உத்தாலம் ஒரு மருத்துவ மரம்
UTHALAM A MEDICINAL TREE
வேறு தமிழ் பெயர்கள்: சிறுநறுவிலி,
நரிவிரியன்
பொதுபெயர் : லாங் லீஃப்
கார்டியா, லாங் லீஃப் சாசர் பெர்ரி (LONG LEAF CORDIA, LONG LEAF SAUCER BERRY)
தாவரவியல் பெயர்: கார்டியா
சைனென்சிஸ் (CORDIA SINENSIS)
தாவரக்குடும்பம் : போரோஜினேசியே
(BOROGINACEAE)
பிற மொழிப்பெயர்கள் (OTHER LANGUAGE NAMES)
மலையாளம் : நரிவீரையன்,
வேரி (NARIVIRAIYAN, VERI)
இந்தி : லசோரா (LASORA)
பரவி இருக்கும் இடம்: (DISTRIBUTION)
- கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதி
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி
- வெப்பமண்டல ஆப்பிரிக்கா
- அரேபியா
- மத்திய தரைக்கடல் பகுதி
- இந்தியா
- ஸ்ரீலங்கா
- மடகாஸ்கர்
- பாகிஸ்தான்
- சோமாலியா
- சூடான்
- தான்சானியா
- ஜிம்பாப்வே
- இந்தியாவில் பீகார், டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், வெஸ்ட் பெங்கால், ராஜஸ்தான்.
- மகாராஷ்டிராவில் நாசிக், பூனா, தானே.
- கர்நாடகாவில் சிக்மகளூர், தார்வார், வடகேனரா.
- கேரளாவில் இடுக்கி.
- தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம்.
பயன்கள் (USES)
- பழங்களைப் பறித்து பச்சையாக சாப்பிடலாம்.
- சமைத்தும் சாப்பிடலாம்
- இனிப்பு புளிப்பு கலந்த சுவை தரும்
- குழந்தைகளுக்கு பிடித்தமான பழம்
- பழங்கள் ஆரஞ்சு சிவப்பு நிறமாக இருக்கும்.
- இரண்டு சென்டி மீட்டர் நீளம் இருக்கும்.
- ஒன்று முதல் நான்கு விதைகள் இருக்கும்.
- மரங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யலாம்.
- இலைகளை கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம்
- குரங்குகள், பறவைகள், ஒட்டச்சிவிங்கிகள், மான் ஆகியவற்றிற்கு உணவாகிறது.
மருத்துவப் பயன்கள் (MEDICINAL
PROPERTIES);
கீழ்கண்ட நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவப்பண்புகளைக்
கொண்டது.
- குடல்புண்
- சுவாசநோய்
- நீரிழிவு
- முகப்பரு
- மூலம்
- பலவீனம்
- கரும்படை
- உதிரப்போக்கு
- வாய்நாற்றம்
- வாய்ப்புண்
- இதன் வேர்கள் கருச்சிதைவை தூண்டும், இதற்கு விரல் அளவு உள்ள மூன்று வேர்த்துண்டுகளைத் தின்றால் போதும், வேர் அல்லது பட்டை கஷாயம் கொடுத்தால் வயிற்று உபாதைகள் சரியாகும், வேர்க்கஷாயம் மலேரியாவை குணப்படுத்தும்.
மரங்களின் இயல்பு (PROPERTIES):
- அடர்த்தியாக வளரும்
- 4 முதல் 12 மீட்டர் வர உயரமாக வளரும்
- உணவு மருந்து மற்றும் இதர பொருட்கள் செய்ய உதவும்
- ஆப்பிரிக்காவில் இதன் பழத்திற்காக வளர்க்கிறார்கள்.
- பூக்கள் கவர்ச்சிகரமான வாசம் உள்ளவை.
- ஆற்றங்கரை, மணல் சார்ந்த நிலப்பகுதி ஆகியவற்றில் நன்றாக வளரும். பாறைகள் நிறைந்த கல்லாங்கரட்டு பகுதியில் விரும்பி வளரும்.
- இதனைக் கூட சாப்பிட பயன்படுத்தலாம்.
- பூக்கள் வெள்ளை நிறத்தில் அல்லது கிரீம் நிறத்தில் இருக்கும்
- பழங்கள் ஆரஞ்சு சிவப்பு நிறமாக இருக்கும்.
வளர்ப்பு முறை
- வரண்ட பகுதிகள்
- மிதமான வறண்ட பகுதிகள்
- கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் வரை
- ஈரச் செழிப்பான பகுதிகள்
- உப்பு மண்ணிலும் வளரும்
- மழைக்காலத்தில் ஏற்படும் நீர் தேக்கத்தை சமாளிக்கும்.
- வடிகால் வசதியும் முழு சூரியன் காய்வதும் பிடிக்கும்
- கிளைகளைத் தரித்தாலும் அடி மரத்தோடு அறுவடை செய்தாலும் அம்சமாய் துளிர்க்கும்.
தலமரமாக உள்ள கோயில்
திருக்குற்றாலம் சிவன்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்.
எழுதியவர்
தே.ஞான சூரிய பகவான்
போன்: + 91 7526195370
No comments:
Post a Comment