‘தொடர்ந்து வேர்கடலை  சாப்பிடுங்கள், ஆண்களுக்கு  வழுக்கை விழாது, பெண்களுக்கு நீண்ட கூந்தல் நிலைத்திருக்கும்’ என்கிறார்கள் நிபுணர்கள்.
நமக்கு வயதாகி விட்டது என்பது நமக்கு முதலில் சொல்வது நமது சருமம் என்னும் தோல்தான், நமது தோலில் ஏற்படும் சுருக்கங்கள், வெடிப்புகள், மெல்லிய பள்ளமான கோடுகள், இவைதான் முக்கியமான அடையாளங்கள், இவற்றையெல்லாம் வராமல் தடுக்கும் சக்தி நம் நிலக்கடலைக்கு உண்டு.

2. உடல் எடையைக் குறைக்கும்

உடல் எடை குறைய அற்புதமான உணவு நிலக்கடலை என்று பல சோதனைகள் நிரூபித்துள்ளன, தினமும் ஒரு குறிப்பிட்ட குறைவான அளவு சாப்பிட்டு வந்தால் நமது எடையை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். நிலக்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.

3. ரெஸ்வெரட்ரால் சருமத்தைப் பாதுகாக்கும் 

ரெஸ்வெரட்ரால் என்பது பாலிஃபீனால் காம்பவுண்டுகளில் ஒன்று,  இவை ஆண்டி ஆக்சிடெண்டுகளாக வேலைபார்க்கும், கேன்சர் மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும், நமது வறண்டுபோன சருமத்தை ஈரப்பசையுடன் கூடியதாக பராமரிக்க உதவுகிறது, இதனை ஆன்டி-ஏஜிங் இன்கிரிடியண்ட் என்று சொல்லுகிறார்கள், சருமத்தை இளமையாக இது பராமரிக்கிறது.
 
இந்த ரெஸ்வரெட்ரால் ரசாயனத்தை ‘சூப்பர் ஹீரோ பார் த ஸ்கின் என்று சொல்லுகிறார்கள், இது சருமத்திற்கு பளிச்சென்ற ஒரு தன்மையைத் தருகிறது, தேய்ந்து ஒய்ந்துபோன முதுமையான சருமத்தின் தோற்றத்தை பளிச்’என இளமையாக மாற்றுகிறது வேர்கடலை எனும் நிலக்கடலை.

4. நினைவாற்றலை மேம்படுத்தும்

வைட்டமின் பி3, நயாசின், பிளேவனாய்டுகள் ஆகியவை மூளையின் ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது, இதனால் மூளையின் முழுப்பரப்பிலும் இரத்த ஓட்டம் சீராகிறது, இந்த மூன்றும் நிலக்கடலையில் போதுமான அளவில் இருக்கிறது, மறக்காமல் நிலக்கடலையை சீராக சாப்பிட்டு வந்தால் நமது நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

5. ரத்த சர்க்கரையைப் பராமரிக்கிறது

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை பராமரிக்க உதவுகிறது மாங்கனிஸ், மாங்கனிஸ் ரத்தத்தில் இருக்கும் கால்சியத்தை நீக்குவதன் மூலம் இதனை செய்கிறது, நிலக்கடலையில் 21 சதம் மாங்கனீஸ் சத்து உள்ளது,  இதனால் நிலக்கடலை சாப்பிடுவது இரத்த சர்க்கரையை பராமரிக்க உதவுகிறது.

6. புற்றுநோயைத்  தடைசெய்யும்

பீட்டா சீட்டோஸ்டிரால் இது நமது உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கக்கூடிய ரசாயனம், இந்த ரசாயனம் நிலக்கடலையில் கணிசமான அளவில் உள்ளது, அதனால் இது ஆண் பெண் இருபாலரிடமும் புற்றுநோய் வருவதை 58% வரை தடை செய்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.
 
குறிப்பாக கழுத்து மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் கூட அது மேலும் பரவாமல் தடுக்கும் சக்தி நிலக்கடலைக்கு உண்டு,  இதற்கு குறைந்த பட்சம் வாரத்திற்கு மூன்று முறையாவது அவர்கள் வேர்க்கடலையை சாப்பிட வேண்டும்.

7. மிகுதியான புரதச்சத்து தரும்

நிலக்கடலையில் 26 சதம் புரதச்சத்து அடைந்துள்ளது இது இறைச்சியில் இருக்கும் புரதத்தை விட அதிகம், ஒரு கிலோ நிலக்கடலை ஒரு கிலோ இறைச்சியில் இரண்டிலும் எவ்வளவு புரதம் இருக்கு என்று கணக்கு பார்த்தால் நிலக்கடலையில்தான் புரதம் அதிகமாக இருக்கும்


8. இம்சையில்லா கொழுப்பு தரும்

நிலக்கடலை சாப்பிடும்போது  சாப்பிட்டோம் என்று சொல்லும்படியான நிறைவு கிடைக்கும், அதற்கு காரணம் அதில் இருக்கும் கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள், இதனை ஆங்கிலத்தில் ‘ஃபில்லிங்க்’ என்கிறார்கள். 
  
இதில் பெரும்பகுதியாக இருப்பது மானோ சேச்சுரேட்ட்ட்  வகை கொழுப்பு, அதாவது இதயத்திற்கு இம்சை தராத கொழுப்பு.
 
நிலக்கடலையில் ஏகப்பட்ட வைட்டமின்களும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன, வைட்டமின்கள் பி6 உட்பட 12 வகையான வைட்டமின்கள் உள்ளன, 26 வகையான தாது உப்புக்கள் அடங்கியுள்ளன.
 
நிலக்கடலையில் உள்ல முக்கியமான தாது உப்புகள் மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு மற்றும் செலினியம்.

9. பல நோய்கள்வர யோசிக்கும்

நிலக்கடலை சாப்பிடுவதால் நோய்களின் தாக்குதல்களும், பாதிப்புகளும் குறையும், சர்க்கரை நோய்,  கால் பிளாடர் என்னும் பித்தப் பை நோய், குடல் புற்றுநோய், ஆகியவை வராமல் தடுக்கலாம், அதற்கு  வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 

10. ரெஸ்வெரட்டால் எனும் மாயஜாலம்

சிலரை பார்த்தவுடன் நாம் சொல்லுகிறோம் உங்களப் பாத்தா அவ்வளவு வயசான மாதிரி தெரியலன்னு, விசாரிச்சுப் பார்த்தா அனேகமா அவங்க நிறைய நிலக்கடலை சாப்பிடுவாங்க, அதுக்கு காரணம் ரெஸ்வெரட்டால் எனும் மாயஜாலம்தானாம்.
 
நிலக்கடலையில் கணிசமான அளவு ரெஸ்வெராட்ரால் (RESVERATOL) என்னும் ரசாயனம் உள்ளது, இந்த ரெஸ்வெராட்ரால் திராட்சை மற்றும் ரெட் ஒயினில் அதிகமான அளவு இருக்கிறதாம்.
 
ரெட் ஒயின் மற்றும் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் இளமையாக இருப்பார்களாம், அந்த இரண்டும் இளமையை பாதுகாக்கும், உண்மையான வயதை காண்பிக்காது.
 
அதுபோல நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கும்  வயது தெரியாது, காரணம் வேர்கடலையில் இந்த ரெஸ்வரெட்ரால், இதன் விதை மற்றும் அதன் தோலிலும் இந்த ரெஸ்வெராட்ரால் நிரம்ப உள்ளது.
 

11. மாதவிடாய் நின்றால் கொலஸ்ட்ரால் கூடுமா ?

பொதுவாக வயதான பெண்மணிகளுக்கு மாதவிடாய் நின்ற பிறகு கொலஸ்டிரால் அளவு ஏறிவிடுமாம், அவர்களுக்கு நிலக்கடலையை தொடர்ந்து தந்தால் அவர்களின் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து விடுமாம்.

தற்குக் காரணமாக இருப்பது நிலக்கடலையில் இருக்கும் பைட்டோஸ்டீரால்ஸ் என்னும் தாவர ரசாயனம், இந்த பைட்டோஸ்டீரால்ஸ் நிலக்கடலை மூலமாக அவர்களுடைய உடலில் சேரும்போது அது கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து விடுகிறது.

12. ஆயுர்வேத மருத்துவத்தில் நிலக்கடலை

ஆயுர்வேதத்தில் நிலக்கடலைக்கு நிரந்தர இடம் உண்டு, உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், நினைவு இழப்பு, இப்படி அனைத்து நோய்களையும் நிலக்கடலை குணப்படுத்தும், இதற்கான மருந்துகளை ஆயுர்வேத மருத்துவம் பல ஆண்டுகளாக செய்து மக்களுக்கு தந்து வருகிறது.

13. நிலக்கடலையில் இருக்கும் சத்துக்கள்

100 கிராம் நிலக்கடலையில் எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம், கலோரிச்சத்து  527 கிலோ கலோரி,  கார்போஹைட்ரேட் 16 கிராம்,  நார்ச்சத்து 9 கிராம், சர்க்கரை 4 கிராம், புரதம் 28 கிராம், கொழுப்பு 49 கிராம், கரையும் கொழுப்பு 7 கிராம், பாலி அன்சாச்சுரேட்டேட் ஃபேட் 16 கிராம், மானோ அன் சாச்சுரேட்டட் ஃபேட் 24 கிராம், கொலஸ்ட்ரால் இல்லை, சோடியம் 18 மில்லி கிராம்,  பொட்டாசியம் 705 மில்லி கிராம்,  வைட்டமின் பி1 - 0.9 மில்லி கிராம், வைட்டமின் b2 - 0.2 மில்லி கிராம், போலேட் 350 மில்லிகிராம், கால்சியம் 134 மில்லிகிராம், அயன் - 6.7 மில்லிகிராம், மக்னீசியம் - 245 மில்லிகிராம் பாஸ்பரஸ் 549 மில்லி கிராம்.
 

நிலக்கடலையை பயன்படுத்துவதில் உங்கள் அனுபவம் என்ன ? நிலக்கடலையை எப்படி சாப்பிடுவீர்கள் ? வானவெளி வீர்ர் ஆலன் ஷெப்பர்ட் என்பவர் ராக்கெட்டில் போகும்போதே வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டே போனாராம், நீங்கள் எப்படி ? எழுதுங்கள் ! பேசுங்கள் !
உங்களுக்கு ஓர் நல்ல சேதி ! நான் ‘பூமி ஞானசூரியன்’ என்ற பெயரில் ஒரு ‘யூடியூப்’ சேனல் தொடங்க உள்ளேன் ! அப்புறம் என்ன இது போல செய்திகள் எல்லாம் வீடியோவாக வரும், உங்களுக்கு லிங்க் அனுப்பி வைப்பேன், பி டி எஃப்’ ல் படிக்கும் சிரமம் இருக்காது, உங்கள் கருத்தை சொல்லுங்கள் !
 
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.paulaischoice - skincare / Five Super Anti Aging Antioxidants your skin Needs.
www.healthywomen.org / 5 Reasons to Love Peanuts
www.m.netmeds.com / Groundnuts// Peanuts: Nutrition, Health Benefits For Heart, Diabetes.







No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...