Tuesday, May 19, 2020

சதுரக்கள்ளி ஒரு மருத்துவ மரம் - SATHURAKALLI MEDICINAL TREE







சதுரக்கள்ளி ஒரு மருத்துவ மரம்
SATHURAKALLI   MEDICINAL TREE


தமிழில் வேறு பெயர்கள்:

  • நான் முகக்கள்ளி (NAN MUGA KALLI)
  • நானாங்கள்ளி (NANANG KALLI)
  • வச்சிரம் (VACHIRAM)

  • பொதுபெயர் : டிரைஅங்குலர் ஸ்பர்ஜ், ஸ்கொயர் ஸ்பர்ஜ், இண்டியன் ஸ்பர்ஜ் டேர் (TRIANGULAR SPURGE, SQUARE SPURGE, INDIAN SPURGE TERE)
  • தாவரவியல் பெயர் : ஈபோர்பியா ஆண்டிகோரம் (EUPHORBIA ANTIQUORUM)
  • தாவரக்குடும்பம் :  ஈபோர்பியேசி (EUPHORBIACEAE)



பிற மொழிப்பெயர்கள் (OTHER LANGUAGE NAMES)


  • மலையாளம்: சதுரக்கள்ளி (SATHURA KALLI)
  • இந்தி : டிரைதாரா (TRIDHARA)
  • கன்னடம் : கொண்டிகள்ளி (KONTE KALLI)
  • தெலுங்கு : பொம்ம ஜமுடு (BOMMA JAMUDU)
  • பெங்காலி : டிக்டாஸ்ஜி  (TIKTASJI)



பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)


  • இந்தியாவின் தென் மாநிலங்கள்
  • பர்மா
  • சீனா
  • பங்களாதேஷ்
  • இந்தோனேசியா
  • ஈரான்
  • மலேசியா
  • பாகிஸ்தான்
  • தாய்லாந்து
  • பிலிப்பைன்ஸ்
  • ஸ்ரீலங்கா
  • உலகின் பிற வெப்ப மண்டல பகுதிகள்

உலர்ந்த கள்ளி மரங்களை விறகாக பயன்படுத்தலாம், எனது சிறுவயதில் நான் இதுபோன்ற விறகுக் கட்டைகளை பலமுறை வீட்டுக்கு சேகரித்து வருவேன், கட்டைகள் அதிக எடை இருக்காது, காயவைக்க வேண்டிய அவசியம் இருக்காது, ரொம்ப புகை அடிக்காமல் சுலபமாய் எரியும், வீட்டுக்கு வந்ததும் அந்த கட்டைகளை நானே சிறுசிறு துண்டுகளாக ஒரு கடப்பாறையால் உடைப்பேன், ஒரு நாள் நீளமான ஒரு கள்ளிக் கட்டையை உடைத்த போது அதிலிருந்து  11 நல்லபாம்பு குட்டிகள் வெளிவர நாங்கள் எல்லோருமே மிரண்டு போனோம், அவை எல்லாமே ஒரு துடைப்பக்குச்சி அளவே இருந்தன,  அந்த நல்லபாம்பு குட்டிகள் அத்தனையும் படம் எடுத்ததை நினைக்க இப்போதும் குலை நடுங்குகிறது, அப்போதுதான் தெரிந்தது, நல்லபாம்புகள் கள்ளிசெடிகளில் குடும்ப சகிதமாய்  குடியிருக்கின்றன என்று.

காலில் முள் குத்துவது கிராமங்களில் அன்றாடம் நடக்கும் சம்பவம், பெரும்பாலும் வேலமுள்தான் குத்தும், பிடுங்கி எடுத்து விடலாம், உடையாமல் எடுக்க வேண்டும், உடையவில்லை என்றால் ரத்தம் மட்டும்தான் வடியும், குத்தும் ஆழத்தைப்பொறுத்து வலி ஒன்றிரண்டு நாள் நீடிக்கும், அதற்கு துணிகந்தையில் நெறுப்பு பொறுத்தி முள் குத்திய இடத்தில்  சுடச்சுடஒத்தடம் கொடுத்தால் வலி சீக்கிரம் போய்விடும், முள் உடைத்துக்கொண்டால் அது பழுத்த பின்னால்தான் ஊக்குபோட்டு கிண்டிகிளறி எடுக்க முடியும், அதற்கு முள் உடைந்த இடத்தில் கள்ளிப்பால் அடித்தால், சீக்கிரம் பழுத்து சுலபமாய் உடைந்த முள் வெளியே வந்து விடும், கிராமத்தில் பெரிய ஆட்கள்முள்வாங்கிவைத்திருப்பார்கள், அதன் மூலம் சுலபமாய் முள் எடுக்கலாம். செறுப்பு வாங்கி காலில் போட ஆரம்பித்த பின்னால் முள்வாங்கி தேவையில்லாமல் போனது.


பயன்கள்  (USES)


  • உயிர் வேலிக்கு உத்தமமானது.
  • உலர்ந்த கட்டைகள் அடுப்புக்கு உடன் எரிக்க உதவும்.
  • இதன் பால் வைத்தியத்திற்கு பயன்படுகிறது.


மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)


  • மார்பு வலி மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
  • இதன் பாலை கட்டிகளின் மீது தடவலாம்.
  • இதிலிருந்து எடுக்கும் சாற்றினை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.


கீழ்க்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்

  1. உடற்பருமன்
  2. எலும்பு முறிவு
  3. புற்றுநோய்
  4. நீர்க்கட்டு
  5. நீர்க்கோவை
  6. மஞ்சள்காமாலை
  7. முடக்குவாதம்
  8. மூட்டுவலி
  9. மூலம்
  10. வெள்ளைப்படுதல்
  11. பல்வலி
  12. காதுவலி
  13. ஆஸ்துமா

மரங்களின் இயல்பு (DESCRIPTION)


  • இதன் தண்டுகள் முப்பட்டை கொண்டது.
  • நான்கு பட்டை தண்டுகளாகவும் இருக்கும்.
  • தண்டுகல் பளிச்சென்று பச்சை நிறத்தில் இருக்கும்.
  • இதில் கருப்பு நிற முட்கள் புதைந்திருக்கும்.
  • தண்டுகள் மிருதுவான தசைப்பகுதி நிறைந்து.
  • தண்டுகளில் சிறிய கீறல் போட்டாலும் அதில் பால் பொங்கிவடியும்.
  • ஐந்து முதல் ஏழு மீட்டர் உயரம் வளரும்
  • பூக்கள் :பூங்கொத்து கிண்ணம் போல இருக்கும்.
  • ஒரு பெண் பூவும் அதைச் சுற்றிலும் நிறைய ஆண் பூக்கள்,  இங்குமா ? பூக்களில் தேன் அதிகம் இருக்கும்.
  • அதனால் அதிகம் தேனீக்கள் சுற்றி வரும் 

கேரளாவில் களக்காடு காப்பு காடுகளில் ஒரு ராட்சச கள்ளியை கண்டுபிடித்திருக்கிறார்கள், அது 20 மீட்டர் உயரம் வரை வளருமாம், இதன் தண்டுகள் ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாக உள்ளது.


கள்ளி மரம் ரமாக உள்ள கோயில்கள் (SATHURAK KALLI AS STHALAVRIKSHA)

  • திருகண்டலம் சிவன் கோவில், திருவள்ளூர் மாவட்டம்
  • திருபுனவாசல் சிவன் கோவில், புதுக்கோட்டை மாவட்டம்
  • நீடாமங்கலம் விஷ்ணு கோவில், திருவாரூர் மாவட்டம்


வளர்ப்பு முறை: ()


  1. விதைகளை விதைக்கலாம்
  2. தண்டுத்துண்டுகளை நடலாம்
  3. பூமியில் வடிகால் வசதி வேண்டும்
  4. வானத்தில் முழுச் சூரிய வெளிச்சம் வேண்டும்
  5. செங்கல் ஜல்லியும் கரித்துண்டுகளையும் அடிப்பாகத்தில் போட்டு
  6. தொட்டிகளை நடுவதற்கு தயார் செய்யலாம்.
  7. வீடுகளில் வளர்க்கலாம்.
  8. நன்றாக வளரும்.
  9. எவ்வித பராமரிப்பும் தேவையில்லை.
 

வீடுகளில் வளர்க்கும் போது என்ன செய்ய வேண்டும் ?
 
  • தொட்டியில் செங்கல் ஜல்லி கரித்துண்டுகள் போட்டு அதன் மீது மணல் மற்றும் மண்ணை நிரப்ப வேண்டும்.
  • மார்ச்சு முதல் செப்டம்பர் மாதங்களில் நன்கு வளரும்.
  • தொட்டிகளில் நீர் தேங்கி நிற்கக்கூடாது.
  • மழைக்காலத்தில் தண்ணீர் ஊற்ற கூடாது.
  • காற்று வீசும் பகுதிகளில் காற்று தடுப்பு அவசியம், இல்லையென்றால் தண்டுகள் மளமளவென உடையும்.
  • செடிகள் சிவப்பு நிறமாக மாறினால் வேர் பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
  • கள்ளிச்செடிகளின் தண்டுகளை துண்டுகளாக்கி அவற்றை ஒருவாரம் வெயிலில் உலர்த்தி பின்னர்தான் நடவேண்டும்.
  • கள்ளிச்செடிகளோடு வேலை பார்க்கும் போது அதன் பால் கண்களில் தெறிக்காமல் கவனமாக செய்ய வேண்டும்.
  • வேலை பார்த்த உடன் கைகள் மற்றும் முகத்தை சோப்புபோட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • நகர்ப்புற வீடுகளில் வளர்க்க மிகவும் பொருத்தமானவை கள்ளி மற்றும் கற்றாழை செடிகள்தான், காரணம் அதிக நீர், பராமரிப்பு, கவனம் எதுவும் அதிகம் தேவைப்படாதது.

கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்
தே.ஞான சூரிய பகவான், + 91 8526195370

 

1 comment:

Anonymous said...

மகிழ்ச்சி 🥰🙏🥰🙏

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...