Tuesday, May 5, 2020

மனோரஞ்சிதம் ஒரு அழகுப் பூங்கொடி - MANORANJITHAM FRAGRANT FLOWER CREEPER











மனோரஞ்சிதம் 

ஒரு அழகுப் பூங்கொடி



MANORANJITHAM 

FRAGRANT FLOWER

CREEPER

பொதுப்பெயர்: யலாங் யலாங் (YALANG YALANG)

தாவரவியல் பெயர்: அர்ட்டாபொட்ரிஸ் ஓடொரோடிசிமஸ் (ARTRABOTRYS ODOROTISSIMUS)

தாவரக்குடும்பம்: அன்னோனேசியே (ANNONACEAE)

88888888888888888

குறிப்பு: மனோரஞ்சிதம் பூன்னா மனசுல என்ன நினைக்கிறோமோ அந்த வாசனை வீசும், அப்படித்தான் நான் கேள்விப்பட்டிருக்கேன். பெரியவங்க சொன்ன கதைகள்ள சொல்லியிருக்காங்க.

இதுக்கு பெரிய தோட்டம்தாங்க  சரிப்படும்பூவில் பலாப்பழ வாசனை லேசா வீசும், பார்க்க அசப்புல சீத்தாபழ பூமாதிரி  இருக்கும், பச்சையும் மஞ்சளையும் கலந்தமாதிரி இருக்கும், பூக்கள் கவர்ச்சிகரமா இருக்காது.
   

ஆனா வாசனை தூக்கிடும், ஆண்டு முழுவதும் பூக்கும், கோடை மற்றும் மழைக்காலங்களில் ஜாஸ்தியா பூக்கும், காடுகள்ள இருக்கற மாதிரி பெருங்கொடி டைப் இது, கொடிக்கு மேல மொக்கைமொக்கையா முள்ளுங்க இருக்கும், முள்ளுங்கள பார்த்தா பயம்மா இருக்கும்.

பதியங்கள் மற்றும் விதைகள் மூலம் புதுச்செடிகளை உருவாக்கலாம்.

தி.ஞான சூரிய பகவான்


   

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...