Thursday, June 18, 2020

நாவல் பழத்தின் 11 ஆரோக்கிய குறிப்புகள் - ELEVEN HEALTH TIPS OF JAMUN





நாவல் பழத்தின்

11 ஆரோக்கிய

 குறிப்புகள்

ELEVEN HEALTH TIPS OF JAMUN

000000000

 
கேன்சர் எனும் புற்றுநோய்களைத் தடுக்கும், பாலிஃபீனால், ஆன்தோ சைனின் போன்ற ரசாயனங்கள் இதனை செய்கின்றன, இவை கேன்சர் திசுக்களை எதிர்த்துப் போராடும்,  கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை பெறுபவர்கள் அடிக்கடி நாவல் பழம் சாப்பிடுவது நல்லது, அவர்களுடைய உடல் நலனை சீராக வைத்துக்கொள்ள அது உதவும்.
 

1. பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய  ஒன்று நாவல் பழம், புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், அயன், வைட்டமின் சி, வைட்டமின் பி, ஆன்ட்டிஆக்ஸிடென்டுகள், மக்னீசியம், பொட்டாசியம், குளுக்கோஸ், பிரக்டோஸ், மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்டதுடன், குறைவான கலோரி சத்தும் உள்ள பழம்.

2. சர்க்கரை நோய்க்கு இது ஒரு வரப்பிரசாதம்,  சர்க்கரையை கட்டுக்குள் பராமரிக்கும், தினமும் நாவல் பழம் அல்லது நாவல் பழச்சாறு சாப்பிடுவது சர்க்கரையை கட்டுப்படுத்தும், இன்சுலின் சுரக்க அல்லது சுரப்பை அதிகரிக்க உதவும்.
 
3. இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும், இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இந்த காரியத்தைச் செய்யும், ரத்த அழுத்தம், மிகையான ரத்த அழுத்தம் அதாவது ஹைபர் டென்ஷன், ஆகியவற்றை இது கட்டுப்படுத்தும். ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
 
4. கேன்சர் எனும் புற்றுநோய்களைத் தடுக்கும், பாலிஃபீனால், ஆன்தோ சைனின் போன்ற ரசாயனங்கள் இதனை செய்கின்றன, இவை கேன்சர் திசுக்களை எதிர்த்துப் போராடும்,  கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை பெறுபவர்கள் அடிக்கடி நாவல் பழம் சாப்பிடுவது நல்லது, அவர்களுடைய உடல் நலனை சீராக வைத்துக்கொள்ள அது உதவும்.
 
5. நாவல் பழத்தில் குறிப்பிடும்படியான தாவர இரசாயனங்கள் நிறைய உள்ளன, இவைதான் இந்த நாவல் பழத்திற்கு நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியை அளிக்கிறது.
 
6.ஆன்தோ சைனின், பிளேவனாய்டுகள், எல்லாஜிக் அமிலம், கேல்லிக் அமிலம், இவை எல்லாமே கேன்சருக்கு எதிரா செயல்படும் தாவர இரசாயனங்கள்.
 
7. நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி நமது உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை நீக்குகிறது, அதுபோல வயிற்றுப்போக்கு வயிற்றுக்கடுப்பு வாந்தி மற்றும் குமட்டல், இரிடபிள் வல் சின்றோம் என்று சொல்லக்கூடிய வயிறு சம்பந்தமான தொடர் பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய சக்தி இந்த நாவல் பழத்திற்கு உள்ளது.
 
8. இது ஒரு இயற்கையான கிருமிநாசினி, உதாரணமாக இதனை மவுத்வாஷ் என்று சொல்லக்கூடிய வாயினை சுத்தம் செய்யும் கிருமி நாசினியாக பயன்படுத்தலாம், இதனுடைய பழத்தசையை பயன்படுத்தி பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை குணப்படுத்தலாம்.

9. தோலில் ஏற்படும் வெடிப்பு தோல் வறட்சி முகப்பருக்கள் மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும், இதற்கு உதவியாக இருப்பது நாவல் பழங்களில் இருக்கும் இரும்பு சத்து.
 
10. வைட்டமின் சி சத்து உங்களுடைய சருமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது, இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அவர்களுடைய சருமத்தில் மாசிமரு இல்லாமல் அழகாக பராமரிக்க உதவுகிறது.
 
11. மேலும் இந்த வைட்டமின் சி சத்து நமது கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க, பாதுகாக்க, மேம்படுத்த உதவுகிறது, இப்படி நமது ஆரோக்கியத்திற்கு 10 விதமான வழிகளில் உதவுகிறது இந்த நாவல் பழங்கள்.
 000000000000

இத்தகைய  நாவல் பழங்களை தினசரி சாப்பிடுவது நல்லது, ஆனால் இவை ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை, இது கோடை பருவத்தில் மட்டும்தான்  கிடைக்கும்

வியாபார ரீதியா தமிழகத்தின் பழங்களில் முக்கியமான பழம் இது என்று சொல்லலாம், இந்த நாவலில் ஜம்புநாவல் பெரும்பாலும் ஆப்பிளைவிட அதிக விலைக்கு விற்பனை ஆகிறது, இதனை தமிழ்நாட்டின் ஆப்பிள் என்று கூட சொல்லலாம்.
 
வாழை, பப்பாளி, சப்போட்டா, கொய்யா இவை எல்லாம் தமிழ்நாட்டிலேயே பயன்படுத்தக் கூடிய முக்கிய பழங்கள், அவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தால், நாவல் பழத்தில்தான் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருக்கிறது.
 
இன்னொன்று இந்த பழத்திலிருந்து மதிப்பு கூட்டுதல் மூலமாக ஜாம், ஜெல்லி ஸ்குவாஷ் போன்ற பலவித உணவு பண்டங்களை தயார் செய்யலாம்.

பிளாக்பெரி, ரெட் ரேஸ்ப்பெரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி ஆகியவற்றை ஒப்பிடும்போது இந்த பழங்களுக்கும் நாவல் பத்திற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை, என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.

நாவல் பழத்தில் இருக்கும் அபரிதமான ஊட்டச்சத்துக்கள் ஒருபக்கம் இன்னொரு பக்கம் இதில் இருக்கும் மருத்துவ பண்புகள் இரண்டையுமே நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்த விஞ்ஞானிகள்.
000000000000000

கண்டிப்பா நிறைய்யபேர் வீட்டுல ஒரு மரமாச்சும் இருக்கும், கொட்டை நாவலா ? ஜம்புநாவலா ? இதுதான் சீசன், இப்பொ காய்க்குமே ! எனக்கு ஜம்புநாவல்ன்னா உசிறு ! உங்களுக்கு பிடிக்குமா ? சுட்டபழம் பிடிக்குமா ? சுடாத பழமா ?

தே.ஞானசூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு இயக்கம், தெக்குபட்டு, திருப்பத்தூர மாவட்டம், பின்: 635 801, போன்: +91 8526195370.

00000000000000000

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...