Saturday, May 16, 2020

சீமை கருவை தொழில் மரமாக வளரும் அதிசயம் - நான்காம் பகுதி SEEMAI KARUVAI BECOMES AN INDUSTRIAL TREE – PART 4




சீமை கருவை  
தொழில் மரமாக
வளரும் அதிசயம் - நான்காம் பகுதி

SEEMAI KARUVAI  BECOMES
AN INDUSTRIAL TREE – PART 4

சீமை கருவையின் தாயகம் வட அமெரிக்கா என்பது நமக்கு தெரியும். அதிலும் குறிப்பாக ஆண்டஸ் என்ற மலைப்பகுதியை தன்னுடைய சொந்த இடமாகக் கொண்டது. ஆண்டஸ் என்பது வட அமெரிக்கா தென் அமெரிக்கா வரை ஏழு நாடுகளை உள்ளடக்கியது. அவை வெனிசுலா கொலம்பியா ஈக்குவேடர்,  பெரு, பொலிவியா,  சைல்  மற்றும்  அர்ஜென்டினா. இந்த பகுதிகளை தான் ஆண்டஸ் பகுதி அல்லது ஆண்டஸ் மலைத்தொடர் பகுதி என்று சொல்லுகிறார்கள்.

அமெரிக்க பழங்குடிகளின்
வாழ்வாதாரம்

இந்த மலைத்தொடருக்கு இடைப்பட்ட பகுதிகள் எல்லாமே மணற்பாங்கான பாலை நிலம் அல்லது பாலைவனப் பகுதி என்று சொல்லலாம். இந்த பாலைவனப் பகுதி வட அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் தொடங்கி தென்னமெரிக்கா வரை நீளுகிறது.   இந்த பகுதியின்  அமெரிக்கப் பழங்குடி மக்களுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக விங்கியது இந்த சீமைக் கருவை தான். இதிலிருந்து தான் அவர்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், வாழ்விடங்கள், ஆயுதங்கள்,  மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் என எல்லாமே கிடைத்தது.
இந்த சீமைக் கருவை என்பது இந்த அமெரிக்க பழங்குடி மக்களின் முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது என்று இன்றும்கூட சொல்லுகிறார்கள். சீமை கருவை நெற்றுக்களை சேகரித்து உலர வைத்து அவற்றை மாவாக்கி உணவாக இன்றும்கூட மெஸ்கைட் மீல் (MESQUITE MEAL) என்ற பெயரில் பயன்படுத்தி வருகிறார்கள்.

நிறைய புரதச்சத்து
உள்ளது

இந்த மெஸ்கைட் மீல் என்று சொல்லுகின்ற சீமைக்கருவேல் மாவில் 13 முதல் 17 சதவிகிதம் வரை புரதச் சத்து இருக்கிறது. இந்த மாவில் அதிகமான லைசின் என்று சொல்லக்கூடிய சத்துப்பொருள் இருப்பதால் இதை சுலபமாக மற்ற தானிய உணவுகளுடன் சேர்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக குறைவான அமினோ அமிலங்கள் இருக்கக்கூடிய தானிய மாவுகளை இந்த சீமை கருவை மாவுடன் எளிதாக சேர்க்கலாம் அல்லது கக்கலாம்.

மெஸ்கைட் மீல் மாவில்
ஐஸ்கிரீம் செய்யலாம்

ஒரு காலத்தில் இந்த சீமைக் கருவை மாவு அடிப்படையான ஒரு உணவுப் பொருளாக இருந்தது. குறிப்பாக இந்த பழங்குடி மக்கள் அந்த காலத்தில் இந்த சீமைக் கருவை நெற்றுகளை சேகரித்து அவற்றை கல் எந்திரங்களில் மாவாக்கி பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய நவீன எந்திரங்களின் அதை மாவாக்கி மெஸ்கைட் மீல் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி பல்வேறு வகையான உணவுப் பொருட்களை பல்வேறு வகையான நவீன வடிவங்களில் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக சூப்பு,  கிரேவீஸ்,  சாசஸ், சோடிஸ், இறைச்சி அல்லது காய்கறிகளோடு  சேர்த்து தயாரிக்கும் இதர உணவுப்பண்டங்கள்,  டெசெர்ட்ஸ், புட்டிங்க்ஸ், ஐஸ்கிரீம் இப்படி பல வகையான உணவுப் பொருட்களையும்  இந்த மெஸ்கைட் மீல் மாவினை பயன்படுத்தி தயாரிக்கிகிறார்கள்.

இயற்கை போனது
டயபெட்டஸ் வந்தது
டும் டும் !

இந்த சீமைக் கருவை நெற்றுக்களிலிடருந்து   தயார் செய்யும் மாவில் 13 முதல் 17 சதவீதம் வரை புரதச்சத்து ருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். புரதச்சத்து தவிர கால்சியம், மக்னீசியம், மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்களும் நிரம்பி உள்ளன. இதன் விதைகள் அல்லது கொட்டைகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் புரதச் சத்து அடங்கியுள்ளது.
அமெரிக்க பழங்குடி மக்களுக்கு இருபதாம் நூற்றாண்டின் பாதிவரை அவர்களுக்கு சர்க்கரை நோய் என்றால் என்னவென்று தெரியாது.  பாலைவனத்திலிருந்து இயற்கையாக கிடைத்த உணவுப் பொருட்களை சாப்பிட்ட வரை எங்களுக்கு சர்க்கரை நோய் என்றால் என்னவென்று தெரியாது. அதேபோல் உடல் பருமனால் என்று எங்களுக்கு  தெரியாது. இப்போது நாங்கள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதற்கு பிறகுதான் இந்த நோய்கள் எல்லாம் எங்களுக்கு வந்திருக்கின்றன என்று சொல்லுகிறார்கள்.


மெஸ்கைட் மீல்
என்றால் சீமைக்கருவை
விதை மாவு

மெஸ்கைட் மீல் என்று சொல்லப்படும் இந்த இந்த சீமக்கருவையிலிருந்து தயாரிக்கும் உணவுப் பொருட்களில் சாப்பிடும்போது அது ஜீரணமாக அதிகமான நேரம் எடுத்துக்கொள்கிறது. கிட்டத்தட்ட நான்கு முதல் ஆறு மணி நேரம் ஆகும். அதனால் பிளட் சுகர் என்று சொல்லப்படும் ரத்த சர்க்கரை அதிகமாக சேர்வதில்லை என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.

கிரில்லிங் செய்ய
திரில்லிங்கான விறகு
சீமைக்கருவைதான்

இந்த பழங்குடி மக்கள் மாமிச உணவு வகைகளை சமைக்கும்போது இந்த சீமைக்கருவை கட்டைகளைப் பயன்படுத்தினால் அந்த உணவின் சுவையே தனியாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.  சமீபகாலமாக கிரில்லிங் என்று சொல்லக்கூடிய ஒரு சமையல் வகை மிகவும் பிரபலமாக உள்ளது. கிரில்லிங்  என்பது வேறு ஒன்றுமில்லை, நேரடியாக நெருப்பில் வேக வைப்பது, குறிப்பாக இறைச்சி அல்லது மாமிச வகைகளை இப்படி கிரில்லிங்  முறையில் தயார் செய்வது மிகவும் பிரபலமாக உள்ளது.



இன்னும்கூட
இந்திய அடுப்புகளுக்கு
அதுதான் தீனி

பல நாடுகளும் இதை செய்து கொண்டிருக்கின், இது வேறு ஒன்றுமில்லை சுட்டு சாப்பிடுவதுதான்,  நெருப்பிலே வாட்டி வதக்கி சூடு சாப்பிடும் முறைதான் கிரில்லிங், சீமை கருவை விறகில் இதை தயார் செய்தால் அதன் சுவை கூடுகிறது என்கிறார்கள்.

இன்றும் கூட இந்தியாவில் 90 சதவிகித வீடுகளின்  அடுப்பில் எரிவது சீமைக்கருவைதான், சாயங்காலம் ஆனால் என் அம்மா சமைக்க தோதாக நான்தான் வேலிக்காத்தான் பொடிசாக வெட்டித்தர வேண்டும், கையில் முள்குத்தாமல் ஆய்ந்து எடுத்து சீராக வெட்டுவதில் எனக்கு நல்ல அனுபவம் இருந்தது, எனக்கும் அதற்கும் ஒரு உறவு இருந்தது, என்னை அதிகம் குத்தாது, எனக்கு அது விறகு மரம் அல்ல அது உறவு மரம்.

எழுதியவர்
தே.ஞான சூரிய பகவான்


No comments:

LEARN TO BUILD A ROBOT - ரோபோக்களை நாமே தயார் செய்யலாம்

கடிதம் 7 ரோபோக்களை நாமே தயார் செய்யலாம் LEARN TO BUILD A ROBOT ரோபோக்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள நிறைய புத்தகங்கள் வந்துள்...