Saturday, May 23, 2020

தொரட்டி மனஅழுத்தம் நீக்கும் கோயில் மரம் - THORATI DEPRESSION RELEIVING TEMPLE TREE




தொரட்டி மனஅழுத்தம் நீக்கும் கோயில் மரம்
 
THORATI DEPRESSION  RELEIVING  TEMPLE TREE

0000000000000000000000

பொதுப்பெயர் : கேப்பர் புஷ்சஸ் (CAPER BUSHES)

தாவரவியல் பெயர்:கப்பாரிஸ் கிராண்டிஸ் (CAPPARIS GRANDIS)
தாவரக்குடும்பம் : கப்பாரேசியே (CAPPARACEAE)

000000000000000000

பிறமொழிப்பெயர்கள் : (NAMES IN OTHER LANGUAGES)

மராத்தி : கண்டல் (KANDAL)
இந்தி:ஆண்டீரா  (ANTERA)
கன்னடம்: தொரட்டி (THORATI)
தெலுங்கு: அரிதொண்டா (ARITHONDA)

00000000000000000000000000

பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

  • இந்தோ-மலேசியா
  • இந்தியா
  • கேரளா: பாலக்கோடு, இடிக்கி
  • தமிழ்நாடு:
  • கோயம்புத்தூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • மதுரை
  • நாமக்கல்
  • சேலம்
  • திருநெல்வேலி
  • திருவண்ணாமலை
  • விருதுநகர்
  • மகாராஷ்ட்ரா
  • கோலாப்பூர்
  • கர்நாடகா
  • தார்வார்
  • வடக்கு கானரா

ன்கள்: (USES)

  • முக்கியமாக இதன் பழங்கள் பயனாகிறது.
  • பழங்களில் நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
  • இதன் பூக்கள் ஊறுகாய் போட உபயோகமாகிறது.
  • பழங்களை சமைத்தும் சாப்பிடலாம்.
  • அழகு தோட்டத்தில் நடலாம்.
  • மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.
  • இதன் பழங்கள் மற்றும் பூக்கள் பறவைகளுக்கும் பிராணிகளுக்கும் உணவாகிறது.


மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING DISEASES)

  1. சிறுநீரக கோளாறுகள்
  2. இருமல்
  3. ரத்த நாளங்களை சுத்தம் செய்தல்
  4. நரம்புவலி
  5. கீல்வாதம்
  6. காதுவலி
  7. கல்லீரல்
  8. மண்ணீரலை பலப்படுத்தும்
  9. கல்லீரல் வீக்கத்தை சரிசெய்யும்


மரங்களின் இயல்பு (DESCRIPTION)

  • குறுமரம்
  • அல்லது அடர்ந்த பெரிய புதர்ச்செடி.
  • இலைகள் நீள் வட்டமானது.
  • பூக்கள் ஏப்ரல் முதல் ஜூலை வரை பூக்கும்.
  • காய் னிகள் ஜூன் மாதத்தில் காய்க்கத் தொடங்கும்
  • கனிகள் ஒவ்வொன்றிலும் 2 முதல் 6 விதைகள் இருக்கும் 

தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES WITH THIS STHALAVRISHAM )

  1. கோயம்புத்தூர், அம்மன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம். மேட்டுப்பாளையம், அம்மன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம்
  2. சிவன்மலை, முருகன் கோவில், திருப்பூர் மாவட்டம்
  3. கொளிங்குன்றம், கொடுங்க நாதர் கோவில், சிவகங்கை மாவட்டம்
  4. கோவை புதூர் கோட்டை, தண்டுமாரியம்மன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம்
  5. கோவை கோட்டை, கோட்டை கரைம்மன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம்.

சென்னிமலையில் கூட தொரட்டி மரங்கள் உள்ளன.
 
ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலையில் சஞ்சீவினி, சந்தான கரணி, சல்லிய கரணி, சமணிய கரணி, கருநொச்சி,   மற்றும் கசப்பில்லாத தொரட்டிமரமும் உள்ளன.

சென்னிமலையில்  உள்ள தொரட்டி மரத்தை கடந்து நடந்து போனால் நம்மைப் பிடித்திருக்கும் பேய் பிசாசு விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.
மனதளவில் பாதிக்கப் பட்டவர்கள்கூட என்று குணமடைவார்கள்.

இங்குள்ள ருத்ராபதி வனப்பகுதியில்தான் பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின் போது தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்களாம்.

இந்த மரத்தடி விநாயகரை இன்றும் வில்காத்த விநாயகர் என்று அழைக்கிறார்கள். ஆனால் அந்த மரம் அங்கு உள்ளதா என்ற விவரம் தெரியவில்லை.


வளர்ப்பு முறை: (PROPAGATION)

  1. விதைகளை சேமித்து விதைக்கலாம்.
  2. முளைப்புத்திறன் குறைவாக இருக்கும்.
  3. உலர்ந்த விதைகள் உடன் முளைக்காது
  4. கிளைக்குச்சிகளை நடலாம்
  5. குச்சிகளை பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை சேகரிக்கலாம்.
  6. குச்சிகள் ஒரு செ.மீ. குறுக்களவும், 8 செ.மீ. நீளமும் 6 முதல் 10 பருக்களும் இருக்கவேண்டும்.
  7. குச்சிகள் நங்கு வேர்பிடிக்க சோற்றுக்கற்றாழை ஜெல் கரைசலில் நனைத்து நடலாம்.
  8. இந்த செடிகள் 4 ம் ஆண்டில் பூக்கத்தொடங்கி 25 முதல் 30 ஆண்டுகள் வரை பூக்கும்.

எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான்

 





No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...