மலைமகுடம் ஒரு அழகிய நறுமண பூமரம்
MALAIMAKUDAM UNPARALLEL PERFUME FLOWER
- பொதுப்பெயர் : சதர்ன் மக்னோலியா (SOUTHERN MANOLIA)
- தாவரவியல் பெயர்: மக்னோலியா கிரேன்டிபுளோரா (MAGNOLIA GRANDIFLORA)
- தாவரக்குடும்பம் : மக்னோலியேசியே (MAGNOLIACEAE)
பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
- இந்தி:ஹிம்சம்ப்பா (HIMCHAMPA)
- மணிப்புரி: ஊத்தாம்பல் (OOTHTHAAMBAL)
- நேப்பாளி: ரூக் கமல் (RUK KAMAL)
பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)
- இந்தியா
- ஐரோப்பா மித வெப்ப மண்டலப் பகுதிகள்
- மணிப்பூரில் அதிகம் பரவி உள்ளது.
- அங்கு இதன் பெயர் ஊத்தாம்பல்
- ஊத்தாம்பல் என்றால் ட்ரீ லோட்டஸ் என்று அர்த்தம்
சொந்த நாடு: தென் கிழக்கு அமரிக்கா
பயன்கள்: (USES)
- அழகு மரமாக வளர்க்கலாம்.
- பூக்களில் ஊறுகாய் போடலாம்.
- நறுமணம் மிக்க பூக்களை தருகிறது.
- பூக்களை பூஜைக்கு உபயோகமாகிறது.
- பூக்களில் முக்கியமாக மருந்துகள் செய்கிறார்கள்.
- பழங்களிலும் ஊறுகாய் போடலாம்.
- இலைகளை பிரியாணி இலைகள் போல சமையலில் பயன்படுத்தலாம்.
மருத்துவ பயன்கள் (MEDICINAL
USES)
- அமெரிக்க பூர்வீகக் குடிகள் இதனை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளார்கள் இதை முறையாக பயன்படுத்தி என்னென்ன நோய்களை கட்டு படுத்துகிறது என்று பார்க்கலாம்.
- குணப்படுத்தும் நோய்கள் (CURING DISEASES)
- பக்கவாதம்
- மூட்டுவலி
- தசைவலி
- காய்ச்சல்
- ஜலதோஷம்
- ப்ளூஜுரம்
- உடல் பருமன்
- ஆஸ்துமா
- தலைவலி
மரங்களின் இயல்பு (DESCRIPTION)
- பசுமைமாறா மரம்.
- 30 மீட்டர் உயரம் வளரும்.
- இலைகள் 12 முதல் 25 சென்டி மீட்டர் நீளம் இருக்கும்.
- பத்து சென்டிமீட்டர் அகலம் இருக்கும்.
- பசுமையாகவும் செம்மை நிறமாகவும் இருக்கும்.
- இரண்டும் கலந்த நிறத்திலும் இருக்கும்.
- பூக்கள் பெரியவை.
- 10 முதல் 25 சென்டி மீட்டர் குறுக்களவு கொண்டது.
- அற்புத மணமுடையது.
- பனிக்கட்டியில் செய்தது போல இருக்கும்.
- கனிகள் செங்காவி நிறத்தில் கூம்பு வடிவில் இருக்கும்.
- விதைகள் பளிச்சென சிவப்பாய் அவரைப் விதைபோல இருக்கும்.
- அவை நீளமான மெல்லிய காம்புகளில் தொங்கும்.
- இந்தியாவில் கவர்னர் மாளிகை போன்ற பெருந்தோட்டங்களில் காணப்படுகின்றன.
தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES
WITH THIS STHALAVRISHAM )
- ஊட்டி சிவன் கோவில், நீலகிரி மாவட்டம்.
- மலைமகுடம் என்று தமிழில் சொன்னாலும் இதன் ஆங்கில பெயர் மக்நோலியா, இதன் சொந்த நாடு அமெரிக்கா, அப்படி இருக்கும்போது ஊட்டி சிவன் கோவிலின் ஸ்தல விருட்சமாக ஆனது எப்படி என்று தெரியவில்லை.
வளர்ப்பு முறை: (PROPAGATION)
- பெரிய மரம்.
- விஸ்தாரமாக பரந்து வளரும்.
- இதற்கு நிறைய இடம் வேண்டும்.
- கூட்டமான மரங்களுடன் வளராது.
- அடிக்கடி இடம் மாற்றுதலும் கூடாது.
- கட்டிடங்களிலிருந்து 20 அடிக்கு அப்பால் மரத்தை நடவேண்டும். தொட்டிகளில் வளர்க்க தொட்டிகள் பெரியதாக வேண்டும்.
- இதன் வயது 80 ஆண்டுகள்.
- விதைகள் அசத்தலாக சிவப்பாக இருக்கும்.
- காய் கனிகள் பெரிய பலாமாதிரி தோன்றும்.
- பார்த்தேன் ஆனால் அளவு சிறிதாக இருக்கும்.
- மரத்தடியில் வளரும் செடிகளை சேகரித்து நடுவது சுலபமானது.
- கனிகளில் இருந்து பிரித்து எடுத்த புதிய விதைகளைப் பயன்படுத்தலாம். உலர்ந்த விதைகள் முளைக்காது.
- நன்கு முற்றிய கனிகளிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும். அவற்றை வெதுவெதுப்பான நீரில் ஒரு இரவு முழுக்க ஊற வைக்கவேண்டும்.
- அடுத்த நாள் விதையின் மேல் தோலை நீக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் குறைவான ஈரமுள்ள மணலில் விதைகளைப் போட்டு நங்கு கலக்க வேண்டும்.
- இதனை அந்த பாத்திரத்தோடு மூன்று மாதங்களுக்கு ரெஃப்ரிஜெரேட்டரில் வைத்திருக்க வேண்டும்.
- பின்னர் வெளியில் எடுத்து அந்த விதைகளை தொட்டியில் அல்லது தோட்ட நிலத்தில் விதைக்க வேண்டும்.
Photographs; Thanks to Google.
References;
1.www.gardeniaknowhow.com/ Propagating Magnolia seeds; How to grow a Magnolia tree from seeds ?
2. Kovil Thalangalum Thalath Thavarangalum - Book authored By Ira.Panchavarnam
3. www.en.wikipedia.org / Magnolia grandiflorum
References;
1.www.gardeniaknowhow.com/ Propagating Magnolia seeds; How to grow a Magnolia tree from seeds ?
2. Kovil Thalangalum Thalath Thavarangalum - Book authored By Ira.Panchavarnam
3. www.en.wikipedia.org / Magnolia grandiflorum
எழுதியவர்: தே.ஞான சூரிய
பகவான்
போன்: +91 8526195370
888888888888888888888888888888
No comments:
Post a Comment