Sunday, May 17, 2020

மராமரம் சுனாமி தடுப்பு மரம் MARAMARAM FENCE TO TSUNAMI









மராமரம் சுனாமி  தடுப்பு  மரம்
MARAMARAM FENCE TO TSUNAMI

பொதுப்பெயர்: சொன்னரேஷியா மேங்குரோவ், கிராப் ஆப்பிள், மேங்குரோவ் ஆப்பிள் (SONNARETIA MANGROVE, CRAB APPLE, MANGROVE APPLE)
தாவரவியல் பெயர்:  சொன்னரேஷியா அப்பிடலா  (SONNARETIA APETALA)
தாவரக்குடும்பம் : லித்ரேசியே (LITHRESIAE)

பிற மொழிப்பெயர்கள் :
  • பெங்காலி: கியோரா (KEORA)
  • குஜராத்தி: மோட்டி தவார் (MOTI TAVAR)
  • மராத்தி: கண்டல் (KANDAL)
  • ஒரியா:  கெருவான் (KERUVAN)
  • தெலுங்கு: பெத்த கலிங்கா (BETHA KALINGA)
பரவி இருக்கும் இடங்கள்

ஆப்ரிக்கா முதல் இந்தோனெசியா வரை, ஆஸ்திரேலியா முதல் சீனா பிலிப்பைன்ஸ் வரை உள்ள நாடுகளில் எல்லாம் பரவி உள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு, கர்னாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்காளம், குஜராத்தி, மற்றும் ஒரிசா.

தமிழ்நாட்டில் பரவியிருக்கும் இடங்கள்:

  1. சென்னை அடையாறு முகத்துவாரம்
  2. கடலூர் பிச்சாவரம்
பயன்கள்:
 
  • இயற்கை சீற்றங்களின் அழிவை குறைக்கும்.
  • கடல் அரிப்பைத் தடுக்கும்.
  • மரங்களை அறுத்து, இழைத்து, கடைசல்  செய்ய ஏற்றது.
  • மேஜை நாற்காலி, பெட்டிகள், படகுகள், பலகைகள், செய்யலாம்.
  • முற்றாத காய்களை சாப்பிடலாம்.
  • பட்டைகளில், டேனின்  11 முதல் 14 சதம் உள்ளது.
  • பழம் மற்றும் இலைகளை சாப்பிடலாம்.
மருத்துவ குணங்கள்

இதன் பழங்கள் மற்றும் இலைச்சாற்றிலிருந்து எடுக்கும் சாற்றினைக்கொண்டு  ஆஸ்துமா மற்றும் இருமல் ஆகிய நோய்களை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுகின்றன.

பழங்கள்

இதன் பழங்கள் பிரபலமானவை. இத்னை மேங்குரோவ் ஆப்பிள் என்கிறார்கள். இவை பெர்சிமொன் பழங்கள் மாதிரி இருக்கும்.

மாலத் தீவுகளின்  ஹெல்த் டிரிங்க்

இதன் இலைகள் மற்றும் பழங்களை மாலத்தீவுகள் மற்றும் இலங்கையில் விற்பனை செய்கிறார்கள். இதன் மூச்சு வேர்களை மீன்வலைகளில் மிதவைகளாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால் இதனை கார்க் மரங்கள் என்று சொல்லுகிறார்கள்.
மாலத்தீவுகளில் இந்த பழத்தின் சாறு ஹெல்த் டிரிங்க் ஆகப் பய்ன்படுத்துகிறார்கள். அதனால்தான் இதனை ஆப்பிள் மேங்குரோவ் என்று சொல்லுகிறார்கள்.

மரங்களின் இயல்பு:
  1. 8 முதல் 10 மீட்டர் உயரம் வளரும்
  2. மரத்தை சுற்றிலும் தரையிலிருந்து  கூர்மையான மூச்சு வேர்கள் (PNEUMATOPHORES) வெளிவந்து இருக்கும்.
  3. இலைகள், தோல்போல தடிமனானவை, முட்டை வடிவத்தில் முனை கூர்மையாக இருக்கும்.
  4. பூக்கள், உள்வட்ட அல்லி வட்டம் இருக்காது, வெளிவட்ட  புல்லிவட்ட இதழ்கள் கிரீம் நிறத்தில் இருக்கும், சூலகம் பூவுக்கு மேலே குடை போல எழும்பி நிற்கும், பார்க்க சிறிய சிப்பிக்காளான் போல தோன்றும்.
  5. உருண்டையானது
  6. காய்கள்,உருண்டையானவை, தண்ணீரில் மிதந்து சென்று பரவும்.
  7. முகத்துவார சதுப்பு நிலங்களில் வளரும்
  8. அலையாத்தி மரங்கள் வளரும் இடங்களில் வளரும். 
  9. A REQUEST
  10. I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

    999999999999999999999999999999999999999

     

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...