Thursday, May 7, 2020

சிம்ச்சா பிளாஸ், சொட்டுநீர்ப்பாசனத்தின் தந்தை SIMCHA BLASS FATHER OF DRIP IRRIGATION





சிம்ச்சா பிளாஸ், சொட்டுநீர்ப்பாசனத்தின் தந்தை

SIMCHA BLASS FATHER OF DRIP IRRIGATION

தே .ஞான சூரிய பகவான்
 
யூத இனத்தவர்

சிம்ச்சா பிளாஸ், சொட்டுநீர்ப்பாசனத்தின் தந்தை, இவர் 1897 ல் போலந்து நாட்டில் வார்சா என்ற இடத்தில் பிறந்தார், அப்போது போலந்து ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் இருந்தது, அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர், அதனால் அவரை போலிஷ் இஸ்ரேலியர் என்று சொன்னாங்க, விவசாயஉலகின் முகத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றக்கூடிய ஒரே தொழில்நுட்பம்  சொட்டுநீர்ப்பாசனம்,  அப்படிப்பட்ட சொட்டுநீர்ப்பாசனத்தை கண்டுபிடித்த பூண்ணியவான்தான் சிம்ச்சா பிளாசா.

இஞ்ஜினீரிங்  படித்தார்

அவரோட இளமைக்காலம் முழுசும் வார்சாவிலதான் கழிஞ்சது, சிம்ச்சா தன்னோட பள்ளிப்படிபை முடிச்சார், காலேஜுக்கு போனார், இஞ்சினியரிங் படிப்பு படிச்சார், அப்போதான் முதல் உலப்போர் முடிஞ்சிருந்தது, அப்போ போலந்துல யூதர் சுய பாதுகாப்பு என்ற அமைப்புக்களை உருவாக்கிகிட்டு இருந்தாங்க, சிம்ச்சா பிளாசா யூதர் சுய பாதுகாப்பு குழுக்கள் அமைக்கறதுல தீவிரமாக ஈடுபட்டு வந்தார், வார்சாவில் அவர் இஞ்ஜினீரிங்  படித்துக்கொண்டிருந்தார், அப்போது போலிஷ்-ரஷ்ய போர் வந்தது,  அதனால சிம்ச்சா பிளாசா படிப்பு தடைப்பட்டது, போலிஷ் விமானப்படையில் வேலைக்கு சேர்ந்தார்,

கருவிகள் கண்டுபிடித்தார்

சின்ன வயசுலயே அவருக்கு ஆராய்ச்சி குணம் இருந்தது, அது போலிஷ் விமானப்படையில் சேர்ந்தப்போ வெளிப்பட்டது, அந்த விமானப்படைக்கு உதவும் ஆராய்ச்சி அது, 1927 ல் காற்றின் வேகத்தை திசையை அறிய கருவி ஒன்றை கண்டுபிடித்தார், தொடர்ந்து கோதுமை நாற்று நடவு செய்யும் கருவி ஒன்றை உருவாக்கினார், அந்த கருவிகளைச் செய்து அய்ரோப்பாவிலும் பாலஸ்தீனத்திலும் விற்பனை செய்தார்.

1930 முதல் 1948 வரை இவர்தான் பாலஸ்தீனத்தின் பிரபலமான வேளாண்மைப்ப் பொறியாளர், 1937 ல் மீக்கோராத்’ (MEKORAT) என்ற வாட்டர்கம்பெனிஒன்றைத் தொடங்கினார், தற்போது அது இஸ்ரேலில் நேஷனல் வாட்டர் கம்பெனி என்ற பெயரில் செயல்படுகிறது,

நீர்த்துறை இயக்குனர்

1948 லிருந்து  1956 வரை இஸ்ரேல் அரசின் நீர்மேம்பாட்டுத் துறையின்  இயக்குராக பணி செய்தார், பெரும்பகுதி பாலைவனமான நாடு, மிகக்குறைவான மழை, விவசாயம் என்பதை இனிதான் தொடங்கவேண்டும் என்ற நிலை, இந்த சூழலில் இந்த நாட்டை மேம்படுத்த என்னால் என்ன செய்ய முடியும் ? என்று தீவிரமாக யோசித்தார். சிம்ச்சா பிளாசா அப்போது ஒரு விவசாயின் தோட்டத்தை பார்வையிடச் சென்றார்

பெரியமரம் ஆனது எப்படி

அந்த விவசாயியின் தோட்டத்தில் ஒரு மரம் மட்டும் பெரியதாக இருப்பதைப் பார்த்தார் சிம்ச்சா பிளாஸ், அதன் வேர்ப்பகுதியில் ஒரு இடத்தில் மண்ணுக்கு அடியில் ஒரு தண்ணீர் குழாயில் நீர் சொட்டுவதைப் பார்த்தார், அதனால் ஒரு வெங்காயத்தின் வடிவத்தில் தண்ணீர் அந்த இடத்தை  நனைத்திருப்பதைப் பார்க்கிறார், சொட்டு சொட்டாக தண்ணீர் கொடுத்தால்கூட விவசாயம் பார்க்கலாம் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றுகிறது, இது நடந்தது 1930 ம் ஆண்டு,

சொட்டுநீர்ப்பாசனம் உதயமானது

அவர் மனதில் சொட்டுநீர்ப்பாசனம் குறித்த கருத்துக்கள் உதயமாயின, அதற்கு முன்னதாக 1956 ல் தனது அரசு பணியிலிருந்து வெளியேறுகிறார், 1959 ல் தனது சொட்டுநீர்ப்பாசனக் கருவியை உருவாக்கினார், 1960 ம் ஆண்டு அதற்கான பேடன்ட் வாங்கினார், 1960 முதல் 1965 வரை சிம்ச்சா பிளாசின் சொட்டுநீர்ப் பாசனக்கருவிகள் இஸ்ரேல் நாட்டிலும் அயல் நாடுகளிலும் விற்பனை ஆகத்தொடங்குகியது, 1965 ல் நெகேவ் பாலைவனப்பகுதியில் கிபுட்ஸ்ஹேட்சரிம் (KIBUTSHATZERIM) என்ற கிராமத்தில்  ஒரு செயல்விளக்கத் தளையை அமைக்கிறார் பிளாஸ், அங்கு அமைத்த அந்த சொட்டுநீர்ப்பாசனம் வெற்றிகரமாக அமைகிறது.

நெட்டாஃபிம் கம்பெனி

இங்கு நான் யேஷாயாகு என்பவரை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்,  அவர்தான்  சிம்ச்சா பிளாஸ் அவர்களின் மகன்,  சிம்ச்சா பிளாஸ்  தனது மகன் மற்றும் கிபுட்ஸ்ஹேட்சரிம் கிராம நிர்வாகத்துடன் இணைந்து  சொட்டுநீர் கம்பெனியை 1965 ம் ஆண்டு ஆகஸ்டு 10 ம் நாள் உருவாக்குகினார்கள், அதன் பிறகு அந்த கம்பெனி  தனது பணியை இஸ்ரேலின் நெகேவ் பாலைவனப்பகுதியில் 1966 ம் ஆண்டு தொடங்கியது, அந்த கம்பெனியின் பெயர்தான் நெட்டாஃபிம், அந்த கூட்டணிதான் இன்றும்நெட்டாஃபிம்என்ற பெயரில் சொட்டுநீர் கம்பெனியாக உலகம் முழுக்க உலா வருகிறது,
 
இஸ்ரேல் வேளாண்மை
இயற்கை விவசாயத்தின் மூலம் அவர்கள் உற்பத்தி செய்வது வெறும் 1.5 சதம் மட்டுமே, ஆனால் அவர்கள் ஏற்றுமதியில் இயற்கை விவசாயம் 13 சதம் அது இடம் பிடித்துள்ளது, இஸ்ரேல் 70 சதுர கிலோமீட்டர் பரப்பில் இயற்கை விவசாயம் செய்கிறது, இதில் 60 சத பரப்பில் காய்கறி பயிர்களும், 25 சதம் பழப்பயிர்களும், வீடுகளின் உடனடி தேவைக்கான காய்கறிகள் சாகுபடிக்கு 6 சதமும், மூலிகைகள் சாகுபடிக்கு 4 சதமும் ஒதுக்கி இருக்கிறார்கள்.

பழங்கள் காய்கறிகள்

நாரத்தை பழ வகைகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று இஸ்ரேல், அவற்றை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடும்கூட, ஆரஞ்சு(CITRUS SINENSIS), கிரேப்ஃபுரூட் (CITRUS PARADISI), டேஞ்செரின் (CITRUS RETICULATA), போம்லிட் ஆகியவை இதில் அடங்கும், போம்லிட் என்பது பொமெலோ (CITRUS MAXIMA) மற்றும் கிரேப்ஃபுரூட்டுடன் ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது, ஏறத்தாழ 40 க்கும் மேற்பட்ட பழ வகைகளை சாகுபடி செய்கிறார்கள்.


இவை தவிர அவகேடோ, வாழை, ஆப்பிள், செர்ரி, பிளம், நெக்டரின், திராட்சை, பேரீச்சை, ஸ்ட்ராபெர்ரி, பெர்சிமான், லோக்குவாட், மாதுளை, ஆகியவற்றை உற்பத்தி செய்கிறார்கள், லோக்குவாட் உற்பத்தியில் ஜப்பானுக்கு அடுத்தபடியாய் அதிகம் உற்பத்தி செய்கிறது இஸ்ரேல்.

சிம்ச்சாபிளாசின் சொட்டு நீர்ப்பாசனம்

இஸ்ரேல் விவசாயத்தின் அடிநாதம் சிம்ச்சாபிளாசின் சொட்டு நீர்ப்பாசனம்தான், தேங்க்ஸ் டூ சிம்ச்சா பிளாஸ் என்கிறார்கள் இஸ்ரேலியர்கள்.







No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...