மகாலிங்கம்
அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ மரம் :
(MAHALINGAM
– RECOGNIZED AYURVEDIC TREE)
‘அவனுடைய (கோலியாத்து) ஈட்டிதாங்கு நெசவுக்காரரின்
படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும், பரிசை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்’
(பைபிள் 1 சாமுவேல் 17 /7)
ஒரு நெசவுத்தறியில் ‘வீவர்ஸ் பீம்’ என்பது முக்கியமான பாகம். அது ஒறு உறுதியான சட்டம், இந்த ‘வீவர்ஸ்
பீம்’ தறியின் மேல் பகுதியில் ஒன்றும் அடிப்பகுதியில்
ஒன்றும் இருக்கும், மிக உறுதியான மரத்தில்தான் அதனை செய்ய முடியும், அந்த இரண்டு ‘வீவர்ஸ் பீம்’களுக்கு ஊடாகத்தான் நூல்கள் ஓடும், இதனை படைமரம் என்று சொல்லுகிறது பைபிள், அந்த படை
மரம் தரும் மரத்தின் பெயர் மகாலிங்கமரம், ஆங்கிலத்தில் ‘வீவர்ஸ் பீம்’ ட்ரீ.
இந்த மரம் சர்வதேச அளவில் பிரபலமானது, அதனால்தான்
இதுபற்றிய குறிப்புகள் பைபிளில் இருக்கின்றன.
அப்படிப்பட்ட பிரபலமான ‘வீவர்ஸ் பீம்’ எனும் மகாலிங்கமரம் பற்றிய ஒரு கட்டுரைதான்
நீங்கள் படிக்க இருப்பது.
88888888888888888888888888888888
பொதுப்பெயர்
: வீவர்ஸ் பீம் ட்ரீ (WEAVERS’ BEAM TREE)
தாவரவியல் பெயர்: ஸ்ரீபெரா ஸ்வீட்டினொய்டெஸ் (SCHREBERA
SWEIETENOIDES)
தாவரக்குடும்பம் : ஒலியேசியே (OLEACEAE)
0000000000000000000000
வேறு பொதுப்பெயர்கள் (OTHER COMMON NAMES)
- மாலபிளசு
- முசக்க விருக்க்ஷம்
- மக்கமரம்
- மணிமரம்
- மலம்பிளசு
பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
- மலையாளம் :மணிமரம் (MANI MARAM)
- இந்தி: மொக்கா (MOKA)
- கன்னடம்: மொகாலிங்கமரா (MOHALINGA MARA)
- தெலுங்கு:புல்லகாயா (BULLA KAYA)
பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)
- இந்தியா
- பங்களாதேஷ்
- மியான்மர்
- தாய்லாந்து
- கம்போடியா
- லாவோஸ்
- இமயமலையின் வெப்பமான பகுதிகள்
பயன்கள்: (USES)
- நெசவுத்தறிகளில் முக்கிய பகுதிகளைச் செய்ய இதன் மரங்கள் உதவுகிறது.
- அதனால்தான் இதனை ஆங்கிலத்தில் ‘வீவர் பீம் ட்ரீ’ என்று அழைக்கிறார்கள்.
- ‘வீவர் பீம்’தான் ஒரு நெசவுத்தறியின் முக்கிய பகுதி.
- வேறு மரச்சாமான்களும் இந்த மரத்தில் செய்யலாம்.
- இதன் இலைகளை சமைத்து சாப்பிடலாம்.
- இது பஞ்சகால உணவாகவும் பயன்பட்டுள்ளது.
மருத்துவ பயன்கள் (MEDICINAL
USES)
இதன் பட்டை வேர் பழங்கள் அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது மருத்துவர்கள்
இதனை ஆயுர்வேத
மரம் என்று அழைக்கிறார்கள்.
குணப்படுத்தும் நோய்கள் (CURING
DISEASES)
- தோல் சம்பந்தமான நோய்கள்
- நீரிழிவு நோய்
- சிறுநீரக பிரச்சனைகள்
- செரியாமை
- குடற் பூச்சிகள் தொல்லை
- விஷமுறிவு
- வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள்,
- கல்லீரல் பிரச்சனைகள்
- உடல் பருமன்
மரங்களின் இயல்பு (DESCRIPTION)
- 20 மீட்டர் உயரம் வரை வளரும்
- இலைகள் இறகு வடிவமாய் இருக்கும்.
- பூக்கள் பிப்ரவரி ஏப்ரல் மாதம் வரை பூக்கும்.
- மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறமாக இருக்கும்.
- கனிகள் முட்டை வடிவில் இருக்கும்.
- ஏப்ரல் மாதம் முதல் காய்க்கும்
- ஒவ்வொரு கனியிலும் 4 விதைகள் இருக்கும்
தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES
WITH THIS STHALAVRISHAM )
கல்லங்குறிச்சி, விஷ்ணு கோவில், அரியலூர் மாவட்டம்
வளர்ப்பு முறை: (PROPAGATION)
- தோட்டங்களில் மரமாக வளர்க்கலாம்.
- விதைகளை நேரடியாக விதைக்கலாம்.
- சேமிப்பில் உள்ள விதைகள் 4 வாரத்தில் முளைக்கும்.
- நன்கு வளர்ந்த கன்றுகளை எடுத்து நடலாம்.
வேண்டுகோள்: நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனாதல் இது ரெண்டையும்
சரிசெய்ய இது உதவுமா ? ஆய்வு செய்யலாம், இதுபோல நாம் மறந்துபோன மரங்களை மறுபடியும்
பழக்கத்துக்கும் புழக்கத்துக்கும் கொண்டு வரலாம்.
எழுதியவர்: தே.ஞான சூரிய
பகவான்
போன்: +91 8526195370
போன்: +91 8526195370
No comments:
Post a Comment